Page 258 of 402 FirstFirst ... 158208248256257258259260268308358 ... LastLast
Results 2,571 to 2,580 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2571
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எந்தவிதமான வேலைகளையோ அல்லது வியாபாரங்களையோ யாரும் செய்யலாம் . கேலி, கிண்டல் எதுவும் இருக்கக்கூடாது . இதற்க்கு எம்ஜிஆர் சொல்லும் அருமையான விளக்கம் .....

    " ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கணுமே தவிர

    அவன் விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவே கூடாது "
    மதுரை கண்ணன்!........... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2572
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இறைவனின் #சித்தம்

    திருப்பதி அருகில் கைலாசநாதர் கோனை என்னும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி.

    அங்கு ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள்திலகத்துடன் எல்லோரும் உணவுக்காக உட்கார்ந்திருந்தனர்...

    சற்றுத் தள்ளி, அழுக்கு உடை, தாடி மீசை கலைந்த கேசத்துடன் கூடிய கோவணம் கட்டிய ஆண்டி ஒருவர் மக்கள்திலகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்...

    நான் ரொம்ப நேரமா கவனித்துக்கொண்டேயிருக்கேன். அந்த மனிதர் என்னையே பாத்துட்டு இருக்காரு...ஏதாவது தேவையா இருக்கும்னு நெனைக்கறேன்...என்ன வேணும்னு கேளுங்க அவருக்கு? அப்படின்னாரு மக்கள்திலகம்... (பாருங்களேன்...எப்பவுமே கொடுக்கணுங்கற எண்ணம் தான் வாத்தியாருக்கு)

    போய்க்கேட்டபோது, 'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லி...மூர்த்தியின் (டைரக்டர் சேதுமாதவனின் தம்பி) பாக்கெட்டில் கைவிட்டு பால்பாயிண்ட் பேனாவை எடுத்தார்...

    பிறகு கீழே கிடந்த ஒரு பிரவுன் பேப்பர் துண்டை எடுத்து விறுவிறுவென ஏதோ எழுதி, 'அந்த மனிதனிடம் கொடு' என்று எம்ஜிஆரைச் சுட்டிக் காண்பிக்கிறார் அந்த ஆண்டி...

    மூர்த்தியும் கொடுக்க, அதைப் படித்து லேசான வியப்புடன் புன்முறுவல் பூக்கிறார்...

    துண்டுப்பேப்பரில் எழுதியிருந்த அந்த வாசகம்...

    "#நீதான் #நாளை #இந்நாட்டுக்கு #முதல்வர்...இது இறைவனின் சித்தம்...உன் முடிவு மிகச் சிறப்பு..."

    இச்சம்பவத்திற்குப் பிறகு எவ்வளவு தேடியும் அந்த ஆண்டியைக் காணவில்லை...
    மதுரை கண்ணன்!......... Thanks.........

  4. #2573
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வாரம் ராஜ் டிவியில் மக்கள் திலகத்தின் திரைப்பட கொண்டாட்டம் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு
    27-01-2020 திங்கள் - தேடி வந்த மாப்பிள்ளை
    28 - 01-2020 செவ்வாய் - நாடோடி
    29-01-2020 புதன் - மதுரை வீரன்
    30-01-2020 வியாழன் -பணக்கார குடும்பம்
    31-01-2020 வெள்ளி - காலத்தை வென்றவன்
    ஆகிய திரைப்படங்களை நமது Uக்தர்கள் கண்டு மகிழவும் - தகவல் மதுரை ராமகிருஷ்ணன்... Thanks.........

  5. #2574
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் கலையுலக "அட்சய பாத்திரம்" புரட்சி நடிகர் எப்பொழுதுமே " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் காப்பி திருச்சி ஸ்ரீரங்கம்- ரெங்கராஜா dts., தினசரி 4 காட்சிகள் காட்சி தருகிறார்... Thanks.........

  6. #2575
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக "கற்பக விருட்சம்" பொன்மனச்செம்மல் அளிக்கும் தித்திக்கும் பொன்னோவிய காவியமாம் "எங்க வீட்டு பிள்ளை" டிஜிட்டல் பிரிண்ட் திருச்சி - அருணா dts தினசரி 3 காட்சிகள் வருகை தருகின்றார்கள்......... Thanks.........

  7. #2576
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
    நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு
    உருவம் பொறித்த சிறப்பு நாணயம் மத்திய அரசு வெளியிடு

    மறைந்த தமிழக முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளை மத்திய அரசு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது.

    தூத்துக்குடி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு கடந்த சில ஆண்டுகளாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தது.

    பாரத ரத்னா எம்.ஜி' ஆர் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை மத்திய அரசு கெளரவித்தது.
    அது போல சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டமாநில எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் முதல்வர் எடப்பாடி ேக.பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது.
    பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் மட்டும் மத்திய அரசு வெளியிடவில்லை. தொடர்ந்து எம் .ஜி.ஆர் மன்றங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்ததால் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் நாணயம் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

    மத்திய அரசு வெளியிடும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் விலை ரூபாய் 3055 ஆகும். இந்த நாணயத்தில் பல்வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் பெற கடைசி நாள் 29.2.2020 ஆகும். தேவைக்கு ஏற்ப தான் நாணயம் வெளியீடு டப்படுகிறது.இந்த நாணயம் பெற இந்திய அரசு மின்ட் மும்பை முகவரிக்கு அனுப்பலாம் அல்லது Security printing and minting corporation of India Ltd
    spmcil.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டு பணம் அனுப்பலாம்.

    தூத்துக்குடியில் பாரத ரத்னா எம் ஜி ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு அமைப்பாளர் எஸ்.மோகன் தலைமையில் 25 பேர் சிறப்பு நாணயம் பெற பணம் செலுத்தியுள்ளார்கள்.......... Thanks.........

  8. #2577
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குடியரசு தினத்தன்று (26/01/20///0 காலை 10 மணியளவில்* சென்னை எம்.எம்.பிரிவியூ அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "நாடோடி மன்னன் " பக்தர்கள் /ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி நடைபெற்றது . திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அரங்கம் நிறைந்தது . இடைவேளையில் ஸ்னாக்ஸ்* தேனீர் , மற்றும் , படம் முடிந்ததும் வந்திருந்த பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டது .இடைவேளையில் திரு.க.செல்வகுமார்,வேதாரண்யம் (நாகை மாவட்டம் ) என்பவர் காலத்தை வென்றவன் , காவியமானவன் என்கிற கவிதைநயம் படைத்த நூலை வெளியிடும்* சம்பவம் நடைபெற்றது .* நிகழ்ச்சி ஏற்பாடு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் .



    கடந்த ஞாயிறு (26/01/20) அன்று சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் பிற்பகல் 3 மணிக்கு மேல்** மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனிதநேய 103 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படம் மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது .* பிரபல பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா , சினிமா உடை அலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , நடிகை.ரஜினி நிவேதா ,மற்றும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர் .பின்னர் அரங்க வாயிலில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனர்கள், கட் அவுட் களுக்கு சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும்,பாலாபிஷேகமும்* நடைபெற்றன


    திரு.துரை கருணா அனைவரையும் வரவேற்று , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு* புகழ்மாலை சூட்டினார் .* பின்னர் .* *மாலை 4 மணிக்கு*ராஜ் டிவி புகழ் திரு.ராஜா அவர்களின் இசை கானத்தில்* கீழ்கண்ட பாடல்கள்*இசைக்கப்பட்டன .


    1. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* -தெய்வத்தாய்*
    2. நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*
    3.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*
    4.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*
    5.பாட்டு வரும்* - நான் ஆணையிட்டால்*
    6.தங்க பதக்கத்தின் மேலே -எங்கள் தங்கம்*
    7.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன் -நான் ஆணையிட்டால்*
    8.கட்டோடு குழலாட - பெரிய இடத்து பெண்*
    9.மெல்ல போ மெல்ல போ - காவல்காரன்*
    10என்ன உறவோ, என்ன பிரிவோ - கலங்கரை விளக்கம்*
    11.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*
    12.இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி*
    13.என்னை விட்டால் யாருமில்லை -நாளை நமதே*
    14.தரைமேல் பிறக்க வைத்தான் - படகோட்டி*
    15..கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*
    16.பாடும்போது நான் தென்றல் காற்று -நேற்று இன்று நாளை*
    17.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*
    18.அன்பே வா - அன்பே வா ...
    .19.ஆடலுடன் பாடலை கேட்டு -குடியிருந்த கோயில்*

    20.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு*
    21.கட்டி தங்கம் வெட்டியெடுத்து - தாயை காத்த தனயன்*
    22.தரைமேல் பிறக்க வைத்தான் -படகோட்டி (2 வது முறை )
    23.புதிய வானம், புதிய பூமி* - அன்பே வா
    24.உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்*


    இடையில் மாலை 6 மணியளவில் அனைவருக்கும் சிற்றுண்டி, தேனீர்* *வழங்கப்பட்டது .**

    சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி,அவர்கள் மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டி பேசினார் .தலைவரின் திரைப்பட சமுதாய, சமூக நல கருத்துக்கள், பாடல்கள், வசனங்கள்*வருங்கால சந்ததியினர், இளைய தலைமுறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், அவர்கள் மனதில் பதியும் வகையிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் சால சிறந்தது . அந்த வகையில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற*அமைப்புகள் தகுந்தபடி உழைத்து , நிகழ்ச்சி வெற்றிபெற பாடுபட வேண்டும்*என்று வேண்டுகோள் விடுத்தார் .

    மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்ததற்கு மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்த மாநில அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் என்கிற வகையில் நன்றி தெரிவித்தார் .**


    நிகழ்ச்சியில் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள், குறிப்பாக வெளியூரில் இருந்து திரு.எம்.கே.ராஜா (ஈரோடு ), திரு.மலரவன் (திண்டுக்கல் ), திரு.வாடியன் பாலன் , (விருதுநகர் ), திரு.செல்வகுமார் (வேதாரண்யம் ),திரு.மனோகர் (மதுரை )திரு.ரோசய்யா (அரக்கோணம் ),திரு.எஸ்.எஸ்.மணி (நெல்லை ) திரு.குணசேகரன் (பெங்களூரு ) மற்றும் பலர் கலந்து கொண்டனர்* அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .. அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் முக்கிய பக்தர்களுக்கும் , முக்கிய விருந்தினர்கள் திரு.சைதை துரைசாமி, திரு.துரை கருணா , திரு.எம்.ஏ. முத்து, நடிகை ரஜினி நிவேதா ஆகியோருக்கும்** பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில்* பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் திரு.பிரதீப் பாலு,(திரு.எம்.ஜி.சக்கரபாணி பேரன் )* .*திரு.முருகு பத்மநாபன் (தலைவர் , பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), திரு.எம்.ஏ..பழனி, (பெங்களூரு ) ஆகியோரும் நிகழ்ச்சியை சிறப்பித்த முக்கிய விருந்தினர்கள்*


    அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகளும் பதிலுக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்தனர் .




    இறுதியில், நன்றி உரையில், திரு.துரை கருணா , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகள், ஏற்பாடுகள் செய்ய காரணமாக திகழ்ந்த உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் . நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார் . இரவு 9மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .
    *
    Last edited by puratchi nadigar mgr; 29th January 2020 at 10:33 PM.

  9. #2578
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை வெள்ளி (31/01/20) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
    Last edited by puratchi nadigar mgr; 1st February 2020 at 04:39 PM.

  10. #2579
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாரம்*
    ---------------------------------------------------------------------------------------
    பேலஸ்சில்* 21/01/20 முதல்* ரிக்ஷாக் காரன் - தினசரி 4 காட்சிகள் -4 நாட்கள்* * *நடைபெற்றது .

    ராமகிருஷ்ணாவில்* 25/01/20 முதல்* உழைக்கும் கரங்கள் - தினசரி 4 காட்சிகள்* 4 நாட்கள் திரையிடப்பட்டது .

    ஸ்ரீரங்கம்* ரெங்கராஜாவில்* 28/01/20* முதல் நினைத்ததை முடிப்பவன் -** தினசரி 4 காட்சிகள்* நடைபெறுகிறது .

    அருணாவில் -29/01/20 முதல் எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3 காட்சிகள்*** *நடைபெறுகிறது . * **


    புதிய படங்களுக்கு போதிய வசூல்/வரவேற்பு* இல்லாததாலும் , கூட்டம் குறைந்ததாலும் இடைப்பட்ட நாட்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் திரையிடப்பட்டு அமோக வசூல் கண்டதாக விநியோகஸ்தர்கள் தகவல் அளித்ததாக திருச்சி நண்பர் திரு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ..

  11. #2580
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கண்டு வார இதழ் -05/02/20
    -----------------------------------------------
    பேசியது போன்றே நடந்தவர்*
    ------------------------------------------------
    1982ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்குஇலவச சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார் .* இந்த சத்துணவு திட்டத்தை அன்னை தெரசா மிகவும் பாராட்டினார் .* இது தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் அன்னை தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார் .
    பெண்களுக்காக தனி பல்கலை கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார் .அதன்படி , 1984ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலை கழகம் உருவானது .அந்த விழாவில் அன்னை தெரசா கலந்து கொண்டார் .அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர் .* தனது தொண்டால் பெண் இனத்துக்கு பெருமை தேடி தந்த அன்னை தெரசாவின் பெயர் பெண்கள் பல்கலை கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக்கு இடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார் .* அன்னை தெரசா அதை கேட்டு நெகிழ்ந்து போனார் . மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி . ஆரை* தழுவிக் கொண்டார் .

    இந்து மதத்தை சார்ந்த எம்.ஜி.ஆர்* கிறிஸ்துவ மதத்தை சார்ந்த அன்னை தெரசா வின் பெயரை பெண்கள் பல்கலை கழகத்துக்கு சூட்டுகிறார் .முஸ்லீம் மதத்தை சார்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் .மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது ,

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நாகப்பட்டினம் சட்ட பேரவை தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா.* அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது .கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார் . நான் கைலி கட்டாத முஸ்லீம் .* சிலுவை அணியாத கிறிஸ்துவன் .திருநீறு அணியாத இந்து .என்று . மக்களின் கரவொலி இடியொலியாய்**முழங்கியது .* மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.*

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •