Page 304 of 402 FirstFirst ... 204254294302303304305306314354 ... LastLast
Results 3,031 to 3,040 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3031
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்...

    சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்....

    ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்...

    ‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

    என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்...

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

    ‘தேக்கு மரம் உடலைத் தந்தது

    சின்ன யானை நடையைத் தந்தது

    பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

    பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

    இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்...

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்...

    காரில் தலைவர் செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3032
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிப் பட்டுக்கோட்டையார் புகழ்வது...

    ⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

    கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம் இந்தக் கருத்துக்கு நாடோடி மன்னன் சாட்சி கடலலைபோல் திரண்டுவந்தகூட்டம் சாட்சி

    ஆகாவென் ரார்த்தெழுந்த குரல்கள் சாட்சி அரங்கத்தை யதிரவைத்தகரங்கள் சாட்சி காட்சிக்கும் நடிப்பிற்கும் கதைக்கும் உண்மைக் கருத்துக்கும் கணக்கில்லா கண்கள் சாட்சி

    பாட்டுக்கும் பண்ணுக்கும் செவிகள் சாட்சி பட்ட பாட்டுக்கும் கூட்டுக்கும் வெற்றி சாட்சி எம்.ஜி.ஆர். துணிவுக்கு செலவே சாட்சி என்றார்க்கு இன்று புகழ் வரவே சாட்சி

    படம் பெற்ற பெருமைக்கு பலபேர் சாட்சி பயன்கூற வெற்றிவிழா மேடை சாட்சி எண்ணரிய சாட்சிகளுக்கிடையில் நானும் இதயத்தை திறந்தொன்று சொல்கின்றேன்.

    திருந்து திருந்தெனத்தானும் நடந்து காட்டும் சிறப்பாலே எம்.ஜி.ஆர். சிறப்பு பெற்றார் பொருந்தாத கூற்றுகளைப் பொய்யென் றோதும் புதுமையினால் எம்.ஜி.ஆர். புதுமையானார்

    அவர் வாழ்க! கலை வளர்க! வென்று வாழ்த்தி ஆரம்பக் கருத்தினையே இங்கும் சொல்வேன்: கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம்.......... Thanks.........

  4. #3033
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதுவே தலைவரின் சிறந்த படம் ஆகும்...இந்த படத்தை விரும்பாத எம்ஜியார் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

    புகைப்பட நிபுணர் சுபாசுந்தரம் அவர்கள் ஒரு தனியார் விழாவில் இரண்டு படங்கள் எடுத்தார். ஒன்று இந்த படம் அடுத்தது 2017 இல் மைய அரசு வெளியிட்ட தபால் தலை தலைவர் படம்.

    கீழே உள்ள இந்த படத்தை அரசு படம் ஆக ஆக்க விரும்பி செய்தி துறை அதிகாரியாக இருந்த அவர் மற்றவர்களிடம் காட்டிய போது இது முதல்வருக்கு பிடிக்காத படம்....சாப்பிட்டுவிட்டு பல் குத்துவது போல இருக்கு என்று அவரே நிராகரித்த படம் என்று சொல்ல.

    முதல்வரிடம் இந்த படத்தை காட்டிய அந்த அதிகாரி.... ஐயா இந்த படத்தில் தான் உங்கள் தனித்து உள்ள அடையாளங்கள் ஆன உங்கள் தொப்பி, கருப்பு கண்ணாடி, வலது கரத்தில் கடிகாரம், கையில் கைக்குட்டை, மற்றும் உயரமான சட்டை காலர் அவை தவிர...

    உங்களுக்கே உரிய அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு அனைத்தும் உண்மையை காட்டுகின்றன என்று அவர் சொன்னதும் ஒரு நிமிடம் படத்தை உற்று பார்த்த நம் மன்னன் சரி இந்த படமே இருக்கட்டும் என்று ஒப்புதல் தந்தார்.

    இன்றும் இந்த படம் தலைவர் நம்மை விட்டு சென்று பல ஆண்டுகள் ஆகியும் பட்டி தொட்டி எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது உண்மைதானே நண்பர்களே.

    படத்தை தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெற்றவர்....இரா.. கற்பூரசுந்தரபண்டியன்..(இந்திய ஆட்சி பணி)... அவர்கள்.

    நீங்களும் படத்தை பார்த்து அனைத்தும் சரிதானா என்று சரிபார்த்து கொள்ளவும்.

    நன்றி...வாழ்க எம்ஜியார் புகழ்...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி............ Thanks...

  5. #3034
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரை ஒரு ரசிகனாக வியந்தேன்... நடிகனாக நேசத்துக்கு உரியவனானேன்- நடிகர் சத்யராஜ்.

    வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ் தனது திரை உலக பயணம், எம்ஜிஆர் உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    முதல் மரியாதை படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு கடலோரக் கவிதைகள் என்ற படத்தை எடுக்க இருந்தார்.
    இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், இரவுப்பூக்கள் என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப் படம்தான், நான் ஹீரோ ஆகிய பின் டூயட் பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு டூயட் கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு டான்ஸ் தெரியாதே என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
    படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம் ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா என்று கேட்டேன். அவர் நடனம் தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, மைசூர் போனால் டான்ஸ் காட்சி எடுக்காமல் விட்டு விடலாமா, என்று சிரித்தபடி கேட்டார்.

    இந்தப்படத்தில் நண்பர் நிழல்கள் ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர் மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன, என்று கேட்டார்கள்.
    அப்போது எம்.ஜி.ஆர் சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல் காட்சிக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.

    எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. மலைக் கள்ளன், சிவகவி போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திருமண மண்டபத்தில் தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார்.

    நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, அம்மா இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன், என்றேன்.
    இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

    திருமணத்திற்கு முந்தின நாள், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு ஃபோன் செய்தார். ஏன் சார் சி.எம் வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே, என்றார்.

    நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார். மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் எப்படி என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.
    அவர் எப்படி என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த எப்படி வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன எப்படிக்கு அர்த்தம். நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா, என்கிற அர்த்தம்.
    நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார். இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை சட்டென்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம், டேய் இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.
    திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர் என்னிடம், உங்கம்மா எங்கே என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப் போனேன். அம்மாவை பார்த்து வணக்கம்மா என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

    திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.
    சிவாஜி சாருடன் நான் நடித்த ஜல்லிக்கட்டு பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், உனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்.
    நான், வேணாங்க எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே. இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும் என்றேன்.
    நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா, என்று மறுபடியும் கேட்டார்.
    இதற்கும் வேண்டாம் என்றேன். எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு என்றார், உறுதியான குரலில். அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.
    எனவே, நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும் என்றேன். நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

    1987 டிசம்பர் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று வரவில்லை என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.
    இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
    ஆனால் அவர் எப்படிப்பட்டவர், எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம் என்பதுதான் அந்த தகவல்.
    ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே, என்று சொல்லி விட்டார்கள்.
    நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் ஃபைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
    அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல, என்றார்.

    நான் என்ன பதில் சொல்வது, விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே என்றேன். அதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, நான் வரலைன்னா வருத்தப்படுவியா, என்று கேட்டார்.
    வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே என்றேன். ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், உனக்காக வர்றேன், என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
    சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் எப்படி என்றார், உற்சாகமாக. அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த எப்படி என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.
    இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். முத்தமா தர முடியாது. குத்துவேன் என்றார், ஜாலியாக.

    நம்பியாரோ, அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம் என்றார். இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.
    நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர், கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.
    டிசம்பர் 5ஆம் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு உப்பு போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த உப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

    ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்கு உரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர் என்று சத்யராஜ் சொன்னபோது அவருடைய கண்கள் கலங்கி இருந்தன.......... Thanks...

  6. #3035
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
    ---------------------------------------------------------------------------------------------------

    1 yes news tv யில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை ஒளிபரப்பான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சந்தித்த சவால்கள் நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த தகவல்கள் விவரம் :

    எம்.ஜி.ஆர். அவர்கள் இலங்கையில் கண்டியில் பிறந்தாலும் , வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரின் தாயார் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணத்தில் சில காலம் வசித்தார். அப்போது கும்பகோணத்தில் உள்ள ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு வரை எம்.ஜி.ஆர். படித்தார் .* பின்னர்* வறுமையின் காரணமாகவும், வருமானம் போதிய அளவு இல்லாததாலும் , தன்*குழந்தைகளான எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி..ராமச்சந்திரன் இருவரையும்* மதுரையில் உள்ள பாய்ஸ் நாடக கம்பெனியில் நாடகத்தில் நடிக்க சேர்த்துவிட்டார் .பருவ வயதை அடைந்த பின்பு ,போதிய அளவு கல்வி திறன் இல்லாததால் , நிறைய புத்தகங்கள் படித்து கல்வியையும், அறிவையும் வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். மகாத்மா காந்தியின் சத்திய சோதனை உள்பட நிறைய புத்தகங்களை படித்துள்ளார் . இலக்கணம், இலக்கியம் அறிந்த அறிஞர்கள் புத்தகங்களை படித்துள்ளார் .பள்ளியில் பொது கல்வி பயிலாவிட்டாலும், இந்த உலகத்தில் ஒரு அறிவார்ந்த மனிதனுக்கு என்ன தேவை, மற்றவர்களுடன் எப்படி பழகுவது, உரையாடுவது , மற்றவர்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது போன்ற புத்தகங்கள் அதிகம் படித்துள்ளார் .நாடக துறையில் நல்ல நிலைக்கு வரவும் ,*உலக அறிவு, பொது அறிவு , பற்றி தெரிந்து கொள்ளவும், எம்.ஜி.ஆரின் தாயார் சிறிது காலம் ஆங்கில மொழி பயிற்சி அளிக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு*செய்திருந்தார் . கல்வி திறன், பேச்சு திறன் ஆகியவற்றில் நல்ல பயிற்சி மேற்கொண்டு அதை பொது வாழ்க்கையில் நல்லமுறையில் கையாண்டார் .

    இதயவீணை படத்தில் காஷ்மீர் பியூட்டி புல் பாடலில் வரும் வரிகள்*சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா , சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா* -* தான் பள்ளியில் பொதுக்கல்வியை போதுமான அளவில் படிக்காவிட்டாலும் , ஒரு தேர்ந்த மனிதனை போல தான் அறிந்ததை இந்த பாடலில் குறிப்பிட்டார் .

    எம்.ஜி.ஆருக்கு தெய்வபக்தி உண்டா என்று அனைவரும் அந்த காலத்தில் கேட்பதுண்டு.* சினிமாவில் பிரபலம் ஆவதற்கு முன்பு சில கோவில்களுக்கு சென்றுள்ளார் . திருப்பதிக்கு இருமுறை சென்றுள்ளார் .* முதல்வரான பின்பு*அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும், கோவில் மரியாதை நிமித்தமாகவும் சில கோவில்களுக்கு சென்றுள்ளார் .* பொதுவாக மதுவிலக்கு , தெய்வபக்தி எம்.ஜி.ஆருக்கு பிடித்த விஷயங்கள் .* நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு. தெய்வம் உண்டு என்ற நம்பிக்கை உடையவர் எம்.ஜி.ஆர்.* மகாத்மா காந்தி சோர்வாக இருந்த சமயத்தில் பகவத் கீதை படித்து உற்சாகம் அடைவார் என்று சொல்வதுண்டு . பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை* தொடங்கிய பின்னர் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சி கொள்கையில் இருந்து சற்று மாறுபட்டவர் . அதாவது தெய்வ பக்திக்கு எதிராகவும், கடவுள் நம்பிக்கை இல்லை எனவும் செயல்படவில்லை .* அதனால்தான் என்னவோ, தந்தை* பெரியாருக்கு கூடிய கூட்டத்தைவிட பேரறிஞர் அண்ணாவுக்கு அதிக அளவில் கூட்டம் கூடியது என்பார்கள்.


    எம்.ஜி.ஆர். தி. மு.க. வில் சேர்ந்த பின்னர் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ,*அவர் வீட்டில் என்ன தெய்வங்கள் உள்ளன என்ற கேள்விகள் கேட்கப்பட்டது .எம்.ஜி.ஆர். தனது வீட்டில் , என் தாய் வணங்கிய விஷ்ணு, காளி ஆகிய தெய்வங்களின் படங்கள் இருந்தன . என் தாய் மறைந்த பிறகு ,அவரது படத்தை நான் வணங்கி வருகிறேன் .ஆனால் எம்.ஜி.ஆரை போல தன் தாயை வணங்கியது , போற்றியது,திரைப்படங்களில்* மரியாதை அளித்தது , தாய் பற்று மிக்க காட்சிகளில் நடித்தது, தாயின் பெருமை மிக்க பாடல்களில் நடித்தது*உலகில் வேறு* எந்த நடிகரும், அரசியல் தலைவரும் உண்டா என்றால் இல்லை என்று அடித்து சொல்லலாம் .உதாரணமாக தாயின் பெருமையை போற்றும் வகையில் அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலை*சிறப்பாக இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர்.*


    எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, உடன் நடிகை ஜெயலலிதாவும் நடித்துக் கொண்டிருந்தார் . அப்போது பொம்மை சினிமா மாத இதழில் ஒரு பேட்டியில் நடிகை ஜெயலலிதா , எம்.ஜி.ஆரிடம் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார் .* ஏன் நீங்கள் கடவுள் வேடத்தில் ஒரு படத்தில் கூட நடிப்பதில்லை .* எம்.ஜி.ஆர். பதிலுக்கு, நான் கடவுள் வேடம் ஏற்று நடித்துதான் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று மக்களையோ, மற்றவர்களையோ நம்பவைக்க வேண்டும் என்ற நிலையில் இல்லை .ஒருவர் மனதை தூய்மைப்படுத்துவது, வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது , ஒழுக்கத்தை கற்று கொடுப்பது, உழைப்பில் நம்பிக்கையை வைக்க சொல்வது , தாய் தந்தையரை வணங்க செய்வது , அனைவரிடமும் அன்பு செலுத்த சொல்வது , இப்படி என்னால் முடிந்த அளவில் திரைப்படங்களின் மூலம் பல நல்ல விஷயங்களை* எடுத்து சொல்வதில் என் மனம் நிறைவடைகிறது . இவையே நான் கடவுள் வேடத்தில் நடித்து மக்களுக்கு நன்மை பயக்கும் செயலை செய்ததாக எண்ணி மகிழ்கிறேன் . எனவே நான் தனியாக கடவுள் வேடம் ஏற்று நடித்துதான் நான் கடவுள் நம்பிக்கை உடையவன்என்று மற்றவர்களை நம்பவைக்க வேண்டும்* என்ற கட்டாயத்தில் இல்லை என்றார் எம்.ஜி.ஆர் .இப்போதைக்கு அது அவசியமில்லாத ஒன்று .


    ஒருவன் எப்போதும் தன் தாயிடம் அன்பு காட்ட வேண்டும் . தந்தையிடம் மரியாதை அளிக்க வேண்டும் . தனக்கு போதிக்கும் ஆசானிடம் பயபக்தியாக நடந்து கொள்ள வேண்டும் .* ஏழைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும் . மக்களிடம் மனிதநேயத்தோடு நடக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார் .ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது பேரறிஞர் அண்ணாவின்*தி. மு. க. கொள்கை .* *திரைப்படங்களில் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை, பொன்மொழிகளை, கருத்துக்களை தனது பாணியில் , மிகவும் எளிமையாக மக்களை சென்றடையும் வகையில்* நடித்து மக்களை தன்பால்*ஈர்த்தவர் எம்.ஜி.ஆர். என்று சொன்னால் மிகையாகாது .


    நிகழ்ச்சியில் இதயவீணை படத்தில் ஒரு வாலுமில்லே* நாலு காலுமில்லே* பாடல், அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் ,என் அண்ணன் படத்தில் கடவுள் ஏன் கல்லானான் என்ற பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன .*

  7. #3036
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967ஆம் ஆண்டு சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட குடிசைவாழ் ஏழை மக்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரூபாய் 25,000 பணம் உதவி அளித்துள்ளார்.

    அத்துடன் ஒரு திறந்த ஜீப்பில் ஏறி சென்னை நகர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி வசூல் செய்து அந்த பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.

    அவர் சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள்.

    புகைப்படங்கள் அன்றைய பொம்மை சினிமா இதழ்........ Thanks...

  8. #3037
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நினைத்ததை_முடிப்பவன்..
    "பூமழை" தூவி பாடல்...

    மைசூர் சாமுண்டேஸ்வரி கோயில்
    மலையின்
    அடிவாரத்தில் எடுக்கப்பட்ட
    தலைவரின் இந்த பாடலை
    சற்று மெருகுபடுத்தியுள்ளேன்...

    இந்த பாடலை ஒளிப்பதிவு
    செய்த ஒளிபதிவாளர்
    ரெம்ப சாமர்த்தியமாக திறமையாக
    சூரிய வெளிச்சம் அதுவும்
    உச்சி வெயிலில் மட்டும்
    அதுவும் தலைவரின் தலை மீது
    விழுமாறு ரெம்ப கைதேர்ந்த
    ஒளிபதிவு நிபுணராக
    பதிவு செய்துள்ளார்...

    1974 இல் நமது காதுகளை
    குடைந்த ஏழிசை அரசர்
    பாட்டிசை சித்தர்
    ஐயா டிஎம்எஸ் அவர்களின்
    குரல் அந்த
    பாட்டுடை தலைவனின்
    உயிரான ஒரு படைப்பு...

    என் அண்ணாவை ஒருநாளும்
    என் உள்ளம் மறவாது என்று
    இடது கையால் தலைவர்
    காட்டுவது நமது கழக
    அண்ணா கொடியை...

    இந்த காட்சியை தீவிரமாக
    ஆராய்ந்து பார்த்தால்
    தலைவர் வேறெந்த பக்கமும்
    கை நீட்ட வசதி இல்லாததால்
    தனது இடது கை மட்டும்
    காட்சியின் பிரேமில்
    சரியாக இருக்கும் என்று
    Technically யோசித்து
    எடுக்கப்பட்ட காட்சி...

    தலைவர் கடைசியில்
    லதாவோடு காரில்
    ஏறும் இடம்
    மைசூர் மிருக கண்காட்சி
    அருகே உள்ளது..
    நன்றி...
    பொன்மனம் பேரவை...
    சென்னை............ Thanks...

  9. #3038
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...

    எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

    ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர். எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்... எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

    தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து... தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு... நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு எக்கச்சக்கமா செலவு வரும்.
    நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

    உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர். பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.

    "அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்..." என தயங்கியிருக்கிறார்.

    "நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.." என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.

    முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
    காரை நிறுத்தி அருகில் அழைத்து....

    "இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க... கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....'

    -என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

    மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
    தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

    வந்தவர்களை வரவேற்று...
    "சாப்பிட்டீங்களா... என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?' என கேட்டிருக்கிறார்.

    திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
    ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.

    ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
    தனது உதவியாளரிடம் சொல்லி...
    20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...

    "அந்தக்கட்சியிலேயே இரு....
    நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி..." என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

    ஊருக்கு வந்தவர்... திமுகவிலிருந்து விலகி...
    அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.

    சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத உதவாக்கரை... ஈழத்தமிழன் மேல் தீடீர் பாசம் காட்டுகிறது.
    அதற்க்கு... அபியின் அப்பா என்ற ஓணான் சாட்சி சொல்கிறது......... Thanks...

  10. #3039
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ...... Thanks...

  11. #3040
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ...... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •