Page 300 of 402 FirstFirst ... 200250290298299300301302310350400 ... LastLast
Results 2,991 to 3,000 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2991
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    #திருமணம்_அழைப்பு

    எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.

    நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்........ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2992
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சிதலைவர்
    #இதய_தெய்வம்_எம்ஜிஆர்
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_காலை #வணக்கம்

    #மனிதாபிமானத்தின்_மகாத்மா" #எம்_ஜி_ஆர்.

    1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.

    #மக்கள்_திலகத்தின்_திரைத்துறை #வெற்றிக்கு_பிரபல_தயாரிப்பாளர் #தேவர்_பிலிம்ஸ்
    #சாண்டோ_சின்னப்பதேவரும் #வசனர்த்தா_ஆரூர்தாசும்_முக்கிய #காரணம்_ஆவார்கள்.
    #அவரது_உடன்_பிறந்த_சகோதரர்
    #எம்_ஜி_சக்கரபாணி_என்றாலும்,
    #தேவர்_அவர்களுக்கு_உடன்_பிறவா #சகோதரர்_என்ற_அந்தஸ்தை #கொடுத்திருந்தார்

    குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

    சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.

    நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.

    அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

    1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

    இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.

    1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.

    தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

    1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

    இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.

    தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.

    குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி #இப்பூவுலகை_விட்டு_மறையும்_வரை #ஏழைகளின்_நலனுக்கு_பெரும் #முக்கியத்துவம்_கொடுத்த_இந்த #பொன்மனச்_செம்மலை #மனிதாபிமானத்தின்_மகாத்மா_என்று #குறிப்பிடுவது_சாலச்சிறந்தது.


    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு........... Thanks.........

  4. #2993
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய பிற்பகல் வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    #பண்டிகை

    எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.

    எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.

    எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு....... Thanks...

  5. #2994
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே ஒரு முதன்மை மாநிலமாக திகழ்கிறது....

    உணவளிப்பதன் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்திடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க வேண்டியும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் சத்துணவுத் திட்டம் 1982ல் தொடங்கப்பட்டது...

    பசியோடு உள்ள குழந்தையாலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தையாலும் படிப்பின் மீது கவனம் செலுத்த இயலாது என்ற காரணியின் அடிப்படையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்கள், மதரசாக்கள் மற்றும் மக்தப்களில் பயிலும் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், மற்றும் உயர் துவக்கப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் சமைத்து சூடான இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது......... Thanks.........

  6. #2995
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*

    -------------------------------------------------------------------------------------------------------

    இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3மணி வரையில் 1 yes news tv யில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த சவால்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது .இந்த நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த தகவல்கள்* விவரம் :


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1936ல் சதி லீலாவதி என்கிற படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் மூலம் அறிமுகம் ஆனார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அதன் பிறகு 10 ஆண்டுகளாக பல படங்களில் துணை நடிகராகவும், சிறிய பாத்திரங்களிலும் நடித்து வந்ததோடு , சில படங்களில் நடனமும் ஆடியுள்ளார் .அந்த காலத்தில் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் , நடிகர் பி.யு.சின்னப்பா , பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, நடிகை டி.ஆர்.ராஜகுமாரி , ஆகியோருடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . அந்த கால கட்டங்களில் நாடக துறையின் அனுபவம் காரணமாக* தனது நடிப்பில் மெருகேற்றி , வளர்ச்சி அடைந்து வந்தார் .* மேலும்* அப்போது சொந்த குரலில் பாடுபவர்களே கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று ஒரு நிலை இருந்தது .* நாடகங்களில் நடித்துக் கொண்டும் ,வரும் சினிமா வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டும் , அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாள்* சண்டை, கம்பு சண்டை, குத்து சண்டை , சிலம்பம் குதிரை சவாரி* ஆகியவற்றில் நல்ல பயிற்சி மேற்கொண்டார் .**


    நடிகர்கள் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் மிகவும் பிசியாக இருந்த சமயத்தில் ஜூபிடர் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் திரு.சோமு அவர்களுக்கு சினிமா படம் எடுக்க நல்ல கதை ஒன்று கிடைத்தது .* ஏற்கனவே பிரபலமாக இருந்த நடிகர்களிடம் கால்ஷீட் கிடைப்பதில் சிரமம் , அதிக சம்பளம் , தயாரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய நடிகர் , நடிகைகள்,அல்லது சினிமா கம்பெனியில் ஒப்பந்தத்தில் உள்ள நடிகர்கள் வைத்து படம் எடுக்க*இயக்குனர் ஏ.எஸ். ஏ.சாமியிடம் ஆலோசனை மேற்கொண்டார் .இயக்குனர் சாமி ஸ்ரீமுருகன் என்ற படத்தில் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் பரமசிவனாகவும், மாலதி பார்வதி யாகவும் அருமையாக நடனமாடி உள்ளனர் .* மேலும் ராமச்சந்திரனுக்கு நாடக அனுபவமும் உள்ளது , கடந்த பல வருடங்களாக சினிமாவிலும் பல வேடங்களில் திறம்பட நடித்து வருகிறார்* *அவரது கால்ஷீட் எளிதில் கிடைக்கும் . வளர்ந்து வரும் நடிகர் . நமக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார் , சம்பளம் நாம் தருவதை வாங்கி கொள்வார் . தயாரிப்பு செலவும் குறைவு. நிறைவான படம் உருவாக்க வாய்ப்பு என்று பல யோசனைகளை சொன்னதும் , சிறிது தயக்கத்துடன்* தயாரிப்பாளர் சோமு , பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினார் .இந்த விஷயங்கள் எம்.ஜி.ஆருக்கு சில நண்பர்கள் மூலம் தெரிய வர , உடன் இயக்குனர் சாமியிடம் தயக்கத்துடன் விசாரித்தார் .இயக்குனர் சாமி,, உனது நடிப்பு திறமை, நடன திறமை, சண்டை காட்சிகளில் வேகம், விறுவிறுப்பு ஆகியன பற்றி தயாரிப்பாளர் சோமுவிடம் சொல்லியிருக்கிறேன் . முடிவு அவர் கையில்தான் உள்ளது .என்றார் .*அதன்பின் எம்.ஜி.ஆர். தயாரிப்பாளர் சோமுவிடம் இயக்குனர் சாமி கூறிய யோசனைப்படி சந்தித்து பேசினார் .* தயாரிப்பாளர் சோமு , தான் இயக்குனர் சாமியிடம் பேசிவிட்டு இதுபற்றி சொல்லி அனுப்புகிறேன் என்று கூறினார் .


    இதற்கு முன்பு சாயா என்ற படம் பாதி வளர்ந்த நிலையில் கைவிடப்பட்டு வெளியாகவில்லை .* அதே போல இந்த படமும் ஆகிவிடுமோ என்ற கவலை எம்.ஜி.ஆருக்கு இருந்தது . நிரபராதி ஆகிய நான் குற்றவாளி கூண்டில் நின்று ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் என் மனம் அப்போது இருந்தது . மிகவும் பதட்டமாக இருந்தது . கதாநாயகன் வாய்ப்பு கைகூடுமா*என்ற சந்தேகம் , நல்ல வேளை , தயாரிப்பாளர் சோமுவும், இயக்குனர் சாமியின் சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்து முடிவெடுத்து*ஒப்பந்தம் செய்தார் . கதாநாயகி மாலதி . இந்த படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாடியவர் எம்.எம்.மாரியப்பா .* எம்.என்.நம்பியார் நகைச்சுவை* வேடத்தில் நடித்தார்*

    எம்.ஜி.ஆர். ஆத்திகராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்தார் .கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார் .இந்த கால கட்டத்தில் கோவை, மற்றும் ஈரோடு நகரங்களில் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .எம்.ஜி.ஆர். காந்தியின் புத்தகங்களை கருணாநிதிக்கு பரிசளிப்பார் .* கருணாநிதி தந்தை பெரியாரின் புத்தகங்களை எம்.ஜி.ஆருக்கு தருவித்தார் நெருங்கிய நண்பர்களானார்கள் .* ராஜகுமாரி படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது .* ஆனால் படத்தில் உதவி ஆசிரியர் என்று டைட்டில் வரும் .


    படத்தின் வில்லியாக இலங்கை குயில் தவமணிதேவி மிகவும் கவர்ச்சியாக*ஜாக்கெட் அணிந்து கடைசி பட்டன் மட்டும் போட்டிருந்ததை கண்டு இயக்குனரும் தயாரிப்பாளரும் அசந்து போனார்கள். காரணம் ஹாலிவுட் நடிகை மார்லின் மன்றோ போல கவர்ச்சியாக தெரிந்ததுதான் .* கதாநாயகனை மயக்கும் பாத்திரம் என்பதால் இயற்கையாக இருக்கத்தான் இந்த உடை என்று தவமணி தேவி கூற , இயக்குனரின் யோசனைப்படி ஜாக்கெட்டுக்கு* நடுவில் பெரிய காகிதப்பூ**ஒன்றை வைத்து* படமாக்கினர் .* படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் எம்.ஜி.ராமச்சந்தர் என்று டைட்டிலில் இடம் பெற்றது .


    எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்பு, டி.எஸ். பாலையாவுடன் போடும் கத்தி சண்டை, நம்பியாரின் நகைச்சுவை, தவமணிதேவியின் கவர்ச்சி நடனம் , கருணாதியின் வசனம் ஆகியன படத்திற்கு மெருகேற்றி , படத்தின் இமாலய வெற்றிக்கு வித்திட்டது .11/04/1947ல் ராஜகுமாரி வெளியானது . குறைந்த செலவில் நிறைந்த லாபத்தை தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு பெற்று , இயக்குனர் ,நடிகர் நடிகையரை பாராட்டினார் .* சென்னையில் ஸ்டார், கிரவுன் , மதுரை சிந்தாமணி, திருச்சி வெலிங்டன் , கோவை ராஜா ,சேலம் ஓரியண்டல் ஆகிய அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடி நல்ல வசூலை பெற்றது .* ராஜகுமாரியின் வெற்றிக்கு பிறகு*எம்.ஜி.ஆருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன .* எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க கருணாநிதி வசன ஆசிரியராக சில படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் .

  7. #2996
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அனைவருக்கும் #இனிய #தமிழ்ப்புத்தாண்டு #வணக்கங்கள்

    வாத்தியாரை வெறும் நடிகர் என்று பார்க்கும் பொது புத்தியில் இருந்து அவர் மீது வெற்று விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. இவை பெரும்பாலும் பொறாமை விளைச்சல்களே.

    வாத்தியாரை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மூன்றாவது இடத்தில் தான் நடிகன் என்கிற பிம்பம் தெரியும்.

    சிறப்பு மிக்க இரண்டு பிம்பங்கள் அவர்க்கு உள்ளன . அவைதான் அவரை இன்னமும் நினைக்க, பேச வைக்கிறன.

    அவை...
    #மனிதநேயமும், #கொடைத்தன்மையும்

    பிறப்பு முதல் நீங்காமல் நம்முடன் இன்னமும் கூடவே வருபவர் பெற்றோருக்கு நிகராக வாத்தியார் மட்டுமே...

    வாத்தியாரின் நாமத்தை மேன்மேலும் போற்றுவோம்.......... Thanks.........

  8. #2997
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1966 பிப் 4 ல் வெளியான படம்தான் "நான் ஆணையிட்டால்." 1966 பொங்கலுக்கு வெளியாக எம்ஜிஆரிடம் சம்மதம் வாங்கி வைத்திருந்தார் R M வீரப்பன். ஆனால் ஏவிஎம்மின் 50வது படமும் அவர்கள் கம்பெனியின் முதல் வண்ணப்படமுமான"அன்பே வா"
    ஒரு குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் செட்டியார் அவர்கள்"அன்பே வா" படத்தை பொங்கலுக்கு திரையிட விரும்பினார். எம்ஜிஆரிடம் செட்டியாரின் விருப்பத்தை சொன்னதும் உடனே அவர் அது என் கையில் இல்லை. வீரப்பனுக்கு ஏற்கனவே "நான் ஆணையிட்டால்" திரையிட சம்மதம் கொடுத்து விட்டேன்.இனி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வீரப்பனை போய் பாருங்கன்னு சொல்லிட்டார்.
    உடனே வீரப்பனை அணுகி வேண்டுகோள் வைத்தவுடன் அவரும் அவரது பொங்கல் கனவை செட்டியாருக்கு விட்டு கொடுத்து விட்டு 3 வாரம் கழித்து என் படத்தை வெளியிடுகிறேனு சொல்லிட்டார்.

    எங்க வீட்டு பிள்ளை பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமானதால் எல்லோரும் பொங்கலன்று எம்ஜிஆர் படத்தை வெளியிட ஆசைப்பட்டார்கள். நினைத்தது மாதிரியே'அன்பே வா" மாபெரும் வெற்றி படமானது.
    1965 லேயே நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு நடக்கும் போதே"அடிமைப்பெண்" படப்பிடிப்பு துவங்கப் பட்டது. "நான் ஆணையிட்டால்" படத்தில் வரும் ஒரு பாடலில் "நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்" என்ற அடி வரும் போது"வருகிறது" "அடிமைப்பெண்" என்ற விளம்பரம்
    சீரியல் பல்புகளால் அலங்கரிக்கபட்டு காட்டப்படும். அப்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும்............. Thanks.........

  9. #2998
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அதான் #வாத்தியாரு

    பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின் 'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்
    பவர்கள் உட்கார்ந்து அவர்களுக்காக காத்திருப்பர்.

    ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்த இயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு !

    ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது !

    என்ன ஆச்சு ?

    இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும்

    சமயத்தில் .....அங்கே எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார் !

    அவ்வளவுதான் !

    எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !

    இயக்குனர் கிருஷ்ணன் ?

    அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் !

    என்ன பண்றது......

    ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !

    எம்ஜிஆர், கிருஷ்ணன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக் கண்டு , பெரும் சினம் கொண்டார் !

    நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்தார்......கேட்டார் :

    "நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நல்லா இருக்கா? "
    என்று கோபமாக கேட்டார் !

    எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து "டென்ஷன்" ஆயினர் !

    "என்ன நடக்குமோ?! "
    என்கிற அச்சம் அங்கே நிலவியது !

    உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏதோ காதில் சொல்ல, அதனைக் கேட்டு எம்ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்...... மீண்டும் சிரித்தார் !

    எல்லோருக்கும் குழப்பம் !

    அப்படி
    என்ன தான் சொன்னார் கிருஷ்ணன், எம்ஜிஆரிடம் ?

    இதுதான் :

    "எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து நின்றேன் !"

    #அதுதான் #எம்ஜிஆர் !........ Thanks.........

  10. #2999
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR. வாழ்க

    சித்திரை 1 செவ்வாய் கிழமை

    இன்று தமிழ் புத்தாண்டு

    இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பசி பட்டினி நோய் கடன் இல்லாத வாழ்க்கை அமைய வேண்டும் என்று

    ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

    /////////////////////?///////////////////////////////

    எம்ஜிஆர் பக்தர்களே

    1977 ஆண்டு அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் முதலமை அமைச்சராக வந்தபிறகு

    சினிமாவில் நடிப்பதற்காக பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களிடம் அனுமதி கேட்டார்

    அவர்களும் அனுமதி அளித்து விட்டார்கள்

    அப்பொழுது எம்ஜிஆர் நடிப்பதாக ஒரு படத்தின் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்

    அந்தப் படத்தின் பெயர்

    நான் உன்னை விடமாட்டேன்

    அந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டது

    எம்ஜிஆர் அவர்களுக்கு எதிர்ப்புறம் உயரமாக மீசையுடன் உள்ளவர் தான்

    உன்னை விடமாட்டேன் படத்தின் தயாரிப்பாளர்

    G.K.தர்மராஜ்

    பக்கத்தில் இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்

    உன்னை விடமாட்டேன் படத்திற்கு இசை இளையராஜா

    //////////////////////////////////////?///////?

    அடுத்து எம்ஜிஆர் அவர்களுக்கு முன்பாக இரண்டு கைகளையும் பிணைந்து கொண்டிருப்பவர் பெயர்

    சித்திர மஹால் கிருஷ்ணமூர்த்தி

    இவரும் பல சினிமா படங்களை தயாரித்துள்ளார்

    அடுத்து ஒரு மிக முக்கியமான செய்தி

    1977 ஆண்டு எம்ஜிஆர் முதல் முதலாக சட்டசபை பொதுத் தேர்தலை சந்தித்தார்

    அப்பொழுது

    தியாகராய நகர் சட்டமன்ற வேட்பாளராக

    சித்ரா மஹால் கிருஷ்ணமூர்த்தி அவர்களை

    அண்ணா திமுக வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்........ Thanks fb

  11. #3000
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கு எல்லையுண்டா ?

    அந்த பத்திரிகையாளர் முதல்வர்
    எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து
    எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
    செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

    அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.

    ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

    "ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள்" என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.

    "அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள்" என்கிறார்.

    அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

    உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். 'அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான்' என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, "பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு" என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.

    அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளரின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.

    அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்" என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்" எனக்கூறி வருந்தினார்கள்.

    நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

    அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஆர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
    எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

    ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

    #கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர் . பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.

    தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

    காலம் ஓடியது.

    ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

    ‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

    எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.

    மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

    ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

    அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்! (Edited version)
    ----------------------------------------------------------
    இப்படி 'குமுதம்' இதழில் எழுதியதாக
    திரு பா.ஏகலைவன் தன் முகநூலில்
    பதிவு செய்துள்ளார். அந்த நான்கெழுத்து பத்திரிகையாளரை பற்றி 'தினமலர்'
    திரு நூருல்லா எழுதி 'இதயக்கனி' இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளேன். அந்த பத்திரிகையாளர் 'அண்ணா' நாளிதழில்
    எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில்
    பணி செய்ததுமுண்டு.

    Ithayakkani S Vijayan......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •