Page 271 of 402 FirstFirst ... 171221261269270271272273281321371 ... LastLast
Results 2,701 to 2,710 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2701
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2702
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  4. #2703
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -04/03/20
    ----------------------------------------------
    நடையல்ல நாட்டியமே தான் -- ஆர்.சி.சம்பத்*
    --------------------------------------------------------------------------

    சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் நான் பணியாற்றியபோது எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டது .* அவரை வைத்து ஒரு சமூக கதையை படமாக்க விரும்பினேன் . பாக்கெட் மார் என்னும் இந்தி படத்தை போட்டுக் காட்டினேன் .* சரி இந்த கதையை யே* எடுக்கலாம் . எனக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது என்றார் .* படத்திற்கு " திருடாதே" என்று பெயர் சூட்டினோம் .*

    அப்போது நான் எழுதிய தங்கமலை ரகசியம் படத்தினை பி.ஆர். பந்துலு எடுத்துக் கொண்டிருந்தார் .* ஒருநாள் சென்னை கடற்கரையில் தனியாகஉட்கார்ந்து கொண்டிருந்தேன் .* அப்போது அங்கு டைரக்டர் சுப்ரமணியம் புதல்வி* பத்மா சுப்பிரமணியம் வந்தார் .* அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள் .**

    பல விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு வரும்போது நான் தங்கமலை ரகசியம் படத்திற்கு கதை எழுதி இருப்பதையும் அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன் .**

    உடனே, பத்மா , இந்த பெண் பெங்களூரை சேர்ந்தவள்.* தாய்மொழி கன்னடம் .* தமிழ் படத்தில் நடிக்க ஒரு சிறு சான்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .

    தங்கமலை ரகசியம் படத்தில் நடனமணிகளில் ஒருத்தியாக நடிக்க வைத்தோம் . சிறு வேடம்தான் . சம்பளம் இருநூற்று ஐம்பது .* அந்த பெண்தான் பின்னாளில் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவி .**

    எம்.ஜி.ஆரிடம் , புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன் .* ஒரு டெஸ்ட் எடுங்கள்* பார்க்கலாம் என்றார் .* டெஸ்ட் எடுப்பது என்பது பலவிதமாக நடிக்க சொல்லி படமாக எடுப்பது .**

    டெஸ்டை எம்.ஜி.ஆர். பார்த்தார் .* கூட நாங்கள் சிலரும் பார்த்தோம் .* சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு காலை தாங்கி தாங்கி* நடந்து சென்றதை சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டி காட்டினார்கள் .* அதற்கு எம்.ஜி.ஆர்.*அதுவும் ஒரு செக்ஸியாகத்தானே இருக்கிறது .* இந்த பெண்ணையே* கதாநாயகியாக போட்டு விடுங்கள் என்றார் .* திருடாதே திரைப்படமாக்க மிக பெரிய வெற்றி கண்டது .* எம்.ஜி.ஆறுக்கும் வெற்றிகரமான முதல் சமூக படமாக அமைந்து , அவரது வளர்ச்சிக்கு திருப்பு முனை ஆனது .

    --சின்ன அண்ணாமலை .
    Last edited by puratchi nadigar mgr; 26th February 2020 at 11:58 PM.

  5. #2704
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று கேரளா வடவனூர் உள்ள புரட்சித்தலை வரின் இல்லமான பலயை வீட்டை புதுப்பித்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விழா நடந்தது ,அதில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ,நடிகர் இயங்குனர் மான பாண்டியன்ராஜன் ,புரட்சித்தலைவரின் வளர்ப்பு மகள் ராமவரம் தோட்டத்தில் வசிக்கும் லதா மேடம் தலைவர் உறவினர்கள் பல ஊர்கலிருந்து தலைவர் பக்தர்கள் கலந்து கொண்டனர் ,சென்னை முன்னாள் மேயர் அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் இந்த வீட்டை புதுப்பித்து கொடுத்து எங்களுக்கு காணும் பாக்கியம் ஏற்படுத்தி கொடுத்த அண்ணன் அவர்களுக்கு கோவை பக்தர்கள் சார்பில் நன்றி நன்றி,......... Thanks.........

  6. #2705
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  7. #2706
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  8. #2707
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  9. #2708
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    நடித்தால் துள்ளல்

    கொடுத்தால் வள்ளல்

    எம்ஜிஆர் பக்தர்களே

    படத்தில் நம் உயிரினும் மேலான தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்

    பாண்டிச்சேரி மாநில அண்ணா திமுக முதலமைச்சர் ராமசாமி அவர்கள்

    ///////////////////////////////////////////////////////

    முகநூல் எம்ஜிஆர் பக்தர்களே

    1972 ஆண்டு மதுரையிலே ஒரு பிரம்மாண்டமான திமுக மகாநாடு நடைபெற்றது

    கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார்

    எம்ஜிஆர் திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தார்

    ///;///////////////////?//////////////////////////////

    இந்த மகாநாட்டில் ஒரு மிகப்பெரிய சிறப்பான புதுமையான அம்சம் ஒன்று நடைபெற்றது

    இப்பொழுது கட்டவுட் பிளக்ஸ் போர்டு வைப்பது போன்று அந்த காலகட்டத்தில்

    பிரம்மாண்டமாக கடை வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் ஆர்ச் அமைப்பார்கள்

    மூங்கில் தென்னங்கீற்று இவைகளை பயன்படுத்தி ஆர்ச் அமைப்பார்கள்

    மதுரையில் அமைக்கப்பட்ட ஆர்ச்களைப் பற்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது

    இந்த ஆர்ச்களை பார்ப்பதற்காகவே அனைத்து கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தொண்டர்கள் எல்லாம் மதுரையில் வந்து குவிந்தார்கள்

    மதுரை மாவட்டச் செயலாளர் முத்து அவர்கள் இந்த மாநாட்டை நடத்தினார்

    சனி ஞாயிறு இரண்டு நாட்கள் அந்த மகாநாடு நடைபெற்றது

    அந்த மகாநாட்டின் ஊர்வலத்திற்கு தலைமை மு க முத்து

    மு க முத்து அவர்களுக்கு மதுரை முழுவதும் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் வண்ண வண்ணமாக ஒட்டப்பட்டிருந்தன
    ////////////////////////?/////////?//?///////////////

    எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை காலை மதுரை சென்றடைந்தோம்

    ஊர்வலம் புறப்படுகிற / வண்டியூர் தெப்ப குளம் மைதானத்திலிருந்து

    நாங்கள் நடந்தே வழியில் உள்ள அனைத்து ஆர்ச்களையும் பார்த்துக்கொண்டே வந்தோம்

    ஒவ்வொரு ஆர்ச்களையும் பார்த்துக் கொண்டு வரும் பொழுது எங்களுக்கு மிகவும் பயங்கரமான கோபம் வந்தது

    அனைத்திலும் கருணாநிதி அவர்களுடைய படங்கள்தான் இருந்தன

    அடுத்து மதுரை முத்து அவர்களுடைய படங்களும் இருந்தன

    ஆனால் அந்த மகா நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆர்ச் இருந்தது

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த. எஸ் எஸ் தென்னரசு அவர்களுக்கு ஒரு ஆர்ச்
    வைத்திருந்தார்கள்

    ஆனால் 1967 இல் இருந்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த எம்ஜிஆர் அவர்களுடைய படம் எங்குமே கிடையாது

    ஒவ்வொரு தேர்தலிலும் எம்ஜிஆர் ரசிகர்கள்திமுகவுக்காக ஓடிஓடி நாங்கள் உழைத்தோம்

    எம்ஜிஆருக்காக தான் திமுகவிற்கு உழைத்தோம்

    1967 ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில்
    பழனி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு நான் தேர்தல் வேலை செய்தேன்

    1971 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது

    பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட புலவர் பழனிச்சாமி அவர்களுக்காகவும் நான் தேர்தல் வேலை செய்தேன்

    எம்ஜிஆர் ரசிகன் ஆகிய நாம் எம்ஜிஆருக்காக நான் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டேன்

    என்னைப்போல் தமிழ் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான , கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் காகத்தான் திமுகவுக்கு ஓட்டு கேட்டார்கள்

    அப்படிப்பட்ட எம்ஜிஆர் அவர்களுக்கு எந்த இடத்திலும் ஆர்ச் கிடையாது

    மகாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று நாங்கள் முடிவு எடுத்தோம்

    மறுநாள் எம்ஜிஆர் மகாநாட்டில் பேசுகிறார் அந்த நேரத்தில் மகாநாட்டிற்கு சென்று எம்ஜிஆரின் பேச்சைக் கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்

    ஆகவே நாங்கள் மகாநாட்டிற்கு செல்லாமல்
    தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள. நான் ஏன் பிறந்தேன் என்ற சினிமாவை பார்க்கலாம் என்று நாங்கள் சென்றோம்

    செல்லும் வழியில் ஒரு மாடியின் மீது மதுரை நகர எம்ஜிஆர் மன்றம் என்று ஒரு போர்டு மாட்டி இருந்தது

    நாங்கள் அந்த மாடிக்கு சென்றோம்

    மாடியில் ஒரு சிறிய அறை

    அது இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள்

    அவர்கள் யார் என்று நான் கேட்டேன்

    மதுரை நகர தலைமை எம்ஜிஆர் மன்ற தலைவர் / தங்கம்

    எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த. இளவரசன்

    அவர்களைசுற்றி பயங்கரமான எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டம்

    கூட்டத்தில் வந்திருந்த அந்த எம்ஜிஆர் ரசிகர்கள்

    உட்கார்ந்திருந்த அந்த இரண்டு பேர்களிடமும்

    திட்டம் போட்டு இந்த மகாநாட்டில் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்

    என்று ஆக்ரோசமாக கூறினார்கள்

    அதற்குத் தங்கம் அவர்கள்

    நாளை காலை விமானத்தில் எம்ஜிஆர் அவர்கள் மதுரை வருகிறார்

    பாண்டியன் ஓட்டலில் தங்குகிறார்

    அவரை சந்தித்துஅனைத்து விவரங்களையும் கூறலாம் என்று கூறினார்

    மறுநாள் காலை 11 மணிக்கெல்லாம் நாங்கள் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு சென்று விட்டோம்

    எம்ஜிஆர் அவர்கள் விமானநிலையத்தை விட்டு புறப்பட்டடு விட்டார்

    இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் ஹோட்டல் வந்துவிடுவார் என்று கூறினார்கள்

    நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது கூட்டம் பயங்கரமாக கூடிவிட்டது

    போலீஸார் எங்களை எல்லாம் பாண்டியன் ஓட்டல் முன் நிற்க விடாமல் அப்புறப் படுத்துகிறார்கள்

    ஏன் எம்ஜிஆர் வருவதற்கு இவ்வளவு காலதாமதம்

    அதற்கு என்ன காரணம் என்று பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது

    மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் கம்பெனி

    ,தீ விபத்தில் கருகி விட்டது

    அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சென்று

    அங்குள்ள சர்க்கஸ் கம்பெனி தொழிலாளர்களைஎல்லாம் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு

    அவர்களுக்கு10 பத்தாயிரம் ரூபாய் நிதி கொடுத்து விட்டு பிறகு பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தார்

    பிறகு எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த

    தங்கம்/ இளவரசன் / ஸ்ரீவில்லிப்புத்தூர் தாமரைக்கனி

    இவர்களை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தார்கள்

    மாலையில் எம்ஜிஆர் பேசுகிறார் என்ற காரணத்திற்காக நாங்கள் 2மணிக்கு

    டிக்கெட் வாங்கிக்கொண்டு மகா நாட்டிற்குள் சென்றோம்

    நாங்கள் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அவர்கள் பேச ஆரம்பித்தார்

    எம்ஜிஆர் அவர்கள் பேசி முடிந்ததும் நாங்கள் எல்லாம் மகாநாட்டு கொட்டகை விட்டு வெளியேறினோம்

    மகாநாட்டில் இருந்த பெரும்பாலான மக்கள் வெளியேறினார்கள்

    உடனே மதுரை நகர கவுன்சிலர /
    M.R. கனேசன் என்பவர்

    எல்லோரும் அமைதியாக அமருங்கள் கட்சித் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேசுவார்கள் உட்காருங்கள் உட்காருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார்

    மகா நாட்டிலிருந்த முக்கால்வாசி மக்கள் வெளியேறி விட்டார்கள்

    நாங்கள் மகாநாட்டு கொட்டகைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும்போது மைக்கில் ஒரே சலசலப்பு

    பேசுவதற்கு எழுந்த முதலமைச்சர்கருணாநிதி அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார்

    இப்படி எம்ஜிஆருக்காக எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டோம்

    அடுத்து சில மாதங்களில் எம்ஜிஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்

    /////////////////////////////////////////////////////

    எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தார்

    நாங்களெல்லாம் எம்ஜிஆருக்கு பின்னால் வந்து அண்ணா திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டோம்

    அண்ணா திமுக மேடையில் நாங்களெல்லாம் கருணாநிதி அவர்களைப் பற்றி கூறிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா

    கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்ஜிஆர் அவர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று கூறினோம்

    எம்ஜிஆர் உடைய படத்தை இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி என்று கூறினோம்

    அண்ணா திமுக தொண்டர்கள் அடிபட்டு உதைபட்டு உயிரைக்கொடுத்து இந்த கட்சியைவளர்த்தார்கள்

    1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்

    1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்

    1983ஆம் ஆண்டு அண்ணா திமுகவுக்கு ஜெயலலிதா வந்தார்

    ஜெயலலிதா சினிமாமார்க்கெட் இழந்து ஏழு ஆண்டுகள் வீட்டில் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்

    1984 ஆண்டு எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு

    எம் ஜிஆர் மரணம் அடையும் வரை

    கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருந்தார்
    தனியாக டெல்லி சென்று ராஜீவ் காந்தியை சந்தித்து எம்ஜிஆருக்கு உடல் நலம் சரியில்லை

    இந்திய அரசியல் சட்டப்படி உடல்நலம் இல்லாதவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியாது

    ஆகவே நீங்கள் எம்ஜிஆரை ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்

    என்று ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே வந்தார்

    எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு

    கட்சியை இரண்டாக உடைத்தார் ஜெயலலிதா

    ஜானகி ஆட்சியைக் கவிழ்த்தார்

    ஜானகி அணியும் ஜே அணியும் போட்டியிட்டார்கள்

    கருணாநிதி முதலமைச்சர் ஆனார்

    எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை கருணாநிதி முதலமைச்சராக வர முடியவில்லை

    ஜானகி அம்மையார் கட்சியை ஒன்றுபடுத்தி ஜெயலலிதாவிடம் கட்சியின் இரட்டை இலையை ஒப்படைத்தார்

    1981 ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகாலத்திலிருந்து ஜெயலலிதா மரணம் அடையும் வரை எம்ஜிஆர் பெயரை சொல்ல விடாமல் எம்ஜிஆர் படங்களை
    இருட்டடிப்பு செய்து ஆட்சி நடத்தினார்

    கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் படத்தை இருட்டடிப்பு செய்து ஆட்சி நடத்துகிறார் என்ற காரணத்திற்காக கருணாநிதி மேல் பயங்கர கோபம் எங்களுக்கு வந்தது

    அதே காரியத்தை தான் ஜெய லலிதாவும் செய்தார் கருணாநிதி என்ன எம்ஜிஆருக்கு கெடுதல் செய்தாரோ

    அதை விட லட்சம் மடங்கு ஜெயலலிதா எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார்

    கருணாநிதியின் ஊழலை எதிர்த்து தான் அண்ணா திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டது

    1972 ஆண்டு
    மு க முத்து உங்கப்பனுக்கு ஏது சொத்து என்று நாங்கள் கோஷம் போட்டோம்

    இப்பொழுது திமுகவினர்

    அண்ணா திமுக தொண்டர்களை பார்த்து

    ஒங்கஅம்மாவுக்கு ஏதுடா ஒன்றரை லட்சம் கோடி சொத்து என்று

    கேலி செய்கிறார்கள் கிண்டல் செய்கிறார்கள் நக்கல் செய்கிறார்கள் நையாண்டி செய்கிறார்கள்

    எங்கள் கலைஞர் அவர்களைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் குற்றவாளி என்று கூறினீர்கள்

    உங்க அம்மா பெங்களூர் கமிஷன்கோர்ட் குற்றவாளி என்று கிண்டல் செய்கிறார்கள்

    எங்களைப் போன்ற பழைய அண்ணா திமுகவினர் தலைகுனிந்து செல்கிறோம்

    ஜெயலலிதா ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து அண்ணா திமுக வைஊழல் கட்சி என்ற பெயரை உருவாக்கி விட்டார்

    கருணாநிதி எம்ஜிஆர் க்குதுரோகம் செய்தால் எம்ஜிஆர் ரசிகர்கள்

    கருணாநிதியை
    தீயசக்தி கருணாநிதி என்கிறார்கள்

    கருணாநிதியை விட. லட்சம் மடங்கு எம்ஜிஆருக்கு கெடுதல் செய்த

    ஜெயலலிதாவை நல்ல சக்தி என் கிறார்கள்

    பழைய எம்ஜிஆர் ரசிகர்கள்

    இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன

    இந்தப் பதிவைடைப்செய்து என் விரல்கள் எல்லாம் வலி எடுத்து விட்டன

    அடுத்து நான் இன்னும் பல பழைய விஷயங்களை உங்களிடம் பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்......... (இது ஒரு ரசிக சகோதரரின் சொந்த கருத்து)... Thanks.........

  10. #2709
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    27/02/20* * *- கே டிவி* *- பிற்பகல் 1* மணி - நான் ஆணையிட்டால்*

    29/02/20* * * * கே. டிவி. - பிற்பகல்* 1 மணி* - விவசாயி*

    02/03/20* * * * *கே. டிவி -பிற்பகல் 1 மணி* - மகாதேவி*

    05/03/20* * * * *கே. டிவி -பிற்பகல் 1 மணி - ராமன் தேடிய சீதை*

    07/03/20* * * * *கே டிவி. -பிற்பகல் 1 மணி -தாய் சொல்லை தட்டாதே

  11. #2710
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னக ஜேம்ஸ் பாண்ட்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மதுரை ,தேனீ, பழனி நகரங்களுக்கு வெற்றி விஜயம் .
    ----------------------------------------------------------------------------------------------------------------------

    நாளை முதல் (28/02/20)* மதுரை வெற்றி, தேனீ -வெற்றி, பழனி சந்தானகிருஷ்ணா*அரங்குகளில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த*ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் வசூல் வேட்டை .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் குமார் , நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •