Page 201 of 402 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2001
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருமங்கலம் - ஆனந்தா DTS., திரையரங்கில் நாளை 15-11-2019 வெள்ளிக்கிழமை முதல் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி ...வருகின்றார் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., நடித்த "ரிக்சாக்காரன்" விருதுநகர் ஆலம்பட்டி - ஸ்ரீராம் DTS., நாளையும் தொடர்கின்றார் ... "எங்கவீட்டுப்பிள்ளை"... எம்.ஜி.ஆர்., நன்றி மதுரை.எஸ் குமார்........... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2002
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் பற்றி அவதூறு கூறிய சிவாஜி சமுக நலப்பேரவைக்கு கடும் கண்டனம். (சமூக நல பேரவை ன்னா என்ன ஜாதி சங்கமா? இதுல எத்தனை பேர் இருக்கிங்க, யார் இது கே.சந்திரசேகரன்)


    முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 12 -11 -2019 அன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இனி தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கும் நடிகர்கள் எவருக்கும் சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் என்று கூறி விடட்டாராம்... உடனே பொங்கி எழுந்த சிவாஜி சமூகநல பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் என்பவர் தனது அறிக்கையில் தேவையின்றி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து வரலாறு தெரியாமல் அறிவு முதிர்ச்சியின்றி, சிறுபிள்ளைத்தனமாக கருத்து ஒன்றினை பதிவு செய்துள்ளதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது இந்த பதிவு...

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது கருத்தில் வயதான பின்னர் இப்போதைய நடிகர் கட்சி துவங்குகிறார்கள் என்று கூறியுள்ளதை கே.சந்திரசேகரன் எனும் அந்த நபர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி முதல்வரின் தலைவர் எம்ஜிஆரும் வயதான பின்னர் தானே கட்சி துவங்கினார் என்பதாக சற்றும் தேவையின்றி புரட்சித்தலைவரை சீண்டியுள்ளார். முதல்வர் பழனிசாமி அவர்கள் சிவாஜி வயதான பின் கட்சி துவங்கினார் என்று கூறவில்லை.ரஜினி போன்றவர்கள் 67 வயதை கடந்த நிலையில் எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாத நிலையில் கட்சி துவங்குவதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர் சுட்டி காண்பித்துள்ளதும் உண்மைதானே நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துள்ள ஒன்றுதானே. இதில் என்ன தவறு உள்ளது. இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக எதற்கு இந்த நபர் கே.சந்திரசேகரன் என்பவர் தேவையின்றி காழ்ப்புணர்வின் அடிப்படையில் புரட்சித்தலைவரை சாட வேண்டும் என்பதே எனது கேள்வி.

    இந்த நபர் புரட்சித்தலைவர் மீது கொண்டுள்ள வன்மம் பொறாமை காரணமாக கூறியுள்ள அனாவசிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சிவாஜி கணேசன் அவர்கள் குறித்தும் கருத்து கூற வேண்டியது எமது கடமையாகிறது. மேலும் சிவாஜி சமூகநல பேரவை செயலாளர் தனது அறிக்கையில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்த காரணத்தினால்தான் சிவாஜி அவர்கள் தோல்வியை தழுவினார் என்பதாகவும் உண்மைக்கு மாறாக கூறியுள்ளார்.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1933 களிலேயே அரசியலில் ஈடுபட்டவர் அப்போது அவருக்கு வயது 16. அதற்கு முன்னரே அதாவது அவரது 12 வயதிலேயே நாட்டு பற்று கொண்டு கள்ளுக்கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானவர். சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலத்தில் தான் கழ்டபட்டு உழைத்து சம்பாதித்த காலணாவை தனக்கு இல்லையெனினும் பரவாயில்லை நாட்டு மக்களுக்கு கொடுத்து விட வேண்டும் எனும் நாட்டு பற்று காரணமாக காந்தியடிகளிடம் {குவெட்டா பூகம்ப நிதிக்காக} கொடுத்து ஆசி பெற்றவர். [ இந்நிகழ்வு குறித்து முன்னரே "புதிய தலைமுறை" வார இதழில் புரட்சித்தலைவரின் பாதுகாவலர் கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் விரிவான கட்டுரை ஒன்றினை பதிவு செய்துள்ளார்.]

    அன்று 10 வயது முதலே துவங்கியது புரட்சித்தலைவரின் அரசியல் பயணம்.அப்போது முதல் தான் உழைத்து ஈட்டிய பொருள் பணத்தையெல்லாம் தனது வாழ்நாளின் இறுதி காலம் வரை தமிழ் நாட்டின் மக்களுக்கு மட்டுமின்றி இந்திய தேசத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் கொடுத்து கொடுத்து மகிழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அதாவது திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே அரசியலில் ஈடுபட்டவர் அதன் வாயிலாக நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்துள்ளவர். அடுத்து 1953 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டவர். அப்போது அவருக்கு வயது 35 அடுத்து அவர் கட்சி துவங்கியபோது வயது 55 .அடுத்து அவர் ஆட்சியை பிடித்தபோது வயது 60 .ஏறத்தாழ 10 வருடங்கள் மக்களுக்கான நல்லாட்சியை தந்து தனது பொன்னுடலால் மட்டுமே இத்தமிழ் மண்ணிலிருந்து மறைகிறார். உணர்வுகளால் இன்றளவும் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.இத்தகைய உயர் சிறப்புக்கள் அரசியல் அனுபவங்கள் சிவாஜிக்கும் ரஜினிக்கும் கமலுக்கும் உண்டா? இதைத்தானே முதல்வர் எடப்பாடியார் அவர்கள் சுட்டி காட்டி பேசியுள்ளார்.இவைகள் வரலாற்றின் மறைக்க முடியாத பக்கங்கள்தானே. இதில் கோபப்படுவதற்கு என்ன உள்ளது? மனமுவந்து ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

    இப்படி தனது [10 வயது முதல்} சிறு வயது முதலே நாட்டின் மீதும் மக்களின் மீதும் அன்பு கொண்டு அரசியலில் ஈடுபட்டு அதன் பின் காழ்ப்புணர்வு காரணமாக எதிரிகளின் எண்ணிலங்கா தாக்குதல்களையும் சோதனைகளையும் ஆண்டாண்டு காலம் வீரத்துடன் எதிர் கொண்டு பின்னர் அவற்றை நிர்மூலமாக்கி பின் தனது சாதனைகள் மூலம் ஆட்சியை பிடித்து உலக சாதனை புரிந்து பின் தனது 70 வது வயதில் தனது ஆத்மார்த்தமான மக்கள் நல பணியை நிறைவு செய்யும் அந்த தருணத்தில் நாட்டு மக்கள்மீது எவ்வித அக்கறையும் கொள்ளாது அவர்களுக்கு சொல்லும்படி எவ்வித உதவிகளும் செய்யாது தடாலடியாக தங்களது 70 வது வயதில் உடனடியாக அரசியலுக்கு வந்து இன்ஸ்டன்ட் காப்பி தயாரிப்பது போல உடனடியாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கருதும் இப்போதைய நடிகர்கள் குறித்து முதல்வர் எடப்பாடியார் கூறியுள்ளதில் என்ன தவறு உள்ளது?. இந்த உண்மையை கூறியதில் சிவாஜி நலப்பேரவை தலைவர் தேவையின்றி எதற்கு புரட்சித்தலைவரை சாட வேண்டும்?.


    அடுத்து ஜானகி அம்மையாருடன் அரசியல் கூட்டணி வைத்ததாலேயே சிவாஜி அவர்கள் தோல்வியுற்றார் என்று கூறுகிறார் சிவாஜி பேரவை தலைவர். சிவாஜி அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு முன் தங்கள் சமூக மக்கள் அதிகம் வாழும் இடத்தில் போட்டியிட வேண்டும் என்று கருதியே திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார்.அங்கு குறைந்த பட்சம் அவராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.இல்லையே.நிலைமை அப்படியிருக்க கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பார் என்பதாக ஜானகி அம்மையாரை குறை சொல்வானேன். ஜானகி அம்மையார் தோல்வியுற்றதற்கும் புரட்சித்தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் பாசமுமே காரணம்.தங்களின் உயிருக்கு உயிரான தலைவராம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்ததை மக்கள் ஏற்காததே அவரது தோல்விக்கு காரணம்.இந்த நிலையில் புரட்சித்தலைவர் அவர்கள் தம்பி தம்பி என்று மிகுந்த அன்புடன் அழைத்து பாசத்துடன் பழகி வந்த சிவாஜி அவர்களும் ஜானகி அம்மையாருடன் அரசியல் கூட்டணி வைத்தார்.மக்களும் தங்கள் பதிலை தந்தனர். இது புரிந்து கொள்ள கூடிய ஒன்றுதானே.? இங்கும் புரட்சித்தலைவர் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அழியா பாசத்தை புரிந்து கொள்ளலாம்.

    இந்த தேர்தலில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தால்தான் சிவாஜி அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. சரி அதன் பின் வந்த தேர்தல்களில் சிவாஜி அவர்கள் களம் கண்டு வெற்றி பெற்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை.? காரணத்தை நாம் சொல்லியே ஆக வேண்டுமா?
    வரலாறு இவ்வாறு இருக்க வயதான பின்னரே எம்ஜிஆர் கட்சி துவங்கினார் என எந்த அடிப்படையில் கூறுகிறார் இவர். சிவாஜி அவர்கள் நினைத்திருந்தால் பதவிகள் அவரை தேடி வந்திருக்கும் சுய மரியாதையை காரணமாகவே பதவிகளை அவர் நாடி செல்லவில்லை என்றெல்லாம் என்ன வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் தலைவர் குறித்து சொல்லிக்கொள்ளுங்கள்.அது பற்றி எமக்கு ஆட்ஷேபனையில்லை. வரலாற்றின் பக்கங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறைத்து விட முடியாது.

    ஆனால் எதற்கு இங்கே புரட்சித்தலைவர் குறித்து கொச்சைப்படுத்தி பேச வேண்டும். முதல்வர் சிவாஜி அவர்கள் குறித்து கூறினார் என்றால் அவருக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டுமேயன்றி சந்தடி சாக்கில் புரட்சித்தலைவர் குறித்து அவதூறு கூறினால் எங்களுக்கும் அதை விட அதிகம் சொல்ல தெரியும். எனவே இனியாவது சற்றும் தேவையின்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை விமர்சனம் செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.இல்லையெனில் இன்னும் அதிகம் வரும். ...........


    ஆர்.கோவிந்தராஜ்.
    mgr17.blogspot com.................. Thanks.........

  4. #2003
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை. முழுமையாக நான் பின்பற்றுவதால் அவரின் பக்தர்கள் சிலரோடு கூட என்னால் அனுசரித்து போகமுடியவில்லை.அனைவருக்கும் ஏதோ ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நான் வணங்கும் தெய்வம் எம்ஜிஆருக்கு அப்படி ஒரு எண்ணமே இருந்தது இல்லை.
    ஒரு மனிதனுக்கு தேவை உண்ண உணவு,உடை,இருப்பிடம் .அது கூட யாருக்கும் நாம் இறந்தபின் உபயோகப்படப்போவதில்லை என்று எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.
    இப்படிப்பட்ட தெய்வத்தோடு சிலரை ஒப்பிடுவது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. யாராவது நீ ஏன் எம்ஜிஆரை விரும்புகிறாய் என்றால் அவரது உயிலை படித்துவிட்டு வந்து கேள்வி கேள் என்று தைரியமாக கேளுங்கள்��
    எம்ஜிஆர் எப்படிப்பட்ட மஹான் என்று அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
    இதோ என் தெய்வத்தின் உயில்��
    முகவுரை எழுதியது: V. P சிவகுமார் நாமக்கல்.
    (ஏதோ என்னால் முடிந்தது)

    புரட்சி தலைவர் எழுதிய உயில் பின்வருமாறு������
    எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28-04-1986 ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18-01-1987ல் (2_வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 09-01-1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

    சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:_

    செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல்_அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.

    எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

    சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

    அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

    1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

    2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.

    3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

    4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

    5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

    6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

    7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

    மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.

    என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

    அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

    அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

    இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவை செய்யவேண்டியது.

    என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27_ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27_ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27_ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

    என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

    இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.

    பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.

    சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

    சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

    இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.

    இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்.

    பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

    அதன் விவரம் வருமாறு:_ சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்.

    அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:_

    "இந்த தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."

    இவ்வாறு அவர் கூறினார்......... Thanks...........

  5. #2004
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரசியுங்கள்

    ......... Thanks.........

  6. #2005
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 15-11-2019 முதல் மகத்தான ஆரம்பம்... சென்ன- பாலாஜி dts., தினசரி 2 காட்சிகள்... வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும்" குலேபகாவலி" திரையிடப்பட்டுள்ளது... Thanks.........

  7. #2006
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் (15/11/19) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*

    -------------------------------------------------------------------------------------------------------------------------------

    சென்னை* பாலாஜி - குலேபகாவலி* - தினசரி 2 காட்சிகள் (நண்பகல் /மாலை )

    மதுரை திருமங்கலம்* ஆனந்தா - ரிக்ஷாக்காரன்* - தினசரி 4 காட்சிகள்*

    கோவை* சண்முகா* - தொழிலாளி - தினசரி 4 காட்சிகள்*

    விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில் - எங்க வீட்டு பிள்ளை* (10/11/19 முதல் )தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

  8. #2007
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  9. #2008
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks...

    .

  10. #2009
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks...

  11. #2010
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •