Page 316 of 402 FirstFirst ... 216266306314315316317318326366 ... LastLast
Results 3,151 to 3,160 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #3151
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  #வியப்பும் #பக்தியும்

  பேராசிரியர். திரு.கு.ஞானசம்பந்தம் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்குச் சென்றிருந்தார்...நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் 'கண்டி' நகரம் வழியாக டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார்...

  திடீரென அந்த டாக்ஸி டிரைவர் வண்டியை நிறுத்தி ஒரு காலியிடத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டு பின்னர் காரை ஓட்டத்தொடங்கினார்...

  டிரைவரின் செய்கையைப் பார்த்த
  ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரே வியப்பு..."அந்த இடத்தில் கோயிலோ வேறொன்றுமோ இல்லை!!! ஒரு காலியிடத்தைக் கும்பிடுகிறாரே!!!!"

  ஏன் தம்பி! அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே! அதை ஏன் கும்பிட்டீர்கள்...???

  அதற்கு டிரைவர்,
  "இந்த இடத்தில் தான் ஒரு காலத்தில் எங்க எம்ஜிஆர் பிறந்தவீடு இருந்தது..."
  என்றதும்...!!!

  ஞானசம்பந்தன் அவர்கள் அப்படியே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்...
  'ஒரு காலியிடத்தில் தங்கள் மனங்கவர்ந்த தலைவன் பிறந்தவீடு என்ற ஒரே காரணத்திற்காக வணங்குகிறார்களென்றால் அந்தத் தலைவன் எப்படிப்பட்ட தலைவனாக இருந்திருக்கிறார்...அப்படிப்பட்ட தலைவன் மேல் இந்த மக்களுக்கு எந்தளவு பக்தி...!

  பிரமித்துப்போனார்...பேராசிரியர்...... Thanks...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #3152
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  “எம்.ஜி.ஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்”
  - கவிஞர் கண்ணதாசன்
  https://www.thaaii.com/?p=25662
  #

  1980 ஆம் ஆண்டு மே மாதம்.

  தமிழகத்தில் அப்போது தான் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.

  கலைத்தவர் இந்திராகாந்தி.

  சளைக்கவில்லை எம்.ஜி.ஆர். இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டு 129 தொகுதிகளில் வெற்றி.

  மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.

  அதற்கான தேர்தல் வேலைகளில் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரைச் சந்தித்த கவிஞர் கண்ணதாசன் அந்த அனுபவத்தை அப்போது வார இதழ் ஒன்றில் எழுதிக் கொண்டிருந்த “சந்தித்தேன்.. சிந்தித்தேன்” தொடரில் எழுதினார்.

  அந்த அனுபவம் உங்களுடைய பார்வைக்கு :

  “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்”

  “அவர் உற்சாகமாக இருக்கிறார். சிரித்த முகத்தோடிருக்கிறார். திடகாத்திரமாகவும், சுறுசுறுப்போடும் இருக்கிறார், முன்பைவிடப் பளபளப்பாக இருக்கிறார்.

  மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்னை வந்த எம்.ஜி.ஆரை இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஆற்காடு முதலி தெருவில் சந்தித்த போது, நான் ஆச்சர்யப்படவில்லை.

  சுமார் ஒன்றரை மணி நேரம் என்னோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். அதிலே தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் தெரிந்தது.

  நியாயம்தான். தமிழ்நாடு பூராவிலும் அவர் மீது ஓர் அனுதாபம் இருக்கிறது.

  “நாங்கள் இந்திரா வரவேண்டும் என்று விரும்பினோமே தவிர, எம்.ஜி.ஆர் போக வேண்டும் என்று விரும்பவில்லை” என்பது ஏழை எளிய மக்களின் வாதம்.

  “டில்லிக்கு இந்திரா, நம் ஊருக்கு எம்.ஜிஆர்” என்றே எங்கே பார்த்தாலும் பேசுகிறார்கள்.

  அதை நேரிலேயே கேட்டு, மக்கள் வெள்ளத்தைச் சந்தித்துத் திரும்பிய அவர், நாணயமான நடத்தையை இந்த நாட்டு மக்கள் மதிக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

  அவரைவிட்டு விலகிச் சென்றவர்கள் கூட அவரைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லையே!

  சட்டசபை கலைக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கவில்லை. காரணம் இந்திரா காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அவர் தவற விட்டதில் எனக்கு வருத்தம் இருந்தது.

  ஆனால் நான் அவர் மீது காட்டிய பகையையும், அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்? ஆகவே இன்று அவரைச் சந்தித்தேன்.

  குறைந்தபட்சம் 135 இடங்களை அ.தி.மு.க பெறும் என்று அவர் நம்புகிறார்.

  நாட்டு மக்கள் ஓட்டுப் போடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். இனி அவர்கள் மனோபாவத்தைக் கணிப்பது கடினமான காரியமல்ல.

  வங்காளத்தையும், கேரளாவையும் போல அவருக்குப் பத்து, இவருக்குப் பத்து என்ற நிலைமை எப்போதுமே தமிழ்நாட்டில் இல்லை. ஓட்டுச் சீட்டை ஒரே மாதிரிப் போட்டு ஒரு கட்சியை மெஜாரிட்டிக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

  நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர் ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோபவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

  அவர் என்னிடம் அரசியலைப் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக என்னோடு வந்திருந்த என் மகன் கலைவாணனுக்கு ஒரு மணி நேரம் புத்திமதிகளைக் கூறினார்.

  சினிமாவில் நடிக்கும் கலைவாணன் உடம்பை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் சில ஆசனங்களைச் செய்து காட்டினார்.

  கலைத்துறையில் அரை நூற்றாண்டாக வளர்ந்து கொண்டிருக்கும் அவர், உடம்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முறை கண்டு என் மகனே கூட ஆச்சர்யமடைந்தான்.


  தேர்தல் சூடு பிடித்திருக்கும், இந்த நேரத்தில் அது பற்றிப் பரபரப்பே கொஞ்சம் கூட அவரிடம் காணப்படவில்லை.

  “வெறும் கறி, மீனிலே உடம்பைக் காப்பாற்ற முடியாது. கீரை வகைகள் நிறையச் சாப்பிடு” என்றார் அவர்.

  இடையிடையே வருகிற டெலிபோன் கால்களுக்கு அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

  அவரிடம் நிதி கொடுப்பதற்கென்றே, ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.

  நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்குப் பாத்திரமான ஒரு மகா மனிதனைத் தான் அப்போது சந்தித்தேன்.

  ‘எழுதினால் கண்ணதாசன் தான் எழுத வேண்டும்’ என்று அவர் சொன்ன காலங்களும் உண்டு. ‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல, யாரையும் ரசித்ததில்லை.


  ‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே அவரது கொள்கை. நண்பன் என்று சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

  ஒரு படத்தில் அவருக்காக நான் வசனம் எழுதினேன்.

  “என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இல்லை” என்று.

  அது இன்று பலிக்கிறது.

  நம்பாமல் சென்று விட்டவர்கள் இன்று அஞ்சாத வாசம் செய்கிறார்கள். நம்பித் துணை நிற்போர், நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

  அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம், விழுவது போல் தெரியும், எழுந்து விடுவார். நீண்டகால வீழ்ச்சியை அவர் சந்தித்ததே இல்லை.

  தமிழர்கள், அவரைத் ‘தமிழன்’ என்றே அறிவார்கள். அவரை வேறு பாஷைக்காரர் என்றோ, கப்பல் பேரத்தில் ஊழல் செய்தவர் என்றோ சொல்லப்படுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

  நாட்டு மக்கள் முழுக்க முழுக்க அரசியல் தெளிவு பெற்றுவிட்ட நேரத்தில், இந்தத் தேர்தல் நடக்கிறது.

  தேர்தல் அறிக்கைகளும், விதவிதமான சுவரொட்டிகளும், மேடை முழக்கங்களும் வெறும் தேர்தல் காலக் கடமைகளே! அவற்றைப் பார்த்துவிட்டோ, கேட்டுவிட்டோ மக்கள் ஓட்டுப் போடுவதில்லை.

  கம்யூனிஸ்டுகளும், முக்குலத்தோரும், நெடுமாறனும் செல்வாக்குப் பெற்ற மதுரையைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவரது ஆழ்ந்த அறிவு தெரியவில்லையா?

  ‘இந்திராவா, எம்.ஜி.ஆரா?’ என்று வந்தபோது மக்கள் இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

  எம்.ஜி.ஆரா, தி.மு.க வா என்று வரும் போது…

  பொறுத்திருந்து பார்ப்போம்.”

  நன்றி : ‘சந்தித்தேன்.. சிந்தித்தேன்’ – கவிஞர் கண்ணதாசனின் நூலில் இருந்து… கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

  ****
  #mgr
  #MGRforever
  #Kannadasan
  #MGRamachandran............ Thanks.........

 4. #3153
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  .#அன்று...! #இன்று...?

  கருணாநிதி குடும்பம் நொடித்திருந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் 1971ல் உதவிய சினிமாத் தொழிலில் சுய தயாரிப்பில் கருணாநிதி, முரசொலி மாறன் பல படங்களை எடுத்து தங்கள் வீடு வரை அடமானத்தில் இருந்த போது மக்கள்திலகம் நடித்து கொடுத்த படமே #எங்கள்_தங்கம்.

  #எங்கள்_தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நிகழ்வில்..

  அரங்கில் பேசிய மாறன்..

  எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. #முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் #வட்டி கூட கட்ட முடியாத நிலை..

  என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் #புரட்சி_நடிகர் அவர்கள். பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்... அது மட்டுமின்றி, #ஒரு_பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்..

  இன்று எங்கள் குடும்பம் அனைத்து #கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர் தான்.. கோபாலபுரம் வீடு அவர் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...

  நானும், எங்கள் குடும்பமும் #ஆயுள் உள்ளவரை அவரை மறக்கக் கூடாது..

  அடுத்து பேசிய #கருணாநிதி:

  கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
  உண்மையைச் சொன்னால் #எனது #வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...

  இவை அனைத்தும் அடுத்த நாள் 17-01-1971 ....#முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது............ Thanks...

 5. #3154
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  #லதாம்மாவின் #சேவை #கட்சிக்குத் #தேவை

  எம்ஜிஆர் லதாம்மா வின் வழக்கம்
  போல மனம்திறந்த, யதார்த்தமான, நேர்மையான பேட்டி...இன்று பிற்பகல் 2மணிக்கு....தந்தி டிவியில்...

  புரட்சித்தலைவரைப் பற்றிய சுவாரசியமான பல விஷயங்கள் அலசப்பட்டன...

  தன் தாய்க்கு புரட்சித்தலைவர் செய்த முக்கியமான உதவியைப் பற்றி லதாம்மா பகிர்ந்தது இதுவரை யாருமே கேள்விப்படாத, நெகிழ்ச்சியான ஒன்று...

  இதுவரையிலும் எந்தப்பதவியியையும் எதிர்பாராத, உண்மையான, தூய எம்ஜிஆர் விசுவாசிகளில், லதாம்மா மிக முக்கியமானவர்...

  எம்ஜிஆர் லதாம்மாவிற்கு, கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு, முக்கியப் பதவி வழங்கப்பட வேண்டுமென்பது எம்ஜிஆர் பக்தர்களின் விருப்பம் மட்டுமல்ல...
  தமிழக மக்களின் விருப்பமும் கூட...

  இன்றைய சூழலில் கழகத்திற்கு எம்ஜிஆர் லதாம்மாவின் பங்களிப்பு மிக மிக அவசியம் என்பதை மனிதிற்கொண்டு கட்சி மேலிடம் இனியும் தாமதிக்காது எம்ஜிஆர் லதாம்மாவிற்கு, #கட்சியில் #முக்கியப் #பொறுப்பு வழங்கவேண்டுமென்று எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கிறேன்...

  YOU TUBE LINK...
  ........ Thanks...

 6. #3155
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  #மூன்றெழுத்தில் #என் #மூச்சிருக்கும்”

  என்று கடமையை மூச்சாக கொண்ட நம்ம வாத்தியாருக்கு அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட லட்சோபலட்சம் பக்தர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்ஜிஆரை குறிப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்ஜிஆருக்கும் #மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரம்பித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்...!
  அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.

  அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்ஜிஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்ஜிஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்ஜிஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்ஜிஆருக்கு வயது மூன்று.

  என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்ஜிஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்ஜிஆர்.

  நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்ஜிஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

  எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

  1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்ஜிஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்ஜிஆர் மட்டுமே.

  1967 ஜனவரி 12 ந்தேதி எம்ஜிஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்ஜிஆர் கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.

  ஜானகி அம்மையார் எம்ஜிஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”, எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த “ராஜமுக்தி”, ஜுபிடர் தயாரித்த “மோகினி”.

  எம்ஜிஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை (மூன்று கைகள்) கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ..."#ஈகை" எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.

  நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்ஜிஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார்...

  எம்ஜிஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

  முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் தன் வாழ்நாளிலேயே மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர்.

  “செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்ற பாடல் வரிகள் வாத்தியாருக்கு மட்டுமே பொருந்தும் ......... Thanks...

 7. #3156
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  ஸ்ரீலங்காவில் தமிழ் ரீபல்ஸ் மூலம் கெரில்லா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ராமச்சந்திரன் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

  வறுமைக்கு எதிரான சர்வதேச யுத்தத்தில் எம்.ஜி.ஆர் தனது குறியீட்டை செய்துள்ளார். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம் உலக வங்கி இதேபோன்ற வறுமை ஒழிப்பு திட்டங்களை வேறு எங்கும் நடத்துவதற்கும் ஒரு அளவுகோல்.

  --வாஷிங்டன் போஸ்ட் [அமெரிக்கா]

  Ramachandran was a central figure in efforts to end the guerrilla war by Tamil Rebels in Sri Lanka.

  MGR has also made his mark in International War against poverty. The Tamil Nadu Nutrition Scheme launched by MGR is not the standard by which the World Bank measures similar anti-poverty schemes elsewhere.
  --Washington Post[USA]........... Thanks to mr.SB.,

 8. #3157
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  கோடிகள் கொடுத்தத் தலைவர்...

  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர்...

  இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல...

  அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் தலைவர் அவ்வளவு நேசித்தார்...

  சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்...

  தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார்...

  தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர்...

  'அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

  அந்த வாசலில் காவல்கள் இல்லை

  அவன் கொடுத்தது எத்தனை கோடி

  அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’......... Thanks.........

 9. #3158
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  கோடிகள் கொடுத்தத் தலைவர்...

  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர்...

  இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல...

  அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் தலைவர் அவ்வளவு நேசித்தார்...

  சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்...

  தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார்...

  தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர்...

  'அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

  அந்த வாசலில் காவல்கள் இல்லை

  அவன் கொடுத்தது எத்தனை கோடி

  அந்தக் கோமகன் திருமுகம் வாழிவாழி!......... Thanks.........

 10. #3159
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  #நாடோடி_மன்னன்

  'தீன் தீன்கா சுல்தான்' என்ற இந்தி படத்தைப் பாா்த்தாா் பேரறிஞா் அண்ணா அவா்கள் .

  மூன்று நாட்கள் மட்டுமே ஒரு நாட்டிற்கு இராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன் ,

  அந்த குறுகிய காலத்திற்குள் அந்த நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பதுதான் என்பதுதான் அப்படத்தின் கதை .

  இப்படம் அண்ணாவை மிகவும் கவா்ந்து விட்டது . அதனால் ஒரு கூட்டத்தில் பேசும்போது , " தீன் தின்கா சுல்தான்' என்ற ஒரு திரைப்படத்தைப்பாா்த்தேன் ;

  மூன்று நாட்கள் மட்டும இராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன் , அந்நாட்களுக்குள் , நாட்டிற்குத் தேவையான ,

  பல திட்டங்களைத் தீட்டி , அந்த நாட்டை எப்படி செல்வச் செழிப்படையச் செய்கிறான் என்பதுதான் கதை ..

  இந்த நாட்டை ஆள , எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள் . அதாவது என்னை , ஏக் தின்கா சுல்தான் - ஒருநாள் இராஜாவாக ஆக்குங்கள் ; இந்த உலகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன் " என்ற வகையில் பேசினாா் .

  இப்பேச்சு , புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.,மனதில் பதிந்து போனது . இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானதுதான் 'நாடோடி மன்னன்' திரைப்படம் .

  இப்படத்தை , பெரும் பொருட் செலவில் , தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றும் , கடன் வாங்கியும் , தயாாித்தாா்
  எம்.ஜி.ஆா்.,

  இப்படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் , எம்.ஜி.ஆாின் எதிா்காலம் என்ற பேச்சு எழுந்தபோது ,

  " இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் ; இல்லையென்றால் நாடோடி ....." என்று தன் நிலையைக் கூறினாா் எம்.ஜி.ஆா் .

  ஆனால் இப்படம் மிகப் பொிய வெற்றியைப் பெற்றது .

  'நான் மன்னன்தான் ....' என்பதை நிரூபித்தாா் எம்.ஜி.ஆா்., தான் தான் சக்கரவர்த்தி என்பதையும் நீக்கமர நிரூபித்தார் புரட்சி நடிகர்......... Thanks.........

 11. #3160
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,890
  Post Thanks / Like
  1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!.......... Thanks.........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •