Page 236 of 402 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2351
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் 31/01/2019
    ---------------------------------------
    தமிழக துணை முதல்வர் ஓ..பி.எஸ்சுக்கு எம்.ஜி.ஆர். சிலை திறக்க அழைப்பு*
    ---------------------------------------------------------------------------------------------------------------------

    தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வத்தை , தலைமை செயலகத்தில்*திங்களன்று* (30/01/2019) சந்தித்து , மொரீஷியஸ் நாட்டின் கோரமண்டல் நகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்குமாறு அழைப்பு*விடுத்தார் அந்த நாட்டின் முன்னாள்* அதிபர் பரமசிவம் பிள்ளை* வையாபுரி .உடன் சிலை திறப்பு விழா ஒருங்கிணைப்பாளர் திரு.செழியன் குமாரசாமி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2352
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *டி.எம் . எஸ் எனும் இசை அரசரின் தனித்துவங்கள்*

    1. தமிழை மெல்லின வல்லின இடையின வகைகளோடு அழுத்தம் திருத்தமாக உச்சரித்தது.

    2) நடிகர்களின் குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை பொருத்திக்கொண்டு அதை ஒரு ஹம்மிங்கிலும் ... ஒரு சிரிப்பிலும்... ஒரு அட்சரங்களில் கூட பிறழாமல் பாடலைக் கொண்டு சென்றது

    3) ஈரமும் கமபீரமும் குரலாய் இணைத்துக் கொண்டது

    4) ஒவ்வொரு வரிகளுக்கும் பொருள் மாறாமல் பாவனைக் காட்டியது.

    5) பாடலைப் பாடும் போதே அந்த சூழலை உள் வாங்குவது.

    6) பார்க்கக் கூட அவசியம் இல்லாத படிக்கு குரலில் காட்சியை விவரிப்பது

    7) கதாப் பாத்திரங்களின் குணாதிசியங்களைக் குரலசைவில் கொண்டு வருவது.

    8) நவரசங்கள் அனைத்திலும் ரசங்கள் கெடாமல் பாடுவது.

    9) தீவிர உழைப்பு. தன்னம்பிக்கை . தொழில் பக்தி. சுய திருப்தி . தெய்வ உணர்வு.குழந்தை மனசு. பரந்த குணம். அனுபவ தெளிவு . சிததர் மனோ நிலை. நேர் படப் பேசும் தைரியம் .
    இவை எல்லாம் இப்போதல்ல பாடும் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.

    10) இறுதி மூச்சு வரை நேர்மறை சிந்தனையோடு உற்சாகமாக இருந்தும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து வருவது .

    தலைவர் எம் . ஜி . ஆர் ... திலகர் சிவாஜிக்கு பாடி இருக்க வில்லை என்றாலும் மற்ற நடிகர்களுக்குப் பாடி பெரும் புகழும்.. பிறருக்குப் பாடிய அவர்களும் புகழடைந்தனர்.ஆனால் இவர் பாடி இருக்கவில்லை என்றால் இரு திலகங்களின் பாடல்களும் எடுபட்டிருக்காது.

    சூரியனுக்கும் அஸ்தமனம் உண்டு.
    சந்திரனுக்கும் அமாவாசைகள் உணடு.
    டி .எம் . எஸ் மடடுமே பிரபஞ்சத்தில் பரிபூரணம்.
    அவர் தெயவத்துவம் என்பதே அதற்கு காரணம் .
    ....
    *நெகிழவுடன் கவிஞர் வைரபாரதி*........... Thanks...

  4. #2353
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் MGR எழுதிய" உலகம் சுற்றும் வாலிபன்", உருவான கதை (2)
    ✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌

    �� இலங்கைக்கு முன்னொரு முறை பயணம் சென்றேன். அப்போது இலங்கை நண்பர்கள் எனக்கும் திருமதி சரோஜாதேவி அவர்களுக்கும் பட்டம் வழங்க முடிவு செய்து அழைத்திருந்தார்கள். அதைப் பெறவும் , இலங்கையிலுள்ள நான் பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற கண்டியைக் காணவும் ஆவலோடு சென்றேன்.

    �� நானா சென்றேன்! - எத்தனையோ நாட்கள் அனுமதிக்காக் காத்திருந்தும், போலீஸ் அதிகாரிகளிடம் நான் அழைத்துச் செல்லப்பட்டும் , புறப்படுவதற்குக் குறிப்பிட்டிருந்த நாள் நெருங்கி வந்து கொண்டிருந்தும் அனுமதி மட்டும் கிடைக்கப்பெற்றேனில்லை. " டில்லியிருந்து வருகிறது " என்பார்கள் ஒரு நாள் " விமானத்திலேயே அனுப்பப்பட்டு விட்டதாம் " என்பார்கள் இன்னொரு நாள் . அதென்னமோ எனக்கு இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கும் உரிமைச்சீட்டைச் சுமந்த அந்த விமானம் மட்டும், ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகியும் சென்னை வந்து சேரவேயில்லை!

    ��கடைசியில் ஒருநாள் " சென்னை அரசினரின் சிபாரிசு இருந்தால் தான், டில்லியில் அனுமதி கிடைக்கும் என்ற நல்ல சேதி என்னிடம் சொல்லப்பட்டது . இல்லையென்று சொல்ல இத்தனை நாள் இந்த அனுமதிச்சீட்டு, ரயிலிலும் விமானத்திலும் அனாவசியமாகப் பயணம் செய்திருக்க வேண்டுமா? என்று எண்ணிய போது என் மேலும் என்னைச் சுற்றியுள்ளவர் மேலும் வெறுப்பே ஏற்பட்டது.

    �� ' ஆபத்பாந்தவன் 'என்பார்களே அதுபோல் என் மீது அன்பும் பாசமும் கொண்ட நண்பர் ஒருவர் சமயசஞ்சீவியாக வந்தார். அவர் நல்ல எழுத்தாளர் : கவிதை புனையும் திறமை பெற்றவர் ; பண்போடு பழகுபவர். அவருடைய பெயர் காஞ்சி அமிழ்தன் என்பது .

    நன்றி நாளை தொடரும்

    புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க... Thanks.........

  5. #2354
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!

    அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.

    ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"

    "போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

    உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

    அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!

    புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

    அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

    அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

    ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?

    பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

    புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

    எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

    எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

    எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

    வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!.. ....... Thanks.........

  6. #2355
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் M.G.R. தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
    சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
    காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
    1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
    துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
    1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
    ‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
    ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
    எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
    ‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
    கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
    ‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்........... Thanks.........

  7. #2356
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி முருகனில்* வெள்ளி முதல் (03/01/20) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

  8. #2357
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இரங்கல் செய்தி .
    -----------------------------

    அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகரும் , அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளரும், 1989ல் ஜானகி அணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வென்ற இருவரில் ஒருவருமான திரு.பி.எச் . பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் .

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்து திறமையாக சட்டசபையை நடத்தியவர் . வானளாவ அதிகாரம் கொண்ட சபாநாயகர் என்ற பெருமை பெற்றவர் .ஆரம்பத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் , அ.தி.மு.க. கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகி , நெல்லை மாவட்டத்தில் கட்சி பணியாற்றி பிரபலமானவர் .**
    ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் மறைந்த திரு.பி.எச். பாண்டியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்*அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

  9. #2358
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கண்டு வார இதழ் -01/01/20
    --------------------------------------------------

    எம்.ஜி.ஆரின் நம்பிக்கை*
    ------------------------------------------
    திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில், இருவரோடும்* இணைந்து நடித்தவர் என்ற பெருமை பெற்றவர் எம்.ஜி.ஆர்..* பாகவதருடன் அசோக்குமார், ராஜமுக்தி , ஆகிய படங்களிலும், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார் .* 1980ம் ஆண்டு பிப்ரவரி* 17ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது .* அன்று ஞாயிறுக்கிழமை செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னை தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது .* அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் , கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர். ரசித்து பார்த்தார் .* அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.* அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினார் .**

  10. #2359
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
    சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
    காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
    1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
    துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
    1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
    ‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
    ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
    எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
    ‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
    கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
    ‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்

    Whatsapp-ல் வந்தது

  11. #2360
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •