Page 305 of 402 FirstFirst ... 205255295303304305306307315355 ... LastLast
Results 3,041 to 3,050 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3041
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாத நிகழ்வு இது .....
    1958ல் ஜவஹர்லால் நேரு சென்னை வர இருந்தபோது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட திமுக தயாராக இருந்தது.
    அந்த சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எம்ஜிஆர் அவர்களையும் எஸ்.எஸ்.ஆர் அவர்களையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தது அன்றைய காவல் துறை .
    சிறையில் வசதியான வகுப்பை மறுத்து, சாதாரண வகுப்பில் ஆறு நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் நமது இதயதெய்வம் எம்ஜிஆர் !........ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3042
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நான்_சாப்பிடட்டுமா..? #வேண்டாமா..?

    சாப்பாட்டு இலை முன் அமர்ந்து கொண்டு, இந்த ஒரே ஒரு சாமர்த்திய கேள்வியை மட்டுமே வஜ்ராயுதமாக பயன்படுத்தி எப்படிப்பட்ட வல்லவரையும் நம் வழிக்குக் கொண்டு வந்து விட முடியும்... அதற்கு சாமர்த்தியமும் சமயோசித புத்தியும் வேண்டும், இரண்டுமே எம்.ஜி.ஆரிடம் இருந்தது.

    அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் மறைந்து விட ... அடுத்த முதல்வர் யார்..? என நாலா திசைகளிலிருந்தும் குரல் வர....நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர ..உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி...

    அதற்கு ராஜாஜி, “ உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்....
    எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார் ” என்று அனுப்பி வைக்க....

    உடனடியாக கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும் தமிழ், தமிழ்... என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். “என்று எதுகை மோனையுடன் எம்.ஜி.ஆரிடம் பேச ...இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.சொன்னார் இப்படி....
    “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்..”

    உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த எஸ்..எஸ். ராஜேந்திரனுக்குப் போன் செய்த எம்.ஜி.ஆர்....
    “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார் ...
    சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு எஸ்.எஸ்.ஆரின் இல்லம் வருகிறார் எம்.ஜி.ஆர்.

    இலை போட்டு இனிய முகத்துடன் எஸ்.எஸ்.ஆரின் தாய் , எம்.ஜி.ஆருக்கும் - எஸ்.எஸ்.ஆருக்கும் பரிமாற....,
    இந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர்...எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுங்க….!” என்கிறார்....

    “கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று எம்ஜிஆர் விளக்குகிறார்.

    திகைத்துப் போன எஸ்.எஸ்.ஆர். நிறைய விளக்கங்கள் சொல்லி.., “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
    எம்.ஜி.ஆர். வாதம் செய்யவில்லை..வற்புறுத்தவில்லை...
    எஸ்.எஸ்.ஆரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்
    "நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா..?”
    எஸ்.எஸ்.ஆர். வெகு நேர யோசனைக்குப் பின், வேறு வழியின்றி சொல்கிறார்...
    “சரி.. நீங்க சாப்பிடுங்க..”
    அதன் பின்.. முதல்வராகக் கருணாநிதி பொறுப்பேற்கிறார்.
    அப்புறம்.. நடந்ததை நாடே அறியும்...!

    #யானைக்கு_பாகனைவிட_சிறந்த #நண்பன்_யாருமில்லை.
    #ஆனால்_மதம்_பிடித்தால்_யானைக்கு #பாகனை_விட_மோசமான_எதிரியும்
    #யாரும்_இல்லை.

    சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!......... Thanks..........

  4. #3043
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_பொற்பாதம்_வணங்கி #நண்பர்கள்_அனைவருக்கும்_இனிய #காலை_வணக்கம்

    #திமுக_அதிமுக_இணைப்பு
    #பேச்சு_வார்த்தைகள்

    1979ஆம் வருடத்தின் இலையுதிர் காலம். ஒரிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிஜு பட்நாயக், ஒரு வலிமையான எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்க விரும்பினார்.

    ஆகவே, தனிப்பட்ட முறையில் இரு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் அவர். வீரமணி மூலம் அவ்வப்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது அவருக்குத் தெரியாது.

    கலைஞரை எம்.ஜி.ஆர். சந்திக்க வேண்டுமென பத்திரிகையாளர் சோலை அறிவுறுத்திவந்தார். கலைஞரிடம் வீரமணி இதனை வலியுறுத்திவந்தார்.

    செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை கலைஞரை தொலைபேசியில் அழைத்த, பட்நாயக் சென்னை வந்து அவரை சந்திக்கலாமா என்று கேட்டார்.

    .... செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வந்த பட்நாயக், கலைஞரைச் சந்தித்தார். கலைஞர் ஆறு நிபந்தனைகளை முன்வைத்தார்.

    1. இணைப்பிற்குப் பிறகு ஒருங்கிணந்த கட்சி தி.மு.க. என்றே அழைக்கப்படும்.

    2. கட்சியின் கொடி அ.தி.மு.கவின் கொடியாக இருக்கலாம்.

    3. எம்.ஜி.ஆர். முதல்வராகத் தொடர்வார்.

    4. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க அவசியமில்லை.

    5. ஒருங்கிணைந்த கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் யார் என்பது இணைப்பிற்குப் பிறகு தகுந்த நேரத்தில் முடிவுசெய்யப்படும்.

    6.முக்கியமாக, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற ஆணையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற வேண்டும்.

    இந்த நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், எம்.ஜி.ஆர். இதற்கு நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்று நம்பினார்.

    #மோதல்_அரசியலால்_களைப்படைந்த #எம்ஜிஆர்

    எம்.ஜி.ஆரும் இணைப்பை விரும்பினார் அல்லது அப்படி ஒரு தோற்றம் இருந்தது.

    மோதல் அரசியல் தமிழ்நாட்டை முன்னெடுத்துச்செல்லவில்லை என்பதோடு, எம்.ஜி.ஆருக்கு மிகவும் களைப்பூட்டியது.

    செப்டம்பர் 12ஆம் தேதி காலையில் மோகன்தாஸுடன் (காவல்துறை தலைவர்) இணைப்பு குறித்து பேசினார் எம்.ஜி.ஆர்.

    அடுத்த நாள் காலையில் மாநில விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். பட்நாயக் அருகில் இருந்த கலைஞரை 'ஆண்டவரே' என்று பிரியத்துடன் அழைத்தார்.

    கலைஞருடன் அன்பழகன் இருந்தார். எம்.ஜி.ஆர். நெடுஞ்செழியனையும் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

    பிறகு இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பட்நாயக் சொன்ன நிபந்தனைகள் எல்லாம் உண்மைதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

    இந்த ஆறு நிபந்தனைகளுக்கும் பின்னாலிருந்த காரணங்களை விளக்கினார் கலைஞர். எம்.ஜி.ஆர். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

    மேலும் ஒருபடி முன்னே சென்று, இரு கட்சிகளின் செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒரு குறிப்பிட்ட நாளில்கூடி இணைப்பு குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என வாக்குறுதியளித்தார் எம்.ஜி.ஆர்.

    #கழகங்களின்_இணைப்பைக்
    #தடுத்தது_யார் ?

    பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த இரு தலைவர்களும் பட்நாயக்கையும் ஊடகத்தினரையும் சந்தித்து, எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினர்.

    அதே நாளில் கருப்பையா மூப்பனாரை எம்.ஜி.ஆர். சந்தித்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக கலைஞர் குறிப்பிடுகிறார்.

    கலைஞரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தன்னுடைய ராமாவரம் இல்லத்தில் வைத்து கருப்பையா மூப்பனாரைச் சந்தித்துப் பேசியிருந்தார் எம்.ஜி.ஆர்.

    அன்று மாலையில் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த
    பி.ராமச்சந்திரனுக்கு விருந்தளித்தார் எம்.ஜி.ஆர்.

    அடுத்த நாள் செப்டம்பர் 14ஆம் தேதி. அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம்.

    #வேலூரில்_நடந்த_பொதுக்கூட்டம் #ஒன்றில்_பேசிய_எம்ஜிஆர். #அதிமுகவின்_கொடி_இன்னும்_ஆயிரம் #ஆண்டுகளுக்கு_உயரத்தில்_பறக்கும் #என்று_குறிப்பிட்டார்.

    தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்பது இருக்காது என்றும் கூறினார். எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவரது அமைச்சர்கள் தி.மு.க. குறித்தும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

    இப்படியாக, கழகங்களின் இணைப்பு என்ற சிந்தனையை தீர்த்துக்கட்டினார் எம்.ஜி.ஆர்.

    2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பொது நிகழ்வில் பேசிய கலைஞர், இணைப்பு நடக்காமல் போனதற்கு வேறு ஒரு ராமச்சந்திரன் மீது குற்றம்சாட்டினார்.

    "இதனைக் கெடுத்தது யார் என்பது எனக்குத் தெரியும். நான் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரைச் சொல்லாவிட்டால் வரலாறு முழுமையடையாது. மாநில விருந்தினர் மாளிகையில் இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, எம்.ஜி.ஆர். வேலூருக்குப் போனபோது உடன் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர்" என்றார் கலைஞர்.

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.......... Thanks.........

  5. #3044
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்...��
    படத்தில் வரும் ஒரு பாத்திரத்திற்கு நண்பரின் பெயரேயே வைத்து, பாடலிலும் நண்பர் பெயர் வரும்படி பாடலை எழுதி வாங்கிய நட்புக்கு பெருமை சேர்தவர்தான் நம் #எம்ஜியார்...

    //#மக்கள்_திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.

    ஒரு முறை தான் நடித்து வெளியான #சிரித்து_வாழ_வேண்டும் என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

    ஒரு பாடலை உருவாக்கும்போது.. தனது நண்பரின் பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள.. புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை..

    டி எம். சௌந்தரராஜன் குரலில் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்..

    'எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும்!
    அன்புள்ள தோழர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்...
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்...

    ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
    ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
    உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான்
    என்றா உலகம் நினைக்க வேண்டும்?
    சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
    ஊரார் சொல்ல வேண்டும்!

    #எம்ஜிஆர் திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும் திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?

    பகுத் அச்சா என்பதைவிட! இது இறைவனின் சித்தமே! திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. #புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.

    நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!//

    சரி யாருய்யா இந்த 'அப்துல் ரஹ்மான்' என கேட்பவர்கள் இந்த சுட்டியை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள்.
    http://www.vallamai.com/?p=48679

    நன்றி:கவிஞர் காவிரி மைந்தன்....... Thanks...

  6. #3045
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

    தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
    செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
    என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

    அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

    நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

    அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

    திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

    என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

    அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

    இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

    எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

    அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

    1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

    2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

    எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

    இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

    தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

    புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

    மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

    முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

    எம்.ஜி.ஆர்.

    அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
    அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
    மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
    என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
    அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
    மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

    காலத்தை வென்றவர் அவர்..
    காவியமானவர் அவர்..

    — புவனா, மும்பை......... Thanks.........

  7. #3046
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #பாட்டு

    தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல...

    ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    ஆனால் – எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் ” #மலைக்கள்ளன்...

    ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் தயாரிக்கப்பட்டு பெருவெற்றி அடைந்த படம்.

    அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்...

    மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக – எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது...!!!

    கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!.

    "சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி – இன்னும்
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.”........... Thanks to mr. BSM.........

  8. #3047
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  9. #3048
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய பிற்பகல் வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    #ரேகை_சாஸ்திரம்

    M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.

    ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.

    அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே........... Thanks.........

  10. #3049
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய பிற்பகல் வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    #பண்டிகை

    எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.

    எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.

    எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு.......... Thanks fb.,

  11. #3050
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நாம் திரும்பி வரும்போது (ராமவர) தோட்டம் ஜப்தி செய்யபட்டிருக்கலாம்.."
    உதவியாளரிடம் சொன்ன #எம்ஜியார்..

    ஒரு நாள் எம்.ஜி.ஆர்.தோட்டத்திலிருந்து தனது உதவியாளருடன் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார். காரில் ஏறியவர் தன் உதவியாளரிடம் சொல்கிறார்..

    "தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"

    இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.

    "என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...

    "பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்

    "ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"

    "என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
    #உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.

    'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..

    அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)

    நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.

    இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

    பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"

    சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.

    "எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"

    "வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

    நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும்
    வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.

    என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
    எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.

    ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.

    "அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"

    அந்த வகையில் உருவானது தான்
    #நீதிக்கு_தலை_வணங்கு படம்.

    எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....

    எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..

    #படித்ததில் நெகிழ்ந்தது

    #MGR #Ulagam #Sutrum #

    Courtecy : Jayant Prabhakar.......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •