Page 231 of 402 FirstFirst ... 131181221229230231232233241281331 ... LastLast
Results 2,301 to 2,310 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2301
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  எம்ஜிஆர்... அவர்தான்..... அவர் மட்டுந்தான்... பகுதி-2! ஏழுமலை வெங்கடேசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - https://www.patrikai.com/mgr-he-was-...ai-venkatesan/......... Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2302
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  மேற்கண்ட பதிவில் மக்கள் திலகம் அவர்களின் இணையில்லா மாண்பினை சிறப்பாக கூறியிருக்கிறார்கள்............

 4. #2303
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  #கண்ணதாசனின் #வாத்தியார்

  மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதினார்...

  அதைப் படித்துப் பார்த்த மக்கள்திலகம்
  அந்தப்பாடலில் இரண்டுவரிகள் ஆபாசமாக இருக்கின்றன.
  என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்...

  கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற இந்த ஆபாசமான பாடல் வரிகள்...
  இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்

  அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்கள் என்று உதவிடைரக்டர் ராஜசேகரிடம் கொடுத்து அனுப்பினார் மக்கள்திலகம்... ராஜசேகர்கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார்.

  "எம்ஜிஆர் பாடலை மாற்றச் சொன்னாரா?" என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார் கண்ணதாசன் அவர்கள்.
  பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது

  வக்கீல் எம்ஜிஆரும்....மாட்டுக்கார எம்ஜிஆரும்

  தன் காதலிகளுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

  வக்கீல் எம்ஜிஆர் :

  பள்ளிக்கணக்கு
  கொஞ்சம் சொல்லி பழக்கு இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு...

  கதாநாயகி :

  போடுங்கள்
  கூண்டில் ஏற்றுங்கள்
  நான் போதும் என்று
  சொல்லும் வரை
  நீதி சொல்லுங்கள்...

  இந்த வரிகள் தான் முதலில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்...

  இந்த வரிகள் ஆபாசமாக உள்ளது என்று மக்கள்திலகம் மாற்றச்சொன்னார்

  #மக்கள்திலகம் #சொல்லிய #பிறகு #மாற்றிய #வரிகள்....

  "போடுங்கள்...
  கூண்டில் ஏற்றுங்கள்
  உங்கள் பொன்மனதை
  சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்..."

  மக்கள்திலகம் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகளின் சாயல் துளிக்கூட வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்.

  மக்கள்திலகம் தன் படங்களில் நீதி நேர்மை, சத்தியம், தாய்ப்பாசம், தர்மம், ஒழுக்கத்தைப் போதித்தவர்...

  "என் பாடல் வரிகளை ஒருவர் திருத்துகிறார் என்றால் அது எம்ஜிஆராகத் தான் இருக்கமுடியும்...!" என்று கூறியவர் கண்ணதாசன் அவர்கள்............ Thanks.........

 5. #2304
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

  இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

  முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

  ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

  கொள்கைப் பாடல்
  இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

  அதனை இப்போது காண்போமா?

  “இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
  உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

  இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

  அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

  ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

  இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

  “புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
  பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
  பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
  இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
  உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

  அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

  பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

  இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

  நெஞ்சிருக்கும் வரைக்கும்!
  ‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

  பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

  “சித்திரத்தில் பெண்ணெழுதி
  சீர்படுத்தும் மாநிலமே!
  ஜீவனுள்ள பெண்ணினத்தை
  வாழவிட மாட்டாயோ?”

  பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

  இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

  “நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
  நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
  நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
  நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

  எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

  இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

  இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

  “கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
  குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

  - என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

  “வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

  என்றும்,

  “தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

  என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது........... Thanks..........

 6. #2305
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காவியங்களில் வந்த பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு மட்டுமில்லாமல் உண்மையிலே அவரது இயற்கையான அழகு மற்றும் அவருடைய கட்டு மஸ்தான உடலின் அழகினை பற்றி பாடலாசிர்யர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒரு தொகுப்பு .


  புதிய சூரியன் உன் வரவு
  இந்த உலகம் யாவுமே உன் உறவு
  புதிய சூரியன் உன் வரவு
  இந்த உலகம் யாவுமே உன் உறவு
  எதையும் தாங்கிடும் நிலை பெறவே
  எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

  புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
  தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

  அல்லி மலராடும் ஆணழகன்
  கலைகள் தவழும் கண்ணழகன்
  அழகன் அழகன் பேரழகன்
  அல்லி மலராடும் ஆணழகன்
  கலைகள் தவழும் கண்ணழகன்
  கன்னி மயிலாடும் மார்பழகன்

  மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
  மன்னன் முகம் கனவில் வந்தது
  மஞ்சள் நதி உடலில் வந்தது

  சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
  கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
  நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
  பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

  ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
  நீ ஒரு தனிப்பிறவி
  ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
  ஏன் இனி மறுபிறவி
  என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
  அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
  மங்கை எனக்கு கண்ணாகும்
  மறந்து விட்டால் என்னாகும்

  நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
  அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
  எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

  அமுத தமிழில் எழுதும் கவிதை
  புதுமை புலவன் நீ
  புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
  புரட்சி தலைவன் நீ

  மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்

  இன்றே அவனை கைதி செய்வேன்
  என்றும் சிறையில் வைத்திருப்பேன்
  விளக்கம் சொல்லவும் முடியாது
  விடுதலை என்பதும் கிடையாது

  பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
  ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
  கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
  உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
  கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

  ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
  உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
  மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
  தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை

  பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
  சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

  அங்கே வருவது யாரோ
  அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

  நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
  உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
  நீ என்னென்ன செய்தாலும் புதுமை
  உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...
  தேக்கு மரம் உடலைத் தந்தது
  சின்ன யானை நடையைத் தந்தது
  பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
  பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
  தேக்கு மரம் உடலைத் தந்தது... Thanks...

 7. #2306
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
  செவ்வானமே உந்தன் நிறமானதோ
  பொன் மாளிகை உந்தன் மனமானதோ
  என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ


  கட்டான கட்டழகுக் கண்ணா -
  உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

  அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
  அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
  என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
  (அன்றொரு...

  ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
  வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
  வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
  (அன்றொரு...

  அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
  அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
  தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...

  நினைத்தேன் வந்தாய் நூறு வயது
  கேட்டேன் தந்தாய் ஆசை மனது


  தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
  வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
  வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
  மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
  சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

  சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
  இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
  சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
  இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
  தலைமகன் கலைமகள் புண்ணியமோ
  தாய் குலம் வழங்கிய சீதனமோ
  தலைமகன் கலைமகள் புண்ணியமோ
  தாய் குலம் வழங்கிய சீதனமோ......... Thanks.........

 8. #2307
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  மக்கள் போற்றும்
  மக்கள் திலகம் .
  ____________________
  சத்துணவு உணவு ஆண்டு முழவதும் வழங்கப் பட்டது பள்ளியில் பயிலாத மாணவர்களுக்கும் தரமான சத்துணவு வழங்கப்பட்டது . இந்த திட்டத்தினால் 1கோடிபேர் பயன் அடைந்தார்கள் என்பது வரலாற்று சாதனை .

  சத்துணவு திட்டத்திற்கு பின் தான் தமிழகத்தில் படிப்பறிவு அதிகரித்தது . இது தவிர காலணி, பாடப்புத்தகங்கள் ,பல் பொடி போன்றவைகளும் எம் ஜி ஆரால் இலவசமாக கொடுக்கப்பட்டது .

  கல்வி சீர்திருத்தமாக பிளஸ்-2 பாடத்திட்டம் ,மருத்தவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு . தனியாருக்கு பொறியல் கல்லூரிகள் கொண்டு வந்ததும் எம் ஜி ஆர் தான் .அவரது கல்வி புரட்சியினால் தான் இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ டி, துறையில் பெரும்புரட்சி செய்து வருகிறார்கள்

  நன்றி! திரு சைதையார்.......... Thanks.........

 9. #2308
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  ........... Thanks.........

 10. #2309
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  மக்கள் போற்றும் மக்கள் திலகம் .
  ____________________
  49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை
  68 சதவீதம் என்று உயர்த்தி பெரும்புரட்சி செய்தவர் எம் ஜி ஆர் தான்.

  சுப்ரிம் கோர்ட்டில் 50 சதவீதத்திற்குள் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டாலும் , சட்டப்படி 68 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி தமிழகத்தை தனி பாதையில் கொண்டு சென்றார் .

  அது மட்டுமின்றி அரசு மானியம் , அரசு நிதி பெறும் பல்கலைக் கழகம் , உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே 68 சதவீதம் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தனார் .

  நன்றி ! திரு சைதையார் ............ Thanks.........

 11. #2310
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  "உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!

  அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.

  ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"

  "போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

  உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

  அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!

  புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

  அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

  அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

  ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?

  பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

  புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

  எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

  எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

  எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

  வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!......... Thanks.........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •