Page 222 of 402 FirstFirst ... 122172212220221222223224232272322 ... LastLast
Results 2,211 to 2,220 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2211
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  The beginning of a new history
  என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் மலேசியா வீர வாலிபர்கள் ஹிமாலய மலையினை தாண்டி அன்னபூரண மலை உச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையத்தின் பெருமையினை நாட்டிய வீர மலேசியா ரத்தத்தின் ரத்தங்களை வரவேற்க்க ஆனந்த கண்ணீருடன் காத்திருக்கின்றேன் !


  https://m.facebook.com/story.php?sto...85268901959424.......... Thanks...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2212
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  கோவை டிலைட்டில் 24/12/19* செவ்வாய் முதல், புரட்சி தலைவரின் 32 வது*நினைவு நாளை முன்னிட்டு* "பணக்கார குடும்பம் " தினசரி 2 காட்சிகள் கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும் திரையிடப்படுகிறது .

  தகவல் உதவி: கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .

 4. #2213
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  கோவை டிலைட்டில் 27/12/19 வெள்ளி முதல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த*தேவரின் "தாயை காத்த தனயன் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு வருகிறது .

  தகவல் உதவி : கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .

 5. #2214
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,908
  Post Thanks / Like
  *மச்சம்யா அந்த* *மனுஷனுக்கு !*

  எம்.ஜி.ஆர். பற்றி என் நண்பர்களோடு பேசும்போது நச்சென்று ஒரே வாக்கியத்தில் இப்படி கமெண்ட் அடிப்பார்கள்.
  ஆம். அப்படி மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்த போற்றத்தக்க மனிதர்தான் எம்.ஜி.ஆர்.

  சினிமாவில் இருந்தவரை சிகரம் தொட்ட சிம்மாசனம்.
  அரசியலில் நுழைந்தால் , அரசாளும் அரியாசனம் .

  இப்படி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

  வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வெற்றி முகம் மட்டும்தான் தெரியும்.ஆனால் அவருக்குள் இருந்த வேதனை மனம் -
  அதை யார் அறிவார் ?

  தன் வாழ்க்கை பற்றி ஒரே வரியில் எம்.ஜி.ஆர். சொன்ன இந்த வாசகம் , நம் இதயத்தை உலுக்குகிறது.

  எம்.ஜி.ஆர். சொன்னது :
  என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது!

  இதை அவரது சாதாரண சங்கட காலங்களில் சொல்லி இருந்தால் பரவாயில்லை.
  ஆனால் , புகழின் உச்சிக்குப் போனபின் , ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்.

  ஆம் . போராட்டங்கள்தான் புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை , புரட்சி தலைவர் ஆக்கியது.

  "எல்லோரும் எம்.ஜி.ஆர். போல ஆக முடியுமா ?" என என் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்பதுண்டு.

  அவர்களிடம் நான் கேட்கும் பதில் கேள்வி :

  ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து , பசியிலும் பட்டினியிலும் சோர்ந்து ,
  ஒரு நடிகராக உருவெடுப்பதற்குள் அவர் பட்ட அவமானங்கள்.
  அதை நம்மில் எத்தனை பேர் பட்டிருப்போம் ; அல்லது படத் தயாராக இருப்போம் ?

  எனது இந்தக் கேள்விக்கு பல நண்பர்களின் பதில் மௌனமே !

  அது மட்டுமா ?
  1959 இல் நாடகத்தில் நடித்தபோது கால் முறிவு.
  1967 இல் துப்பாக்கிசூடு.
  1972 இல் தான் வளர்த்த சொந்தக் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்ட அவலம்.

  இது எல்லாவற்றையும் விடுங்கள்.
  ஒரு சாதாரண சராசரி மனிதனாக அவரது இதயத்தின் அடித்தளத்தில் இருந்த ஏக்கம்... அது ஈடில்லாத பெரும் துக்கம்.

  இதோ, அந்த சோகம் -
  அவரது சொந்த வார்த்தைகளில் :
  எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா ? அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது !

  நெஞ்சை நெகிழ வைக்கிறது அந்த நினைத்ததை முடிப்பவனின் நிறைவேறாத ஆசை.

  நான் நண்பர்களிடம் சொல்வேன் : இவ்வளவு சோதனைகள் , ஏக்கங்கள் , அவமானங்கள் ...
  எல்லாவற்றையும் படத் தயாராக இருந்தால் , எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படலாம் , எல்லோருமே!

  இதற்கு என் நண்பர்களின் பதில் , ஏக்கப் பெருமூச்சு மட்டுமே !

  ஆம் . நாம் ஏக்கத்துடன் பார்க்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை
  ஏக்கங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது !✍🏼🌹............ Thanks.........

 6. #2215
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  நாளை (20/12/19) வெள்ளி முதல் விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டலில் தினசரி 4* காட்சிகளில் வெள்ளி* திரைக்கு வருகிறது .

  தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

 7. #2216
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  மாலை மலர் -19/12/19

  அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது :அ.தி.மு.க. நிறுவனர் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது .**

  இதையொட்டி வருகிற 24ந்தேதி* செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ .தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்* துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்* அமைச்சருமான*எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும்* மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர் .

  அதை தொடர்ந்து ,எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்* உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.* இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் , எம்.பி. , எம்.எல்.ஏக்கள் மற்றும் அனைத்து பிரிவு பிரதிநிதிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது .

 8. #2217
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  மாலை முரசு -19/12/19

  டிசம்பர் 24ந்* தேதி 32 வது நினைவுநாள்*
  -------------------------------------------------------------

  எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி - ஓ .பி.எஸ். அஞ்சலி*
  ---------------------------------------------------------------------------------------------

  வருகிற 24ந் தேதி எம்.ஜி.ஆரின் 32 வது* ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு*அவரது* நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர் .இது குறித்து அ. தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள* செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :

  எம்.ஜி.ஆரின் 32வது* ஆண்டு நினைவு நாளான 24-12-2019 செவ்வாய்க்கிழமை*காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள*எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்*அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ,இணை* ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்* வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர் .* அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடம், வளாகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது .**

 9. #2218
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  வெள்ளி முதல் (19/12/19) திருப்பூர் அனுப்பர்பாளையம், கணேஷில் புரட்சி தலைவர்*புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு விஜயம் .

  தகவல் உதவி : திருப்பூர் நண்பர் திரு.நடராஜன் .

 10. #2219
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  சென்னை அகஸ்தியாவில் வெள்ளி முதல் (20/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளினை முன்னிட்டு , தேவரின் "விவசாயி " தினசரி மாலை காட்சி மட்டும் திரையிடப்படுகிறது .

  தகவல் உதவி : தங்கசாலை திரு.ராமு .

 11. #2220
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •