Page 26 of 402 FirstFirst ... 1624252627283676126 ... LastLast
Results 251 to 260 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #251
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தப் பாடல் காட்சியில் ( புதிய பூமி... "சின்னவளே, முகம் சிவந்தவளே" பாடல் காட்சி ) டிஎம்எஸ் ஐயா அவர்களும் சுசீலாம்மா அவர்களும் மிகவும் சிறப்பாக பாடி உள்ளனர்... புரட்சித் தலைவரும் பாடல் முழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார் சிரித்த முகத்துடன் பாடலுக்கு வாய் அசைப்பது என்பது பொதுவாகவே ...புரட்சித்தலைவர் மட்டும்தான் அனைத்து படங்களிலும் செய்து காட்டி இருப்பார் மேலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த படத்தில் சிறந்த நடனமாடி இருப்பார். ....நன்றி.
    குருராஜன். டிஎம்எஸ் பக்தர்தளம்��......... Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #252
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புகழ் எனும் மாயையே உணர்ந்த ஒரே தெய்வம். எம் .ஜி.ஆர் .,மட்டுமே அது எந்த வடிவில் நடமாடும் என்பதை நன்கு அறிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்ஜிஆர். அதை உணராத சிவாஜி ரசிகர்கள் அன்றும் சரி இன்றும் சரி எம்ஜிஆரை தோற்கடித்து விடலாம் என்று நினைத்து மாயையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். உண்மை தலைவனை தோற்கடிக்க யாராலும் முடியாது. உண்மையான வழியில் தலைவர் எம்ஜிஆர் சொன்ன வழியில் அவருக்கு புகழ் சேர்ப்பவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள். இப்படி பொய்யும் புரட்டும் துணையாய்க் கொண்டு பிழைப்பவர் எல்லாம் மூலைக்கு தான் போக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்ததால் புரட்சித் தலைவர் திரைப்படங்களை சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்காமல் சேட்டை செய்தது. கணேசன் காங்கிரஸ் இருந்ததால் கணேசன் திரைப்படத்தை மற்றும் நல்லதென்று தேர்ந்தெடுத்தது. அதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கணேசன் திரைப்படத்தை மட்டும் எடுக்காமல் வேண்டுமென்றே அதிக நாட்கள் ஓட்டினார்கள். ஆனால் பார்த்த மக்கள் தொகையும் மிக கம்மி தான் ஆனால் அன்றும் அதிகம் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாத்தியார் எம்ஜிஆர் திரைப்படங்களை மட்டும் வேண்டுமென்றே சில திரையரங்குகள் கொஞ்ச நாட்களிலேயே எடுத்துவிட்டன. ஆனால் , திரையரங்கில் வாத்தியார் படத்தை பார்த்த மக்கள் தொகையும் வசூலும் முதல் இடத்தில் நிற்கும். இதிலிருந்து அவர் உண்மையான அன்பு வசூல் சக்ரவர்த்தி மக்கள் நடிகர் என்பது தெரியும். கொள்கையோடு இருந்து மக்களை வாழ்வித்த தால் மக்களும் அவர் கொள்கைப்படி என்றும் நடந்து வருகிறார்கள். ஆனால் கணேசன் ரசிகர்கள் அப்படி இல்லை காரணம் அவர்கள் தலைவனே படங்களில் மோசமான காட்சிகள் நடித்து ரசிகர்களை கெடுத்து விட்ட காரணத்தால். மாயையில் சிக்கி தவிக்கும் கணேசன் ரசிகர்களுக்கு தன் தலைவன் திரையில் நடித்த காண்பித்த "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்ற தத்துவத்தை உணராத திலிருந்து தெரிகிறதா கொள்கையற்ற சிவாஜி புகழ் நிலையற்றது. உண்மையான கொள்கையுள்ள எம்ஜிஆர் புகழ் என்றும் நிலையானது. வாழ்க எம். ஜி .ஆர் .,புகழ்!.............. Thanks wa.,

  4. #253
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பழனி- சாமி DTS தினசரி 4 காட்சிகள் 28.06.2019
    வெள்ளிமுதல் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் இருவேடத்தில் தூள்கிளப்பிய வெள்ளிவிழாக்காவியம் "எங்கவீட்டுப்பிள்ளை " வெற்றி. வெளியிடு ............மதுரை எஸ்.குமார்........ Thanks wa.,

  5. #254
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியைப் பற்றி எழுதி நம் நேரத்தை வீண்டிக்க வேண்டாமே, யாருமே சிவாஜியை நினைப்பதில்லை ....
    தயவுசெய்து எவனோ எழுதினான் என்று நாம் எழுதி பிரபலப்படுத்தவேண்டாமே, யார் வசூல் சக்கரவர்த்தி, யாரை மக்கள்விரும்பி நேசித்தார்கள், யார் இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.....என்பது தமிழ் உள்ளவரை தெரியும், மக்களால் மறந்து விட்ட நபரை ஞாபகப்படுத்த வேண்டாமே........ 22 வயது வாலிபரின் கருத்தை பதிவிட்ட மதுரை திரு S. குமார் அவர்களுக்கு நன்றி. ....... Thanks wa.,

  6. #255
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் பள்ளி பருவ
    நினைவலைகள்
    சிறிய வயது முதல் நடந்த
    வாழ்க்கை பயண
    போராட்டத்தில் தடம் பதித்து
    எந்த ஆதரவும் பின்புலம் இல்லாமல்
    ஒரு மனிதன்
    உச்சம் தொட முடியுமா

    படித்து பாருங்கள்

    எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி பரவசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில்

    பல ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

    என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.

    இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917 ரேவதி நட்சத்திரத்தில்.

    எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.

    முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்கரபாணி.

    பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.

    கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.

    பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த 'லவகுசா' என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

    தன்னையும் சேர்த்துக் கொண்டால்தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

    ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.

    நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.

    இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

    சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

    அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜீ.ஆர்., சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.

    ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர்., தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.

    ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

    கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு 'காளி' என்.ரத்தினம் ஆவார்.சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.

    இந்த சமயத்தில் தான் 'சதிலீலாவதி' படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.

    அதைத் தொடர்ந்து டி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த 'இரு சகோதரர்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி, சக்கரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    'saalivaganan' படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.

    அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். 'ராஜகுமாரி' என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.

    குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம்" என்றார்.
    செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.

    'ராஜகுமாரி' படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.

    எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தது

    எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ளபள்ளிபழையஇடத்திலிருந்துசற்றுஇடம்உபெயர்ந்திருக் கிறது.

    அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் 'நாகேஸ்வரம் வடக்கு வீதி' என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.

    கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.

    ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானயையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

    எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.

    கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.
    பள்ளியில் நடந்த 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.

    இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.
    பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

    எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.
    எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார்.

    30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.

    எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.
    நன்றி வள்ளியம்மை
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����........... Thanks wa.,

  7. #256
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகா DTS., நாளை முதல் (28/06/2019) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ",இதய வீணை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது..........மறு வெளியீடு சாதனை என்றால் இதுதான் சாதனையோ... சாதனை......... Thanks wa.,

  8. #257
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர், மக்கள் திலகம் அவர்களின் நெரு ங்கிய நண்பர் ஐயா சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் பிறந்த நாள் இன்று......28-06 தலைவரை வைத்து சினிமாப்படம் எடுக்க தயங்கியிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பணக்கார தயாரிப்பாளர்களுக்கு, எங்கள் எம். ஜி. ஆர். தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்து காட்டிய பெருமை, ஐயா சின்னப்பா தேவர் அவர்களுக்கு உண்டு. ....தலைவருக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களை வணங்கி ஆசி பெற்றுக்கொள்வோம்.
    பாஸ்கரன்,
    கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் ......அறக்கட்டளை.......... Thanks wa.,

  9. #258
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின்
    சமூக கருத்துள்ள திரைப்பயணம்
    எங்கே எப்படி எப்போது
    ஆரம்பம் ஆனது
    இந்த பதிவில் அதற்கான
    விடையை காணலாம்

    படித்து பாருங்கள்

    "திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

    ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம்.

    வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

    இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

    இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல்

    "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து பல ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

    பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

    "திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

    சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

    "சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோதவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

    எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

    தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

    "திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
    அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது

    " திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

    மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.

    "உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."

    அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு

    தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது.

    அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

    பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

    எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    "பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

    "விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.
    "அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு.

    அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

    படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

    மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.

    அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது
    நன்றி வள்ளியம்மை
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����.......... Thanks wa.,

  10. #259
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாவம்... மாற்று முகாம் ரசிக பிள்ளைகள் போன வார விளம்பரத்தில் உள்ள பெயர்களை அப்படியே போட்டுள்ளார்கள் போலிருக்கிறது. எப்பவும் செய்ற மாதிரியே இதுல தகிடுத்தனம். அப்புறம் வேற எப்படி செய்வாங்க?........ Thanks wa.,

  11. #260
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீ ஆண்டது
    அரியணைக் கதிரையல்ல
    மக்களின்
    அன்பு மனங்களென்பேன்

    காலன் உனைக்
    கவர்ந்து சென்று
    காலங்கள் பல
    கடந்தாலும்
    காலத்தால் அழியாத
    கலங்கரை விளக்காய்
    அரசியல் உலகிற்கு
    ஆணிவேராகினாய்

    மன்னாதி மன்னனாய்
    உலகம் சுறும் வாலிபனாய்
    உழைக்கும் கரங்களோடு
    பட்டிக்காட்டு பொன்னையா
    மாட்டுக்கார வேலனாக
    மக்கள் மனங்களை உழுதாயே !

    மதுரை வீரனாய் நீயோ
    நீதிக்குத் தலைவணங்கும்
    எங்கள் வீட்டுப் பிள்ளையென
    தர்மம் தலைகாக்கும் என
    கலங்கரை விளக்கானாய்

    பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
    தனிப்பிறவி நீ என்வாழ்வில்
    ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
    புதுமைப் பித்தன் நீ
    தாய்சொல்லைத் தட்டாமல்
    தாய்க்குப்பின் தாரம் என
    நல்லவன் வாழ்வான் என்றே
    ஆயிரத்தில் ஒருவனானாய்

    தமிழர்களின் காவல்காரன்
    காத்திருந்தாய் விவசாயிகளை
    ஒருதாய் மக்கள் நாமென்று
    சங்கே முழங்கென்றாய்
    ஊருக்கு உழைப்பவனே
    நம்நாடு என் இதயவீணை
    பாடிய உன் உள்ளமே
    உன் மக்கள் எப்போதும்
    குடியிருந்த கோயில்..........�� �� �� ... Thanks wa.,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •