Page 266 of 402 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2651
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துக்ளக் பத்திரிகையில் ஒரு பேட்டியில் எம்ஜிஆரையும் ரஜினியையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டவருக்கு அளித்த பதில்:---

  "எம்ஜிஆரையும், ரஜினியையும் ஒரே தராசில் வைத்து நாம் எடை போட முடியாது. எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் இருந்து, பின்னர் திமுகவிற்கு வந்து எம்.எல்.சி., எம்.எல்.ஏ. போன்ற பதவிகளை வகித்து, ஒரு பலமான அரசியல் பின்பலத்தோடு தனிக்கட்சி தொடங்கினார்.

  மேலும் அவர் ஆரம்ப காலம் தொட்டே ஏழைகளுக்கு உதவுவது, மாணவர்களைப் படிக்க வைப்பது என்று தாராள மனதோடு ஏராளமான உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

  தன் திரைப்படங்களில் எந்த தவறான நடத்தையுமில்லாத ஒரு தூயவனாக, மக்கள் போராளியாகத் தன்னை சித்தரித்து தனது இமேஜை வளர்த்துக் கொண்டார்.இவையெல்லாம் சேர்ந்துதான் எம்ஜிஆருக்கு வெற்றியைக் கொடுத்தன.
  ரஜினிக்கு இத்தகைய பின்புலம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."......... Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2652
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like
  தென்னக ஜேம்ஸ் பாண்ட் ராமு மதுரையில் வெற்றி விஜயம்*வரும் வெள்ளி முதல் (21/02/20) வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த*ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் புதிய தொழில்நுட்பம்* மற்றும்*முற்றிலும் புதிய பரிமாணத்தில் மதுரை வெற்றி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில்* வெளியீடு .

  தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

 4. #2653
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like
  திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் வெள்ளி /சனி/ஞாயிறு (14/02/20* முதல்*16/02/20 வரையில் ) தீனசரி இரவு காட்சி மட்டும் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " நாளை நமதே " திரையிடப்படுகிறது .

  தகவல் உதவி : திருப்பூர் நண்பர் திரு. நடராசன் .

 5. #2654
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  *மனிதநேயப் பண்பாளர் சைதை சா. துரைசாமி அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட தீராத அன்பால், அவரின் கொள்ளைப் பற்றுடனே தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்...*

  *பின், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர் என உயர்ந்த பொருப்புகளில் வகித்தார்...*

  *மக்கள் சேவகர் சைதை சா. துரைசாமி அவர்கள், 2005-ஆம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை மூலமாக இலவச ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளைத் துவங்கி, இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்களை அரசுப் பணிகளுக்கு கொண்டு சென்றுள்ளார்...*

  *புற்றீசல்கள் போலத் தனியார் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் இன்று உருவெடுத்துள்ள நிலையில், தன் சொந்தப் பணத்தை செலவு செய்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்...*

  *மேலும், கண்ணை இமை காப்பது போல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழைக் காத்து வரும் திரு.சைதையார் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...*

  *தாங்கள் வாழ வேண்டும் இவ்வையகத்தில் பல்லாண்டு ...*

  *- அன்புடன் எம்ஜிஆர் ஸ்ரீநாத்*......... Thanks .

 6. #2655
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like
  மக்கள் திலகத்தின்

  சீடர்களில் முதன்மையானவர்

  சென்னை பெருநகர முன்னாள் மேயர்

  மனிதநேயம் அறக்கட்டளையின்

  நிறுவனர் போற்றுதற்குரிய அண்ணன்

  திரு சைதை துரைசாமி அய்யா

  அவர்களுக்கு இனிய பிறந்த நாள்

  நல்வாழ்த்துக்களை நமது மக்கள் திலகம்

  திரியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

  இப்படிக்கு


  எஸ் ரவிச்சந்திரன்

 7. #2656
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like
  தினத்தந்தி -14/02/20
  ------------------------------------
  என்றென்றும் கண்ணதாசன்* *-* எளிய இலக்கியம்*
  ------------------------------------------------------------------------------------
  தேவர் பிலிம்ஸ் தயாரித்த " தாய் சொல்லை தட்டாதே " \படத்தில் ஒரு காட்சி .எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை காதலிப்பார் .* எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு வரும் சரோஜாதேவியின் அப்பா எம்.ஆர். ராதாவை பார்த்ததும் எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பாவுக்கு அதிர்ச்சி .

  தன் கணவரை கொலை செய்தவர் எம்.ஆர். ராதா என்று சொல்லி, திருமணத்திற்கு தடை விதித்து விடுகிறார்* எம்.ஜி.ஆரின் தாய்* அதே போல் , இந்த மாப்பிள்ளை உனக்கு வேண்டாம் என்று சரோஜாதேவிக்கு தடை போடுகிறார் எம்.ஆர். ராதா .

  காதலர்கள் இடையே பிரிவு ஏற்படுகிறது . அந்த ஏக்கத்தில் இரவில், தனிமையில் சரோஜாதேவி பாடுகிறார் .* *இதுதான் பாடலுக்கான சூழல் .இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். அவரது இசை என்றால்* முதலில் பாடல் எழுதப்பட்டு , விடும் .* பின்னர் அதற்கு அவர் இசை அமைப்பார் .

  பாடலுக்கான சூழல் , கண்ணதாசன் அவர்களிடம் சொல்லப்பட்ட பிறகு கவிஞர் சிந்தனை வசப்படுகிறார் ,* பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதல், ஊடல், பிரிவு பற்றிய கவிதைகள் அவர் நினைவில் வந்து போகின்றன .
  அப்போது கவிஞர் பல வருடங்களுக்கு முன் படித்த குறுந்தொகை பாடலும்,*தாயுமானவரின் பாடலும் அவரின் நினைவிற்கு வருகின்றன .**

  தாயுமானவர் ஒரு பாடலில்* மண் உறங்கும் , விண் உறங்கும் மறறுள* எல்லாம் உறங்கும் , கண் உறங்கேன், எமிறைவர் காதலால் பைங்கிளியே ,மண்ணில் வாழும் மக்களும், விண்ணில்* வாழும் தேவரும் உறங்குகின்றனர் .அவர்களுடன் இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும் உறங்குகின்றன .**என் இறைவன் மீது நான் கொண்ட காதலால் என்னால் உறங்க முடியவில்லை என்று தாயுமானவர் சொன்னதாக பாடல் அமைகிறது .

  அந்த கருத்தினை உள்ளடக்கி "தாய் சொல்லை தட்டாதே " படத்தில் இடம் பெற்ற*இந்த பாடலுக்கான வரிகளை அமைக்கிறார் .

  பூ உறங்குது, பொழுதும் உறங்குது,நீ உறங்கவில்லை நிலவே,கான் உறங்குது, காற்றும் உறங்குது*நான் உறங்கவில்லை .மான் உறங்குது, மயிலும் உறங்குது ,மனம் உறங்கவில்லை .என் வழி உறங்குது, மொழியும் உறங்குது ,*விழி உறங்கவில்லை .தென்றலில் எனது உடல் தேய்ந்தது பாதி ,அது*தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி*திங்கள் நீயும் , பெண்குலமும் ஒருவகை ஜாதி*தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி ?

 8. #2657
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  ��mgr எம்.ஜி.ஆர். ஆட்சி - 1980ல் கலைக்கப்பட்ட நாளாக்கும் இன்று 17.02.1980.��

  அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த #திண்டுக்கல் #பாராளுமன்ற_இடைத்தேர்தலில் #மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

  பின்னர் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. #அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார். இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை.

  ஆனால் 1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ்(இந்திரா காந்தி தலைமை) கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து எம் ஜி ஆர்தலைமையிலான, தமிழகம் உள்ளிட்ட9 மாநில சட்டசபைகளைக் கலைத்தார். உடனே 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்’ என்று அறிக்கை வெளியிட்ட எம்.ஜி.ஆர்., 'யாரும் ஆத்திரப்படாதீர்கள், அடுத்து நம்முடைய ஆட்சிதான்’ என்று சொன்னார்.

  அதையடுத்து நடந்த தேர்தல் பிரசாரத்தில், 'நான் என்ன தவறு செய்தேன், என்னை எதற்காகத் தண்டித்தீர்கள்? நான் உங்களுக்காகத்தானே உழைத்தேன்’ என்று கண்ணீர் விடுமளவுக்கு பேசினார். அப்போது தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் மழை விடாது பெய்துகொண்டு இருந்தது. பல ஊர்களில் வெள்ளம். எம்.ஜி.ஆருக்காகக் கொட்டும் மழையில் மக்கள் காத்திருந்தார்கள். 'எம்.ஜி.ஆருக்காக வானமும் அழுதது’ என்று அப்போது அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் முடிவில் இது எதிரொலித்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 129 இடங்களைக் கைப்பற்றி எம்.ஜி.ஆர். மீண்டும் வென்றார்.......சரித்திரம் படைத்த சகாப்தம் சாதனை கண்டார்.........

 9. #2658
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  இன்றைய (ஏன் பல காலமாகவே) அரசியல் தலைவர்கள் தரக்குறைவாக (எல்லாக் கட்சியினருமே) பேசி வருகிறார்கள். எனக்குத் தெரிந்து பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஆகிய இரு தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பழித்ததில்லை. தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதில்லை.. எம் ஜி ஆர் தனது கட்சி பிரமுகர் பயன்படுத்திய சொல்லுக்காக தானே மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

  பத்திரிகையாளர் பா. கிருஷ்ணன்......... Thanks...

 10. #2659
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  சார்.... காமராஜர் கூட நம் புரட்சித் தலைவரை, 1964ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் , வேட்டைக்காரன் வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும் தனிக்கட்சி தொடங்கிய நம் மக்கள் திலகத்தின் செல்வாக்கை கண்டு பொறாமைப் பட்டு, எதிரும் புதிருமாக இருந்த இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கருத்து முரண்பட்டிருந்தும்,1974ல் பாண்டிச்சேரி சட்ட மன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோல்வி கண்டார். அந்த பாண்டிச்சேரி தேர்தலிலும் நம் பொன்மனச் செம்மலை கடுமையாக விமர்சித்தவர்தான் காமராஜர். அரசியலில் நாகரீகப் பண்புகளை கடைப்பிடித்த ஒழுக்க சீலர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் சமதர்ம சமுதாயக் காவலன் எம்.ஜி.ஆர். அவர்களும் மட்டுமே ! அன்புடன் : சௌ.செல்வகுமார்......... Thanks.........

 11. #2660
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like
  சேலம் அம்மாபேட்டை ஜோதி அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " திங்கள் முதல் (17/02/20) தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

  தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.சுப்பிரமணி

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •