Page 287 of 402 FirstFirst ... 187237277285286287288289297337387 ... LastLast
Results 2,861 to 2,870 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2861
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  Mynaty media
  M.shajahan.B.sc.,

  RR pictures
  கொடுத்து வைத்தவள் வெளியான தேதி
  09.02.1963.

  இதே தேதியில் தான் சிவாஜிக்கு
  சித்தூர் ராணி பத்மினி ரிலீஸாகி
  படு தோல்வி கண்டது...!

  ஜனவரி 11(பொங்கல்) அன்று...,

  சின்னவரின்
  " பணத்தோட்டம் " வெளி வந்தது...!
  அதே தேதியில்
  பி மாதவன் முதன் முதலாக இயக்கிய "மணியோசை" வெளியானது...!
  இரண்டும் பெரிய வெற்றி பெற்றது...!

  அதை அறிந்து தான் தெய்வத்தாய் இயக்கும் வாய்ப்பை சின்னவர் மாதவனுக்கு வழங்கினார்...!

  சின்ன இடை வெளியில் தேவரின்"தர்மம் தலை காக்கும்"
  பிப்ரவரி 22 ல்
  ரிலீஸ்...!

  முன்னும் பின்னும் வழுவான வெற்றி
  பெற்றதால்...,
  இடையில் சிக்கிய கொடுத்து வைத்தவள் சராசரியாகத் தான் போனது...!

  மௌண்ட் ரோடு(அண்ணா சாலை) பிளாசாவில் பணத்தோட்டம்...,
  தேவர் பொங்கலுக்கே Conform பண்ணியதால் சித்ராவில் தர்மம் தலை காக்கும்...,
  தியேட்டர் கிடைக்காததால் வழக்கமாக ஆங்கில படங்களும்..., ஸ்ரீதர் படங்களும் (பின்னாளில் எங்க வீட்டுப்பிள்ளை
  அன்பேவா)
  வெளியிடப்படும் "காசினோ" வில் கொடுத்து வைத்தவள் ரீலீஸ் அகியிருந்தது...!

  அதனால் கதைக்கு முக்கியத்தும் கொண்ட இப்படத்திற்கு High class ரசிகர் ஆதரவு கிடைத்தது...!

  பா நீலகண்டன் சின்னவரை இயக்கிய இரண்டாவது படம்...!

  மகாதேவன் இசையில்ல அனைத்து பாடல்களும் அருமை...!

  கண்ணதாசன் வரியில்...,
  'என்னம்மமா சௌக்யமா...?'
  TMS PS

  'பாலாற்றில் தேனாடுது...!'
  சீர்காழி சுசீலா

  'நான் யார் தெரியுமா...?'
  TMS

  ஆலங்குடி சோமுவின் வார்த்தையில்...,
  'மின்னல் வரும்'

  மருதகாசின் மயக்கும் மொழியில்...,
  'நீயும் நானும் ஒன்று;ஒரு நிலையில் பார்த்தால் இன்று'
  என்ற தீர்க்க தரிசன சொல்லாடல் கொண்ட பாடல்கள் இப்பபடத்திற்கு தனிச் சிறப்பு...!
  இது வெறும் Trailer தான்...,
  Main pictures
  நிறைய இருக்கு...!........... Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2862
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  ரத்னகுமார் படத்தில் தளபதியாக சகஸ்றநாமமும், சேனாதிபதியாக எம்.ஜி.ஆர்.அவர்களும் நடித்து இருப்பார்கள்.

  அஸோக்குமார் படத்தில் எம்.கே.தியாகராஜபாகவதரின் உற்ற நண்பராக நடித்து இருப்பார் தலைவர்.
  *லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சதி செய்யப்பட்டு பாகவதர், கலைவாணர் சேர்க்கபட்டனர் பின்பு லண்டன் கோர்ட்டில் கேஸ் நடந்து கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்று தீர்ப்பு வழங்கபட்டது*

  *பாகவதர் நடித்த ராஜமுக்தி படம் பூனாவில் எடுக்கபட்டது அதில் எம்ஜிஆர் இரண்டாவது நாயகன் ஆவார்."அப்போது தான் எம்ஜிஆருக்கும் ஜானகிக்கும்.திருமணத்தை தனது முன்னிலையில் நடத்தியவர் தியாகராஜபாகவர் ஆவார்*

  *நாடோடி மன்னன் படம் எடுக்கும்போது …றாமச்சந்திரா அதிகம் பணம் செலவளிக்காதே கடன் பட்டு விடுவாய் என எம்ஜிஆரை எச்சரித்தார் பாகவதர் ஆனால் தலைவரோ ஜெயித்தால் மன்னன், இல்லை நாடோடி*
  என்று பாகவதரின் ஆலோசனையை கேட்டார் ..

  எனது நினைவலைகள்.
  KSG... Thanks...

 4. #2863
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  01.04.2020
  Book park.

  எம் ஷாஜஹான்.
  மைனாட்டி மீடியா

  நீதிக்கு தலை வணங்கு படத்தை பற்றிய அபூர்வ செய்தி...!

  இறைவன் நம் கண் முன்னால்...,

  நாளை நடப்பதை இன்றே காட்டித்தருவான் என்பதற்கு சாட்சி கூறும்...,

  ஒர் அதிசய காட்சி நிகழ்வு இடம் பெற்றிருக்கும்...!

  ரோஜா ரமணியிடம்..., அவரின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை க்கு ஏற்பாடு செய்ததர்க்கு சாட்சியாக...,

  கட்சியின் அன்றய அதிகாரபூர்வ நாளேடான
  " சமநீதி " யை எடுத்து வந்து காட்டுவார் நம் சின்னவர்...!

  அதில் இரண்டு விசயங்கள் பின் நடப்பதை பிரதிபலிப்பதாக இருக்கும்...!

  1. அமெரிக்காவில் இருந்து டாக்டர்கள் வருவதாக இருக்கும்...!

  2. அந்த பத்திரிக்கையின் வெளியீட்டு தேதி டிசம்பர் 24...என்று
  இருக்கும்...!

  இந்த இரண்டும் சின்னவரின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வுகள்...!

  ஒன்று...அவருக்கு அமெரிக்க மருத்துவர்களால் நிகழ்த்தப்பட்ட அறுவை சிகிச்சை...!

  மற்றொன்று அவர் நம்மையெல்லாம் வீட்டுப் பிரிந்த அந்த கொடிய...,
  டிசம்பர்...24...!

  இறைவன் மிக........
  பெரியவன்...!!!......... Thanks.........

 5. #2864
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  ... Thanks......

 6. #2865
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  இந்த இந்தி பாடல்...,
  நோயுற்றவரை
  குணப்படுத்த வேண்டி...,

  இறைவனிடம்
  இரஞ்சி பாடும்
  பாடலாகும்...!

  லதா மங்கேஸ்கர்
  அமுத குரலில் ஒலிக்கும் இப்பாடல்...,

  மக்கள் திலகத்தின் "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தின் இந்தி மூலக்கதையான..,

  சாந்தாராமின் "தோ ஆங்கன் பாரா ஆத்"(இரண்டு கண்கள் பன்னிரண்டு கைகள்) படத்தில் இடம் பெற்றது...!

  இறுதி காட்சியில் நாயகன் கைதிகளால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் போது நாயகி பாடும் பாடல்...!

  தமிழில் புகழ் பெற்ற 'ஒன்றே குலமென்று பாடுவோம்' என்ற பாடலின் காட்சியையும் ராகத்தையும் ஒத்திருக்கும்...!

  உலகெங்கும் நோயுற்றவர்களின் அழுகுரல் கேட்கும் இவ்வேளையில் இப்பாடல் பாடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்...!

  என்றென்றும்
  அன்புடன்...,
  எம் ஷாஜஹான்......... Thanks.........

 7. #2866
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  எம்ஜிஆர் இளமையில்
  வறுமை. படிப்பை தொடரமுடியவில்லை. நாடகத்தில் சேர்ந்தார்.
  பிறகு சினிமாவில் துணைநடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக
  ஜொலித்தார்.
  உச்சகட்டத்தில் இருந்தும் ஏழைகள்மீது
  அன்பும் கொடுக்கும் குணமும் மனிதநேய பண்பும் ரத்தத்தில் ஊறிவிட்டது.ஏனெனில்
  ரத்தத்தின்ரத்தமாயிற்றே.பிறகு அ.தி.மு.க தொடங்கி அரசியலில்
  தீவிரமாக ஈடுபட்டு தமிழக முதல்வர் ஆனார். 10 ஆண்டுகள்
  மக்களுக்காக வாழ்ந்த தலைவர்.
  1917 லிருந்து 1987
  வரை எம்ஜிஆர் காலம்
  கி.மு. கி.பி..என்பது போல் சரித்திரத்தில்
  இடம் பெற்று
  எம்ஜிஆர் காலம் பொற்காலம். இன்று தெய்வமாக காட்சியளிக்கிறார்.
  நாம் அனைவரும் அவர்
  செய்த நற்காரியங்களை
  வாழ்நாளில் கடைபிடித்தால் நமது
  தமிழ்நாடு முதலிடம் பெறும் என்பதில்
  ஐயமில்லை.......... Thanks.........

 8. #2867
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  " துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் "
  🌹**********************************🌹

  " துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல; MGR கற்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும், தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு நஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.

  சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி; எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பியிருந்தார். இது போன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.

  நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது; அவர்களை, அந்த கயவர்களின்பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகைகளிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
  நன்றி : யாழ் பதிவு - யாழ் இணையம்.......... Thanks

 9. #2868
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  இது, இப்படியாக....

  ------------------------.--------

  #கோட்டையில் இருந்து சென்ற #முதல்வரின் கார், #இராமாவரம் #தோட்டத்திற்குள் நுழைந்தது. வாசலில் இறங்கிய #எம்ஜிஆர் உள்ளே நுழையாமல் வெளியே பார்த்தபடி நின்றார். இது வழக்கத்திற்கு மாறானது என்று, #அதிகாரிகள் பரபரப்டைந்தார்கள். சற்று நேரத்திற்கு பிறகு, “வெளியே உள்ள கடைக்கு அருகில் ஒரு பெண்மணி உட்கார்ந்திருப்பதை பார்த்தீர்களா?” என்றார்.

  யாரிடமிருந்தும் பதில் இல்லை.

  மூன்று நாட்களாக கவனிக்கின்றேன். அந்த அம்மா, அந்த பெட்டிக் கடைக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். நம் வாகனம் வரும்போதும் போகும்போதும் எழுந்து கும்பிட்டபடி நிற்கிறார். நீங்கள் யாரும் கவனிக்கவில்லையா? என்கிறார்.

  #பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் மௌனம்.

  போய் அழைத்துவாருங்கள் என்கிறார்.

  அதிகாரிகள் சூழ உள்ளே நடந்து வரும் அந்த பெண்மணியை பார்த்தபடியே நிற்கிறார்.

  நடுத்தர வயது,காய்ந்த தலை. வாடிய முகம், உழைத்து உருக்குலைந்த தேகம், கையில் ஒரு மஞ்சள் பை. முகத்தில் கலக்கமும், அச்சமும் தெரிய, எம்ஜிஆரை நெருங்க நெருங்க படபடப்பிற்குள்ளாகிறார் அந்த பெண்மணி.

  அவரை சமாதானப்படுத்த, சிரித்தபடியே சாப்டீங்களாம்மா? யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? வெளியவே உட்கார்ந்திருக்கீங்களே, என்ன விஷயம் என்கிறார். அந்த அம்மையார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, படபடப்புடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

  சரி, முதல்ல நீங்க சாப்டீங்களா? வாங்க, போய் சாப்டுட்டு நிதானமா பேசுவோம் என சிரித்தபடியே அழைத்துச் செல்கிறார். உணவு இரண்டு பேருக்கும் பரிமாறப்பட்டது. தயங்கி தயங்கி அமர்ந்திருந்த அந்த பெண்மணியிடம் சாதாரணமா பேச்சுகொடுத்து சாப்பிட வைத்தார். இரண்டு பேருமாக சாப்பிட்டு முடித்தவுடன் வெளியே இருந்த அறையில் வந்தமர்ந்து, ‘என்ன ஏது என்று விசாரிக்கின்றார்.

  “ஐயா, நான் கூலி வேலை செய்யுறேங்க. வூட்டுக்காரு இறந்து போயிட்டாரு. சட்டுன்னு கையொடிஞ்சமாதிரி ஆயிருச்சி. ஒத்தை ஆளு சம்பாரிச்சு மூணு பொம்பள புள்ளைகளை காப்பாத்த முடியல, பள்ளிக்கூடம் போற புள்ளைங்கள நிறுத்திட்டேன். என்னா பண்றதுன்னு தெரியல. ஊர்ல இருந்த எல்லாரும், எம்ஜிஆர்கிட்ட போய் கேளுங்க, ஏதாவது செய்வாருன்னு சொன்னாங்க. அதான்சாமி வண்டி புடிச்சு வந்துட்டேன். கோட்டைக்கு போனேன். அங்க உங்களை பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அதான் இங்க வந்து (வீட்டுக்கு) வெளியே இருக்கிற பெட்டிக் கடையாண்ட மூணு நாளா குந்திகிட்டிருக்கேன் சாமி” என்கிறார் கையெடுத்து கும்பிட்டழுதபடி..

  என்ன #நம்பிக்கையில் இப்படி வண்டி ஏறி வருகிறார்கள் என நினைத்தாரோ என்னவோ, மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த எம்ஜிஅர், சற்று நேர யோசனைக்குப் பிறகு அதிகாரிகளை அருகில் அழைத்து ஏதோ சொன்னார். அவர்கள் குறித்துக்கொண்டார்கள்.

  ஊர், பெயர் விவரங்களை மீண்டும் கேட்டுக்கொண்ட பிறகு “பிள்ளைங்க படிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். ஒன்றும் கவலைப்படாதீங்க. பத்திரமா போய்வாங்க என்றபடியே, ‘கொஞ்சமாக’ பணத்தை கையில் இருந்த மஞ்சள் பையில் போட்டுக்கொடுத்து, இதை வைத்து ஏதாவது கடை வைத்து வருமானத்த பார்த்துக்கோங்க” என்று கூறி அனுப்பி வைக்கின்றார். ஒரு ஊழியர், பொறுப்பாக வண்டி ஏற்றி அனுப்பி வைத்தார்.

  ஊர் சென்று இறங்குவதற்குள்ளாகவே, வீட்டிற்கு, கலெக்டர் ஆபீஸில் இருந்து வந்து விசாரித்துவிட்டு போனதாக சொன்னார்கள். விறு விறுவென வேலைகள் நடந்தது. அந்த பெண் பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையான எல்லா செலவுகளும், எந்த உயர்படிப்பு வரை என்றாலும், எல்லாமுமே எம்ஜிஆரே ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் சொன்னார்கள்.

  இந்த சம்பவத்தை, எம்ஜிஆர் நடத்திய ‘தென்னகம் பத்திரிகை ஆசிரியராக இருந்த ‘தென்னகம் மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் என்னிடம் கூறினார்.

  #போலீஸ் செய்தி வார இதழில் ‘#தென்னகம் மு.கோ. #வசந்தன் அவர்கள் ஆசிரியர். நான் உதவி ஆசிரியர். சாதாரண வேட்டி சட்டையில் வருவார். நான் ஏலனமாகத்தான் பார்த்தேன். பழகப்பழக அவரது அனுபவம் எனக்கொரு பொக்கிஷமாகப்பட்டது. அண்ணன் தம்பியானோம்.

  எம்ஜிஆருடன் நெருங்கியிருந்தவர். அதனடிப்படையில் அவ்வப்போது நிறைய சம்பவங்களை சொல்வார். சில சம்பவங்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி இருக்கும். அவற்றை எல்லாம் நான் எனது டைரியில் குறித்து வந்தேன். அவர் சொன்னது எல்லாமும் அதுவரை யாரும் எழுதியிராத-அறிந்திராத சம்பவங்கள்!

  பிறகு நான் 1999-ல் குமுதம் வார இதழுக்கு வந்துவிட்டேன். 2002-ற்கு பிறகு..

  வழக்கம்போல் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கான சிறப்பு பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, அதை சீனியர் எழுதியிருந்தார். அப்போதுதான், ‘என்னிடம் இப்படியான கதைகள் உள்ளது’ என்று ஆசிரியர் #கிருஷ்ணா டாவின்ஸியிடம் கூறினேன். அப்படியா, எழுதி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னார். இரவெல்லாம் எழுதி காலையில் எடுத்துச் சென்றேன்.

  முதல் வாரமே அட்டைப்படக் கட்டுரையாக இந்த உண்மை சம்பவம் வெளியானது. (பிறகு தொடர்ந்து நான்கு வாரங்கள் மினி தொடராக குமுதத்தில் வந்தது)

  அந்த பெண்மணிக்கு எம்ஜிஆர் உதவியது பற்றிய அந்த கட்டுரை வந்த இரண்டாம் நாள், ஒரு பெண்மணி அலுவலகம் வந்து ஆசிரியர் கிருஷ்ணா டாவின்ஸியை சந்தித்துவிட்டு போனதாக சொன்னார்கள். அன்று நான் தாமதமாக போயிருந்தேன்.

  வந்தவர் ஒரு டெபுடி கலெக்டர். எம்ஜிஆரிடம் உதவி கேட்டு வந்திருந்தாரே, அந்த அம்மையாரின் மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர். “எம்ஜிஆர்-தான் எங்கள் மூவரையும் படிக்க வைத்தார். நாங்கள் மூன்று பேரும் பெரிய அளவில் படித்தோம். எல்லா செலவும் அவருடையதுதான். இன்று நாங்கள் எல்லோரும் நல்ல நிலையில்-உத்தியோகத்தில் இருக்கின்றோம் என்றால் அது எம்ஜிஆரின் உதவிதான் என்று உருகி நன்றி சொன்னதாக கூறினார்.

  அதன் பிறகு, என்னையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி கூறினார்.

  “அவர் எங்களை படிக்க வைத்தது மட்டுமல்ல. எப்படியாக படிக்கின்றோம் என்பதை எல்லாம் விசாரித்தபடி இருந்தார். அதிக அக்கரை கொண்டிருந்தார். எனக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததும், அம்மா கையோடு அழைத்துக்கொண்டுபோய் (குலசாமி) அவர் முன் நிறுத்தினார் என்ற அந்த சம்பவத்தை சொன்னபோது அப்படி ஒரு நெகிழ்ச்சி...

  திரும்பிப் பார்த்தபோது, இது இப்படியாக...

  #பத்திரிக்கையாளர் பா. ஏகலைவன் அவர்களின் இன்றைய பதிவு......... Thanks.........

 10. #2869
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like
  எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆர், இன்னமும் புரட்சி தலைவராகவே தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நடிகர் என்பதால் மட்டுமல்ல. அதையும் தாண்டிய அவரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த இயல்புதான் காரணம் என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக எம்.ஜி,ஆர் பற்றிய ஒரு ஸ்வாரஸ்யா சம்பவத்தை கூறி இருககிறார் எம்.ஜி.ஆரின் "தாய்" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார்.


  "தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார் அந்த பத்திரிக்கையின் உரிமையாளரான எம்.ஜி.ஆர்.

  ஆனால் அப்போதுதான் வலம்புரி ஜான் , அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

  அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

  ஹலோ.. யாருங்க பேசறது? இது வேலைக்காரச் சிறுமி.

  நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்-அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

  அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க
  நீங்க யார் பேசறது?

  நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.

  உங்க பேரு என்ன?

  லச்சுமி

  எந்த ஊரு?

  தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர்

  இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?

  மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்

  அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?

  அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.

  உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?

  ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க

  சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?

  ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..

  உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?

  ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.

  எப்ப ஊருக்குப் போகப்போற?

  எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..

  சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு

  உங்க பேரு என்ன சொன்னீங்க?

  எம்.ஜி..ராமச்சந்திரன்

  மறுபடி சொல்லுங்க....

  எம்.ஜி.ராமச்சந்திரன்

  அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

  இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார் என்றுதான் நினைத்திருக்கிறாள்.

  ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

  அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பி இருக்கிறாள்.

  நன்றி: தாய் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார் அவர்கள் !......... Thanks.........

 11. #2870
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,701
  Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •