Page 215 of 402 FirstFirst ... 115165205213214215216217225265315 ... LastLast
Results 2,141 to 2,150 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2141
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர். நடத்திய திடீர் திருமணம்*
  ------------------------------------------------------------

  1985ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சேலம் மாவட்டம் நாமக்கல் எம்.எல்..ஏ.திருமணத்தை நடத்தி வைக்க தன்* மனைவி ஜானகி அம்மையார் அவர்களுடன் வருகிறார் .* காலை 9 மணிக்கு முகூர்த்தம் .* 8 மணியளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து மண்டபம் நோக்கி புறப்படுகிறார்.* எம்.எல். ஏ .வீட்டு திருமணம் என்பதால் திருமண மண்டபம் விழா கோலம் பூண்டிருந்தது .

  விஷயம் அறிந்த நாமகிரிபேட்டையை சார்ந்த ஒரு தலைவர் வெறியர் , தனக்கு அப்போது அங்கு நடக்க வேண்டிய திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுடன் இந்த மண்டபம் நோக்கி வந்து, கழுத்தில் மாலைகளுடன்*எம்.எல்.ஏ. வீட்டு திருமண மண்டப வாசலில் , தலைவர் என் திருமணத்தையும்*நடத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி நிற்க, கட்சிக்காரர்களும் , காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அந்த ஜோடியை அப்புறப்படுத்த முயல .

  இந்த செய்தி காரில் வந்துகொண்டு இருந்த முதல்வருக்கு சொல்லப்பட , அவரது கார் திருமண அரங்கை நெருங்க ,அந்த ஜோடியை எவர் தடுக்க முயன்றும் முடியாமல் தன இதயதெய்வம் எம்.ஜி.ஆர். முன் வந்து நிற்க , எம்.ஜி.ஆர். அவர் தோளில் தட்டி, இதுபோல அனுமதி இல்லாமல் இப்படி நடப்பது தவறு .* நான் கட்சி தலைவன்தான் அதுசரி. ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் .* அதில் நம்மால் குழப்பம் வரக்கூடாது , என்னுடன் வாருங்கள் என அழைத்து ,அந்த ஜோடியை வர சொல்ல, , பார்ப்பவர்கள்* கண்கள் நடப்பதை நம்பமுடியாமல்*தவிக்க, அதே மணமேடையில் அந்த இரண்டு ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து , விஷயம் தெரிந்த உடன் , தன்னுடன் கொண்டு வந்திருந்த*இரண்டு பரிசு பொட்டலங்களை தனித்தனியே இரண்டு ஜோடிகளிடம் கொடுத்து விட்டு வாழ்த்தி பேசி, புறப்பட்டு சென்றார் .**

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2142
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,935
  Post Thanks / Like
  என்றும் மக்கள் செல்வாக்கில் ... முதல் இடத்தில் எம்.ஜி ஆர்., எனும் மூன்றெழுத்துதான்...

  NEWS 7 தொலைக்காட்சியும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழும் இணைந்து நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பில் ருசிகரமான தகவல்கள்.
  05.12.2017 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த தகவல் :

  ரஜினி, கமல், விஜய் இவர்களில்
  தமிழக அரசியலில் அடுத்த எம்ஜிஆர் யார்
  இந்த கேள்விக்கு மக்கள் 'எம்.ஜி.ஆருக்கு இணையாக இந்த மூவரையும் நினைப்பதே தவறு' என்றனர் கோபத்துடன். சினிமாவில் இருந்துக்கொண்டே மக்களின் தலைவராக தோன்றியவர்தான் எம்.ஜி.ஆர்.எனவே எம்.ஜி.ஆருடன் இவர்களை ஒப்பிடவே முடியாது.

  எனினும் அவர்களை சமாதானப்படுத்தி கேள்வி கேட்டதற்கு
  எம்ஜிஆர் - 56.6%.
  கமல்--16.2%
  ரஜினி--14.8%
  விஜய்--12.4%
  என்று பதிலளித்து முதல் இடத்தை எம்.ஜி.ஆருக்கே கொடுத்தனர்.

  இதில் ஒரு வியக்கத்தக்க விஷயம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர், இளைஞிகள் எம்.ஜி.ஆரை நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை என்றாலும்
  எம்ஜிஆர் - 52.1 சதவீதம்
  விஜய் -16.6 சதவீதம்
  கமல் - 15.8 சதவீதம்
  ரஜினி - 15.5 சதவீதம்
  கொடுத்து, எம்ஜிஆருக்குதான் முதல் இடம் அளித்தனர்.

  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் : எம்.ஜி.ஆர் -- 62.7 %
  கமல்--16.1%
  ரஜினி--13.8%
  எக்காலத்திலும் எம்.ஜி.ஆர்தான் என்று பதிலளித்த மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள்........... Thanks.............

 4. #2143
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,935
  Post Thanks / Like
  05/12/2019 அறிவிப்பு பகுதி
  கலைசெல்வி ஜெயலலிதா அவர்கள் சம்பந்தபட்ட திரை உலக பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி.
  அவரது சொந்த வாழ்க்கை --அரசியல் வாழ்க்கை பற்றிய பதிவுகள்--கமண்ட்டுகளுக்கு அனுமதி இல்லை.
  பதிவுகளிலும் கமண்ட்-( பின்னூட்டங்கள்)-(COMMENT) கண்ணியமானதாகவும் நாகரீகமாகவும் இருத்தல் அவசியம்.

  இன்று கோமளவள்ளி என்ற பெயரைக் கொண்ட அம்மு, 'கலைச்செல்வி' என்று தமிழ்த் திரையுலகத்தினரால் போற்றப்பட்ட, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை 'செல்வி' ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள் ஆகும்.

  தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர்,கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தன. இப்படி இடம் பெயர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கர்நாடக மாநிலம் மேல்கோட்டைக்குச் சென்றன. அந்தக் குடும்பங்களில் இவரது தாத்தாவுடைய குடும்பமும் ஒன்று.அவர் இந்த ஊரிலிருந்த கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதா அவர்களுக்கு பள்ளிப் படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. (இவரது சித்தி வித்யாவதியும் சிறந்த நடிகையாவார். 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் எம்.ஜி.சக்ரபாணியுடன் இணைந்து நடித்தவர்)

  பள்ளிப் படிப்பில் எப்போதும் முதல் மாணவியாகவே திகழ்ந்தார் . அவர் பெங்களூரில் இருந்தபோது பிஷப் கார்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர் 1958-ஆம் ஆண்டு முதல் 1964 -ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

  தாய் மொழி தமிழைப் போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில ஆவணப் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.1964 -ல் ஜெயலலிதா அவர்களின் திரையுலகப் பிரவேசம் “சின்னடா கொம்பே” என்ற கன்னடப் படத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிமுகமானது. இப்படத்தின் இயங்குனர் பந்துலு அவர்கள். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் ஜோடி கல்யாண்குமார்.

  1965-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய 'வெண்ணிற ஆடை' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 'வெண்ணிற ஆடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். இதில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றன. சிவாஜி அவர்களுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களிலேயே மிக அதிக வசூல் பெற்று சாதனை புரிந்தது.

  1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செய்தார் ஜெயலலிதா. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று சிவாஜியிடம் வாழ்த்து பெற்றவர், பின் நாட்களில் அவருடனேயே இணைந்து 17 படங்களில் நடித்தார்.

  முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடி மிகவும் புகழ் பெற்றது. ஜெயலலிதாவின் அழகு, திறமை, நாட்டியம் அவருக்கென்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவி.எம்.ராஜன்,முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

  அடிமைப் பெண், ரகசியபோலீஸ், காவல்காரன், குடியிருந்த கோவில், என் அண்ணன், கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், பட்டிக்காடா பட்டணமா, சுமதி என் சுந்தரி, பாட்டும் பரதமும் , யார் நீ, நான், சூரியகாந்தி, வந்தாளே மகராசி ஆகிய படங்கள் ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கற்களாக அமைந்தன. இயற்கையாகவே அழகான தோற்றம்கொண்ட ஜெயலலிதா அந்த இளவயதிலேயே படத்துக்குப் படம் நடிப்பில் வேறுபாடுகள் காட்டினார். அதனால் அவரை மானசீகமாக விரும்பக்கூடிய ரசிகர்கள் பெருகினார்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' படம் அவரது சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டியது. தெலுங்குப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்ற பிரபலங்களுடன் நடித்து அவர்களுக்கிணையாக புகழ் பெற்றார் ஜெயலலிதா. இந்தியில் தர்மேந்திராவிடன் கூட ஜோடியாக நடித்துள்ளார் ஜெயலலிதா. (Izzat 1968 ) மலையாளத்தில் 'ஜீசஸ்' என்ற ஒரு படம் மட்டுமே நடித்தார். தமிழில் 87 படங்களும், தெலுங்கில் 29 படங்களும், கன்னடத்தில் 7 படங்களிலும் நடித்துள்ளார்

  புடவை, நவீன ஆடைகள் என எந்த ஆடையும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு இருந்தது. ‘வந்தாளே மகராசி’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களில் சண்டைக் காட்சிகளிலும் தான் சளைத்தவரில்லை என்று நிரூபித்தார்.
  'காவிரி தந்த கலைச்செல்வி' என்று நாட்டிய நாடகங்களும் அரங்கேற்றம் செய்து அசத்தினார் ஜெயலலிதா. 'சோ'வின் நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ படமாக்கப்பட்டபோது ஜெயலலிதா அதில் நடித்தார். மிக வித்தியாசமான பாத்திரம் அது. அவருடைய உயரிய ஆற்றல் வெளிப்பட்ட படம் ‘சூரியகாந்தி’. கணவனுக்கு மனைவியிடம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை குறித்த படம். ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.

  ஜெயலலிதாவின் 100 வது படமான “திருமாங்கல்யம்” 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாக அவர் குறைத்துக்கொண்டார். 1960, 70 -களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1970-களின் தொடக்கத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்று வலம் வந்தவர் ஜெயலலிதா.1980-இல் வெளிவந்த “நதியைத்தேடி வந்த கடல்” என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

  மிகச் சிறந்த பாடகியாகவும் ஜெயலலிதா விளங்கினார். 'அடிமைப் பெண்' படத்தின் 'அம்மா என்றால் அன்பு' என்று இவர் பாடிய பாடல் பிரபலம். 'ஓ..மேரி தில்ரூபா' என்று டி.எம்.எஸ் அவர்களுடன் .. அவர் பாடிய பாடல் இன்றும் பிரபலம். அது போல 'வைரம்' படத்தில் எஸ்.பி.பி யுடன் இவர் பாடிய 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடல் மிகப் பிரபலம்.

  ஜெயலலிதா நடித்த முக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

  வெண்ணிற ஆடை
  ஆயிரத்தில் ஒருவன்
  கன்னித்தாய்
  முகராசி
  தனிப்பிறவி
  சந்திரோதயம்
  கௌரிக் கல்யாணம்.
  மேஜர் சந்திரகாந்த்
  மணி மகுடம்
  குமரிப்பெண்
  யார் நீ?
  நீ
  மோட்டார் சுந்தரம்பிள்ளை
  தாய்க்குத் தலைமகன்.
  நான்
  மாடிவீட்டு மாப்பிள்ளை
  அரச கட்டளை.
  காவல்காரன்
  கந்தன் கருணை
  ராஜா வீட்டுப் பிள்ளை
  பணக்காரப் பிள்ள
  எங்க ஊர் ராஜா
  புதிய பூமி.
  தேர்த் திருவிழா
  குடியிருந்த கோவில்
  மூன்றெழுத்து
  முத்துச் சிப்பி
  காதல் வாகனம்.
  கணவன்
  கலாட்டா கல்யாணம்
  பொம்மலாட்டம்
  கண்ணன் என் காதலன்
  ஒளி விளக்கு
  ரகசிய போலீஸ் 115
  அன்று கண்ட முகம்
  நம் நாடு
  தெய்வ மகன்.
  மாட்டுக்கார வேலன்
  அடிமைப்பெண்
  அனாதை ஆனந்தன்
  குருதட்சணை.
  தேடி வந்த மாப்பிள்ளை.
  எங்க மாமா
  எங்கள் தங்கம்
  எங்கிருந்தோ வந்தாள்
  என் அண்ணன்.
  பாதுகாப்பு
  சுமதி என் சுந்தரி
  ஆதி பராசக்தி.
  அன்னை வேளாங்கண்ணி.
  சவாலே சமாளி
  தங்க கோபுரம்
  குமரிக் கோட்டம்.
  ஒரு தாய் மக்கள்.
  நீரும் நெருப்பும்.
  அன்னமிட்ட கை.
  பட்டிக்காடா பட்டணமா
  ராஜா
  ராமன் தேடிய சீதை.
  நீதி
  திக்குத் தெரியாத காட்டில்
  சக்தி லீலை
  பாக்தாத் பேரழகி
  பட்டிக்காட்டு பொன்னையா.
  வந்தாளே மகராசி
  கங்கா கவுரி
  சூர்யகாந்தி
  அன்பைத் தேடி
  அன்புத் தங்கை
  தாய்
  வைரம்
  திருமாங்கல்யம்
  அவளுக்கு ஆயிரம் கண்கள்
  யாருக்கும் வெட்கம் இல்லை
  அவன்தான் மனிதன்
  பாட்டும் பரதமும்
  கணவன் மனைவி
  சித்ரா பவுர்ணமி
  ஸ்ரீ கிருஷ்ண லீலை
  உன்னை சுற்றும் உலகம்
  நதியை தேடி வந்த கடல்

  இன்று பாடல்களுக்கு வரையறை இல்லை

  கட்டுரை ஒன்று மட்டுமே

  படங்கள்- 4

  அரசியல் படங்களுக்கும், பதிவுகளுக்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை

  நன்றி
  அன்புடன்
  நிர்வாகிகள்........... Thanks.........

 5. #2144
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,935
  Post Thanks / Like
  கடந்த வாரம் கும்பகோணம்- msm dts., தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை கண்டார்... வசூல் சக்கரவர்த்தி... கோடியில் ஒருவர் வாழும் "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல்... தகவல் உதவி நண்பர் திரு mc. சேகர்...தஞ்சை...

 6. #2145
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  சென்னை பாலாஜியில்* இன்று முதல் (06/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4* காட்சிகள் நடைபெறுகிறது .

  தகவல் உதவி : தங்கசாலை திரு.ராமு*

 7. #2146
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ராமன் தேடிய சீதை " ஒரு வார வசூலாக ரூ.1,10,000/- ஈட்டியுள்ளதாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
  படு மோசமான பிரிண்ட் இந்த வசூலை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*என்றும் கூறினார் .*

 8. #2147
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,935
  Post Thanks / Like

 9. #2148
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,935
  Post Thanks / Like
  வாழும் தெய்வம் புரட்சி தலைவரின் தொலைநோக்கு பார்வை இதுவரை சோடைபோனது கிடையாது என்பதற்கு உதாரணம் தான் முன்னாள் முதல்வர் அம்மா. அந்த கழக பொதுசெயலாளர் அவர்களின் 3 வது நினைவு நாளை நினைவுகூர்ந்து கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம்.......... Thanks.........

 10. #2149
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  ஜூனியர் விகடன் -11/12/19

  கழுகார் கேள்வி பதில்*--------------------------------------------
  சு.பிரபாகர், தேவகோட்டை*

  பொதுப்பிரச்னைகளுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது குரல் கொடுக்கின்றனர் .* நடிகராக தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆர். அப்போது ஆளும்* கட்சியை விமர்சனம் செய்திருக்கிறாரா ?

  என்னது ,விமர்சனம் செய்திருக்கிறாராவா ,* *அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தை தி.மு.க கைப்பற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கே இருக்கிறது .

 11. Likes suharaam63783 liked this post
 12. #2150
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,935
  Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •