Page 223 of 402 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2221
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2222
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2223
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அறிந்தும் அறியாதது
    தெரிந்தும் தெரியாதது

    புர*ட்சித்த*லைவ*ருட*ன் சிலோன் எம்ஜிஆர் என்றழைக்க*ப்ப*ட்ட* விஜ*ய* கும*ர*ணதுங்கே!

    இவ*ர் 114 ப*டங்க*ளில் ந*டித்துள்ளார். பெரும்பாலும் வெற்றிப்ப*ட*ங்க*ளே. பாட*க*ர், அர*சிய*ல் த*லைவ*ர், த*யாரிப்பாள*ர் என ப*ன்முக*த்தன்மை கொண்ட*வ*ர்.

    தன*து அர*சியல் எதிரிக*ளால் 1988 பிப்ர*வ*ரியில் கொடூர*மாக சுட்டுக்கொல்ல*ப்ப*ட்டார். அப்போது இவ*ர் வ*ய*து 43 மட்டுமே. விஜ*ய* கும*ர*ணதுங்கே ம*றைந்த* பிற*கும் இவ*ர் ந*டித்த சில ப*ட*ங்க*ள் வெளியாகி வெற்றி பெற்ற*ன. த*மிழில் ந*ங்கூர*ம் என்ற* ப*ட*த்தில் லட்சுமிக்கு ஜோடியாக* ந*டித்துள்ளார்.

    1984ல் ஸ்ரீல*ங்கா ம*காஜ*ன க*ட்சியை விஜ*ய*குமார*துங்கே துவ*க்கினார். இவ*ர*து மனைவி ச*ந்திரிகா குமார*துங்கே 10 ஆன்டு காலம் இலங்கை அதிப*ராக இருந்துள்ளார்.......... Thanks.........

  5. #2224
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்...
    ---------------------------------------------------------------------
    உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..

    புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், நடிக மன்னன் , நடிகர் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .

    நடிகர்களில் தேசிய அளவில் "பாரத்" விருது பெற்றதில் முதல்வர் ...........

    மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் ..........

    1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .

    1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
    தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .

    1987ல் மறைந்த பின்னர், 1988 ம் ஆண்டு, மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரு.க்கு "பாரத ரத்னா" எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது ............

    1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
    இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
    விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .

    சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

    மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .

    சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .

    திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு

    சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு

    சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .

    சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .

    தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .

    பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .

    மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .

    சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .

    1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்

    1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
    வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
    மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
    மக்கள் திலகம் மட்டுமே .

    தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.

    சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .

    வரும் 13/06/2019 & 14/06/20/19 நாடககளில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை யின் அகில இந்திய கருத்தரங்கம்
    நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
    முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .

    வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
    அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .

    இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
    அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்........... Thanks...........

  6. #2225
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    .மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் இந்த வாரம் (20/12/19) வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல் விவரம்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சென்னை அகஸ்தியா - விவசாயி* - தினசரி மாலை காட்சி மட்டும் .-

    மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகா* -* எங்க வீட்டு பிள்ளை -* * * * ** * * * * * * * * * தினசரி 3 காட்சிகள்*
    திண்டுக்கல் - என்.வி.ஜி.பி.* *- எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    கோவை* - சண்முகா* - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*

    கோவை - டிலைட்* * - பணக்கார குடும்பம்* -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * * * * * * * * * * * * (24/12/19 முதல் )

    திருப்பூர் அனுப்பர்பாளையம்* கணேஷ் - குடியிருந்த கோயில் -* 24/12/19* அன்று சிறப்பு* காட்சி மட்டும்*

    விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் -* ஆயிரத்தில் ஒருவன் _தினசரி 4 காட்சிகள்*

    விவரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன். மேலும் பல நகரங்கள், துணை நகரங்கள் , கிராமங்களில் அவ்வப்போது வெளியாகும் தலைவர் படங்கள் நமக்கு தகவல் தெரியாமல் ஓடி கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
    Last edited by puratchi nadigar mgr; 20th December 2019 at 10:55 PM.

  7. #2226
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தனியார் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    20/12/19* - கே.டிவி* *- பிற்பகல் 1 மணி* - வேட்டைக்காரன்*
    * * * * * * * *** * * * * * * * * *வசந்த்* *=* பிற்பகல்* 1.30 மணி* - தாயின் மடியில்*

    * * * * * * * * * *ஜெயா டிவி* *- இரவு* 11 மணி* - விக்கிரமாதித்தன்**

  8. #2227
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காதலிலும் #கண்ணியம்

    #எம்ஜிஆர் அவர்கள் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்...
    நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது இப்படிக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்ஜிஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது...

    அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இன்றைய படங்களில் வரும் காதல் காட்சிகளைக் குடும்பத்தோடு பார்க்கவே முடியாது. காதலை விட விரசம் தான் அதிகமாக இருக்கும்...காதல் என்னும் போர்வையில் "காதலைக் கேவலமாக்கி" வைத்திருப்பர்...

    ஆனால் புரட்சித்தலைவர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறைக் காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் ஒரே ஒரு திரைக்காவியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

    பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சிப் பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது...

    வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்ஜிஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.

    “இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும்.

    “அதுவரை வந்தால் போதும் போதும்
    அடுத்தது என்னம்மா?

    ஆரத்தி மேளம் மணவறை கோலம்
    வருமா சொல்லம்மா?

    என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாகப் பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.

    சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை

    “அம்மம்மா இது புதுமை – நான்
    அறியாதிருந்த …… (சிரிப்பார்)
    பேச முடியாத பெருமை – இந்த
    இனிமை இனிமை இனிமை

    என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார்.

    இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.

    சண்டைக்காட்சியிலும் மனிதாபிமானம், காதலிலும் கண்ணியம்
    #அதான் #வாத்தியார்.......... Thanks.........

  9. #2228
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    செய்தி திருத்தம்
    ----------------------------
    திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில் இன்று முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் நடித்த "குடியிருந்த கோயில்"தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது என்பது தவறான செய்தி.
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வரும் செவ்வாய் கிழமை அன்று சிறப்பு காட்சி நடைபெற உள்ளது என்பது சரியான தகவல் .தவறுக்கு வருந்துகிறேன்

  10. #2229
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை"
    பனிவுடன் படைக்கும்
    நம் தெய்வம் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் பெருமைமிகு புரட்சி வரலாறுகளை உலகெங்கும் பரப்பும் முயற்ச்சியில்...
    மற்றுமொரு சாதனையாக வருகின்ற 2020ன் , 103வது பிறந்தநாளை முன்னிட்டு,
    அட்வான்ஸ் கொண்டாட்ட விழாவாக விசுவாசமுள்ள புரட்சித் தொண்டர்களின் இல்லத்தில் ஜொலிக்கும் வகையில் அசத்தலான பெரிய அளவில் கண்ணை பரிக்கும் அழகு வண்ணத்தில் அபூர்வ புகைப்படங்களுடன் 2020ம் ஆண்டு எம்ஜிஆர் காலண்டர் வெளியிடப் படுகிறது.
    வாங்கி பாதுகாத்து மகிழ தொடர்பு கொள்ளுங்கள்....
    எம்ஜிஆரின் காலடி நிழல்
    க. பழனி 6364043271
    சம்பங்கி ஜி. எஸ். ஆர்.
    9731185524
    க. ராஜசேகர் 9880825975
    டி. பிரகாஷ் 9964466361
    சுதர்சன் 7019119815
    ��.......... Thanks.........

  11. #2230
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் தன் குருவாக மதித்த கலைவாணர் தன் 49 ஆவது வயதில் நோய்வாய் பட்டு சிகிச்சை பெற்று வர.

    அவர் உடன் இருந்த 5 முக்கிய சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன், டனால் தங்கவேலு மற்றும் அனைவருடனும் தம்பி எம்ஜியார் மிகவும் நல்லவர் நான் மறைந்து விட்டால் அவருக்கு உதவியாக இருங்கள் என்று பல முறை கூற

    ஒரு நாள் சிகிச்சை பெற்று வந்த போது அசந்து தூங்கி விட கண் முழித்த பின் இங்கு என்னை பார்க்க தம்பி எம்.ஜி.ஆர் ., வந்து இருந்தாரா ?!என்று கேட்க, ஆமாம் அண்ணே... நீங்க உறங்கி கொண்டு இருப்பதால் எழுப்ப வேண்டாம் என்று சொல்லி போய் விட்டார் அவர் சொல்ல.

    எப்படி எம்.ஜி.ஆர்., வந்தாரா? என்று சரியாக கேட்கிறீர்கள் என்று அனைவரும் கேட்க.

    வேறு எவர் இந்த நாட்டில் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி இவ்வளவு பணத்தை வைக்க போகிறார் என்று சொல்ல.

    கொடுக்கும் உதவி கூட அடுத்தவர் நிலை அறிந்து விளம்பரம் செய்யாமல் கொடுத்த வள்ளல் புகழ் என்றும் காப்போம்.

    வாழ்க எம் ஜி.யார்., புகழ் நன்றி..தொடரும்............. Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •