Page 209 of 402 FirstFirst ... 109159199207208209210211219259309 ... LastLast
Results 2,081 to 2,090 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2081
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதங்களை கடந்து ஜாதி, இனம் போன்றவைகளுக்கு அப்பாற் பட்டு, அனைத்து தரப்பினராலும் நேசிக்கப் பட்ட மாபெரும் தலைவர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று... அதுதான் எம்.ஜி.ஆர். மதம். பிரிவினை நாடோம், கட்டுண்டு வாழோம், சம நிலையில் இணைவோம். இதுதான் என் தலைவன் பொன்மனச் செம்மல் எனக்கு கற்றுக் கொடுத்தது. அன்புடன் : சௌ.செல்வகுமார்........... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2082
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.

    இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.

    மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.

    இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :

    "மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.

    சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :

    "ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.

    சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.

    இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
    ================================================== ==== ===============
    நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.

    ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.

    நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
    ================================================== ==============================

    சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.

    ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்........... Thanks.........

  4. #2083
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'உன் அகம்' நலம் என்றால் 'தென்னகம்' நலம்தான் தலைவா! -எம்.ஜி.ஆர்

    உள்ளேயும் வெளியேயும் தங்கமாக மின்னிய தலைவர் எம்ஜிஆர்! இவரது பூர்விகம் கேரளா. பிறந்தது இலங்கையில் உள்ள கண்டி. வளர்ந்தது கும்பகோணம். உலகம் போற்றும் மனிதராக உருவா(க்)கியது சென்னை. அதனால்தானோ என்னவோ தனது பூத உடல் இந்த மண்ணில்தான் அமரத்துவம் அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு எத்தகையது? சில சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. நமது வாசகர்களுக்காக இங்கே கொஞ்சமே கொஞ்சம்...

    ஒத்தவாடை தெரு-

    கலைஞரும் எம்ஜிஆரும் நண்பர்களாக நடைபழகிய தெரு இது. இங்குதான் எம்ஜிஆர் வீடும் இருந்தது. கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.

    ராமாவரம் தோட்டம் -

    அடிப்படையில் மலையாளிதான் என்றாலும், புரட்சித்தலைவர் விரும்பிக் கொண்டாடியது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைதான். இந்த நாளில் திரைத்துறையை சார்ந்த தனது நண்பர்களை அழைத்து இங்குதான் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்.

    அதே மாதிரி புத்தாண்டு தினத்தன்று வருகிற எல்லாருக்கும் தனது கையால் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்குவாராம். திரையுலகை சார்ந்த எல்லாருமே இந்த நோட்டை வாங்க ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருக்கிறார்கள். புரட்சி தலைவர் கையால் வாங்கினால் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி ஒருமுறை வந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு 100 ரூபாய் தாளுடன், பெட்டி நிறைய கேஷ¨ம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். ஏன்?

    எங்கோ ஒரு கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தாராம் பாலாஜி. அங்கே மொட்டை வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் யாரோ ஒரு மூதாட்டி சென்று கொண்டிருக்க, இறக்கப்பட்ட பாலாஜி காரை நிறுத்தி ஒரு 100 ரூபாய் கொடுத்தாராம் மூதாட்டிக்கு. இதுபோல நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிற ஒரே ஜீவன் எம்ஜிஆர்தானே? நீங்க எம்ஜிஆர்தானே? நல்லாயிருக்கணும் தலைவா என்று அந்த மூதாட்டி வாழ்த்தினாராம். இதைதான் பாலாஜி அப்போது எம்ஜிஆரிடம் சொன்னார்.

    என் சார்பில் அந்த மூதாட்டிக்கு உதவியதற்காகதான் இந்த பரிசு என்றுதான் ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்தாராம் எம்ஜிஆர். (ஆனால் அதை பாலாஜி வாங்கிக் கொள்ளவில்லை)

    எம்ஜிஆரை வெறும் நடிகராகதான் பலர் பார்த்தார்கள். ஆனால் அவர் பெரிய படிப்பாளி என்பதை நிரூபித்த இடம் இதே ராமாவரம் தோட்டம்தான். இங்கே அண்டர் கிரவுண்டில் மிக பிரமாண்டமான நு£லகம் அமைத்திருந்தார் எம்ஜிஆர். இந்த நு£லகத்தை பார்த்து வியந்த அறிவாளிகளில் கருணாநிதியும் ஒருவர்.

    மவுண்ட் ரோடு-

    தமிழக முதல்வர்கள் யாருமே மக்கள் முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அந்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டும்தான். முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இதே மவுண்ட் ரோடில் அண்ணாசிலைக்கு அருகே பிரமாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் முன்னிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் புரட்சித்தலைவர்.

    லாயிட்ஸ் சாலை-

    இன்றைய அதிமுக வின் தலைமை அலுவலகம் இருக்கிறதே, அது ஒரு காலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. அவர் திரைத்துறையில் சம்பாதித்து வாங்கிய முதல் சொத்தும் இதுதான். இவர் வாங்கி வைத்திருக்கும் மற்ற பங்களாக்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் எம்ஜிஆர், இங்கு மட்டும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார். ஏனென்றால் இந்த மண் அவரை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷலானது.

    தி.நகர் ஆற்காடு தெரு-

    தனது முக்கியமான முடிவுகளை அவர் இங்குதான் எடுப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயன்றார் எம்ஜிஆர். ஆனால் அப்போது உடனிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதில் நடிக்கவில்லை என்றாலும், நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திடீரென்று என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்குமான தொடர்பு விட்டு போயிருந்தது. முதல்வர் ஆன பின்பு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்ற எம்ஜிஆர், அங்கு வாசலில் நின்று வரவேற்பளித்துக் கொண்டிருந்த ஜெ.வை சந்தித்தார். தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டு நேரம் ஒதுக்கிக் கொடுத்த இடம் இதே ஆற்காட் தெரு அலுவலகத்தில்தான்.
    அடையார் சத்யா ஸ்டுடியோ-

    தனது அன்னையார் சத்யபாமா அம்மையார் பெயரில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட ஸ்டுடியோ இது. திமுக விலிருந்து நீக்கிப்பட்ட நிமிடங்களில் இங்குதான் இருந்தார் எம்ஜிஆர். போனில் தகவலை சொன்ன நாஞ்சில் மனோகரன், "இப்போ என்ன செய்யப் போறீங்க?" என்று பதற்றத்தோடு கேட்க, "பால் பாயாசம் சாப்பிட போகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் எம்ஜிஆர். புதிய கட்சி என்ற முடிவை எடுத்ததும் இதே ஸ்டுடியோவில் வைத்துதான்.

    மீனம்பாக்கம்-

    அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சிங்கம் போல் துள்ளிக்குதித்து சென்னை வந்த புரட்சித்தலைவர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தன்னை பார்க்க துடித்த லட்சோப லட்சம் மக்களுக்கு தரிசனம் கொடுத்தது இங்கேதான். பின்பு இது திரையரங்குகளில் நியூஸ் ரீலாக காண்பிக்கப்பட்டது. இந்த ஒளிச்சுருளுக்கு பின்னணி பேசியவர் எம்.என்.ராஜம். அவர் பேசிய ஒரு வாசகம் இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே...

    "எம்.ஜி.ஆர், நலமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். அதற்கு மக்கள், தலைவா... உன் அகம் நலம் என்றால், தென்னகம் நலம்தானய்யா என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.... !".......... Thanks.........

  5. #2084
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *இது அந்தக் காலம்*
    *மனிதரை மதிக்கும்* *மனிதநேயமிக்க எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு*

    ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி :

    முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும்
    மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்

    இப்போது ராதா அவர்கள் விருது வாங்கச் செல்லும் போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்துத் தரச் செய்கிறார்.
    திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பிய போது ஓர் அதிர்ச்சி...!!!

    மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!

    குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி ...!!!

    திரு. ராதா ஏதோ சொல்ல முயலும் போது அவரைத் தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது :

    "நான் ஆரம்ப காலத்தில் கஷடப்படும் போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும்.

    "தாங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்க வேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...

    திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின. ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து
    திரு ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???............ Thanks...

  6. #2085
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை பாராளுமன்ற தேர்தலின்போது எம்.ஜி.ஆர்.,ஜனதா கட்சிக்கு ஆதரவளித்தார். அப்போது கோவை பொதுக்கூட்டத்தில் "சோ ராமசாமி" பேசியது...

    வீட்டில் அரிசிக்கு உலைத்தண்ணீர் வைத்துவிட்டு அரிசிக்காக ஒரு வீட்டிற்கு நம்பி செல்லலாம் என்றால் அது எம்ஜியார் வீடுதான். அவர் விளம்பரத்திற்காக உதவுவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் விளம்பரமே இல்லாமல் அவர் செய்த உதவிகள் ஏராளம்.

    மேலும் எம்ஜியாருக்கு பிள்ளை இல்லை என்று எதிர்கட்சிகாரர்கள் பேசுகிறார்கள். இந்திராவிற்கு ஒரு சஞ்சய்காந்தி; கருணாநிதிக்கு ஒரு மு.க.முத்து,ஸ்டாலின் போன்றபிள்ளைகள் இருப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருப்பதே மேல் என்று சோ கூறினார். மேலும் அந்த தேர்தலில் எம்ஜியாருக்கு ஓட்டு சதவீதம் அதிகம் இருந்தாலும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளே கிடைத்தது. அப்போது எல்லா பத்திரிக்கைகளும் இந்திரா காந்தி, கருநாநிதியை அட்டைபடத்தில் பிரசுரித்தன. ஆனால் துக்ளக் இதழ் மட்டும் எம்ஜியார் அவர்களின் அட்டை படத்தை வெளியிட்டு "நேர்மைக்கு தோல்வி" என்று தலையங்கம் எழுதினார் சோ அவர்கள்................. Thanks.........

  7. #2086
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதை !
    _____________
    பூ மகள் மெல்ல
    வாய் மொழி சொல்ல
    சொல்லிய வாரத்தை பண்ணாகும் !
    காலடித் தாமரை
    நாலடி நகர்ந்தால்
    காதலன் உள்ளம் புண்ணாகும் !

    இது போல் எழுத என் எழுது கோலை !
    பணித்தேன்
    எழுது கோல் கண்சிமிட்டியது !

    தலைவா... சட்டியில்
    இருந்தால் தானே ?

    அதன் நக்கலில்
    உண்மை இருந்தது !

    இயலாமை வெளிச்சம்
    போட்டு காட்டியது
    வெகுண்டேன் !

    நிலைக் கண்ணாடி முன்
    அமர்ந்து கற்பனை குதிரையை தட்டினேன் !

    மிக மந்தமான குதிரை
    பிளிறக்கூட தெரியவில்லை !

    வன்முறையை
    பயன் படுத்தி
    செரிபெல்லத்தை
    கசக்கினேன் !

    கிறுக்கினேன்
    பார்த்திபன் சாயல்
    பயம் கவ்வியது !

    அருவி போல் கொட்டினால் தான்
    கவிஞன் !

    எழுது கோல்
    ஏளனத்துடன்
    ஏறெடுத்து பார்த்தது !

    ஆயிரம் நிலவே வா
    வானொலி அழைத்து கொண்டிருந்தது !

    பாடும் நிலா பாலுவுக்காக
    மக்கள் திலகம்
    காத்திருந்த நாட்கள் !

    மக்கள் திலகத்தின்
    பெருந்தன்மையை
    பறை சாற்றிய நாட்களல்லவா ?

    சிந்தனை திசை மாற
    கண்ணயர்ந்தேன் !............ Thanks........

  8. #2087
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks...

  9. #2088
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks.......

  10. #2089
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *எம்.ஜி.ஆரின் தொப்பியும்,.. கண்ணாடியும் சுவாரஸ்யமான பின்னணித் தகவல்..!?*
    எம்.ஜி.ஆர் என்றதும் மக்களுக்கு நினைவு வருவது,பொசு பொசுவென்ற வெள்ளைக் கலர் தொப்பி,முகத்தை மறைக்கும் கருப்புக் கலர் கூலிங் கிளாஸ்,எப்போதும் அவரது வலது கையில் டாலடிக்கும் ரேடோ வாட்ச் மூன்றும் தான் : அதற்குப் பிறகு தான் இரட்டை இலையே!

    எம்.ஜி.ஆர் ஆரம்பக் காலத்தில் இருந்தே கருப்புக் கண்ணாடி மீதும் விதவிதமான தொப்பிகள் மீதும் மாறாத காதல் கொண்டிருந்தார்.
    அமெரிக்க கௌபாய் தொப்பி,ஹெல்மெட்,
    பிரிட்டிஷ் ஹாட்,மேஜிக் நிபுணர்கள் அணியும் தொப்பி,மீனவர்கள் அணியும் தென்னம்பாளைத் தொப்பி,இஸ்லாமியர் அணியும் துருக்கித் தொப்பிகள் (பக்கவாட்டில் ஒரு குஞ்சலம் தொங்கும் தொப்பி) என்று உலகில் இருக்கும் அத்தனை விதமான தொப்பிகளையும் அணிந்து நடித்த ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும் தான்!

    சரித்திரப் படமாகவே இருந்தாலும் அதிலும் தொப்பியைப் புகுத்தி புதுமை செய்தவர் எம்.ஜி.ஆர் . அரசகட்டளை படத்தில் வரும் ' ஆடிவா….ஆடிவா 'என்கிற பாடலில் வால் முடியுடன் சேர்த்துப் பாடம் செய்த நரித்தோல் தொப்பி அணிந்து தோன்றுவார்.

    இப்படி சினிமாவில் விதவிதமான தொப்பிகள் அணிந்த எம்.ஜி.ஆர் அடிமைப்பெண் படத்துக்குப் பிறகு நிஜ.வாழ்க்கையிலும் தொப்பி அணியத் தொடங்கினார்.
    அந்தப் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பாலைவனப் பகுதியில் நடந்த போது கடும் வெயிலால் அவர் சிரமப்படுவதைப் பார்த்த நண்பர் ஒருவர் வாங்கி வந்துக் கொடுத்த வெள்ளை நிற 'புஷ் குல்லாவும் , வெய்யிலுக்காக அணிந்த 'கருப்புக் கண்ணாடியும் தான் பிற்காலத்தில் அவரது அடையாளம் ஆயின.

    சென்னைக்கு வந்ததும் ரஸாக் என்பவர் தயாரித்துத் தந்த தொப்பிகளைத் தான் அவர் தொடர்ந்து அணிந்தார். காஷ்மீர் பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரோமமும் மூன்று அடுக்குக் கொண்ட கேன்வாஸ் துணியும் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்தத் தொப்பிகளில் வியர்வையைத் தடுக்க சிறிய துளைகள் இருந்தன.

    ஒவ்வொரு முறையும் ஆறு தொப்பிகள் ஆர்டர் செய்து,அதில் இருந்து இரண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராம்.ஆனால்,ரஸாக்குக்கு ஆறு தொப்பிகளுக்கான பணத்தைக் கொடுத்து விடுவாராம்.அதேபோல அவரது இன்னொரு அடையாளம் அவர் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டையின் மேல் கட்டிக் கொள்ளும் ரேடோ வாட்ச்!

    எம்.ஜி.ஆர் சமாதிக்கு மேல் காதை வைத்துக் கேட்டால்,அவரது வாட்ச் ஓடும் சப்தம் கேட்கிறது, என்பதை இப்போதும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.
    1953-ல் கல்லக்குடிக்கு , டால்மியாபுரம் என்கிற பெயரை ஒரு சிமெண்ட் கம்பெனியின் உரிமையாளர் நினைவாகச் சூட்டியது அன்றைய காங்கிரஸ் அரசு.அதை எதிர்த்து தி.மு.க நடத்திய போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார்.

    ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் நடத்திப் பெயர் மாற்றத்தை தடுத்ததால் கருணாநிதி அன்றைக்குப் பெரிய கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார்.
    அதைத் தொடர்ந்து சென்னைக்கு ரயிலில் புறப்பட்ட கருணாநிதியை வரவேற்க,சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பல்லாயிரம் தி.மு.க தொண்டர்கள் கூடி விட்டனர்.அவரால் ரயில் பெட்டியில் இருந்து வெளியே காலை வைக்கவே முடியவில்லை.
    கருணாநிதியை வரவேற்க வந்திருந்த எம்.ஜி.ஆர் கொஞ்சமும் யோசிக்காமல்,அவரை இரண்டு கைகளாலும் அள்ளித் தூக்கிக் கொண்டு வெளியே வந்து காரில் ஏற்றி விட்டார்.அந்த நெரிசலில் எம்.ஜி.ஆர் கையில் கட்டி இருந்த கடிகாரம் காணமல் போய் விட்டது.இதைப் பார்த்த கருணாநிதி பதட்டத்தோடு எம்.ஜி.ஆரைப் பார்த்து,

    'அடடா..,வெளிநாட்டு வாட்சு தொலஞ்சுடுச்சே' என்று கவலையோடு சொல்லியிருக்கிறார்.
    அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் எந்தப் பதட்டமும் இல்லாமல்… ‘வெளிநாட்டு வாட்ச்சை விட நம்ம நாட்டு தலைவர் தான் எனக்கு முக்கியம்! ‘ என்று சொல்லியிருக்கிறார்.

    காந்திக்குப் பிறகு, சின்னக் குழந்தைகள் கூட எளிதாக வரையக் கூடிய தலைவர் படம் எம்.ஜி.ஆர் படம் தான்.ஒரு தொப்பியும் கண்ணாடியும் வரைந்தாலே அவர் முகம் வந்து விடும்.அந்த அளவுக்கு அவரோடு இணைந்து சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது அந்தத் தொப்பி.

    பகிர்வு.
    FWD msg

    *என்றும் அன்புடன்,*

    *எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
    *<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
    *மதுரை*����������
    *வாட்ஸ் ஆப் எண்கள்*
    *9842171532*
    *9444771532*������
    *முகநூல்: SMS KING SK*......... Thanks.. .........

  11. #2090
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிவகாசி - தங்கமணி DTS.,யில் ஞாயிறு முதல்(24.11.2019) தினசரி 4 காட்சிகள்... "கோடியில் ஒருவர்",... வழங்கும்..."ஆயிரத்தில் ஒருவன்".......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •