Page 213 of 402 FirstFirst ... 113163203211212213214215223263313 ... LastLast
Results 2,121 to 2,130 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2121
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2122
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2123
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2124
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2125
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அனுதாப செய்தி .

    ---------------------------
    மலேசியா* பொன்மன செம்மல் கலைக்குழுவை சார்ந்த திரு.மேகநாதன்*தலைமையில் இயங்கும் குழுவின் இணைப்பிரியா* கலைஞரும், பல குரல் வித்தகரும் , விழா நிகழ்ச்சிகளை அழகு நடையில் தொகுத்து வழங்கும் திறமையும் கொண்ட திரு. குணா அவர்கள் நேற்று (30/11/19) அதிகாலை 5மணியளவில்* இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியை பெங்களூரு திரு.கா. நா. பழனி மூலம் அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .**

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரை சந்தித்துள்ளேன்* அப்போது கோலாலம்பூரில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளிலும் நண்பர்களுடன் கலந்து கொண்டது மறக்க முடியாத நினைவு.*.மேலும் பெங்களூரு, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாக்களில் அவர் கலந்து கொண்டு* திரு.மேகநாதன் தலைமையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

    அன்னாரது ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .**

    திரு.குணா அவர்களை பிரிந்து வாடும், குடும்பத்தினர், உற்றார் உறவினர், மலேசியா இன்னிசை கலைக்குழு, திரு.மேகநாதன் தலைமையில் இயங்கும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். கலைக்குழு, மற்றும் அவரது நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

    ஆர். லோகநாதன் .

  7. #2126
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம் "

    இது எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்தமான பாடல் !
    இந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார் அவர் !
    .
    எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது ..
    ஒரு மாலைப் பொழுது !

    அமைச்சர் ஹண்டே கையில் அன்றைய மாலை செய்தித்தாள் இருந்ததாம் .

    எம்.ஜி.ஆர். கேட்டாராம் :
    " எதுவும் முக்கியமான செய்தி உண்டா ?"

    ஹண்டே கொஞ்சம் தயங்கினாராம் :
    " ஒண்ணும் இல்லை....ஆனால்.. "

    எம்.ஜி.ஆர் ஹண்டேயை உற்றுப் பார்த்தாராம் : " என்ன விஷயம் ? ஏன் தயங்கறீங்க ? எதுவா இருந்தாலும் சொல்லுங்க !"

    ஹண்டே தயக்கத்துடன் சொன்னாராம்:
    "தி.மு.க.தலைவர் கருணாநிதி உங்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ."

    சலனம் அற்ற முகத்துடன் எம்.ஜி.ஆர். கேட்டாராம் : " என்ன சொல்லி இருக்கிறார் ? "

    " உங்களுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று பேசி இருக்கிறார். "
    .
    சற்று நேரம் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர்.சொன்னாராம் : "சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்.நான் பெரிய படிப்பு எல்லாம் படித்தவன் அல்ல ; இருந்தாலும் பொருளாதாரம் பற்றி எனக்கு எடுத்துச் சொல்ல உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

    ஆனால் பசி என்றால் என்னவென்று எனக்கு தெரியும். அந்த கஷ்டம் எனக்கு புரியும் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சர் , அதை மறக்காமல் நினைவு வைத்திருந்தால் போதும் ."

    சலனமற்ற முகத்தோடு எம்.ஜி.ஆர். இதை சொல்லி விட்டு , தனது அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டாராம்.

    ஆம் !

    " தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
    தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்..
    பெரும் பேரின்பம்..!"........... Thanks.........
    .

  8. #2127
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும் போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.

    முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்து போன தொண்டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.

    சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்துபோன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.

    அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கை போட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.

    எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்தனர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!

    அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். கண்கலங்கி சொன்னார்.

    அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!............... Thanks..........

  9. #2128
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........... Thanks...........

  10. #2129
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சில புதிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

    நம் வள்ளல் அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் டூப் வேடம் போட்டவர் மாடக்குளம் அழகர்சாமி.

    தாழம்பூ படத்தில் ஒரு சண்டை காட்சியில் அவருக்கு கால் ஒடிந்து விட அவருக்கு பிறகு அந்த வாய்ப்பு சரவணா பிலிம்ஸ் வீ.ஜி.வேணு மூலம் மகாலிங்கம் என்பவருக்கு கிடைக்கிறது...

    ஒருமுறை புதியபூமி பட சண்டை காட்சியில் மேசை முழுவதும் அசைவ உணவு வகைகள் நிரம்பி இருக்க சண்டை போது அது வீணாகி கீழே சிதற...

    எல்லாம் வீணா போச்சே நம் வீட்டுக்கு கொண்டு போய் இருந்தாலும் பிள்ளைகள் சாப்பிடுமே என்று அவர் வருந்த தலைவர் காதுகளில் விழுந்த அந்த செய்தி மகாலிங்கம் அவர் சார்ந்த நடிகர்கள் வீடு திரும்பிய போது அனைத்து மட்டன் வகைகளும் அவர்கள் வீட்டில் நிரம்பி வழிந்தன.

    ஒளிவிளக்கு படப்பிடிப்பு முடிந்து மன்னன் வீடு திரும்பி கொண்டு இருக்க பழைய சன் திரையரங்கம் வழியாக வீட்டுக்கு கோடம்பாக்கம் பாலம் வழியே நடந்து மகாலிங்கம் நடந்து கொண்டு சென்று இருக்க வள்ளல் தன் காரை நிறுத்தி என்ன கம்பெனி கார் இல்லயா சரி ஏறு என்று சொல்லி அவர் வீட்டில் விட்டு 2000 ரூபாய் கையில் கொடுத்து போக.

    சாலி கிராமத்தில் சொந்த வீடு அப்போது வாங்க அள்ளி கொடுத்த வள்ளல் அவர்களால் எங்கள் குடும்பம் இன்றும் சிறப்புடன் வாழ்கிறது.

    சிலவற்றை சொல்ல முடியாது என்கிறார் மகாலிங்கம் அவர்கள் மகன் ராஜப்பா.

    வாழ்க எம்ஜியார் புகழ்.அடாத மழையில் கூட விடாது தொடரும் வாத்தியார் நிகழ்வுகள் நன்றி..நாளை............ Thanks.........

  11. #2130
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசியா நாட்டில்* பினாங்கு நகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். விழா*
    ------------------------------------------------------------------------------------------------------------------

    மலேசியா நாட்டில் பினாங்கு நகரில் , புக்கிட் மெர்ட்ட ஜம் என்கிற பகுதியில்*மக்கள் சேவகன் திரு**எம்.ஜி.குமார்* தலைமையில் இயங்கும் ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி* எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் ,வெற்றிகரமான 10ம் ஆண்டாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை பயண விழா கடந்த 24/11/2019 (சனியன்று ) புனித மேரி அன்னை ஹாலில் , மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .**


    விழாவையொட்டி அரங்கத்தின் சாலை புறத்தில் இருந்து நுழைவு வாயில் வரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன .* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்* படங்களுடன் அரங்கத்தின் நான்கு திசைகளிலும்* பேனர்கள், பதாகைகள், மற்றும் மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படங்களுடன் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது .


    மலேசியா விளையாட்டுத்துறை இணை அமைச்சர் , மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .மலேசியா நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் , பக்தர்கள் , பார்வையாளர்கள் வந்து குவிந்தனர் . தமிழகத்தில் இருந்து,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.ஆர். லோகநாதன், திரு.ஜி.வெங்கடேச பெருமாள், திரு. சேமலையப்பன் (திருப்பூர் ) ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


    மாலை 5 மணியளவில் பல்வேறு* நல திட்டங்கள் , மாணவ , மாணவியருக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டன .* இரவு 7 மணியளவில் திரு.எம்.ஜி.குமார், விளையாட்டுத்துறை இணை அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர், திரு..பி.எஸ். ராஜு, திரு.டத்தோ புலவேந்திரன் (இயக்கத்தின் அறங்காவலர் )ஆகியோர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி துவங்கியது .



    விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று இயக்கத்தின் தலைவர்*மக்கள் சேவகன் திரு.எம்.ஜி.குமார் வரவேற்புரையில் சிறப்பு விருந்தினர்களை,யும்* தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த சிறப்பு பிரதிநிதிகள்*திருவாளர்கள் பி.எஸ். ராஜு, ஜி.வெங்கடேச பெருமாள், ஆர். லோகநாதன், சேமலையப்பன் ஆகியோரையும் விழாவை சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார்*விழாவில் பேசிய அமைச்சர், திரு.எம்.ஜி.குமார் அவர்கள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் வகையில் நற்பணி மன்றத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் . முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின்* புகழ் தமிழ்நாட்டில்,* இந்தியாவில் மட்டுமின்றி, கடல் கடந்து மலேசியாவிலும் ஓங்கி நிற்கிறது, மலேசியாவிலும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் .. மலேசியாவில் பல்வேறு அமைப்புகள் எம்.ஜி.ஆர். பெயரில் நற்பணிகள் செய்து வருகின்றதை நான் திரு.எம்.ஜி.குமார் மூலம் அறிந்து கொண்டேன் .* எம்.ஜி.ஆர். பெயரில் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்றை திரு.எம்.ஜி.குமார் உருவாக்கியுள்ளார் .*திரு.எம்.ஜி.குமார்* இயக்கத்தின் மூலமாக 52 மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றார்கள். மலேசிய அரசாங்கமும் மாணவ மாணவியருக்கு உதவும் கல்வி திட்டத்தின் அடிப்படையில், வேண்டிய உதவிகளை திரு.எம்.ஜி.குமார் அவர்களின் இயக்கத்திற்கு உதவுவதாக தெரிவித்தார் . சட்டமன்ற உறுப்பினரும் , திரு.எம்.ஜி.குமார் அவர்களின் சேவைகளை பாராட்டி பேசினார் .* இருவருக்கும் நன்றி தெரிவித்து திரு.குமார் பேசினார் .* பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு* சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன .**


    பின்னர் , இயக்கத்தின் அறங்காவலர் திரு. டத்தோ புலவேந்திரன் இயக்கத்தின் செயல்பாடுகளை விவரித்து பேசினார் . அவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது .* விழாவில் சிறந்த சமூக சேவகியாக*திருமதி கோகிலவாணி,* மற்றும் மனித நேய பண்பாளர் என்கிற வகையில்*மாற்று திறனாளி நபர் ஒருவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .


    தமிழகத்தில் இருந்து வந்திருந்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு,விற்கு* பொன்னாடை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கப்பட்டது . திரு.ராஜு*பேசும்போது ,ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி நற்பணி மன்றம், பினாங்கு நகரில் சிறப்பாக செயல்பட்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்து பெருமை*சேர்ப்பதற்கு நன்றி தெரிவித்தும், உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் தமிழ்நாட்டு தலைநகர் சென்னையில் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் விவரித்து*பேசினார் .* பின்னர் பேசிய திரு.ஆர். லோகநாதன், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பில் , இயக்கத்தின் தலைவர் திரு.எம்.ஜி.குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் வகையில் விழா எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தும் பேசினார் . பின்னர்* திருவாளர்கள் ஆர். லோகநாதன், ஜி.வெங்கடேச பெருமாள், சேமலையப்பன் ஆகியோருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு* நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .


    நிகழ்ச்சி நடக்கும் போது, இரவு உணவு* விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த*அனைவருக்கும் வழங்கப்பட்டது .* இரவு 8.30 மணியளவில்* ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் துவங்கின .* பாடகர்கள் சித்ரன் (பினாங்கு ), ஹரிதாஸ் (சிங்கப்பூர் ) மணியம் (கோலாலம்பூர் ) ஆகியோர் உள்பட உள்ளூர் பாடகர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . இடையே நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்கள் , நான் உங்கள் வீட்டு பிள்ளை (புதிய பூமி ), கண்ணை நம்பாதே ( நினைத்ததை முடிப்பவன் ), நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டு பிள்ளை ) ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் ..* சென்னையில் இருந்து திரு.கோபால் , மற்றொரு பெண் நபருடன்* கீழ்கண்ட பாடல்களுக்கு நடனம் ஆடி பாராட்டுக்கள் பெற்றார் .1. நான் பார்த்ததிலே* (அன்பே வா )2. நாணமோ, (ஆயிரத்தில் ஒருவன் )3. நேத்து பூத்தாலே (உரிமைக்குரல் )4.தாயில்லாமல் நானில்லை (அடிமைப்பெண் )5.தாய் மேல் ஆணை ( நான் ஆணையிட்டால் )6.கடவுள் எனும் முதலாளி* (விவசாயி )

    நிகழ்ச்சியில் திரு.நாமக்கல் எம்.ஜி.ஆர். , திரு.எம்.ஜி.குமாரையும், அவரது சேவைகளையும் பாராட்டி , தொடர்ந்து புரட்சி தலைவருக்கு விழா எடுத்து* *அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார் .பின்னர் நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், திரு.கோபால் ( சென்னை ) அவர்களுக்கும்* சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .அதன்பின் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விழா நடைபெற உதவிய நண்பர்கள் ஆகியோருக்கு மேடையில் சிறப்புகள் செய்யப்பட்டு நினைவுபரிசுகள் வழங்கப்பட்டன .**

    நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், பக்தர்களை ஊக்குவிக்க, குலுக்கல் முறையில்*பரிசுகள் வழங்கும் வகையில் டிக்கட்டுகள் மலேசிய ரிங்கிட் 5/-* (இந்திய பணம் சுமார் ரூ.85/- )* விற்பனை செய்யப்பட்டன.* நிகழ்ச்சியின் முடிவில் இரவு 11.30மணியளவில் முதல் பரிசாக அரை பவுன் எம்.ஜி.ஆர். தங்க லாக்கெட், மற்றும்*10 இதர பரிசுகள் குலுக்கலில் தேர்வு செய்து வழங்கப்பட்டன . இறுதியில் அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்து இயக்கத்தின் தலைவர் திரு. எம்.ஜி.குமார்* பேசினார் .* இரவு 12 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது*

    விழா முடிவில் சுமார் 700நபர்கள்* நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக திரு. எம்ஜி. குமார் தெரிவித்தார்* *


    விழா நடக்கும் முன்தினம் இரவு திரு. எம்.ஜி.குமார் அவர்கள் அமைத்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம் கண்டுகளித்து வியந்தோம் .காரணம், எனக்கு விவரம் தெரிந்த வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*சினிமா, அரசியல் குறித்த புகைப்படங்கள், சிறிய பேனர்கள் , சிறிய சிலைகள்*தங்கமுலாம் பூசிய வெள்ளித்தட்டுக்கு முன் தலைவர் சிலை, ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் , ஆவணங்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் சில உடைமைகள் ஆகியன திரு.எம்.ஜி.குமார் அமைத்துள்ளது போல் உலகில் வேறு எந்த பகுதியிலும் எந்த ஒரு பக்தரும் /ரசிகரும் / தொண்டரும் அமைத்திருக்க வாய்ப்பில்லை .* நேரமில்லாத காரணத்தால் அருங்காட்சியகத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியவில்லை .* ஒருவேளை அடுத்த விஜயத்தின்போது சாத்தியம் ஆகலாம் .**

    முன்னதாக ,பினாங்கு நகரம் செல்லும் வழியில் தைப்பிங் என்கிற ஊரில் அய்யனார் கோயில் அருகில் நடிகர்* சத்யராஜ் 2011ல் திறந்து* வைத்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையையும் , விழாவிற்கு பின்னர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மையத்தில் திரு.வி.ஜி.பி. சந்தோசம் வழங்கிய , தமிழக அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு திறந்து வைத்த*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையையும்* கண்டுகளித்து* மகிழ்ந்தோம் .கோலாலம்பூர் எம்.ஜி.ஆர். மய்யத்தை திரு. மணிவாசகம் (மலேசியா) பராமரித்து வருகிறார் .


    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு* தமிழ்நாட்டில் எப்படியோ, இங்கு மலேசியாவில் மாதந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள் அவ் வப்போது*சில சமயம் மாதமிருமுறை* நடந்து வருகின்றன* என்று**மலேசியாவில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் .

    .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •