Page 249 of 402 FirstFirst ... 149199239247248249250251259299349 ... LastLast
Results 2,481 to 2,490 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2481
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர்* எம்.ஜி.ஆர்.*103 வது* பிறந்த நாளை முன்னிட்டு*
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பு*
    ----------------------------------------------------------------------------------------------------------------------------


    13/01/20* *ராஜ் டிவி* - அடிமைப்பெண்* -பிற்பகல் 1.30 மணி*

    14/01/20* -ராஜ் டிவி* *- பெரிய இடத்து பெண்* * பிற்பகல் 1.30 மணி*

    15/01/20 - கே டிவி* *- உரிமைக்குரல்* -பிற்பகல் 1 மணி*

    *16/01/20 -* ஜெயா டிவி* - இரவு 11 மணி - ஒரு தாய் மக்கள்* *

    17/01/20* -ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -அடிமைப்பெண் - காலை 10மணி*

    புதுயுகம் டிவி* -நீதிக்கு தலைவணங்கு - பிற்பகல் 1.30 மணி*

    *மெ கா டிவி* *- படகோட்டி* - மதியம் 12 மணி*

    * ஜெயா டிவி* -ஆயிரத்தில் ஒருவன் - பிற்பகல் 3.30 மணி*

    * முரசு* *- ஆனந்த ஜோதி* *இரவு 7 மணி*

    * ராஜ் டிவி* - உலகம் சுற்றும் வாலிபன் - இரவு 8.30 மணி*

    இது தவிர ஜெயா மூவிஸில் நாள் முழுவதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்*
    Last edited by puratchi nadigar mgr; 16th January 2020 at 11:57 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2482
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் 2020 ல் இனிதே துவக்கம் .

    பொங்கல் அன்று மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிட்டல் ட்ரைலர் திரையிடப்பட்டது .அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று தெரிகிறது பெரும்பாலான .ஊடகங்கள் மக்கள் திலகத்தின் திரைப் படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள் . எம்ஜிஆர் 103 பிறந்த நாள் சிறப்பு தொகுப்புகளும் ஒளி பரப்பாக உள்ளது .உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் சிறப்பாக கொண்டாட உள்ளார்கள் . தமிழ் நாட்டில் 8 நகரங்களில் 12 எம்ஜிஆர் பழைய படங்கள் பிறந்த நாளை முன்னிட்டு திரை யிடுகிறார்கள் .

    உலக திரைப்பட வரலாற்றில் எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் நிகழ்த்தி வருகின்ற சாதனைகள் - நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும் .
    எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி 43 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர் மறைந்து 32 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் எம்ஜிஆரின் திரைப்பட செல்வாக்கும் அரசியல் களத்தில் 62 ஆண்டுகள் எம்ஜிஆரின் புகழும் செல்வாக்கும் நிலைத்து விட்டது மூலம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின்
    சக்தியினை அறிந்து கொள்ள முடிகிறது .

    எந்த ஒரு அரசியல் தலைவரும் அல்லது எந்த ஒரு நடிகனும் நினைத்து கூட பார்க்கா முடியாத சரித்திர சாதனை படைத்த எம்ஜிஆரை இனி எவரும் கனவில் கூட நெருங்க முடியாது . இது 100% உண்மை .......... Thanks.........

  4. #2483
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கருணை தேவன் எம் ஜி ஆர் பிறந்த நாள் சிறப்பு
    நான் துப்பாக்கி தோட்டா உரையாடு கிறேன்
    நான் உலகிலே அதிக அதிகாரம் கொண்ட அமேரிக்கா பிரஸிடன்டை கென்னடி அப்பிரகாம் லிங்கன் போன்றவரை துளைத்து வீழ்த்தி உள்ளேன்
    இந்தியாவின் தந்தை காந்திஜீயையும் துளைத்து வீழ்த்தினேன்
    இரும்பு பெண்மணி என பெயர் கொண்ட இந்திரா காந்தியையும் துளைத்து வீழ்த்தினேன்
    இது போல் பலரை வீழ்த்தினேன்
    ஆனால்
    ஒரு முறை கயவன் ஒருவன் என்னை ஒருவரை நோக்கி செலுத்தினான் நானும் குதூகலமாக துளைத்து வீழ்த்த சென்றேன் கழுத்து பகுதியில் துளைக்க தொடங்கிய உடன் உணர்ந்தேன் இவர் சாதாரண மனிதன் அல்ல என்பதை என்றாலும் என் கடமை துளைத்து செல்லுவது அதை செய்தேன் அன்ன குழல் அருகே சென்ற உடன் நின்றேன் அதற்க்கு மேல் செல்ல முடியவில்லை தர்மதேவதைகள் தாண்டி துளைத்த நான் வெடித்து சிதறினேன் ஒரு சிறு பாகம் ஆன என்னை தவிர மீதி என் பாகங்களை வெளியே எடுத்து விட்டார்கள் மருத்துவர்கள் நான் இப்படி பட்ட தர்மதேவனையா துளைத்தேன் என்ற வேதனையோடு அங்கேயே அடங்கி விட்டேன் தன்னை சுட்டவனையே காத்தவர் எனக்கும் மன்னிப்பு அளித்து தன்னோடு வைத்து கொண்டார்
    நானும் என் தோல்வியை ஏற்று கொண்டு அவரோடு ஒன்றி விட்டேன்
    மனிதனை கொல்ல முடியும் தேவனை கொல்ல முடியாது என்று அன்று உணர்ந்தேன்
    என்றும் வாழும் எம் ஜி ஆர் புகழ்
    இப்படிக்கு
    தோட்டா
    வாழ்க எம். ஜி .ஆர்., புகழ்......... Thanks.........

  5. #2484
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பிறந்த இடம் தேடி நடக்கும் தென்றலே பெருமையுடன் வருக.
    மக்கள் திலகம் 103....

    கோவில்பட்டி பக்கத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து நம் இதயதெய்வம் நாடக குழுவில் இணைந்து கொண்டார் வீராசாமி என்பவர்.

    குழுவில் நடித்து கொண்டே வள்ளல் பாதுகாப்பு குழுவில் இருந்த மாடக்குளம் தர்மலிங்கம், ஐயா ராமகிருஷ்ணன், காமாட்சி, அழகர்சாமி இவர்களுடன் இணைந்து கொண்டார் இவர்.

    1972 இல் நான் ஒரு தொழில் சென்னையில் ஆரம்பிக்க விரும்புகிறேன் உங்கள் துணையுடன் என்று வாத்தியாரிடம் சொல்ல உடனே நல்லது என்று சொல்லி 25000 ரூபாய் கொடுத்து உதுவுகிறார் மன்னன்.

    கடை எண் 134 இல் திருவல்லிக்கேணி சாலையில் எம்ஜியார் ஹோட்டல் ஆரம்பிக்கிறார் வீராசாமி.

    வியாபாரம் சூடு பிடிக்க தொழில் நன்கு நடக்க பொறாமை கொண்ட சிலர் தலைவரிடம் நீங்கள் அவருக்கு உதவி செய்ய அவர் அதை தொடர்ந்து உணவகம் நடத்தி மக்களிடம் அதிக தொகை வாங்கி உங்க பேரை கெடுக்கிறான் வீராசாமி என்று போட்டு குடுக்க.

    தலைவர் முன் நிறுத்த படுகிறார் வீராசாமி..உள்ளுக்குள் உதறல்... என்ன இப்படி வர சொல்லி என்று.

    வந்த வீராசாமியை கட்டி பிடித்து நீதான் என் தம்பி உன்னை பற்றி புகார் வந்தது...விசாரிச்சேன்..

    அந்த ஏரியாவில் உன் தொழில் சார்ந்த மற்றவர் அளவு சாப்பாடு 6 ,7 8.ரூபாய்க்கு விற்க நீ மட்டும் உன் உணவகத்தில் 2 ரூபாய்க்கு வயிறு நிறைய உணவை கொடுப்பதை தெரிந்து அகம் மகிழ்ந்தேன்.

    நீயே என் உண்மை விசுவாசி...இந்த உணவகம் மூலம் உன் குடும்பத்துக்கு 3 வேளை உணவு கிடைப்பதே போதும்.. அதுவே எனக்கு நிம்மதி என்று சொல்லி கொண்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.. பிறர் வயிறு வாழ்த்த உணவை கொடுக்கும் உன்னை பாராட்டவே அழைத்தேன் என்று சொல்லி.

    வீராசாமிக்கு போன மூச்சு திரும்பி வந்தது போல உணர பிழைக்க சென்னைக்கு வந்த எனக்கு வாழ்வு தந்தவர் நீங்கள் என்றும் உங்கள் வழி நடப்பேன் என்று சொல்லி புறப்பட முனைய.

    இரு. அதே இடத்தில் இன்னும் ஒரு கடை பாரு அதில் வரும் வருமானம் உன் குடும்ப எதிர்காலத்துக்கு...

    உன் பழைய கடையில் தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு குறைந்த விலையில் தரமான சாப்பாடு போடு என்று கட்டளை இட..

    இன்றும் அது போல வாழ்ந்து வருகிறார் தொண்டன் வீராசாமி.

    தலைவன் போன பாதையில் மறக்காமல் பயணிக்கும் அத்துணை உண்மை எம்ஜியார் நெஞ்சங்களே..

    அவரின் எட்ட முடியா புகழை என்றும் அணையாமல் காப்போம்.

    இதுவே இன்றைய 103 அவரின் பிறந்த நல்ல நாளில் நாம் எடுத்து கொள்ளும் சபதம் ஆக.

    வாழ்க வள்ளல் புகழ்...
    நன்றி தொடரும்..உங்களில் ஒருவன்
    மதுரை கண்ணன்!......... Thanks.........

  6. #2485
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  7. #2486
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  8. #2487
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  9. #2488
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ☀காலையில் உதயமாகும் சூரியனுக்கு மாலையில் மறைவு உண்டு ��

    ☀சூரியனை விட சக்தி வாய்ந்தவர் 17-01-1917 அன்று உதயமான�� வள்ளல் பெருமான் நம்ம புரட்சித் தலைவருக்கு மறைவே இல்லாமல் மரணத்தை வென்று இன்றும் கோடிக்கணக்கான நல்ல இதயங்களில் ��இதயதெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    ��புரட்சித் தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்��

    ��வாத்தியாரே இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்��

    �� �� I LOVE YOU புரட்சித் தலைவா����
    ������������������������������

    ������

    உண்மை தொண்டன்!
    மதுரை கண்ணன்!......... Thanks...........

  10. #2489
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுமார் அரைநூற்றாண்டுக் காலம்தமிழகத்தில் சினிமா,*அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை,*ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும்*எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து*அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.*

    “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - *முன்னாள் ஜனாதிபதியான*அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி*ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

    இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும்எம்.ஜி.ஆர்,*இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என *பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.*நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

    அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு *உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.*

    கோபாலன் நேர்மையான *மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில*மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.*

    அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய *ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
    5-வது குழந்தையை *சத்யபாமா பெற்றெடுத்தார். *குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

    ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

    மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என*சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
    *
    குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

    வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர*உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக*இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி *போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

    பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத*பாரும்மா... நானும் உன்னைப்போல*ஒருகாலத்துல*வசதியாக மாட மாளிகையில*வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற*நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல*என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட*உங்கிட்ட*வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.*

    உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

    அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், *அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

    மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.*

    அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக *உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.*

    (தொடரும்)

    http://www.vikatan.com/news/coversto...-episode-1.art

    *1

    *Quote

    நவீனன்*****1,007

    Posted*January 31, 2017

    “ராம்சந்தருக்கு பால் கொண்டு வாடா..!” எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்: நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 2

    பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக*சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்...*இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த *நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக*இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

    இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத்*தூக்குவார்;*படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்;*ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.*

    படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம்*அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.*

    இப்படித்தான்* ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து,*''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக*உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்...*இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத்*திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

    எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்)*சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத்*தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத்*துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.*

    நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு *மகாபாரத நாடகத்தில்*விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது.*கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன்.*கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம்*என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில்*நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் *அபிமன்யு வேஷம்*தரப்பட்டது.

    'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' *சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.*

    தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

    ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.
    *

    வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

    அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த*பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.*

    சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி,*ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர்.*முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

    கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும்,*சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் * தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில்*ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள்*இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக*வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும்.............. Thanks.............

  11. #2490
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டது.அது வரை ஓடி ஆடி வேலை செய்த அனைவரும் அடித்துப்போட்டதுபோல் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.சுற்றிலும் இருட்டு.அந்த வீடு மட்டும் வெளிச்சமாக.வெளியே பந்தல்.வாழை தோரணம் சீரியல் அலங்கார விளக்குகள் விடிந்தால் திருமணம் என்கிறது.மூலைக்கு ஒருவராக முடங்கிவிட்டார்கள்.ஓரமாக கயிற்றுக் கட்டில் .ஒருக்களித்த நிலையில் ஒரு இளைஞன்.கையில் கட்டிய காப்புக் கயிறு அவன் தான் மணமகன் என்கிறது.ஆழ்ந்த உறக்கம்.அப்போது மெதுவாக ஒரு கரம் அவனது கன்னத்தைத் தட்டுகிறது. அசதியில் இருந்தவன் மெதுவாக கண்களைத் திறக்கிறான்.மெல்லிய வெளிச்சத்தையும் மீறிய அந்த பிரகாச முகத்தைப் பார்க்கிறான்.தலைவா!.. என்ற அலறலோடு எழுகிறான். அந்த அலறலில் வீடே வெளிச்சமாகிறது.உள்ளே உறங்கிய பெண்கள் அலறியபடி வெளியே வர அய்யோ!.. தெய்வமே!.. அவர்களும் அலற வந்தது அவர்களது குல தெய்வம் மக்கள் திலகம்.

    சிரித்த முகத்தோடு நிற்பவரைக் கண்ட கூட்டம் இதென்ன கனவா என ஒரு கணம் திகைத்து நிற்கிறது.எப்ப முகூர்த்தம்?. எங்க தெய்வம் வந்த பிறகு இப்பவே முகூர்த்த நேரந்தாங்க.மாப்பிள்ளையின் தந்தை உணர்ச்சிவசப்பட பரபரப்படைகிறது அந்த கல்யாண வீடு.சூடாக பால் வந்தவர்களோடு அருந்துகிறார் மக்கள் திலகம்.செய்தி ஊர் முழுக்க பரவுவதற்குள் கொண்டு வந்த பணக்கட்டுகளோடு ஒரு நகைப் பெட்டியும் கை மாறுகிறது.மணமகன் காலில் விழுந்து ஆசி வாங்க வாயார வாழ்த்துகிறார்.பொழுது லேசாக விடிகிறது.இளைஞனின் வாழ்க்கையும் வெளிச்சத்தை நோக்கி விரைகிறது.

    எம்.ஜி.ஆர்.என்ற மூன்றெழுத்து மந்திரம் இன்றும் உயிர்ப்போடு இருக்கக் காரணம் அவரது ஒவ்வொரு நாளும் இம் மாதிரி ஆச்சர்யமாக நகர்ந்த காரணத்தால் தான்.அவர் இங்கு வந்த காரணம் சுவாரசியமானது.இரவு தோட்டத்திலிருந்து புறப்படும்போது ஒரு பெரிய மனிதன் வீட்டுத் திருமணத்திற்காகத் தான் புறப்பட்டார்.திருச்சியில் விடிந்தால் திருமணம்.காரில் பயணிக்கும்போது தான் அவரது பின்புலத்தை நண்பர்களிடம் விசாரிக்கிறார்.அவர்கள் சொல்வது அத்தனையும் அந்த பிரமுகருக்கு எதிராகவே இருக்க ஆழ்ந்த யோசனைக்குப் போகிறது அவர் முகம்.அப்போது தான் இருட்டான சாலையில் ஒரு கிளைச் சாலை பிரிவதும் உள்ளே ஒரு கிராமம் இருப்பதும் தெரிகிறது.சீரியல் லைட் அலங்காரத்தில் நடுநாயகமாக இரட்டை இலை ஜோதியாகத் தெரிகிறது.உடனே காரை அங்கு விடச் சொல்கிறார்.அது ஒரு கட்சித் தொண்டனின் திருமண வீடு என தெரிந்துகொள்கிறார்.ஓரமாக காரை நிறுத்தி பொடி நடையாக அந்த இருட்டில் நடந்து வீட்டை அடைந்து தானே மாப்பிள்ளையை அடையாளம் கண்டு எழுப்பியதைத் தான் மேலே கண்டோம்.பகல் வேஷம் போடும் பணக்காரனை விட எனக்காக உழைக்கும் ஏழைத் தொண்டவன் எவ்வளவோ மேல் என்ற சிந்தனையே அவருக்கு இதைச் செய்யத் தூண்டியது.தனது வாழ்க்கை முழுவதும் ஆச்சர்யங்களை உள்ளடக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று.

    இப்போது தான் அவரது நினைவு நாளுக்கு இரண்டு பதிவுகள் போட்டு அவரை நினைவு கூர்ந்தோம்.அதில் அவரது இளமைக் காலங்கள் இருந்தது.சினிமாவின் ஆரம்பம் ஏற்றம் எல்லாவற்றையும் பேசினோம்.ஆனாலும் இன்னும் இன்னும் என அவரைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது.வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற கேள்வியைக் கேட்ட அந்த மகத்தான கலைஞனை பார்ப்பதை விட மகத்தான மனிதனைப் பார்ப்பதே சாலச் சிறந்தது.

    ஒரு திரைப்பட நடிகராகத் தான் நமக்கெல்லாம் அவர் அறிமுகம்.அந்த திரையில் அவர் எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.இயல்பில் எப்படிப்பட்டவர் என்பதை கூட இருந்தவர் சொல்லக்கேட்டுத் தான் நமக்குத் தெரியும்.உதாரணத்திற்கு மேலே குறிப்பிட்ட சம்பவத்தைச் சொன்னது அவரோடு காரில் பயணித்த சக நண்பர்.அவருக்கு அன்றாட நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று.ஆனால் அவைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தது நேரில் கண்டவர்கள் தான்.அவரது வாழ்க்கை வரலாற்றை நிறைய பேர் எழுதக் காரணமும் இது தான்.எந்த வரலாற்று நாயகர்களை எடுத்தாலும் அவர்கள் திறந்த புத்தகமாக இருந்தால் வரலாறு அவர்களை நினைவு கூறும்.பிற்கால சந்ததிக்கு அவைகள் வரலாறாக மாறும்.மக்கள் திலகத்தின் இளமைக் காலங்களை அவரே எழுதிய குறிப்புகளில் நிறைய காணக்கிடைக்கிறது.அவரோடு பழகியவர்கள் சொன்னவை அதை விட ஏராளம்.அவரது பிற்கால அரசியல் வாழ்க்கை இங்கு நமக்குத் தேவையில்லை.சினிமா வாழ்க்கையைப் பேச தடையுமில்லை.ராமச்சந்திரன் ராம் சந்தராக காரணம் டி.ஆர்.மற்றும் டி.கே.என ராமச்சந்திரன்கள்.என்னங்க வட நாட்டு பேரு மாதிரி இருக்கு.அட ஆமால்ல!.. எம்.ஜி.ராமச்சந்திரன் என கையெழுத்து மாறி அது எம்.ஜி.ஆர்.என மக்களால் கொண்டாடப்பட்ட வரலாறு நாம் கண்டது தான்.திரையில் தோன்றும் அந்த மூன்றெழுத்து மந்திரம் உட்கார்ந்த உடனே ரசிகனை கட்டிப்போட பயன்பட்டது.

    ஒரு திரைப்படம் கதையை மையமாக வைத்து நகர்கிறது.கதை மாந்தர்களில் முக்கியமான பாத்திரங்கள் நாயகன் நாயகி.அவர்களைச் சுற்றி நகரும் கிளைப் பாத்திரங்கள்.இதில் நாயகன் எப்போதுமே முக்கியம்.சினிமா மட்டுமல்ல.புராண இதிகாசங்களும் இதற்கு விதி விலக்கல்ல. திரைப்படம் வெற்றி பெற நாயகன் முக்கியம்.நாயகன் வெற்றி பெற அவன் தேர்ந்தெடுக்கும் கேரக்டர் முக்கியம்.இந்த பாத்திரப் படைப்பைத் தான் மக்கள் திலகம் தனது திரைப்படங்களில் முக்கியமாக கவனித்தார்.பல பாத்திரங்களில் ஒருவர் வாழ்வது ஒரு வகையென்றால் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் ஒருவரே தெரிவது இன்னொரு வகை.மக்கள் திலகம் இரண்டாவது வகை.

    திரையில் அவர் என்ன வேடம் வேண்டுமானாலும் போடட்டும்.அத்தனையிலும் அவரே பிரதானமாகத் தெரிவார்.இந்த ஹீரோயிஸத்தை ஆரம்பித்து வைத்ததே அவர் தான்.மலைக் கள்ளனில் தொடங்கிய அரிதாரம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை கலைக்கப்படவேயில்லை.படகோட்டி மீனவன் இப்படியா இருப்பான் என்ற விமர்சனத்தை அவர் கண்டுகொள்ளவேயில்லை.எனது மீனவன் இப்படித்தான்.வசூலில் அவன் வஞ்சித்தானா?. எதிர் மறை விமர்சனங்கள் வராத இடமேயில்லை.சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதையும் தாண்டி அது சொல்லும் செய்தி இங்கு முக்கியம்.எதார்த்தம் என்ற பெயரில் எடுக்கப்படும் சினிமா வேறு.அது சொல்லும் மெஸ்ஸேஜூம் நான் சொல்லும் மெஸ்ஸேஜூம் ஒன்று தான்.ஆனால் பார்வையாளர்கள் என்னிடம் அதிகம்.அவர்களை தக்க வைத்துக்கொள்ள சில காம்ப்ரமைஸ் தேவை.அதிலொன்று தான் வண்ண உடையில் அலையும் படகோட்டி மீனவன்.எம்.ஜி.ஆரின் திரைப் பார்வை தெளிவானது.அதை அவர் தனது டைட்டிலில் இருந்து தொடங்குகிறார்.

    நல்லவன் வாழ்வான், திருடாதே, தாய்க்குப் பின் தாரம், தெய்வத் தாய், ஊருக்கு உழைப்பவன், உழைக்கும் கரங்கள், நாளை நமதே, நம் நாடு, நீதிக்குத் தலை வணங்குவது, நீதிக்குப் பின் பாசம், பல்லாண்டு வாழ்க, புதிய பூமி, மீனவ நண்பன், தாயின் மடியில், தாலி பாக்கியம், தர்மம் தலை காக்கும், சிரித்து வாழ வேண்டும், என சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த டைட்டில் ரசிகன் மனதில் அப்படியே பதிந்து போகிறது.பாஸிட்டிவ்வான சிந்தனை வருகிறது.நல்ல டைட்டிலைச் சொல்பவருக்கு பரிசெல்லாம் அவர் வழங்கக் காரணம் இது தான்.பட முதலாளி யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர்.படமென்றால் டைட்டிலை முடிவு செய்வது அவர் தான்.ஸ்ரீதர் வந்த உடன் கவி நயத்தோடு டைட்டிலைச் சொல்ல சட்டென உரிமைக்குரல் என்றார்.கதையோடு அப்படியே அது ஒன்றிப்போனது.டைட்டிலைக் கேட்டவுடன் ஒரு எனர்ஜி வர வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார்.திருடாதே இந்திப் படம் பாக்கெட் மார்.தமிழாக்கினால் பிக்பாக்கெட் என்று தான் வரும்.பாஸிட்டிவ்வான திருடாதே சொன்ன மா. லெட்சுமணனுக்கு உடனே ஐநூறு ரூபாய் ஸ்பாட்டில் தந்தார்.யாதோன்கி பாரத் சம்பந்தமே இல்லாமல் நாளை நமதே என்றானது.தொண்டர்கள் பெயரைக் கேட்டதும் உற்சாகமானார்கள்.

    தனது திரைப்படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் கவனமாக இருந்தது தான் பலரது விமர்சனத்திற்கு ஆளானது.அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆர்.என்ற ஒற்றை மனிதருக்காகத் தான் வருகிறார்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.தனக்கானதொரு இடத்தை அவர் தக்க வைத்துக்கொண்ட பிறகு அதிலிருந்து கீழிறங்க அவர் விரும்பவில்லை.வரும் கதாசிரியர்களிடம் எனக்கான கதை எங்கே என்று தான் அவர் கேட்பார்.ஆரம்பத்தில் சொன்னது போல் பல கேரக்டர்கள் செய்ய திரைத் துறையில் நிறைய பேர் உண்டு.அவர்கள் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.எம்.ஜி.ஆர்.அந்த வட்டத்திற்குள் தன்னை வலியப்போய் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.திரைப்படம் என்ற சாதனத்தை சமூக மாற்றத்திற்காகவே அவர் பயன்படுத்திக்கொண்டார்.ஒரு திருமணக் காட்சி எடுப்பதாக இருந்தால் கூட ஆடம்பர திருமணங்களை அவர் ஊக்குவிப்பதில்லை.பெரும்பாலும் ஏதாவது ஒரு தலைவரின் புகைப்படத்தின் முன்பாகவோ பதிவுத் திருமணங்களாகவோ தான் இருக்கும்.இரண்டு மாலைகள் அவ்வளவு தான்.புரோகிரதர் மந்திரம் ஹோம குண்டங்கள் எதுவும் இருக்காது.

    திரையில் தோன்றுவதை கவனமாக கையாள்வார்.ஏதோ பத்தோடு பதினொன்றாக வரமாட்டார்.வருவதற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பை ரசிகனுக்கு ஏற்படுத்துவது அவரது வாடிக்கை.அறுபது எழுபது காட்சிகள் என்றால் அத்தனையிலும் அவர் இருக்கமாட்டார்.எல்லா கலைஞர்களுக்கும் காட்சிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.எப்படா வருவார் என எதிர்பார்க்கும்போது என்ட்ரி ஆவது அவரது ஸ்டைல்.இந்த எதிர்பார்ப்பு தான் ஒரு ஹீரோவிற்கு முக்கியம்.இதே ஃபார்முலாவைத்தான் அவர் அரசியல் மேடைகளிலும் கடைபிடித்தார்.பெருந் தலைவர்கள் மேடையை அலங்கரித்த பிறகு சட்டென ஆஜராவார்.கூட்டம் ஆர்ப்பரிக்கும்.அமர்ந்த சில நிமிடங்களில் பேச அழைக்கப்பட வேண்டும்.மணிக்கணக்கில் மக்களின் காட்சிப் பொருளாக அமர்ந்திருக்க அவர் எப்போதும் விரும்பியதில்லை.உளவியல்ரீதியாக இது ஒர்க் அவுட் ஆகிறது.பார்த்துக்கொண்டேயிருந்தால் சலிப்பு ஏற்படும்.மின்னலென தோன்றி மறைவதில் இன்னும் கொஞ்சம் பார்த்திருக்கலாம் என்ற ஆவலை தூண்டி விட்டுப் போய்விடுவார்.திரைக் காட்சிகளிலும் அதே ஃபார்முலா தான்.

    ஷூட்டிங் பொதுவாக ஸ்டுடியோவில் தான்.தேவை வரும்போது அவுட்டோர்.அவரது பல படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி ஒரு பேட்டியில் இதைத் தான் சொன்னார்.முதல் நாள் இரவே சம்பந்தப்பட்ட ஸ்பாட்டிற்குச் சென்று ஒரு ஒத்திகை பார்த்துவிடுவார்.காலையில் ஏதாவது கூட்டத்தில் ரீ டேக் வாங்கினால் அசிங்கமாகிவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை.ஒரே டேக்கில் ஓகே வாங்கிவிடுவார்.சண்டைக் காட்சிகள் என்றால் கண்டிப்பாக அவரது டூப் ராமகிருஷ்ணன் அவுட்டோர் ஸ்பாட்டில் இருக்கக் கூடாது.டூப்பும் அவரும் ஒரே உடையில் மக்கள் மத்தியில் இருப்பதை அவர் விரும்புவதில்லை.அவருக்கான காட்சிகளை எடுத்த பிறகு தான் ஸ்பாட்டிற்கே வருவார்.அவுட்டோரில் அதிகமாக டூப்பிற்கு வேலையில்லாமல் பார்த்துக்கொள்வார்.சண்டைக் காட்சிகளில் நிறைய ஸ்டண்ட் கலைஞர்களை பங்கு கொள்ள வைப்பார்.அவர்கள் வீட்டில் அடுப்பெரிவதில் கவனமாக இருப்பார்.நலிந்த வில்லன்களை கூப்பிட்டு வாய்ப்பளிப்பார்.ஒரு முறை சண்டையில் ஈடுபாடு காட்டாமல் ராமதாஸ் சோகமாக இருப்பதை கவனித்துவிட்டார்.என்ன பிரச்சனை?. ஒய்ஃபை ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்திருக்கேன்.அட மடையா இந்த சீனை அப்புறம் வெச்சுக்கலாம் ஓடு என கையில் 1500 திணித்து அனுப்பி வைத்தார்.15.5.71. திரை உலகம் பேட்டியில் ராமதாஸ் சொன்னது.கவனம் சண்டையில் இருந்தாலும் ஓரக் கண்ணால் சக கலைஞனை கவனித்துக்கொண்டேயிருப்பார்.சண்டை முடிந்ததும் எடிட்டிங் டேபிளுக்கு வரும்போது கண்டிப்பாக இருப்பார்.உரிமைக்குரல் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அற்புதமாக எடிட் செய்தது அவர் தான் என ஸ்ரீதர் திரும்பிப் பார்க்கிறேனில் சான்றிதழ் தருகிறார்.இந்த போர்ஷன் ஒரு எடிட்டருக்கு சவாலான விஷயம்.

    மதுரை வீரன் படப்பிடிப்பு.வெளியூரிலிருந்து வண்டி கட்டி ரசிகர் கூட்டம்.அவர்களோடு அன்போடு உரையாட எங்கடா ராமச்சந்திரன்? . என சவுண்ட் விட்டார் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்.ரசிகர்களோட பேசிகிட்டு இருக்காருங்க.அவனுங்களோட இவனுக்கென்ன பேச்சு?. சிகரெட்டை இழுத்தபடி கோபமானார்.ஒரு ரசிகன் காதில் விழ அண்ணே என்னை விடுங்க.அவன் உங்களை மரியாதை குறைவா பேசறான்.கை கால உடைச்சிட்டு வர்ரேன் என ஆவேசமான ரசிகனை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தார்.தனியாக இயக்குநரிடம் வந்து அண்ணே செட்ல என்ன வேணா திட்டுங்க.தெரிஞ்சோ தெரியாமலோ மக்கள் என்னை உயரமா நிறுத்தி வெச்சுட்டாங்க.அவங்க முன்னாடி திட்டாதீங்க.எனக்காக இல்லை நீங்க வெளியே போகும்போது அடிச்சிடுவாங்க அதுக்குத் தான்.நீ சொல்றதும் சரிதான்டா.உன்னை பழைய ராமச்சந்திரனாவே பாத்திட்டு இருக்கேன்.என் தப்பு தான்.ரகுநாத் அதன் பிறகு அந்தப் படத்தை இயக்கவில்லை.அவரது அஸிஸ்டெண்ட் யோகானந்த் தான் முடித்தார்.அவருக்கே தெரியாமல் அந்த இமேஜ் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது தான் உண்மை.ஒரு கட்டத்தில் அதை தக்க வைத்துக்கொள்ள கொள்ளத் தான் இவ்வளவு மெனக்கெட வேண்டி வந்தது.

    மக்கள் திலகம் ஒரு பல்கலை வித்தகர்.ஹீரோவின் மூலதனம் அவனது உடல்.அதை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.ஆரம்ப காலங்களில் நண்பர் தேவரின் பழக்கம்.சிலம்பம் வாள் வீச்சு மல்யுத்தம் என கோதாவில் இறங்கி சகல வித்தைகளும் கை வசம் ஆக குமரன் ஆசானிடம் நடன அசைவுகள்.ஆரம்ப ஸ்ரீமுருகனில் அவரது ருத்ர தாண்டவம் ஒன்று இருக்கிறது.அழகாக ஆடுவார்.பொதுவாக பெண்கள் அதிகம் இருந்தால் ஆடமாட்டார்.தனியாக பயிற்சி.ஷூட்டிங் ஸ்பாட்டில் அசத்திவிடுவார்.குடியிருந்த கோயிலின் பாங்ராவை அப்படித்தான் பழகினார்.அன்பே வா ராக் அண்ட் ரோல் டிவிஸ்ட் என அசத்தியதும் அப்படித் தான்.குதிரையேற்றம் முறையாக பயின்றவர்.நந்தாராம் பயில்வானிடம் சண்டையில் எப்படி பிடி போடுவது எப்படி தப்பப்பது என்ற டெக்னிக்கை முறைப்படி பயின்றவர்.அவரது சண்டைகளில் இந்த பிடி பிரதானமாக இருக்கும்.எடுத்தவுடன் அடிக்கமாட்டார்.மூன்று அடிக்கு மேல் வாங்கமாட்டார்.கடைசியில் அடி வாங்கிய வில்லனை அப்படியே விடமாட்டார்.தூக்கி முதலுதவி தண்ணீர் என பாசம் காட்டுவார்.சக கலைஞரின் பாதுகாப்பு அவருக்கு முக்கியம்.ஒன்றுக்கு இருமுறை உறுதி செய்த பிறகு ஷாட்டிற்கு வருவார்.அவரது செட்டில் தொழிலாளர்கள் முறையாக கவனிக்கப்படுவார்கள்.மதுரை வீரன் ஸ்பாட்டில் தான் அவருக்கென்று தனி ஃபேன் வைக்கப்பட்டது.திரும்பிப் பார்த்தவர் தள்ளி நின்ற லைட் பாயை கவனித்து அவர் பக்கம் ஃபேனை ஓட விட்டதை பேசும் படம் சாரதி பதிவு செய்கிறார்.மேலே பார்ப்பார்.அந்தரத்தில் தொங்கும் லைட் பாயிடம் கட்டை விரலைக் காட்டி ஓகே செய்து கொள்வார்.கேமிரா பொஸிஷன் கவனிப்பார்.கண்களை சுற்றிலும் ஓட விட்டு லைட்டிங் திருப்தி என்றாலே டேக் போவார்.ராமமூர்த்தி சொன்னது இது.அவரது கண்ணிலிருந்து எதுவுமே தப்பாது.தேவையில்லாத லைட்டை அணைக்கச் சொல்வார்.படமெடுத்துப் பார்த்தால் அவர் சொன்னது சரியாகவே இருக்கும்.

    பாடல் காட்சிகள் மட்டுமல்ல பாடல் வரிகள் மட்டுமல்ல மெட்டுக்கள் கூட திருப்தி வரும்வரை விடமாட்டார்.ஏதோ விளையாட்டுக்காக இல்லை.சங்கீத ஞானம் நிறையவே உண்டு.வாலி பல தடவை சொல்லியிருக்கிறார்.பாடலின் ராகங்களை சரியாகச் சொல்வார்.கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு.சீர்காழி குரல் அவருக்குப் பிடிக்கும்.நோய்வாய்பட்டு அறையில் கிடந்தபோது சீர்காழியை அழைத்து பாடச் சொன்னார்.பாடப்பாட வழிந்தோடிய கண்ணீரைப் பார்த்ததாக கூடப்போன சிவ சிதம்பரம் கூறுகிறார்.சாப்பாட்டில் வஞ்சனையில்லை.புளிப்பில்லாத கெட்டித் தயிர் இஷ்டம்.நெத்திலி கருவாடு இருந்தால் இன்னும் ஒரு கவளம் சோறு உள்ளே போகும்.ஏதாவது கீரை கண்டிப்பாக வேண்டும்.தோட்டத்தில் அதற்கென ஒரு இடம்.காய்கறிகள் எல்லாமே பிடிக்கும்.சின்ன வெங்காயம் நிறைய இருக்கணும்.நான் வெஜ் கண்டிப்பாக இருக்கும்.குறைந்தது பத்து பேர் கூட வேண்டும்.பயணங்களில் வண்டியில் நொறுக்குத் தீனியோடு சாத்துக்குடி கண்டிப்பாக இடம் பெறும்.அரசியலில் வந்த பிறகு மக்கள் தரும் மனுவை கவனமாக வாங்குவார்.உதவியாளரிடம் கொடுத்தால் மனு ஓகேயாகும்.தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டால் கொடுத்தவர் ஏமாற வேண்டியது தான்.உதவியாளர் கவனித்துச் சொன்னது.சினிமாவில் அவுட்டோரில் வித்தியாசம் பார்க்காமல் ஒரே ட்ரீட்.அடிமைப் பெண் அவுட்டோரில் முன்னூறு ஒட்டகம். ஓட்டிகளுக்கெல்லாம் கோக் லாரியில் வந்தது.ஜெய்சல்மர் வியந்தே போனது.ஊட்டி சூட்டிங் என்றால் யாரும் ஸ்வெட்டரோடு போகமாட்டார்கள்.எல்லாமே அவரது செலவு.அந்த அற்புத மனிதரை பேச இந்த நாள் போறாது.பிறந்தநாள் வாழ்த்தில் மகிழ்கிறது இந்தக் குழு..... .

    முகநூல் நண்பர் அப்துல் சமத் அவர்களின பதிவு................ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •