Page 299 of 402 FirstFirst ... 199249289297298299300301309349399 ... LastLast
Results 2,981 to 2,990 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2981
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்கள் முதன் முறையாக தனது பெயரில் தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்து டைரக்ட்டும் செய்த #நாடோடிமன்னன்
    22 ஆக. -1958 வருடம் வெளி வந்து நம்மை மகிழ்வித்த தலைவனின் தமிழ் பற்று
    முதல் வரியிலே செந்தமிழுக்குத் தான் முதல் வணக்கத்தை தெரிவித்தார் என்பதை இந்நாளை உங்களுடன்

    இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்........... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2982
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும்--
    -------------------------------------------------
    கண்ணதாசன்--வாலி-
    ஏராளமான கவிஞர்கள் இருக்க-இவர்கள் இருவர் மட்டுமே எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வாயில் அதிகம் விழுந்து எழுந்தவர்கள்? காரணம்--
    இவர்களிருவருமே எம்.ஜி.ஆரை அதிகம் தொட்டவர்கள்!!
    கருணா நிதியை உயர்த்தி வாலி பேசியதையோ-கண்ணதாசன் இன்னா நாற்பது எம்.ஜி.ஆரை நோக்கி எய்ததையோ நாம் என்றுமே பெரிய அளவில் சிந்தித்து மனதைக் குழப்பிக் கொண்டதில்லை!
    எம்.ஜி.ஆர் இருக்கும்வரையும்,,அவருக்குப் பின்னும் அவரை மறக்காமல் இருந்தார்களா என்பதே நமக்குத் தேவை என்ற கருத்து நமக்கு இருந்ததால்??
    கருணா நிதியோடு தோன்றியதாலேயே இவர்கள் இருவரில் வாலி அதிகம் இலக்கானார்!
    சரி! பதிவுக்குள் செல்வோம்-
    சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி!
    ராம்ஜி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்!!
    அனேகமான அந்தரங்கங்களை எம்.ஜி.ஆர்,,ராம்ஜியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்!
    இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் எனக்கும் வாலிக்குமே ஒரு விஷயத்தில் மோதல் உண்டாகி,,அதை இந்த ராம்ஜியே தீர்த்து வைத்தார்!!
    சில ஆண்டுகளுக்கு முன் ராம்ஜி ஒரு நிகழ்ச்சியில் வாலியை சந்தித்தபோது கிடைத்த ஒரு சேதியை--
    அண்மையில் நான் ராம்ஜியை சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார். அதையே நானும் உங்களுடன்---
    என்னங்க,,அவ்வளவு க்ளோஸா அவரோட இருந்துட்டு கருணா நிதியோட மேடையிலே நீங்க---ராம்ஜியின் கேள்விக்குக் கசப்பாய் புன்னகைத்த வாலி சொல்கிறார்-
    கரெக்ட்டுங்க. ஆனால் அதுக்காக நான் எம்.ஜி.ஆரை நான் எந்த இடத்திலும் மட்டப்படுத்தலே. அப்படி நான் பேசினா நான் சாப்பிடற உப்பு விஷமாயிடும்?
    தமிழ் என்ற தளத்தில் நான் கருணா நிதி கூப்பிடற நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கலாம். அங்கே உயர்வு நவிற்சியாக அவரை உசத்திப் பேசியிருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்த இங்க சொல்றேன்--
    அது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சிருந்த நேரம்-
    என்ன வாலி,,நம்மக் கட்சியிலே சேர்ந்துட வேண்டியது தானே??
    எம்.ஜி.ஆர் கிண்டலாக் கேக்கறார்னு உணராம நான் சீரியஸா பதில் சொன்னேன்-
    கண்ணதாசனுக்கு நான் செஞ்சு கொடுத்த மூணு சத்தியங்களில்--
    எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேங்கறதும் ஒண்ணு. இல்லேன்னா உங்கக் கட்சியிலே முதல் ஆளா நான் சேர்ந்திருப்பேனே??
    பலமா சிரிச்சுண்டே எம்.ஜி.ஆர் சொன்னார்-
    யோவ் நான் விளையாட்டாக் கேட்டேன்!!
    நான் சொன்னேன்--
    நீங்க விளையாட்டாக் கேட்டிருக்கீங்க. ஆனால் நான் இப்போ உங்கக்கிட்டே ஒரு சத்தியம் செய்யறேன்-
    என் மூச்சு இருக்கற வரைக்கும் என் வயிறும் இருக்கும். என் வயிறு இருக்கறவரைக்கும் அது உங்களை மட்டுமே நினைக்கும்!! அதாவது உங்கக் கட்சிக்குத் தான் ஓட்டுப் போடுவேன்.
    என் ஒரு ஓட்டுக்காகத் தான் உங்கக் கட்சி இருக்குன்னு சொன்னால் என்னை விடப் பைத்தியக்காரன் எவனும் இருக்க முடியாது? ஆனாலும் நான் சொன்னது சொன்னது தான்-
    இந்தத் தேர்தல் வரைக்கும் நான் அ.தி.மு.கவுக்குத் தான் ஓட்டு போட்டிருக்கேன். அடுத்த தேர்தலுக்கு நான் இருப்பேனோ தெரியாது???
    தமிழில்-
    ஒரு வார்த்தை வெல்லும்!!
    ஒரு வார்த்தை கொல்லும்!!
    சத்தியத்தை இறுதி வரை வாலி காத்ததாலோ-
    இறக்கை நிலை வரும் வரையிலும் தமிழ்,,வாலியை-
    இறக்கை கட்டிக் கொண்டாடியது???........ Thanks...

  4. #2983
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் அஞ்சலி!!
    ------------------------------------
    இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை!
    இந்தப் பதிவிலும் அப்படியொரு நிலை!!
    திண்டுக்கல் மலரவன்.
    மனித நேய மக்கள் திலகம் என்ற எம்.ஜி.ஆர் அமைப்பை நடத்தி வரும் எம்.ஜி.ஆரின் முரட்டுக் குழந்தை?
    வருடந்தோறும் மிகச் சிறப்பாக இவரது குழுவால் எம்.ஜி.ஆர் விழா நேர்த்தியுடன் நடை பெறும்/
    அப்படி நடத்துவதில்-
    மாரி பொய்த்தாலும் இவர் நெஞ்சம் மட்டும்-
    மாறிப் பொய்க்காது?
    உறவினரால் ஒதுக்கப்பட்ட இவரது மாமியார் இருதயமேரியை கடைசிக் காலத்தில் இவரே மகனாக இருந்து போஷித்தார்!
    எண்பதுக்கும் மேலே அகவை கண்ட அந்த மூதாட்டி ஏறக் குறைய சுய நினைவில்லாமலே தன் உயிரை உடற் கூட்டுக்குள் உறுதியாகப் பிடித்திருந்தார்.
    இருக்குமிடத்திலேயே எல்லா கடன்களையும் கழிக்கும் நிலையில் அவர்!
    முகம் கோணாது அந்த மூதாட்டியை மலரவனும் அவர் துணைவியாரும் கடைசிக் காலத்தில் காத்து வந்திருக்கிறார்!!
    இருப்பதிலேயே கொடியது ஜீவ ஹிம்சை!
    நிரந்தர ஓய்வை அந்த மூதாட்டி நேற்று மேற்கொண்டு விட்டார்!!
    உறவுகள் சரிவர உதவாத நிலை?
    கொரானாவால் திண்டுக்கல்லே இடிந்து போய் இருக்கிறது?
    என்ன செய்வது?? திகைத்து நின்ற மலரவனுக்கு தெய்வம் போல் கைக் கொடுக்கிறது ஒரு நட்பு!!
    சென்றாய் பெருமாள்!
    அந்த எம்.ஜி.ஆர் அமைப்பின் பொதுச் செயலர்.
    எம்.ஜி.ஆரை நெஞ்சிலும்,,அவர் மூலம் மலரவனை நட்பிலும் கொண்டிருக்கும் அந்தப் பெருந்தகை மின்னல் வேகத்தில் ஆஜராகிறார்.
    இடிந்து போய் செய்வதறியாது நின்ற மலரவனை ஆற்றிவிட்டு,,அடுத்தடுத்து நடக்க வேண்டியவைகளைக் கிரமத்தோடு செய்து இரவு வரை அங்கேயே அதன் பின்னரே புறப்பட்டிருக்கிறார்?
    நினைத்துப் பாருங்கள்?
    பொருளாதாரத்தில் மிக சாமானியனாகவும் எம்.ஜி.ஆர் பக்தியில் உலக கோடீஸ்வரராகவும் இருக்கும் மலரவன் மகன் போல் அந்த மூதாட்டிக்குச் செய்தவை கொஞ்சமல்ல என்றால்--
    கொரோனா பீதியில் நாடே உறைந்திருக்கும்போது,,தன்னுயிர் பற்றி சிறிதும் கவலையுறாமல் உடனே வந்து சேவை செய்த சென்றாய் பெருமாளின் மனித நேய மாண்பு??
    எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மட்டும் தான் இத்தகைய அதிசயங்கள் மிக எளிதாக நடக்கின்றன??
    அணைந்த சென்றாய் பெருமாளின் கரங்களால்-துக்கத்தில்-
    அணைந்த மலரவன் உள்ளத்தில் ஒளி உண்டாகியிருக்கிறது என்பது உண்மை தானே?
    மூதாட்டியை மனதோடு நினைத்துக் கொண்டு-
    |சென்றாய் பெருமாளின் சீர்மையை வாய்க் கொள்ளாமல் வாழ்த்துவோமே???......... Thanks...

  5. #2984
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது எம்.ஜி.ஆர் சினிமா!!
    ---------------------------------------
    கொரானாவுக்கு பயந்து அவரவர் கட்டிலுக்கு அடியிலும் சோஃபாவுக்குக் கீழேயும் பதுங்கிக் கொண்டிருப்பதால் இன்று ஒரு சினிமாப் பதிவு?
    கண்ணதாசன்,,வாலி,,இருவரும் இணைந்து இயற்றிய பாடல்? அதுவும் எம்.ஜி.ஆர் படப் பாடல்??
    உரிமைக் குரல் படத்தில் எம்.ஜி.ஆரின் சங்கதி தெரியாமல் கண்ணதாசனை வைத்து ஸ்ரீதர் இயற்றிய பாடல்--
    விழியே கதை எழுது!!
    எம்.ஜி.ஆரிடம் பஞ்சாயத்துக்குப் போய்--
    இந்தப் பாடலில் கவிஞர் பெயரையே டைட்டிலில் போடுங்கள். ஏனையப் பாடல்களை வாலியை வைத்து எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆரும் தீர்ப்பு சொன்ன விபரம் நமக்குத் தெரிந்தது தான்!
    விழியே கதை எழுது பாடலை எழுதியக் கவிஞரே இன்னொரு பாட்டுக்கானப் பல்லவியையும் எழுதிக் கொடுத்துவிட்டு,,பாடலின் சரணங்களை மறு நாள் எழுதித் தருகிறேன் என்று ஸ்ரீதரிடம் சொல்லியிருக்கிறார்.
    அதற்குள் தான் இவ்வளவு அமளிகள்??
    கிராமிய மணம் தவழும் அந்தப் பல்லவியை இயக்குனர் ஸ்ரீதருக்கு இழக்க மனம் வரவில்லை?
    என்ன செய்யலாம் என்று கவிஞரிடமே யோசனை கேட்க--
    அதுக்கென்ன--சரணங்களை வாலியை வச்சு எழுதிக்கங்க என்று பிரச்சனைக்கு வழி சொல்ல--
    அப்படி,,இருவராலும் உருவான அந்தப் பாடல் தான்--

    கல்யாண வளையோசைக் கொண்டு
    காற்றே நீ முன்னாடி செல்லு!
    பின்னாடி நான் வாரேன் என்று
    கண்ணாளன் காதோடு சொல்லு!!!
    இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டியவை மூன்று--
    கண்ணதாசனுக்கு வாலியின் திறமை மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால்,,தன் பல்லவியை வாலியைக் கொண்டு பூர்த்தி செய்யச் சொல்லியிருப்பார்?
    வாலியிடம் எத்தனைத் திறமை இருந்திருந்தால் கண்ணதாசனது நம்பிக்கையைக் காப்பாற்றி இருப்பார்??
    இரண்டுக்கும் மேலாக--
    அன்றையக் கவிஞர்களிடையில் எவ்வளவு புரிதல் உணர்வு இருந்திருந்தால் இப்படி ஒரு பெரிய சிக்கலின் முடிச்சு சிக்கல் இல்லாமல் அவிழ்ந்திருக்கும்??
    உண்மை தானே உறவுகளே???......... Thanks...

  6. #2985
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எழுகவே!!
    ----------------
    முன்பே அறிவித்து விட்டேன்!
    இன்றைய எம் எழுத்துப் போருக்கு-எமக்கு-
    எம்.ஜி.ஆரே சாரதி!!
    கொரானாவுடன் ஒரு குருஷேத்திரப் போர்!
    குவலயம் முழுதும் ஒரே சமயத்தில்-
    குறிப் பார்த்து நடத்தும் போர்!!
    இங்கே நமது பெருமையைக் கொஞ்சம் பீற்றிக் கொள்ளலாமா?
    உலகத்திலேயே வெறும் கவர்ச்சியாலோ,,டிஷ்யும் டிஷ்யும் சண்டையாலோ-ஓங்கி அழும் நடிப்பாலோ ஒருவருக்கு ரசிகர்கள் ஆகாதவர்கள்?
    எம்.ஜி.ஆர் ரசிகர்களான நாம் தான்!!
    எந்த அம்சத்தில் நாம் அவர் ரசிகர்களாகியிருந்தாலும்-
    1977க்குப் பிறகோ அல்லது-
    1987க்குப் பிறகோ நம் சிந்தையை வேறு திசை நோக்கிச் செலுத்தியிருப்போம்!!
    கொள்கை சார்ந்த மாண்புகள் சார்ந்த மனிதம் சார்ந்த அவரது மகத்துவம் நமக்கு ஆனது மருத்துவம்!!
    எம்.ஜி.ஆர் மூன்று முறை காலனை ஜெயித்தார்!!
    ஒரு தடவை புதிய எம்.ஜி.ஆராக ஜனித்தார்?
    அவரது பெருமையைப் பறை சாற்ற மட்டும் இல்லை அந்த நிகழ்வுகள்?
    நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ளவும் தான்??
    1958இல் கால் முறிவு!
    நாம் சமூகப் படம் கொடுத்த தோல்வியில் நாம் மீண்டும் ஜெயிப்போமா என்ற எண்ணச் சிதறலில் இருந்தவரது காலில் அடி?
    எம்.ஜி.ஆருக்கு சரித்திரப் படங்கள் மட்டுமே சாத்தியமா? சமூகப் படங்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கும்போதே-
    அவரது தனித்தன்மையாம்--சண்டை காட்சிகட்கும்,,
    ஓடிப் பாடும் காதல் காட்சிகளுக்கும் உலை வைக்கிறது இந்த விபத்து?
    ஓய்ந்தாரா இல்லை சாய்ந்தாரா?
    வருடாதே துன்பமே என் சிந்தையை என-
    திருடாதே படத்தின் வெற்றி மூலம் தீர்ப்பு சொன்னார்?
    1967!
    தொண்டையின் அண்டையில் ஒரு குண்டு?
    தன் பிழைப்பு மட்டுமன்றி ஒரு கட்சியின் எதிர்காலத்தையே தம்முள் அவர் தேக்கிக் கொண்டிருந்த நிலை?
    இத்தோடு தீர்ந்தான் ராமச்சந்திரன்?--இனி-
    பத்தோடு ஒன்றாகும் அவன் கட்சி??
    எதிரிகளின் ஏகடியம் இது என்றால்--
    கணீர் குரல் போவது ஒரு புறமிருக்க--
    இனி குரலே வருமா? என்ற நிலையல்லவா அன்று எம்.ஜி.ஆருக்கு??
    கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் போதுமே அவர்?
    வஞ்சம் கொண்டோரைத் தஞ்சம் கொண்டிருக்காதா வெற்றி??
    நான் குணம் பெறுவேன் என்று--
    சொல்லி எழுந்தார்1 முன்னைக் காட்டிலும் வேகமாய்-
    துள்ளி எழுந்தார்!!
    1972!
    சினிமாவில் புதிதாக இளைய நடிகர்களின் இறக்குமதி. சிறக்கு மதி சிவாஜியின் போட்டி ஒரு புறம்--இடையில்-
    கிறுக்கு மதி கருணாவால் தூக்கி வீசப்படுகிறார்?
    நடித்தது போதும் நாடாள வா என்று காலம் தம்மை அழைப்பதை சூட்சுமமாக அவர் ஒருவரால் தானே அனுமானிக்க முடிந்தது??
    1984!
    அரசியல் உலகமே அன்று-
    எம்./ஜி.ஆரை வைத்துத் தானே சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தது?
    மாயம் என்ன செய்தாரோ,,இவர் கட்சிக்குத் தானே-
    தாயம் விழுந்து கொண்டிருந்தது?
    காயம் பட வைத்த காலனின்
    சாயம் தானே வெளுத்தது?
    ஆக--அவர் சந்தித்த விபத்துக்கள் எல்லாமே மிகக் கடுமையானவை மட்டுமல்ல--மிக இக்கட்டான சந்த்ர்ப்பங்களில் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா?
    எம்.ஜி.ஆரின் இறவாப் புகழுக்கு இலக்கணமான அவரது அத்தனை சிறப்புக்களையும் விட-
    மனோதைரியம் என்ற அவரது மா பெரும் தனித்தன்மை தானே இந்த ரயிலை தண்டவாளத்தில் இருந்து தடம் புரளாமல் காத்தது?
    நாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
    அவரது அடிச்சுவடை நமது அரிச்சுவடியாய் ஆக்கிக் கொள்ள என்ன தடை?
    கொரானா--
    வரவழைத்துக் கொண்டது நாம் தானே-அதை
    வரவேற்று சமர் புரிந்து வெற்றி காண்பதைத் தானே சரித்திரம் விரும்புகிறது?
    மரணம் எப்போது வரும்?--தெரியாது!
    மரணத்துக்குப் பின் என்ன??--தெரியாது!
    இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த அவஸ்தை?
    மரணத்தை எண்ணி மருகுவதை விட-
    மரணத்தை மறுதலிக்க வேண்டிய மார்க்கத்தை சிந்திப்போமே??
    விண் இரக்கம் கொண்டாலும்--
    மண் இரக்கம் கொண்டாலும்-
    மனித குலம் செழிக்கும்!--எப்போது தெரியுமா?
    தன்னிரக்கம் என்னும் தற்கொலையை நம் உள்ளம் நாடாதிருந்தால்!!
    உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு--இங்கு-
    உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு
    ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து-அதில் நீதி உன்னைத் தேடிவரும் மாலைத் தொடுத்து!!!......... Thanks...

  7. #2986
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    போட்டியிடு! தோற்கலாம்!!
    --------------------------------------------
    எம்.ஜி.ஆர் கொடையாளி!! என்று ஆரம்பித்தால்--யாருய்யா இல்லேன்னது என்று நீங்கள் சீறும் அபாயம் ஒரு புறம் இருந்தாலும்--
    இன்றைய நமது பதிவின் சாராம்சமே--
    அவர் கொடைத்தன்மை அன்றைய எதிர்க்கட்சியாளர்கள் மத்தியில் எப்படி பேசப்பட்டது என்பதே!!
    அது அவ்வை இல்லம் கட்டிடம் கட்டும் விழா!!
    சென்னையில் இன்று செம்மையான முறையில் இயங்கி வரும் அவ்வை இல்லத்துக்கு முதன் முதலில் கட்டிடம் கட்ட பெருத்ததொரு தொகையை தனி ஒரு நபராக அளித்தவர் எம்.ஜி.ஆர்!!
    1960ஆம் ஆண்டிலேயே,,அப்போதிருந்த பண மதிப்பில் எம்.ஜி.ஆர் அன்று கொடுத்த நன்கொடை-- நாற்பதாயிரம் ரூபாய்! கணக்குப் போட்டுக்குங்க--
    பலரின் நன் கொடை வேண்டியும்,,எம்.ஜி.ஆர் கொடுத்த நன்கொடையில் கட்டடம் கட்ட ஒரு விழா நடக்கிறது!
    அண்ணா,,அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம்,,அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்வதால் வேறு வழியின்றி எம்.ஜி.ஆரும் கலந்து கொள்கிறார்!
    அன்று சி.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு சி.எஸ் சுப்பிரமணி அவர்கள் பலத்தக் கரவொலியின் பின்னணியில் இப்படிப் பேசுகிறார்--
    எம்.ஜி.ஆர் ஒரு விஷயத்துக்கு நன்கொடை தரார்னு சொன்னாலே அது கற்பனைக்கும் மிஞ்சியதாகத் தான் இருக்கும். அதுவும் பசிக்கு,,கல்விக்கு என்றால் பெரிய அளவிலே இருக்கும்! அதனால இந்தக் கட்டடத்துக்கு நன்கொடை தர விரும்பறவங்க எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு அவர ஜெயிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கறேன்??
    அடுத்தது பேச எழுகிறார் யு.கிருஷ்ணா ராவ்!
    காங்கிரஸ்கட்சியாளரும்,,அப்போதைய சட்டப்பேரவை தலைவருமான அவர் பேசியது--
    எம்.ஜி.ஆரோடு நன்கொடை விஷயத்தில் போட்டியிடுமாறு சி.எஸ் சொன்னார். ஆனால்-?
    எம்.ஜி.ஆரோடு இந்த விஷயத்துல யாரும் போட்டி போட முடியாதுங்கறது தான் உண்மை!
    நாலுபேர் ஒண்ணா சேர்ந்து கொடுக்கற தொகையை அவர் ஒருத்தரே கொடுத்துடுவார்.
    யாரேனும் அதிகமாக் கொடுக்கக் கூடியவங்க இருந்தாலும்,,அவுங்க கொடுக்கற தொகைக்கு மேல தான் எம்.ஜி.ஆர் பங்கு இருக்கும்??
    அதனால வெற்றிகள வரிசையா அடைஞ்சிட்டு வரும் எம்.ஜி.ஆருக்கே இந்த விஷயத்திலும் வெற்றி தான் கிடைக்கும்???
    நன்றாக கவனிக்கவும்!
    நடந்தது அன்றைய தி.மு.க விழா அல்ல!
    சொல்லப் போனால் தி.மு.கவின் நேர் விரோதியான காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் விழா!
    கிருஷ்ணா ராவ்,,சி.எஸ்-இருவருமே காங்கிரஸை சேர்ந்த பெரிய பதவியில் இருப்பவர்கள்!!
    அவர்கள் இருவருமே,,பல நூறு பேர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை இப்படிப் புகழ்கிறார்கள் என்றால்??
    புகழ்ந்தது அவர்களல்ல??
    எம்.ஜி.ஆரின் கொடை!!
    மகிழ்ந்தது எம்.ஜி.ஆர் அல்ல??
    தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தர்மதேவதை!!
    உண்மைதானே உறவுகளே???!!!... Thanks.........

  8. #2987
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    யார் தலைவன்?
    ----------------------------
    ரஸமான பதிவு மட்டுமல்ல! மனதின்-
    வசமான பதிவும் கூட!
    சமர்க் களம் கண்டு எதிரியை வீழ்த்தி-மக்களிடம்-
    அமர்க் களம் என்று பாராட்டு வாங்கித் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
    கண்ணியத்தின் அடி தொட்டு-
    விண்ணியத்தின் முடி தொடுதல் ஒரு வகை!!
    மெய் வாய் அதன் மூலம், நல்லனவற்றை பரப்பி-
    வாய் மை காத்தலின் மூலம் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
    சொல்வாக்கு ஒன்றினாலேயே பல்லாக்கு ஏறியவன்-
    மல்லாக்க விழுந்து மண் தொடலாம்!
    செல்வாக்கு சீரிய முறையில் பெற்றவனோ-தம்-
    உள்வாக்கு ஒன்றினாலேயே தலைவன் ஆவது ஒரு வகை!!
    எம்.ஜி.ஆர் இதில் எதில் சேர்த்தி?
    பதிவுக்குள் புகுவோமா??
    பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்!!
    எம்.ஜி.ஆரின் உள்ளம் தொட்ட அதிகாரிகளில்; ஒருவர்!
    இவர்,,தம் வீட்டை விட ராமாவரம் தோட்டத்திலேயே அதிக நேரம் உலா வந்தவர்!
    அது,,கொடைக்கானல் மலைப் பகுதிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முறையான அரசு வருகை!!
    முதல்வருடன் வழக்கம் போல் பிச்சாண்டி!!
    இருவரையும் பார்த்த மலைவாழ் மக்கள்-
    அரவம் கண்டது போல் அலறி ஓடுகிறார்கள்??
    காவலர்களை அனுப்பி விஷயத்தை அறிகிறார் முதல்வர்!!
    மலைவாழ் மக்கள்,,அங்கே சாலையில் விழும் சுள்ளிகளை மூட்டைக் கட்டி விற்பார்களாம்! வனத் துறையினர் அவர்களைத் தடை செய்வார்களாம்!
    கேட்ட மாத்திரத்தில் அங்கேயேஅரசாணை பிறப்பிக்கிறார் எம்.ஜி.ஆர்--
    இனி இந்த மக்களை வனத் துறையினர் தொல்லை செய்யக் கூடாது! அவர்கள் சுதந்திரமாக சுள்ளிகளைப் பொறுக்கிக் கொள்ளலாம்!!
    கூடவே,,அவர்களது வேறு சில குறைபாடுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொல்கிறார் பிச்சாண்டியிடம்!
    அந்த நேரம் பார்த்து அணி திரண்ட மேகங்களின் அவசர கதி மழை!!
    அடை மழைக்கு அறிகுறியெனக் கண்டு-அந்த மக்கள் குடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்!
    குளத்தில்--
    சேறு தழுவிய நீர் செந்தாமரையை சீண்டும்!
    இங்கோ--
    செந்தாமரையை சிலுப்பிய மழை நீர்,,கீழே சேறைத் தொடுகிறது??
    நனையும் எம்.ஜி.ஆரிடமிருந்து நிலமகள் நீர் வாங்குகிறாள்!
    அப்போது எம்.ஜி.ஆர் செய்த அந்தக் காரியம்??
    ஆம்! கொடுக்கப்பட்ட குடை,,
    பிச்சாண்டி தலைக்கு விரித்தபடி!!
    எம்.ஜி.ஆர் அதைப் பிடித்தபடி!!
    பதறி நிமிர்கிறார் பிச்சாண்டி!
    ஒரு முதலமைச்சர் இப்படி எல்லோர் முன்னாலும் தமக்கு ஊழியம் செய்வதா?
    பரிவுடன் அவரை தேற்றுகிறார் எம்.ஜி.ஆர்--
    நான் சும்மா தானே நிக்கறேன். நீங்களோ அவுங்க குறைகளை எழுதிக்கிட்டிருக்கீங்க! நீங்க நனைஞ்சா,,உங்களால கவனமா எழுத முடியாது. அப்படி எழுதினாலும் இந்தப் பேப்பர் நனைஞ்சா என்னாகறது???
    வணக்கம் வைத்தால் வாங்கிக் கொள்வது மட்டும் தலைவன் வேலையல்ல!
    இணக்கம் கொண்டோருக்கு ஒரு இடையூறு எனில்-சுணக்கம் காட்டுவதும் அவன் வேலையே என்பதை-மணக்கும் இந்த மனித நேயத்தினால் காட்டுவதாலோ-கனக்கும் புகழ் மாலைகள் தினக்கும் அவன் தோள்களைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன இன்று வரை???!!!... Thanks...

  9. #2988
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது எம்.ஜி.ஆர் வழி!!
    ---------------------------------
    அமானுஷ்ய செயல்களின் ஆன்மிக அதிர்வுகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர இயலும்!! அதை,,இன்றையப் பதிவின் நிகழ்வு உறுதி செய்கிறது!
    திண்டுக்கல் மலரவன்,,தழுதழுக்கும் குரலில் நம்மிடம் சொன்ன நிகழ்வு இதோ,,உங்களுக்காக!
    பிப்ரவரி 9ஆம் தேதி திண்டுக்கல்லில் மலரவன் குழுவினர் நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர்103 நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்!
    அந்த விழாவின் முக்கியஸ்தர்கள்--
    வி.வி.ஐ.பி--எம்.ஜி.ஆர்!
    வி.ஐ.பி--கலந்து கொள்ளும் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும்!!
    விழாவுக்கான ஏற்பாடுகள் வினயமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,,அன்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்--
    சேலத்தில் ஒருவருக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது!
    அழைப்பிதழைக் கண்ணுற்ற அந்த அன்பர் முகம் சுளிக்கிறார்??
    எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
    எனக்கு எதற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்க?
    வாய் விட்டே சலித்துக் கொள்கிறார்?
    உண்மையில்,,முக நூல் மூலம் பெறப்பட்ட முகவரியில் அவர் முகவரிக்கு தவறாக அந்த அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருக்கிறது!
    சார் உங்களுக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கட்டுமா??
    அந்த நபரிடம் இப்படிக் கேட்டது--
    அதை அவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியரே தான்??
    தபால் ஊழியரின் ஆவலுக்கு முன்னே அந்த நபரின் சலிப்பு அடிபட்டுப் போக--
    அந்த ஊழியர் வசமே அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறார் அந்த நபர்!!
    மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்ட அந்தத் தபால் துறை ஊழியர்--கண்ணன்,, மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராம்!!
    அடுத்தது,,அந்தக் கண்ணன் செய்த காரியம் தான் ஹை லைட்??
    அழைப்பிதழில் உள்ள மலரவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டவர்--
    அடக்கத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு,,விபரங்கள் கூற--
    உண்மையான ஒரு எம்.ஜி.ஆர் ரசிகரிடம் அந்த அழைப்பிதழ் சென்றிருப்பதை அறிந்த மலரவன் அகம் பூரிக்க--
    மலரவனை மேலும் திகைக்க வைக்கிறார் கண்ணன்?
    என்னோட சக்திக்கு இப்போ 500 ரூபாய் உங்களுக்கு மணியார்டர் செஞ்சுருக்கேன்
    நிகழ்ச்சிக்கு வரும்போது இன்னமும் என்னால் முடிந்ததைத் தர்றேன்???
    ஒரு அக்மார்க் ரசிகரை நமக்கு அடையாளம்` காட்டியதோடு,,`
    அழைப்பிதழை அவர் பெற்றுக் கொண்ட முறையில் இருந்த நேர்மை--
    அழைப்பிதழை கண்ணுற்ற மாத்திரத்தில் அவர் காட்டிய கொடைத் தன்மை--`
    ஆனந்தக் கண்ணீரை அருவியென கொடுக்கிறது மலரவனுக்கு!!
    என் பாலிஸி இது தான்!
    உழைத்துப் பிழைக்கும் சராசரி மனிதர்கள் தான் எனக்கு எப்போதுமே வி.ஐ.பிக்கள்! அதனால் அப்படிப்பட்ட ஒருவரையே உனக்கும் கொடுத்திருக்கேன் என்று எம்.ஜி.ஆரே,,மலரவனுக்கு உரைப்பது போல் இருக்கிறது எனக்கு!
    உங்களுக்கு?!......... Thanks.........

  10. #2989
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கே தான் எம்.ஜி.ஆர்!!
    ------------------------------------
    வரலாறு!
    இது சாதனையாளர் எல்லோரையுமே உள் வாங்குகிறது!
    சிலரை அழுத்தமாக அமர வைக்கிறது!
    சிலரை முகமன் கூறி வரவேற்று--பின் மூலையில் உட்கார்த்தி வைக்கிறது!
    சிலருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தை அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் கொடுத்து மூச்சுக்கு முப்பது தடவை அவர்கள் பெயரை முழங்குகிறது!
    சரி! பதிவுக்குள் செல்வோம்!
    இந்தியாவில் இன்று பசியின்றி உண்டு ருசியோடு கல்வியை மாணவ சமுதாயம் கற்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர்!!
    அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரால் தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப் பட்டது!
    மேற்கூறிய செய்தியை சொல்லி மகிழ்ந்திருப்பவர் ராகுல் காந்தி!!
    அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!!
    சமீபத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார் ராகுல்!!
    இது அரசியல் விளம்பரத்துக்கான அவரது உரை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது! அதே சமயம் அவரது தந்தை ராஜிவ் காந்தியின் எம்.ஜி.ஆர் பற்றையும் நாம் அறிவோம்!!
    ஏற்கனவே திரு நரேந்திர மோடி எம்.ஜி.ஆரின் சிறப்புக்களை மக்களிடம் பகிர்ந்து மகிழ்ந்ததும்--எம்.ஜி.ஆருக்கு என்றே சில சாதனைகளை செயல்படுத்தி இருப்பதையும் நாம் அறிவோம்!
    இந்த நிலையில் ---
    ராகுல் காந்தியின் சமீபத்திய இந்த உரை நமக்கு சில தீர்மானமான தெளிவுகளை கொடுக்கிறது!!
    1]--தனித் தமிழ் நாடு என்ற தி.மு.கவின் அன்றைய அர்த்தமற்ற கோரிக்கையை அன்று நிராகரித்த காலம்-
    எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூபத்தின் வாயிலாகவே-
    தமிழ் நாட்டுக்குள் இந்தியா!!--என்ற கீர்த்தியை அளித்திருக்கிறது!
    2]--இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள்-
    காங்கிரஸ்--பி.ஜே.பி--இரண்டின் தலைவர்களுமே எம்.ஜி.ஆரை உள் வாங்கி உரைத்திருப்பவை இதுவரை எந்த தலைவருக்கும் கிட்டாத பேறு என்பதுடன் எட்டாத பேறு என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கதே!!
    3]--பள்ளிக் குழந்தைகள் பசியாற வேண்டும் என்று துடித்த விருது நகர் தந்த விருது,,காமராஜர் நினைத்தாலும்--அன்றைய நிதிப் பற்றாக்குறை அவரது லட்சியத்தை நீதிப் பற்றாக்குறை ஆக்கி,,திட்டத்தை பாதியில் நிறுத்த நேர்ந்ததை மறந்து இன்றையக் காங்கிரஸ்காரர்கள்,,சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரின் சாதனையாக பேசப் படுவதை ஏற்காத நிலையில்--
    காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுலே இன்று குறிப்பிட்டிருப்பது??
    காலத்தில் தோன்றி கைகளை வீசிக்
    காக்கவும் தயங்காது என்ற ஆனந்தஜோதியின் அமிர்த வரிகள்!!
    இப்படி இன்னும் பல்வேறு ஆச்சரிய உண்மைகளை அணு அணுவாக நமக்கு தெரிய வைக்கும் வகையில் திரு ராகுல் காந்தியின் அறிக்கை அமைந்திருக்கிறது என்ற வகையில் நாம் அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்!!
    சரித்திரம்--
    சிலரை முழங்கும்
    சிலரை முழுங்கும்!!
    வெகு சிலரின் சாதனைகளை மட்டுமே
    அனு தினமும் வழங்கும்!!
    அந்த வகையில்--
    எங்கே எம்.ஜி.ஆர்? என்ற கேள்விக்கு--
    மீண்டும் பதிவின் தலைப்பு!! இடம் பெறுவதில் உடன்பாடு தானே உங்களுக்கு???........ Thanks...

  11. #2990
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழை உயிராய் நேசிக்கும் அனைத்து தமிழ் உறவுகளே!
    நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர
    உங்கள் அனைவருக்கும் எங்களின்
    இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    எம்.ஜி.ஆர் கலைமகள்
    டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம்
    Dr.MGR Global Research Centre
    MGR Productions Resources......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •