Page 228 of 402 FirstFirst ... 128178218226227228229230238278328 ... LastLast
Results 2,271 to 2,280 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2271
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்,

  பெயர்.................................:மருதூர ் கோபாலமேனன் இராமச்சந்திரன்,

  நாம் அறிந்த பெயர்......இராமச்சந்திரன்)MGR.

  பிறப்பு.................................: ஜனவரி 17, 1917

  பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி(இலங்கை)

  இறப்பு................................:டிசம்ப ர் 24, 1987,

  மனைவிகள் .................:3,தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி,

  பிள்ளைகள்....................:கிடையாது,

  தந்தை பெயர்............................................. ............:திரு. கோபாலமேணன்

  தாயார் பெயர்............................................. ........... திருமதி. சத்தியபாமா

  சகோதரர் பெயர்............................................. ...... திரு.எம்.ஜி.சக்கரபாணி

  பள்ளியின் பெயர்............................................. ....கும்பகோணம் ஆணையடி பள்ளி.

  படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு

  கலை அனுபவம்........................................... ........7 வயது முதல்

  நாடக அனுபவம்........................................... ........1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்

  சென்னை வருகை............................................. ...சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி

  சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி

  திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்

  திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.

  நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்

  கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்

  முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி

  முதல் வேடம்............................................. ...........காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி

  முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்

  100 வது படம்.............................................. ............ஒளி விளக்கு - 20/09/1968

  கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

  மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100

  அரசியல் அனுபவம் ...........................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்

  முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்

  தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை

  அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972

  தமிழக முதல்வரானது,...................................... .1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்

  சென்ற வெளிநாடுகள்

  மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.

  எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்....

  •எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

  •பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

  •எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

  •எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

  •விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

  •சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

  •முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

  •‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம் ’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

  •நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !

  •எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

  •எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

  •காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

  •நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.

  •சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

  •எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

  •தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’

  •‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

  •அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!

  •ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

  •ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

  •அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

  •எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

  •முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

  •அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.

  •‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !

  வாழ்க்கைக் குறிப்பு,,,,,,,,
  இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேன்னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடை தந்தையின் மறைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர்

  நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்பட்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையாலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவர். இவர் தங்கமணியை மணந்தார். இவர் நோய்க்காரணமாக இறந்தார. அதன்பிறகு சதானந்தவதியை மணந்தார். இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது

  திரைப்பட வாழ்க்கை,,
  1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்

  எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார். 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக்

  இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

  எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்

  கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.

  இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.

  தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.

  மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.

  ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.

  கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.

  அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார்.ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.

  பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார். பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.

  அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

  அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

  புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்

  தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது............ Thanks.. ..........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2272
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  அவனியில் எவரும் பிறந்து மறைந்திடலாம்.. ஆனாலும் எங்கள் தலைவர் போல் வருமா?

  வாழ்கின்ற போதே வரலாறாய் ஆனவர்..
  மறைந்திட்ட போதும் வரலாற்றைப் படைக்கிறார்!

  ஏற்றிட்ட இலட்சிய தீபத்தைக் காத்தவர்
  ஏந்தலின் வழியினில் இன்றைக்கு இலட்சக்கணக்கானோர்!

  ஏழைக்கு வாழ்வு என்றைக்கு மலருமோ ..
  எந்நாளும் இதயத்தால் வழிகள் கண்டார்..

  கொடுத்துக் கொடுத்து அவர் தந்தவை எத்தனையோ
  திரும்பும் திசையெல்லாம் அவரின் புகழ்க் கவிதை!!

  எம்.ஜி.ஆர். என்கின்ற மூன்றெழுத்து மந்திரத்தை
  எந்நாளும் உச்சரிக்கும் பக்தர்கள் கூட்டமிங்கே!

  வயதினைக் கடந்தாலும் தலைவருக்கு அஞ்சலி செய்திட.. அலைகடலெனவே திரண்டமக்களிங்கே!

  எத்தனை மைல்கள் ஆனபோதிலும் என்வருகை நிச்சயம் என்றிட்ட குரல்கள் கணக்கினிலடங்கா!

  பிரான்ஸ் முதல் மெரீனா நோக்கிய படையெடுப்பு..
  சாரை சாரையாய் ரசிகர்கள் அணிவகுப்பு!!

  நேர்மையை.. நீதியை.. இலட்சியப் பாதையை..
  எம்.ஜி.ஆர் என்னும் கீதையை.. நெஞ்சில் சுமந்தபடி

  அன்பினைப் பொழிபவர் அனைவரின் உள்ளத்திலும்
  ஆட்சி நடத்துகின்ற பொன்மனச்செம்மலவர்

  32வது நினைவுநாள் பேரணி.. உலகில் இதுவரை.. எவருக்கேனும் இதுபோல் தானாக சேரும் கூட்டம் தரணியில் வாய்த்ததுண்டா? வாய்ப்பும் உண்டா?

  ஒரே சூரியன்! ஒரே சந்திரன்! ஒரே எம்.ஜி.ஆர்!!

  அன்புடன்
  காவிரிமைந்தன்.......... Thanks.........

 4. #2273
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like

 5. #2274
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  மக்கள் திலகம் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் மனித நேய திருநாள் விழா இதயம் கமழும் இன்னிசை ஆன்றொர்களின் ஆசியுடன்உங்களின் ஆதரவுடன் ஜனவரி 26.01.2020 நடைபெறும் விழாவிற்க்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்........ Thanks...

 6. #2275
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் டாக்டர் திரு எம்ஜிஆர் அவர்கள் நினைவு தினம் இன்று அனைவரும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் மற்றும் அவர்கள் பகுதியில் அஞ்சலி செலுத்தியவர் எண்ணிக்கை கடந்த வருடம் சாதனை முறியடிப்பு. நமது தலைவர் அனைவரின் உள்ளத்தில் வாழ்ந்து வழி காட்டி வருகிறார். அவரது வழியில் அனைவரும் செல்வோம். வெற்றி மகுடத்தை அவருக்கு நாம் சமர்பிப்போம்��....... Thanks.........

 7. #2276
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  உலகிலேயே... எந்த பதவியும் வகிக்காத போதே அமெரிக்கா ,ரஷ்யா, சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை, போன்ற நாடுகள் ஒரு அதிபருக்கு வழங்கும் பைலட் காரோடு வரவேற்றது எம் ஜி ஆரை டாக்டர் உதயகுமார் எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் எனும் நூல் மூலமும் இதயக்கனி மூலம் மொரீஸ் நாட்டில் சுதந்திர தின கொண்டாடத்தில் அந்த நாட்டு பிரதருக்கு அடுத்து அமரவைத்து சிறப்பு செய்ய பட்ட எம் .ஜி. ஆரி.ன் பெருமைகளை அறியமுடியும் .........

  வாழ்க எம் ஜி ஆர் புகழ்.............. Thanks.........

 8. #2277
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  ஈகை பாடம் கற்றுக்கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

  தீமையே வெல்லும் என்ற கருத்தை எதிர்த்துப் புரட்சி செய்து கலியுகத்தை கலியுகத்தின் தத்துவத்தை தோற்கடித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
  புயல் வெள்ளச் சேதங்களுக்கு இன்றைக்கும் மற்ற மாநிலங்களை விட சினிமாகாரர்களும் தொழிலதிபர்களும் தமிழகத்தில் இருந்து உதவுகிறார்கள் என்றால் அதற்கு மூலகாரணமே நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கற்று கொடுத்த ஈகை பாடம் என்று உறுதியாக கூறலாம் அந்த புரட்சியை தொடர்ந்து எடுத்து செல்ல அதற்கு பின் வந்தவர்களால் இயலவில்லை ; காரணம் அதற்கு சில தனிப்பட்ட சந்தோஷங்களை தியாகம் செய்ய வேண்டும் .
  அதற்கு இன்றுள்ளவர்கள் தயாராக இல்லை இன்னொன்று வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும் இரக்க சுபாவம் வேண்டும் அதுவும் இன்று பலரிடம் இல்லை .........

  புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க.

  ஸ்ரீ எம்.ஜி.ஆர் துணை

  ஸ்ரீ எம்.ஜி.ஆர் பக்தன் சு.சரவணன்............ Thanks...

 9. #2278
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  மக்கள் போற்றும்
  மக்கள் திலகம் !
  ___________________
  புரட்சித்தலைர் எம் ஜி ஆரை தமிழக மக்கள் நடிகராக அல்லது முதலமைச்சராக மட்டும் பார்க்க வில்லை தாய்க்கு மகனாக தங்கைக்கு அண்ணனாக உழைக்கும் மக்களின் தோழனாக ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டும் சக்தியாக சுருக்கமாக சொல்வதென்தென்றால் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எம் ஜி ஆரை மக்கள் கருதினார்கள் அதனால்தான் அவர் மரணம் வரையிலும் தோல்வி காணாத முதல் அமைச்சராய் இருந்தார் !

  நன்றி! திரு சைதையார் !.......... Thanks.........

 10. #2279
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  மக்கள் திலகம் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் மனித நேய திருநாள் விழா இதயம் கமழும் இன்னிசை ஆன்றொர்களின் ஆசியுடன்உங்களின் ஆதரவுடன் ஜனவரி 26.1.2020 நடைபெறும் விழாவிற்க்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்........ Thanks.........

 11. #2280
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  ......... Thanks.........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •