Page 205 of 402 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2041
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like
  மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
  104/2020
  எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
  மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
  எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
  திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
  நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
  ''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
  ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
  முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
  முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
  தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
  50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
  சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
  படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
  வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
  வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
  கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
  எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .

  20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
  நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
  வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
  1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
  மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம் .ஜி.ஆர் ., சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
  கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ............ Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2042
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like
  உடன் பிறவா பாச சகோதரர்கள் திருவாளர்கள் ... லோகநாதன்... மஸ்தான் சாஹிப், சுந்தரபாண்டியன் உட்பட எல்லோருக்கும் நன்றி... நக்கலாகவோ, சம்பந்தப்பட்டவர்களை களங்க படுத்தவோ பேட்டியின்போது சொன்னதாக தெரியவில்லை... கண்ணுக்கு தெரிந்த ஒரு உதாரணத்துக்கு தான் கோடிட்டு காட்டவே என எடுத்து கொள்ள வேண்டும்... இதை பெரிது படுத்தி தேவையில்லாத... நன்றி கெட்ட தனமான, மன சாட்சியே இல்லாத கருத்துக்களை சிலர் கொட்டுகிறார்கள். அது மட்டுமல்ல... பாவம், நடிகர் பிரபு தொலைக்காட்சியில் பேசும்போது யாரோ சொல்லி கொடுத்ததை அப்படியே ஒப்பிக்கிறார்.. இதிலேயே அவரவர்களின் திறமையும்? சரக்கும் என்னவென்று பலர் அறிய உதவுகிறது.. எந்த சம்பவம் எப்போது நடந்தது! என்று கூட தெரியாமல் இருக்கிறார்களே என பரிதாபமே மேலிடுகிறது.......

 4. #2043
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like
  ஜனநாயக நாட்டில்
  சிங்கம் வளர்த்த "மன்னாதி மன்னன்" எம் ஜி ஆர்
  மேல் ஆதிக்க காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியில் இருந்து மாற்றிய வீரன் எம் ஜி ஆர்
  திராவிட இனத்தை ஆள வைத்த மாவீரன் எம் ஜி ஆர்
  ஊழல் அரசியல் வாதிகள் உள்ள நாட்டில் ஊழல் இல்லா முதல்வராய் ஒரு பொற்க்கால ஆட்சி தந்த இளம் சூரியன் எம் ஜி ஆர்
  வீரர் அலக்ஸாண்டரை கண்டதில்லை நெப்போலியனை கண்டதில்லை கண்டோம் அன்பால் வீரத்தால் கொடையால் எவரையும் வெல்லும் உலகை வென்ற மாவீரன் எம் ஜி ஆரை
  எவராலும் வெல்ல முடியாத சக்தி புகழ் கொண்ட மன்னன் எம் ஜி ஆர் புகழ் காப்போம்

  வாழ்க எம். ஜி .ஆர்., புகழ்......... Thanks.........

 5. #2044
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர் மடியில் உரிமையோடு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா..? - https://tamil.asianetnews.com/cinema...-in-mgr-q19p5g.......... Thanks.........

 6. #2045
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like
  சர்க்காரியா கமிசன் சுட்டிக்காட்டிய
  திமுகவின் முக்கிய ஊழல்களில் ஒன்று , " குளோப் தியேட்டர் ஊழல் " இது என்ன புதுக்கதை ? புதுக்கதை எல்லாமில்லை ...
  பழைய கதைதான் ...
  சென்னை மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி அருகில் உள்ள குளோப் தியேட்டர், சிலகாலம் கழித்து அலங்கார் தியேட்டராகி இன்று ஷாப்பிங் மால் ஆக இருக்கிறது .அப்போ இது குளோப்
  தியேட்டர் .இந்த இடம் வட இந்தியாவை சேர்ந்த குஷால் தாஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது .இந்த கட்டிடத்தை குஷால் தாஸ் கிட்ட இருந்து 25 வருட குத்தகை அடிப்படையில் வரதராஜ பிள்ளை என்பவர் வருடத்துக்கு ரூ 5000/- என்ற ஒப்பந்தம் அடிப்படையில் பெற்று அதில் குளோப் தியேட்டர் நடத்தி வந்தார்.தியேட்டர் மூலம் வாரத்துக்கு ரூ 8000/- வீதம் வருடத்துக்கு ரூ 4 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தார்.என்றாலும் ரூ 5000/- மட்டுமே ஆண்டிற்கு பெற்று வந்த குஷால் தாஸ் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.
  குத்தகை காலம் முடிவடைந்ததும் மறு குத்தகை விடப்போவதில்லை என்றார் இட உரிமையாளர்.
  வருடத்தில் எல்லா செலவும் போக சுளையாக 4 லட்சம் வருமானம் பார்த்த வரதராஜ பிள்ளை சும்மா இருப்பாரா ?
  குஷால் தாஸ் & வரதராஜ பிள்ளை இருவரும் நீதிமன்றத்தில் முட்டி மோதிக்கொண்டனர் ...
  நீதிமன்ற தீர்ப்பு இட உரிமையாளர்
  குஷால் தாஸ்க்கு சாதகமாக வருகிறது .
  6 வார காலத்தில் இடத்தை காலி செய்து உரிமையாளர் கிட்ட இடத்தை ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டது கோர்ட்.வரதராஜ பிள்ளை முரசொலி மாறன் கிட்ட போய் கண்ணை கசக்கி கொண்டு நின்றார்.
  அவர் உள்ளாட்சி துறை அமைச்சர்
  ப.உ.ச அவரை பார்க்கச்சொன்னார்.
  ப.உ.ச வரதராஜ பிள்ளையிடம் இதற்கு ஒரேதீர்வு சட்டமன்றத் தில் குத்தகைக்காரனு க்கேஇடம் சொந்தம் என்று அவசர சட்டம் போடணும் .முதல்வர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என கூறுகிறார் .வரதராஜ பிள்ளை முன்பணமாக
  ரூ 30000 /- ப.உ.ச கிட்ட கொடுக்கிறார்.பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கருணாநிதி கிட்ட அழைத்துச்சென் றார்.ஒரு லட்சம் கேட்கிறார் கருணாநிதி.
  ப.உ.ச கிட்ட கொடுத்த ரூ 30,000/- மேலும் கருணாநிதி கிட்ட மேலும் ஒரு 30,000 /- ஆக ரூ 60,000/- முன்பணமாக கொடுக்கப்படுகிறது.
  மீதியை பின்னர் கொடுப்பதாக வாக்குறுதிகொடுக்கிறார் வரதராஜ
  பிள்ளை குத்தகை சட்டம் திருத்தப்பட்டு நீண்டகால குத்தகை யில் இருப்பவர்களுக்கு நிலம் உரிமை என்ற அவசர சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றி யது.கோர்ட் 6 வார காலத்தில் நிலத்தை உரிமையாளர் கிட்ட ஒப்படைக்க சொல்லி தீர்ப்பளித்துள்ளதால் அவசர சட்டம் அதற்குள் நிறைவேற வேண்டுமானால் ஜனாதிபதி கையொப்பமிட்டால் மட்டுமே செல்லுபடியாகும் .
  அதற்காக சட்டமன்ற அவசர சட்ட
  தீர்மானம் பிளைட்டில் டில்லிக்கு
  கொண்டு செல்லப்படுகிறது ...
  " செத்தவன் சாமான் சுமப்பவன் தலைமேலே " என்பதுபோல் பயனாளி வரதராஜ பிள்ளை அச்செலவை ஏற்றுக்கொள்கிறார் ....
  ஓரிருநாளில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று
  அவசர சட்டம் அமலுக்கு வந்து வரதராஜ
  பிள்ளை இடத்தின் உரிமையாளராகி விடுகிறார் .மவுண்ட் ரோடு சொத்து வரதராஜ
  பிள்ளைக்கு உரிமையாகி விடுகிறது .சர்க்காரியா கமிசன் குற்றச்சாட்டு களில் குளோப் தியேட்டர் குற்றச்சாட்டு பிரதானமானது.!!! ......மக்கள் திலகம் சாதாரண மக்களின் மனதில் வாழ்ந்து, சாமர்த்தியமான அரசியல் வாதியை அல்லவா வென்று, சரித்திரம் படைத்திருக்கிறார்கள்...
  Shared
  நன்றி.
  Rambadran Sir......... Thanks...

 7. #2046
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like

 8. #2047
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,133
  Post Thanks / Like
  வரும் 29-11-2019 முதல் அட்டகாசமான துவக்கம்...மதுரை - சென்ட்ரல் சினிமா dts., தினசரி 4 காட்சிகள்... திரையுலக அசல் அஃக் மார்க் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும்........."ராமன் தேடிய சீதை" , குளு, குளு கலர்புல் காவியம் வருகை.........

 9. #2048
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

 10. #2049
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

 11. #2050
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •