Page 327 of 402 FirstFirst ... 227277317325326327328329337377 ... LastLast
Results 3,261 to 3,270 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3261
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மர்மப் புன்னகை!!
    -----------------------------------
    என்றைக்கோ நாம் இட்டிருக்க வேண்டிய பதிவு இது!
    ஒரு தகவலின் ஆதாரத்துக்காகக் காத்திருந்ததால் இவ்வளவு தாமதம்!!
    காஞ்சி மகா முனி!
    அன்பையே ஆயுதமாக்கிய பெரிய-வாள்--
    காஞ்சிப் பெரியவாள்!
    கண்டபடி அலையும் மனதைத் தாம்
    கண்ட-படி அங்கேயே நிற்கச் செய்பவர்!!
    அவல் மட்டுமே உண்ட அவாள்?
    ஏவல் படை ஏதுமில்லா அந்த ஞானப் பழம்-
    தூவல் தம் புன்னகையையே-
    காவல் என நமக்கு அனுப்புபவர்!!
    அது --
    நாகை தர்மன்--பத்திரிகையாளருக்கும்
    ஈகை தர்மன் எம்.ஜி.ஆருக்குமான ஒரு சம்பாஷணை!!
    ஆத்திரத்தை எவ்வளவு நம் மனம் கொண்டாலும்-
    பாத்திரத்தை அருளால் நிரப்பிய அவரது விழியெனும்
    நேத்திரத்தைக் கண்டுவிட்டால் போதும்!
    சாத்திரத்தை மீறிய சாந்தி நம் மனதுக்குக் கிடைத்துவிடும் என்று தம் காஞ்சி முனி பற்றிய கருத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கியவர் கேட்கிறார்-
    அண்ணே நீங்க அவரை முதன் முதலில் தரிசனம் செய்தபோது அவரிடம் எதுவுமே கேட்காமல் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தீர்களாமே?
    எம்.ஜி.ஆர்,,ஏனோ ஆழமாக சில நிமிடங்கள் மௌனம் காத்து,,பிறகு சொல்கிறார்-
    அவரை நான் பார்க்கும்போது எதையுமேக் கேட்கவில்லை என்று சொல்வது தவறு?
    நல்லதையே செஞ்சுக்கிட்டு எல்லோர்க்கும் நல்லவனாகவே சாகணும்ன்னு வேண்டிகிட்டேன்.
    |நாகை தர்மன் முகம் சற்றுக் கலங்குவதை கவனித்த எம்.ஜி.ஆர் தொடர்கிறார்--
    சாவு ஒண்ணும் கெட்ட விஷயம் இல்லே. எல்லோருக்கும் நிரந்தர ஓய்வுன்னு அதை எடுத்துக்கணும். அதற்குள் நம்மால முடிஞ்சதைப் பிறருக்கு செஞ்சுடணும்!
    காஞ்சிப் பெரியவரைப் பார்க்கும்போது நான் நினைச்சதெல்லாம்--
    |இத்தனை காலமும் இவரைப் பார்க்காம இருந்துட்டோமேன்னு தான் இருந்தது!
    நாம எதுவுமேக் கேக்கத் தேவையில்லே--அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம்மக் கேள்விக்கெல்லாம் உரிய பதில்கள் கிடைச்சுடுது. சொல்லப் போனால்,,ஒரு துறவிங்கறவர் எப்படி இருக்கணும்ன்னு நான் மனசுல நினைச்சிருந்தேனோ,,அப்படியே அவர் இருந்தார்!!
    எம்.ஜி.ஆரின் இந்த விளக்கம் மட்டுமே அன்று நாகை தர்மனின் வியப்புக்குக் காரணமில்லை??
    இதே கேள்வி,,அங்கே மடத்தில் சீடர்களால் கேட்கப் படுகிறது-
    அவர் உங்களையேப் பார்த்துண்டிருந்தார். நீங்களும் அவரையே புன் சிரிப்போடு பார்த்துண்டிருந்தேளே??
    காஞ்சி முனி புன்னகையோடு கூறுகிறார்--
    அவன் எல்லாருக்கும் ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும்ன்னு ஆசைப் படறான்?
    அவனோட அந்த மனசுக்கு மட்டும் நான் சந்தோஷப்பட்டு சிரிக்கலே--
    இந்த ராஜியத்தையே ஒரு நாள் ஆளப் போறவன் நம்மளாண்ட இப்படிக் கேக்கறானேன்னு நினைச்சேன். சிரிச்சேன்??
    வார்த்தைகளை விரயம் செய்யாமலேயே--
    அவர்கள் இருவரும் தான் எத்தனை ஆழமாக-
    வாதம் செய்திருக்கிறார்கள்??
    காஞ்சியில் அன்று அந்தப் பழத்தின்--
    மெய் சிரிக்க--
    நடக்கப் போவதும் அது தான் என்று-
    மெய்யும் சிரிக்க--
    நமக்கோ இங்கே-
    மெய் சிலிர்க்கிறது!!!......... Thanks to mr.VT

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3262
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு சாமான்யனின் புகழாரம்

    மதிநுட்பம் நிறைந்த மந்திரிகள், சட்ட வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே திட்டங்களும், சட்டங்களும் நிறைவேற்றப்பட்ட இலக்கணத்தை உடைத்தெறிந்து ஒரு அடிமட்டத்தொண்டனின் விருப்பத்தையும் கூட சட்டமாக்கியவர் தான் நம் பொன்மனச்செம்மல்...

    ஒன்பது வயது பாலகனின் குமுறலுக்கு அரசாணை பிறப்பித்த அதிசயம் தான் இது. இதோ அந்த மழலையின் குரல்...

    என் பிரச்சனையை யாரிடம் சொல்வது...

    எங்கள் கிராமத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்காக என் தாய் தினசரி கஷ்டப்பட்டு 2கிமீ நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரும் கொடுமையை யாரிடம் கூறுவது...?

    மிக முக்கியமாக நாங்கள் வசிக்கும் பெரம்பலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலைபார்த்து வந்த எனது தந்தையாருக்கு வெகு தொலைவில் "டிரான்ஸ்பர்" ஆகியதால், அவரை வாரத்தில் ஒரு நாள் தான் பார்க்கமுடியும் என்ற எங்களின் மனக்குமுறலை யாரிடம் சொல்வது ?

    எங்களின் கண்ணீர் கதையைக்கேட்க யாருக்கு நேரம் இருக்கப் போகிறது ???

    எம்ஜிஆர் அப்போதைய முதல்வர். என் பிரச்சனையை அவர் செவிசாய்ப்பாரா? சினிமாவில் எல்லோருக்கும் உதவும் எம்ஜிஆர் நமக்கு உதவமாட்டாரா ???

    ஒரு பேனாவை எடுத்து மேற்கண்ட அனைத்து துன்பங்களையும் எழுதிவிட்டேன். அது உடைந்த பேனாவாகையால் லெட்டர் முழுவதும் 'மை பொட்டுக்கள்...'

    எம்ஜிஆர் சார்...
    நான் சௌக்கியம் நீங்க சௌக்கியமா? உங்க கிட்ட ஒரு உதவி கேட்கணும்...இப்படி ஆரம்பித்தது லெட்டர்...

    இப்படிக்கு...
    தங்களுக்கு கீழ்ப்படிந்துள்ள மாணவன்
    சு.செந்தில்குமரன்

    பெறுநர் விலாசத்தில் "எம்ஜிஆர். , கோட்டை - சென்னை"

    ஒரு வாரமிருக்கும். இரவு தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பிய என் அப்பா "இந்தா பிடி" என மறுபடியும் எங்கள் சொந்த ஊரான அரும்பாவூர் கிளைக்கே டிரான்ஸ்பர் ஆன அரசாணை...

    "உங்கள் மகன் சு.செந்தில் குமரன், தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு எழுதிய கடிதம் காரணமாக "பணிமாறுதல் உத்தரவு"

    அம்மாவும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அப்பா கண்ணீரில் திணறிக்கொண்டிருந்தார்.

    அதுமட்டுமல்ல...எங்கள் ஊரிலுள்ள எல்லாக்கிணறுகளும் தூர் வாரப்பட்டு தண்ணீர் பஞ்சமும் குறைந்தது.

    எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதர் எம்ஜிஆர் ...!!!
    அந்த இறைவன் கூட எங்களின் துன்பத்திற்கு இத்தனை விரைவாக செவிசாய்ப்பாரா? ன்னு கூட தெரியவில்லை.

    சகிக்கமுடியாத மைக்கறைகளைக் கொண்ட அக்கடிதத்தையும் படித்து அதை சரியாக புரிந்துகொண்ட புண்ணிய ஆத்மா எம்ஜிஆர்..

    எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒரு ஒழுங்கில்லாத, பாலகனின் கடிதத்தைக் கூடப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுத்த அந்த தாய்மனம் கொண்ட தலைவனை, முதல்வரை உலகம் பார்த்ததுண்டா ???........ Thanks...

  4. #3263
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
    நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
    மங்காத தங்கம் எங்கள் தங்கம்
    புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
    அப்போதும் சரி...!
    இப்போதும் சரி...!
    இனி எப்போதும் சரி...!
    மங்காத தங்கம் எங்கள் தங்கம்.......... Thanks...

  5. #3264
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரை தவிர வேறு யாருக்கு வரும் இந்த தாராள குணம் ? ஜெமினிகனேசனையும்
    பெருமை படுத்திய தவைர் !

    . இவ*ர் ந*மது புன்னகை மன்ன*னுட*ன் ந*டித்த ஒரே ப*ட*ம் முக*ராசி.
    இந்த* ப*ட*ம் வெளியானபோது மவுண்ட்ரோட்டில் க*ட் அவுட் மற்றும் பேனர்க*ள் திரை அர*ங்கில் வைக்க*ப்பட்ட*து. அதில் எம்ஜிஆர் க*ட் அவுட் பெரிய*தாக*வும், ஜெமினியின் க*ட் அவுட் ஒற்றைக்காலுட*ன் சிறிய*தாக*வும் இருந்தது. ஜெமினி இதை பெரிதுப*டுத்த*வில்லை. ஆனால், இதை அறிந்த த*லைவ*ர் வினியோக*ஸ்த*ருக்கு போன் செய்து த*ன் கட் அவுட் உய*ரத்திற்கே ஜெமினியின் க*ட் அவுட் வைக்கவேண்டும். அதுவும் அவ*ர் ப*டத்தில் இருகால்க*ளுட*ன் வ*ரும் காட்சியின் உருவ*மே இட*ம்பெற வேண்டும். அதை தான் மறுநாள் வ*ந்து பார்ப்பேன் என்றும் க*ண்டிப்பாக கூறிவிட்டார். பின் அவ்வாறே மாற்ற*ப்ப*ட்ட*து. இத*னை ஜெமினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்......... Thanks...

  6. #3265
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இனி #உங்களை #பார்க்கமாட்டோம்

    அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...

    கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.

    ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...

    "ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.

    இது நித்தமும் தொடர...

    ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.

    மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....

    ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...

    அருகே சென்று...
    "ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்

    நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.

    "ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...

    பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.

    அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...

    "இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....

    இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
    ...பள்ளியில் இதான் பேச்சு...

    வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
    வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்......... Thanks...

  7. #3266
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்...

    இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அக்டோபர் 17,1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க தனது முதல் தேர்தலை 1973-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்...

    அதைத் தொடர்ந்து 1977-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிளும் மாபெரும் வெற்றி பெற்றது...

    தலைவர் 1984-இல் மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

    கொடியின் வரலாறு...

    அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது...

    மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது...

    எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள்...

    அதன் பிறகு தலைவர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார்...

    அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை தலைவர் உருவாக்கினார்...

    பெயர் மாற்றம்...

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தலைவர் மாற்றினார்.......... Thanks...

  8. #3267
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்றய பதிவில் நம் தலைவர் ரசிகர்கள் பலர் கண்கள் குளம் ஆனதால் இன்று ஒரு நகைச்சுவை தலைவர் பதிவு.

    பணமா பாசமா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் திரு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நவாப் நாடக கம்பெனியில் இருந்து விலகி சக்தி நாடக சபா ஒன்றை உருவாக்கி நடத்தி வந்தார்.

    மதுரையில் எழுத்தாளன் என்ற நாடகத்தை நடத்தி முடித்து 100 பேர் கொண்ட அவர் குழு பாண்டிச்சேரிக்கு வந்து அந்த நாடகத்தை போட ஆரம்பிக்க.

    நாடகத்துக்கு கூட்டம் வரவில்லை. 100 பேருக்கு சாப்பிட சம்பளம் கொடுக்க வழி இல்லை...உடனே சென்னைக்கு கிளம்பி யாராவது நடிகர்கள் தலைமை தாங்கி நாடகம் நடந்தால் அன்று வரும் கூட்டத்தை வைத்து அந்த வாரம் முழுவதும் ஓட்டி விடலாம் என்று அவர் நடிகர் எம்.என். நம்பியாரை பார்க்க அவர் வீட்டுக்கு வர அங்கே நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களும் இருக்க.

    அவர்களிடம் குழுவின் நிலை குறித்து கே.எஸ்.ஜி...வருந்தி சொல்லி கொண்டு இருக்க முதலில் சாப்பிடுவோம் என்று எம்.என்.அவர்கள் சொல்ல.

    சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரட்சி நடிகர் நம்பியார் வீட்டுக்கு தற்செயல் ஆக வர அவரிடம் கே.எஸ்.ஜி...அவர்களை நம்பியார் அறிமுக படுத்த.

    உங்கள் போஸ்ட்மேன் எழுத்தாளன் நாடகங்கள் பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன் என்றவுடன் நம்பியார் கண் அசைக்க உடனே கே.எஸ்.ஜி...வந்த விவரம் சொல்ல.

    ஏற்கனவே நாடக குழு அனுபவம் இருந்ததால் ஒண்ணு செய்வோம் சனிக்கிழமை நம்பியார் நாடகத்துக்கு தலைமை மறுநாள் ஞாயிரு அன்று நான் வருகிறேன் என்னால் ஒரு 100 பேருக்கு உதவி ஆக இருக்கும் என்று அவரே சொல்ல.

    என்ன இது நாம் அவரை கேட்கவே இல்லை அவராக வருகிறேன் என்று ஒப்பு கொண்டு விட்டாரே இனி நம் குழு பிழைத்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் எம்.என்.அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார் கே.எஸ்.ஜி.

    அந்த நாளும் வர மதியம் கிளம்பி சுமார் 5 மணி அளவில் பாண்டிச்சேரிக்கு நம் தலைவர் போய் சேர்ந்து அந்த குழு இருக்கும் இடத்தை அடைய.

    புரட்சிநடிகர் வருகிறார் நாடகத்துக்கு என்ற வுடன் காலை முதலே அரங்கம் வாசலில் கூட்டம் சேர துவங்குகிறது. ஓடி வந்து வரவேற்ற கே.எஸ் ஜி.அவர்களிடம் நேற்று நம்பியார், உடன் எஸ்.வி சுப்பையா வர எப்படி வசூல் என்று தலைவர் கேட்க பாதி கிணறு தாண்டி விட்டோம் நீங்கள் இன்று வந்து இருப்பதால் இனி இந்த மாதம் முழுவதும் எங்கள் குழு பிழைத்து கொள்ளும் என்று அவர் சொல்ல.

    சற்று நேரத்தில் அங்கு வந்த நாடக குழு மேனேஜர் அரங்க வாசலில் மக்கள் வெள்ளம் போல் நின்று எம்ஜியார் எம்ஜியார் என்று மொய்க்கிறார்கள் என்ற தகவல் சொல்ல

    வாசல் வழியா கண்டிப்பாக நாம் உள்ளே போக முடியாது என்றவுடன் தலைவர் நான் தலையில் முண்டாசு கட்டி கொண்டு அடையாளம் தெரியாமல் உள்ளே போய் விடலாமா என்று கேட்க.

    உங்களை வெளியே மக்கள் பார்த்து விட்டால் உள்ளே எவரும் வர மாட்டார்கள் அது வீணாக போய்விடும்.

    கூட்டம் தெரிந்து நான் ஒரு மாற்று யோசனை வைத்து இருக்கிறேன்.அரங்கின் பின்னால் ஒரு குறுக்கு சந்து இருக்கு அதன் வழியாக ஒரு 15 அடி உள்ளே போனால் அந்த அரங்கின் பின் வாசல் வழியாக நாம் உள்ளே போய் விடலாம் என்று கே.எஸ். ஜி...சொல்ல பாவம் போல இருந்த அவர் முகம் கண்டு நம் மன்னர் ஒத்துக்கொள்ள.

    இரவு 9 மணிக்கு நாடகம் ஆரம்பம்..ஒரு 7.30 மணி அளவில் அந்த குறுக்கு சந்து அருகில் கார் வந்து நிற்க இருவரும் இறங்கி முதலில் வழி காட்டி கொண்டு கே.எஸ்.ஜி போக பின்னால் நம் தலைவர் முழு ஒப்பனையுடன் தொடர.

    ஒரு பத்தடி தூரம் போனதும் எதிரே இருந்து ஒரு பெண் ஆஜானுபாகுவான உடல் கொண்டு வர.

    வடிவேல் பட காமெடியில் ஒரு பெண்ணை பிடிக்க போக அந்த பெண் வடிவேல் போலீஸ் உடையை பறித்து கொண்டு போட்டு கொண்டு ஓடுபவர் போல உடல் கட்டு அந்த பெண்ணுக்கு இருக்க ஒரு உதாரணம் கொண்டு.

    எதிரே வந்த அந்த பெண்...கே.எஸ்.ஜி யை தாண்டி பின்னால் வந்த நம் தலைவரை உற்று பார்த்து அவர் எம்ஜியார் போல இருக்கே என்பதை உறுதி செய்து கொண்ட பின்.

    ராசா நீ எங்கே இங்கே இந்த சந்தில வந்தே என்று தலைவரை கட்டி சேர்த்து பிடித்து கொள்ள.... தலைவர் அட... விடும்மா...விடும்மா என்று குரல் கொடுக்க

    கே.எஸ்.ஜி அந்த பெண்ணின் தோற்றம் கண்டு பயந்து நிற்க உடனே சுதாகரித்து கொண்ட எம்ஜியார் விடும்மா நான் ஒரு நிகழ்ச்சிக்கு போறேன் என்ற உடன் அந்த பெண் சந்தில என்ன ராசா நிகழ்ச்சி என்று கேட்க... தலைவர் தன் பலம் பொருந்திய கைகளால் அந்த கட்டி பிடித்து இருந்த அந்த பெண்ணின் கைகளை பிடித்து விலக்கி கொண்டு ஒரே துள்ளலில் அருகில் இருந்த அந்த ஒரு ஆள் நுழையும் அந்த கேட் வாசல் வழியா அரங்கின் பின் புறம் நுழைந்து விட.

    அதிர்ச்சியில் உறைந்து போன கே.எஸ்.ஜி...திகைத்து நிற்க..... அங்கே அரங்கின் உள்ளே இருந்து பறந்த விசில்கள் சத்தம் எம்ஜியார் மேடைக்கு சென்று விட்டார் என்பதை உறுதி படுத்த.

    நாடகம் இரவு 1 மணி அளவில் முடிய மேடையில் தலைவர் அருகில் கூட வர பயந்து ஓரம் ஆக நின்ற கே.எஸ்.ஜி....குழு தங்கி இருக்கும் இடத்துக்கு வந்த பொன்மனம் இரவில் நேரம் ஆகி விட்டதால் அங்கேயே தங்க.

    மறுநாள் விடிந்த உடன் சற்று நேரம் கழித்து எங்கே கே.எஸ்.ஜி.என்று தலைவர் கேட்க..

    அவர் இரவு சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டேன் இப்ப நேரில் பார்த்து என்ன நடக்குமோ என்று பயத்துடன் செல்ல.

    அவரை பார்த்த தலைவர் முதலில் கடுமை காட்டும் முகம் கொண்டு அடுத்த நொடியில் முகம் மாறி என்ன பயமா சொல்லுங்க என்று சிரித்து கொண்டே வரவேற்க மறுபடியும் இந்த உலகில் பிறந்தது போல உணர்ந்தார் கே.எஸ்.ஜி..

    நடந்ததை விடுங்க அது முடிந்து விட்டது...வசூல் போதுமா என்று கேட்க 2 மாதம் குழு முழு பலத்துடன் இனி செயல் படும் என்று கண்ணீருடன் கே.எஸ்.ஜி...கை கூப்ப.

    அவர் கண்ணீரை துடைத்து கிட்டு நான் புறப்படுகிறேன் என்று தலைவர் கிளம்ப.

    பின் ஒரு காலத்தில் கற்பகம் என்ற படத்தின் கதையை முதலில் தலைவருடன் கதை சொல்ல கே.எஸ்.ஜி போன போது என்ன அந்த.....சந்து கதை நினைவுக்கு வருதா என்று தலைவர் கேட்க வாய் விட்டு சிரிக்கிறார் கே.எஸ்.ஜி...அவர்கள்.

    தலைவர் கதை கேட்டு அவர் பின் சிவாஜி நடிப்பதாக இருந்த அந்த படம் பின்னால் ஜெமினி நடித்து வெற்றிகரமாக ஓடியது பின்னால் நடந்தவை.

    வாழ்க எம்ஜியார் புகழ்.

    நன்றி.... தொடரும் நாளை..உங்களில் ஒருவன் நெல்லை மணி......... Thanks...

  9. #3268
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”

    காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
    தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!

    அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!

    ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
    கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!

    # சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
    தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
    அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?

    “காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”

    எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
    அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!

    # அதன் பின்.....
    1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!

    அது மட்டுமா..?

    1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :

    “காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”

    # நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...

    இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
    காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
    அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது ..!........ Thanks.........

  10. #3269
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாய்ப்புகளை வாரி வழங்கிய வள்ளல்...

    மயிலை வடக்கு மாடவீதியில் ஒரு திருமண மண்டபம்...
    டப்பிங் கலைஞர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி... இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார் அந்த இளம் பெண் ...
    'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...' போன்ற பாடல்கள்... வித்தியாசமான குரலில் பாடிக் கொண்டிருந்தார்... ஒரே எம்.ஜி.ஆர். பாட்டு மயம்...
    முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
    அப்போது அவர் முதலமைச்சராக இல்லை. அ.தி.மு.க தலைவர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
    அந்த இளம் பாடகியின் தாயார் அழைத்ததின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மக்கள் திலகம். காரணம்...
    அந்த தாய் ஒரு காலத்தில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடிகை! பாலமுருகன் பாய்ஸ் கம்பெனி, ஜோதி நாடக சபா என்று நடித்துக் கொண்டிருந்தவர். திருமணமான பின் நாடகத்தை விட்டு விட்டு சினிமாவில் நடித்தார். கண்ணன் என் காதலன், கணவன், என் அண்ணன், இதயக்கனி, நீரும் நெருப்பும் என்று பல எம்.ஜி.ஆர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பின்பு 'டப்பிங்' கலைஞராக விளங்கினார். நாடக நடிகையாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு அவரை நன்றாகத் தெரியும். அதனால், பழைய, புதிய
    சக நாடகக் கலைஞர்கள் யார் அழைத்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் அழைப்பை ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொள்கையாகவேக் கொண்டிருந்த மக்கள் திலகம், அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
    படப்பிடிப்பின்போது அந்தப் பெண் தனது தாயாருடன் வருவதை எம்.ஜி.ஆர் பலமுறை பார்த்திருக்கிறார்.
    ஆனால், அவர் இந்த அளவுக்குப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
    இந்த செய்திகளையெல்லாம் நான் அறிந்துகொள்ள உதவியாக இருந்த அந்த பாடகியின் பேட்டியிலிருந்து ஓரு பகுதி...
    " மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு இசை ரசிகரைப் பார்க்க முடியாது. அந்தக் கல்யாணத்தில் என் கச்சேரியை நீண்ட நேரம் அமர்ந்து ரசித்தவர், ‘‘உனக்கு இப்படி பாடக்கூடிய பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லையே’’ என்றார் அம்மாவிடம். அப்படியே கத்தையாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து வாழ்த்தினார். அப்போ எனக்கு 15 வயசுதான் இருக்கும்.
    அவருடைய பாராட்டையே விருதாக நினைத்த எனக்கு, வரம் போல இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஒரு பாடலைப் பாட திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனிடம் சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ஜேசுதாஸுடன் சேர்ந்து பாடிய,
    கவிஞர் நா.காமராசன் இயற்றிய அந்தப் பாடல்தான், ‘போய்வா நதி அலையே...’....
    இப்போது தெரிந்திருக்குமே அந்தப் பாடகி யாரென்று ! அவர்தான் பாடகி டி.கே.கலா. அகத்தியர் திரைப்படத்தில் 'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை...' என்ற பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடி, முதல் பாட்டிலேயே பலரது கவனத்தையும் கவர்ந்தவர். அவரது தாயார்
    நாடக மற்றும் திரைப்பட நடிகையாக, டப்பிங் கலைஞராக விளங்கிய
    காலஞ்சென்ற சண்முகசுந்தரி.
    ரெக்கார்டிங் முடிந்ததும் கே.வி.மகாதேவன், ‘‘இதுவரை இப்படி ஒரு குரலை நான் கேட்டதில்லை. உனக்கு தனித்துவமான வாய்ஸ்’’ என்று டி.கே.கலாவை வாழ்த்தினாராம்.
    அந்த பேட்டியில் மேலும் தொடர்கிறார் டி.கே.கலா...
    "ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில், ‘புதுசா ஒரு சின்னப் பொண்ணு பாடின பாட்டு இது. அருமையா பாடி இருக்கு... கேளுங்க’ என்று எல்லோருக்கும் இந்தப் பாடலை போட்டுக் காட்டி சில படங்களுக்கு சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘வாரேன் வழி பார்த்திருப்பேன்...’ என்ற பாடலை மெல்லிசை மன்னர் இசையில் பாடினேன். எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய பாடவில்லை என்றாலும், என் பாடலை அவர் டேப் ரெக்கார்டரில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் போட்டு காட்டியது யாருக்கும் கிடைக்காத ஒரு கொடுப்பினைதானே!’’
    இப்படி பரவசத்தோடு பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் பாடகி டி.கே.கலா அவர்கள்.
    தன்னோடு பழகிய சக கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் வாரிசுகளுக்குக் கூட நல்ல வாய்ப்புகளை அளிக்கத் தவறியதில்லை மக்கள் திலகம்! வெறுமனே வாய்ப்பளிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் திறமையை மற்றவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி சிபாரிசு செய்யவும் தயங்கியதில்லை!...... Thanks.........

  11. #3270
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் அதிசயம்,அவரைப்பற்றி ஆய்வுக்கு ஓய்வு கிடையாது,எந்த விஷயத்தில் அவரை ஆராய்ச்சி செய்தாலும் தனிப்பிறவியாகத்தான் திகழ்வார்.
    உலகத்திரைப்பட வரலாற்றில் கதாநாயகர்களுடன் இணையாக நடிக்கும் காமெடி நடிகர்களால் படத்தில் வாடா,போடா என்று அழைக்கப்படாத ஒரே ஒரு கதாநாயகன் நம் புரட்சி தலைவர் மட்டும்தான்........👌👍💐

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •