Page 245 of 402 FirstFirst ... 145195235243244245246247255295345 ... LastLast
Results 2,441 to 2,450 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2441
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் விருப்பமான திருநாள் பொங்கல் பண்டிகை அந்தப்பண்டிகையை சிறப்பிக்க மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த நாடோடிமன்னன் சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் நம்நாடு கோவை சண்முகா பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் பழநி.சாமி திரையரங்கில் மணிதமகான் எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் நெல்லை மாவட்டம் தென்காசி புளியங்குடி கண்ணா திரையரங்கில் கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை நெல்லை மாவட்டம் விக்கிரரங்கபுரம் தாய்சினிஸ் திரையரங்கில் வெற்றித்திருமகன் எம்ஜிஆர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை வெற்றிப்பவனி மேலும் தகவல்கள் வருகின்றன திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் இதயங்கனிந்த உள்ளம்மகிழ்ந்த நன்றிகள் ... மதுரை எஸ் குமார் ...எம்ஜிஆர் மன்றம்... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2442
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாள் முதல் (15/01/20) புளியங்குடி கண்ணன் அரங்கில் (தென்காசி* மாவட்டம் ) மக்கள் திலகம் / புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த*டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .

    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .......... Thanks...

  4. #2443
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாளை முன்னிட்டு (15/01/2020)* புதன் முதல் தூத்துக்குடி சினிராஜ் அரங்கில் மக்கள் தலைவர் அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல்*தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .

    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .......... Thanks............

  5. #2444
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார்_கார்.!

    புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்கள் ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:

    பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
    பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
    மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
    ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
    புது கார் வாங்க
    எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
    இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

    அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
    என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது;
    தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது;
    பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது.
    பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
    தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ.!
    என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
    பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா.!
    என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.

    என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
    —'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர். எழுதிய கட்டுரையிலிருந்து.......... Thanks.........

  6. #2445
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சரியாக 48ஆண்டுகளுக்கு முன் 14-01-1973 அன்று இதே நாளிள் #மக்கள்திலகம் #எம்ஜிஆர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தி...

    "ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக பொங்கல் விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். பழைய குப்பைகளையும், தீயசக்திகளையும் அகற்றும் நாள் இது.

    இப்படி பழைய முறையில் கொண்டாடி வந்த இந்தப் பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக ஆக்கி சகல தரப்பு மக்களும் கொண்டாட வகை கண்டவர் நமது இதய தெய்வமான பேரறிஞர் #அண்ணா அவர்கள் ஆவார்.

    அது மட்டுமல்ல பொது வாழ்விலும், சமுதாயத்திலும் குடி கொண்டிருக்கும் அழுக்குகளை அகற்றி எங்கும் பரிசுத்தம் நிலவச் செய்வதை தம்முடைய வாழ்வின் பெரும்பணியாக அண்ணா அவர்கள் கொண்டிருந்தார்.

    அவரது லட்சியம் நிறைவேற பாடுபடுவோம் என்ற உறுதியே தமிழர் திருநாள் அன்று நாம் ஏற்கும் சூளுரையாகும்.

    பேரறிஞர் அண்ணா வழியில் அவரது பெயரையும், திருவுருத்தையும் கொடியிலும் ஏந்தி அவரது கொள்கைகளை நிறைவேற்ற புதிதோர் இயக்கத்தை அண்ணா தி.மு.கழகம் என்ற பெயரில் தமிழ் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

    அதன் காரணமாக கடந்த பொங்கலுக்குப் பின் பலவித சோதனைகளை அனுபவிக்க வேண்டி இருந்தது. அவ்வகையில் இது ஒரு சோதனைப் பொங்கல் ஆகும்.

    வெப்பம் காரணமாக பயிர் விளையும். சூட்டின் காரணமாக உணவு வெந்து பக்குவம் பெறும்.

    அது போல பேரறிஞர் அண்ணாவில் லட்சியங்களை நிறைவேற்ற செயல்படுவார்கள் அண்ணா தி.மு.கழக தொண்டர்கள்.

    தாய்மார்கள், பெரியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் அனைவரும் துாய்மையான, சமதர்ம ஆட்சி அமைய அண்ணா அவர்களின் கனவை நனவாக்க குறுகிய காலத்தில் அளவிடற்கறிய தியாகங்களை புரிந்து இருக்கிறார்கள்.

    அவர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வருங்காலத்தில் அண்ணா அவர்களின் விருப்பப்படி லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியை அமைக்க எல்லோருடைய ஆதரவும், ஆசியும் நமக்கு கிடைத்து இருக்கிறது. இது மேலும் அதிகமாகக் கிடைக்கும்.

    இப்போது நடக்கும் தர்மயுத்தத்திற்கு ஆதரவு தரும் எல்லோருக்கும் நன்றி-வணக்கம்."......... Thanks...

  7. #2446
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தில் இருப்பவர் சைதை சென்னை காரணீஸ்வரர் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்தவர்.

    ஒரு கட்டத்தில் தலைவருக்கு அறிமுகம் ஆகி தலைவர் வீட்டுக்கு விருந்து நிகழ்வுகளுக்கு மீன்கள் இவர் மூலமே செல்ல.

    1977 இல் சட்டமன்ற தேர்தலில் சைதை வேட்பாளராக நான் நிற்பேன் என்று அடம் பிடிக்க...படகோட்டி நீங்கள் எங்க சமுதாயமே உங்கள் பின்னால் என்று சொல்ல.

    3000 வாக்குகள் குறைய பெற்று கண்ணன் தோற்க..சென்னையை சுற்றிய அனைத்து மீனவர்கள் அமைப்பு ஆதரவு இருந்தும் இது நடக்க.

    மன்னன் முதல்வர் ஆகிவிட கண்ணன் இருந்த வீட்டை அடமானம் வைத்து ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு ஜப்தி நோட்டீஸ் வர.

    விஷயம் தெரிந்த வாத்தியார் கண்ணன் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து விசாரிக்க சரி போங்க நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி அனுப்ப.

    3 மணி நேரத்துக்குள் அடமானம் வைக்க பட்ட வீடு மீட்க பட்டு பத்திரம் பத்திரமாய் கண்ணன் கை போய் சேர, பின்னர் குடிசை மாற்று உறுப்பினர் பொறுப்பை அவருக்கு கொடுக்க, மீனவர் கண்ணன் மகள் திருமணத்தை தெய்வமே நடத்தி வைக்க.

    1984 இல் தலைவர் அப்பல்லோவில், தொண்டன் கண்ணன் பெஸ்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட

    அன்னை ஜானகி எம்ஜிஆர் கண்ணன் சிகிச்சை செலவுக்கு உதவ.

    அமெரிக்காவில் இருந்து மீண்டு வந்த நம் தலைவர் ஜப்பான் நாட்டு மருத்துவர் காணு அவர்களுக்கு விருந்து வைக்க

    கண்ணன் மீன் கடையில் இருந்து இரண்டு கிலோ இறால் மீன் கொண்டு வர சொல்ல வந்த கண்ணனிடம் 78000 ரூபாய் தலைவர் கொடுக்க..

    என்ன 2 கிலோ மீனுக்கு 78000 ஆ என்று கண்ணன் திகைக்க எனக்கும் உடல்நலம் இல்லை...உனக்கும் உடல் நலம் இல்லை மீதி பணத்தை மருத்துவ செலவுக்கு வைத்து கொள் என்று நம் தலைவர் சொல்ல

    கண்ணன் அந்த உண்மையான மீனவ நண்பரை இருகரம் கூப்பி கும்பிட்டு கிளம்ப.

    13.12.87.இல் தொண்டன் கண்ணன் மறைய நம் தலைவர் 24.12.87 இல் மறைய

    இப்படி ஒரு கட்சி தலைவரை பாதிக்க பட்ட தொண்டரை நினைத்து பார்க்கும் அரசியல் வாதிகள் இன்று உண்டா...வெற்றி பெற்றால் வா...தோல்வி என்றால் அது உன் தலைவிதி என்று மறக்கும் காலத்தில்.

    அது தான் நம்ம எம்ஜிஆர்... இன்றும் நிலைத்து அவர் புகழ் நிற்க இது போன்ற நிகழ்வுகள் காரணம் தானே நண்பர்களே.

    நன்றி.....வாழ்க எம்ஜிஆர் புகழ்...தொடரும்.. உங்களுள் ஒருவன் நெல்லை மணி...

    அதிமுகவின் நிறுவன தலைவர் வழி தொண்டர்கள் நாம் நடப்போம் ஆக........... Thanks...

  8. #2447
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புத்தகஙகள் , பத்திரிகைகள் , வாட்ஸாப் , முகநூல்,ட்விட்டர், எதிலும் மக்கள் திலகம் உதவி செய்த சம்பவங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன .....

    இதையெல்லாம் பதிவிட வேண்டுமென்றால் தினமும் நாள் முழுவதும் ஒதுக்கவேண்டும் தினம் வரும் செய்திகளில் நூறில் ஒரு பங்கு கூட பதிவிட முடியவில்லை ...

    மக்கள் திலகத்தின் மறைவு இந்த மண்ணுக்கு மிகப் பெரிய இழப்பு .......

    ஹயாத் !........ Thanks.........

  9. #2448
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வாரத்தில் மதுரை- சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்ட வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "கலங்கரை விளக்கம்" கறுப்பு&வெள்ளை காவியம் ஏரத்தாழ ரூபாய் 140000.00 (ஒரு லட்சத்து நாற்பதாயிரம்) வசூலை அள்ளி வழங்கியுள்ளது நம் நண்பர்கள் குழுவினர் தெரிவித்துள்ள மகிழ்ச்சி தகவல்கள்...

  10. #2449
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "உலகம் சுற்றும் வாலிபன்" காவியங்களின் காவியம்... ட்ரைலர் விளம்பர சுவரொட்டிகளை கூட்டம், கூட்டமாக கண்டு களிக்கின்றனர் என்ற மகிழ்ச்சி தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது.........

  11. #2450
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் ''தர்பார் ''

    அரசவை தர்பார் காட்சிகளில் பல்வேறு நிலைகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள் ,

    மந்திரிகுமாரி
    மருத நாட்டு இளவரசி
    ராஜகுமாரி
    குலேபகாவலி
    மதுரைவீரன்
    சக்கரவர்த்தி திருமகள்
    ராஜ ராஜன்
    மகாதேவி
    புதுமைப்பித்தன்
    நாடோடிமன்னன்
    ராஜ தேசிங்கு
    மன்னாதி மன்னன்
    அரசிளங்குமரி
    ராணி சம்யுக்தா
    விக்கிரமாதித்தன்
    காஞ்சித்தலைவன்
    அரசகட்டளை
    அடிமைப்பெண்
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை படஙக்ளில் நடித்தார்

    .உலகில் எங்குமே நடந்திராத அதிசயம் ..அற்புதம் ....
    எம்ஜிஆர் நிகழ்த்தி காட்டினார் . திரையில் நடித்தார். நிஜ வாழ்வில் மக்களை சந்தித்து ஆட்சி அமைத்தார் .

    சென்னை ஜார்ஜ் கோட்டை தர்பாரில் மன்னராக எம்ஜிஆர் ஆட்சி நடத்திய பொற்காலம் 1977-1987................ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •