Page 195 of 402 FirstFirst ... 95145185193194195196197205245295 ... LastLast
Results 1,941 to 1,950 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1941
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 35.

    காரியத்தை ஆராய்ந்து பார்த்தால் காரணம் தானாகவே தெரியும். .
    என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கைகள் பல பல. ஒருவனை குற்றவாளியாக்கிக் விடலாம். நிரபராதி என்று நிருப்பதுத்தான் கடினம். இது வரை என் வாழ்விலே கள்ளம் இல்லை .கபடம் இல்லை .சூதும் இல்லை .
    சூழ்ச்சி இல்லை. ...இந்த பதவி நான் கேட்டுக் பெறவில்லை. ..கூப்பிட்டு தந்திர்கள் என்பதற்காக நான் செய்வதெல்லாம் சரி என்று வாதிக்கவும் இல்லை. .
    பொறாமைக்காரர்கள் விஷ மூச்சிலே. .சதிகாரர்கள் பின்புறம் இருந்து தாக்கிய சூழ்ச்சியிலே. நான் யார் என்ற கேள்வியை மறந்து. குற்றவாளி கூண்டிலே நிற்கவேண்டிய கோரமான நிலை அடைந்திருக்கிறேன்..
    நான் நிரபராதி என்று நிருப்பிதற்க்கு முன் இந்த வழக்கை திருஷ்டி செய்தவர்கள் திறமைசாலிகள் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ..அந்த திறமைக்குத்தான் நீதிக்கு அடிப்படை என்றால் தாங்கள் இஷ்டம் போல் தீர்ப்பு கூறலாம். .

    இது மதுரை வீரன் படத்தில் கவியரசு கண்ணதாசன் வாத்தியார் குணம் அறிந்து எழுதிய வசனம் ஆகு*ம். வாத்தியார் வாழ்க்கையில் பாதி வதந்திகளாலே அவர் செய்த உண்மையான தர்மமும் வள்ளல்தனமும். பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி சதியினாலும் வயிற்றெரிச்சலில் மறைக்கப்பட்டு உள்ளது. என்பதுதான். உண்மையாகும்.ஆனால் அவரால். உதவி பெற்றவர்கள். ..பலன் அடைந்தவர்கள்..
    பயன் அடைந்தவர்கள்.. அவரால் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். .முன்னேற்றம் அடைந்தவர்கள்...அவர் பெயர் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களால் மட்டுமே வாத்தியார் பொன்மனம் வள்ளல்தனமும் மனிதநேயம் அறிய முடிகிறது. .ஒரு மனிதனின் நல்ல செயல்கள் யார் மறைக்க நினைத்தாலும்..
    அவர்கள் செய்த உண்மையான தர்மமும் வள்ளல்தனமும் அவர்கள் புகழைக்காக்கும் என்பதற்கு வாத்தியார் வாழ்க்கையை ஒரு உதாரணம் ஆகும்..

    கண்ணதாசன் அவர்கள் வாத்தியார் செய்த உதவியை எண்ணி அவர் ஒரு தனிபிறவி என்று புகழாரம் சூட்டினார். சின்னப்பர் தேவர் வாத்தியாரின் அடுத்த படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் கண்ணதாசன் போனில் பேசினார். .முதலில் பாடல் பதிவு செய்து விட்டு பிறகு படத்தின் பெயர் வைக்கலாம் என எண்ணி கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசன் எமுதிய பாடலின் முதல் சரணம் வரிகள் இதுதான்
    ஒருமுறை தான் உன்னிடம் பேசினேன் நீ ஒரு தனிபிறவி என்று நிருப்பித்துவிட்டாய் என்று தான் எழுதிய வரியின் சரணத்தை சின்னப்பர் தேவரிடம் காட்டினார். அவ்வளவு தான் சின்னப்பர் தேவர் கண்ணதாசனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் நினைத்தேன் நீங்கள் உங்கள் பாடல் வரியிலே கூறிவிட்டீர்கள் அதுவே பாடல் அதுவே படத்தின் பெயர் என்றார்,..
    கண்ணதாசன் கையில் பெரும் தொகையை திணித்து விட்டு சென்றார். .பாட்டும் சூப்பர் ஹிட் படமும் சூப்பர் ஹிட் வசூலும் சூப்பர் ஹிட் வாத்தியார் நடிப்பும் அற்புதம் அதிலும் உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே என்ற பாடல் காட்சியில் வாத்தியார் சுறுசுறுப்புக்கும் வேகத்துக்கும் இன்னொரு நடிகரால் ஈடு கொடுக்க முடியாது அவ்வளவு பிரமாதமாக வாத்தியார் அசத்திருப்பார் ......
    தனிபிறவி யின் வள்ளல்தனம் தொடரும் தொடரும் தொடரும் .......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1942
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலக்காரணம் யாரென்று ஆராய முற்பட்ட போது தான் பல உண்மைகள் தெரிய வந்தது.......... தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.க-வும் கிடையாது, திமுக-வும் கிடையாது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கட்டுமரத்துக்கா, கோழைமணிக்கா.... இல்லை.

    எல்லாப் புகழும் புரட்சித் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி ஆரு.,க்கே.

    கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.

    சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-07-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.

    ஒப்படைத்தது மட்டுமல்லாமல், 15-03-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதல்வர் திரு எம்.ஜி.ஆர்., அவர்களிடம் வைத்தது விவேகானந்தா கேந்திரம். இதற்கு முழுக்க முழுக்க பின்புலமாக இருந்து செயல்பட்டவர் திரு ஏக்நாத் ரானடே அவர்கள்.

    அன்றைய முதல்வர் எம்ஜிஆரும் அதை உடனே ஏற்றுக் கொண்டு ஐயன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் அழியாப்புகழ் மற்றும் அருமை, பெருமைகளை கருத்திற் கொண்டு இதற்கான அடிக்கல் நாட்டின் பிரதமரால் தான் நாட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படியே அன்றைய பாரதப் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை அழைத்து திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை மிகவும் பொருத்தமாக தமிழ் வருடப்பிறப்பன்று (15/04/1979) எம்ஜிஆர் நாட்டினார். அதே நாளில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை மொரார்ஜி தேசாயைக் கொண்டு கன்னியாகுமரியில் நாட்டினார்.

    ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழுமுதற் காரணம் தன்னலம் கருதா தானைத்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்.

    "இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே

    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"....... Thanks.........

  4. #1943
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 36.

    "படகோட்டி " படத்தில். மீணவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். . .
    "தொழிலாளி " படத்தில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். .
    "விவசாயி" படத்தில் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.
    "பாசம்" படத்தில் தாயின் மகிமையும் தாயில்லாத பிரிவு எப்படிப்பட்டது என்பதை காட்டினார்.
    "குடும்பத்தலைவன்" படத்தில் அண்ணன் தம்பி பாச ஒற்றுமையை காட்டினார்.
    "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் தந்தையின் பாசமும் குழந்தையின் பிரிவும் என்ன என்பதை உணர்த்தினார். .
    இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு மைய கருத்துக்கள் கூறுவதுதான் வாத்தியார் படத்திற்கு உள்ள ஒரு பாடநூல் ஆகும்,
    அப்படி கூறப்பட்ட மற்றொரு மைய கருத்து பாடநூல் தான் "தாய்க்கு தலைமகன்". ..
    மகன் தாய் மீது உள்ள பாசத்தை காட்டி வாழ்ந்திருப்பார் வாத்தியார். .
    தாய் மகன் மீது உள்ள பாசம் எப்படிப்பட்டது என்பதை காட்டினார் S. N. லட்சுமி. .
    ஆயிரம் தவறு செய்தாலும் கணவர்தான் உலகம் என்பதை உணர்த்தினார் செளகார்ஜானகி. .
    தந்தை மகள் பாசம் எப்படிப்பட்டது என்பதை நிருபித்து இருப்பார்கள். ஜெயலலிதாவும் S. V ரங்காராவ்
    ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என்பதை தாய்க்கு தலைமகன் படத்தில் அனைவரும் வாழந்திருப்பார்கள்...கதையின் நாயகன் அசோகன் என்றாலும் வாத்தியார் நடிப்பு த்தான் அனைவரையும் பிரமிக்க வைத்தது பேசப்பட்டது. .முதல் முறையாக படத்தை பார்ப்பவர்கள் வாத்தியார் நடிப்பைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர் இல்லை...கலைஞர் மு கருணாநிதி அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். .எம்ஜிஆர் நடிப்பை விமர்சனம் செய்யும் பத்திரிக்கையாளர்கள் தாய்க்கு தலைமகன் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் சிந்தாமல் வெளியே வந்தால் அல்லது அவரது நடிப்பில் குற்றம் குறை கண்டுபிடித்தால் சினிமாவில் கதை வசனம் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன். .என்று சவாலான கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் எந்த பத்திரிக்கையிலிருந்தும் வரவில்லை. . அந்தளவுக்கு வாத்தியார் நடிப்பு பேசப்பட்டது. .
    சாண்டோ சின்னப்பர் தேவர் நல்லவராகவும் கெளரவவேடத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த ஒரே திரைப்படம் இதுதான்.

    எந்த தாயாக இருந்தாலும் மூத்த பிள்ளை மீதுதான் அதிகம் பாசம் வைத்திருப்பார்கள் அதற்கு என்ன காரணம் என்று இந்த படத்தை விட இது வரை வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் யாரும் கூறியதில்லை. .அவ்வளவு தெளிவாக விளக்கமாக மனதில் ஆழமாக பதியும் படி தாய்க்கு தலைமகன் படத்தில் சின்னப்பர் தேவர் திரைக்கதையில் தெளிவுபடுத்திருப்பார். ...அதற்க்கான விளக்கம் படத்தில் S N லட்சுமி கூறும் வசனம் இதோ உங்கள் பார்வைக்கு. ...

    ஒவ்வொரு பெண்ணின் வவாழ்க்கையிலும் ஒரு கண்டம் உண்டு. . அதுதான் தலைப்பிரசவம். அதிலே சுகம் பிரசவம் ஏற்பட்டு நல்ல படியாக குழந்தை பெற்று விட்டால் அதுதான் அவளுக்கு மறுபிறவி. .அப்படி உயிருக்கு போராடி நொந்து பெற்று எடுக்கும் போது ஏற்படுற வலிதான் பிள்ளைமேல் தாய்க்கு அளவுக்கு மேல் பாசம் வளர்கிறது. .அதனால் மூத்த பிள்ளை எந்த தப்பு செய்தாலும் எவ்வளவு கெட்டவனாக இருந்ததாலும் அவன்மீது தான் பாசம் அஅதிகமாகஇருக்கும். அதனால் தான் தாய்க்கு தலைமகன் என்று மூத்த பிள்ளையே சொல்கிறார்கள்
    இதுதாங்க வாத்தியார் படத்தின் பாடநூல் என்றேன். .இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் கூற முடியாது. என்பதற்கு இதைவிட வேறு சான்றிதழ் வேண்டுமா ??
    12 1 1967 ம் ஆண்டு அன்று தான் வாத்தியார் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தமிழமே கண்ணீர் கடலில் மூழ்கியது.
    13, 1. 1967 ம் ஆண்டு அன்று தாய்க்கு தலைமகன் படம் வெளிவந்து தியேட்டரில் ரசிகர்கள் கண்ணீர் மல்கினர்
    வாத்தியார் நடித்த படங்களில் குறைந்த பாடல்கள் இடம் பெற்றுள்ள இரண்டு திரைப்படம் ஒன்று தாய்க்கு தலைமகன் மற்றொன்று நல்ல நேரம். .இரண்டு படத்திலும் நான்கு பாடல்கள் தான் இடம் பெறுகிறது.
    தாய்க்கு தலைமகன் படத்தில் முமு பாடல்களும் கவியரசு கண்ணதாசன் எழுதினார். சின்னப்பர் தேவர் படத்தில் மனோகர் நடித்த முதல் படம் இதுதான்
    பாட்டு நடிப்பு சண்டைக்காட்சி வசூல் அனைத்திலும்" தாய்க்கு தலைமகன்"... வெற்றி மகுடம் சூட்டி மாபெரும் சாதனை படைத்தது. மேலும் சாதனைகள் தொடரும் தொடரும் ....... Thanks.........

  5. #1944
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று இன்று நாளை -1974.

    1971ல் நடிகர் அசோகன் அவர்கள் தன்னுடைய மகன் அமல்ராஜ்

    பெயரில் துவக்கிய படம் .

    மக்கள் திலகம் அவர்களின் நேரிடை பார்வையில் எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் இனிமையான பாடல்கள் உருவாகி வந்தன .

    அசோகனின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு

    1971 இறுதியில் மக்கள் திலகம் தான் நடிக்கும்

    உலகம் சுற்றும் வாலிபன்

    இதயவீணை

    ராமன் தேடிய சீதை

    நினைத்ததை முடிப்பவன்

    4 படங்கள் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தும் போது

    அசோகனுக்கு ஒரு செலவில்லாமல் ''நீ என்னென்ன சொன்னாலும் கவிதை '' பாடலை படமாக்கினார் .

    1972 மக்கள் திலகம் தனி இயக்கம் கண்ட போது அசோகன் அவர்களின் நிலையில் தடுமாற்றமும் -தெளிவில்லாமல்
    போனதும் படபிடிப்பு தள்ளி போனது .

    1974 மே மாதத்தில் மக்கள் திலகம் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுத்து படத்தை வெற்றிகரமாக ,எல்லா எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கி ''நேற்று இன்று நாளை '' படம் - வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்தது என்ற வரலாற்றை உருவாக்கினார் .

    இதை புரியாத ஒரு சிலர் கட்டிய கதை - கதையாகவே முடிந்து போனது .
    நடிகர் அசோகனின் குடும்பத்துக்கு இன்றும் வருமானம் தரும் படம் நேற்று இன்று நாளை .

    நேற்று இன்று நாளை - 1974.

    மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்காக .....

    மக்கள் திலகம் அவர்களின் அபரிதமான அரசியல் -சினிமா வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட அன்றைய ''சக்திகள்'' நேற்று இன்று நாளை படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையும் உண்டாக்கி

    விநியோகஸ்தர்கள் -

    திரைஅரங்கு உரிமையாளர்கள்

    எம்ஜியார் மன்ற நிர்வாகிகள்

    எல்லோரையும் மிரட்டி - அராஜககம் செய்து - வன்முறையை கட்டவிழ்த்து

    படம் வராது என்ற சூழ் நிலையில் இருந்தது .

    வேறு எந்த நடிகராக இருந்தாலும் நிலைமையை சந்திக்க முடியாமல் சரண் அடைந்திருப்பார்கள் .

    கட்டுக்கோப்பான மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்ற பொறுப்பாளர்கள் ஒன்று பட்டு விநியோகஸ்தர்கள் -

    திரைஅரங்கு உரிமையாளர்கள்

    இருவருக்கும் அரணாக நின்று படத்தை திரையிட முழு ஆதரவு தந்தனர் .

    பறக்கும் படை என்ற போர்வையில் - ஆளும் கட்சி ஆதரவுடன் சென்னை அயனாவரம் - சயானி அரங்கத்தை சூறையாடினார்கள் .

    பல இடங்களில் வன்முறை தலை விரித்தாடியாது .

    12.7.1974 அன்று படம் வெளியானது .

    தமிழகமெங்கும் 40 அரங்குகளில் திருவிழா போல் மக்கள் - ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கினார்கள் .

    படம் மிக பெரிய வெற்றி பெற்றது .

    மக்கள் திலகம் தன்னுடைய பொறுமையினாலும் , ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் படம் வெளிவர பல யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றார் .

    ஒரு பக்கம் கோவை - மேற்கு சட்டமன்ற இடை தேர்தல் மூலம் முதல் அண்ணாதிமுக சட்ட மன்ற உறுப்பினர் செல்கிறார் .

    மக்கள் திலகம் ஆதரவு பெற்ற கோவை நாடாளுமன்ற இடைதேர்தலில்
    கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றி .

    புதுவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

    புதுவை மாநில ஆட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது

    அரசியலில் வெற்றி மேல் வெற்றி

    திரை உலகில் சாதனை மேல் சாதனை

    இப்போது கூறுங்கள்

    ஒரு மக்கள் திலகத்தின் ரசிகனுக்கு இந்த அளவிற்கு விருந்து மேல் விருந்து

    தந்து ''எல்லா புகழும் ஒருவருக்கே [இதயதெய்வம் எம்ஜியார் ] என்றென்றும்

    என்று சொல்லும் அளவிற்கு நம்மை ஆக்கிவிட்ட வள்ளலின் பெருமை என்னவென்று சொல்ல ?

    1974 ல்
    அரசியல் ரீதியாக வெற்றி மேல் வெற்றி

    உரிமைக்குரல் - 200 நாட்கள் - இமாலயவேற்றி

    நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - மிகப்பெரிய வெற்றி .

    இப்போது சொல்லுங்கள் .....

    நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் ......... Thanks..........

  6. #1945
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இப்பொழுது மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கம் நிர்வாகி அளித்த தகவல்... கடந்த வாரம் வரலாற்று சிறப்புமிக்க, முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான வெற்றியை ருசித்த வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் படைப்பு " நாடோடி மன்னன்"... காவியத்தை பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 7000 பேர்கள் ...என்ற சிறப்பு செய்தியை பகிர்ந்துள்ளார்.........

  7. #1946
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (8/11/19) கோவை டிலைட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  8. #1947
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பூம்பூஹர் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட்

    1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம்தேதி ஒன்றிணைக்கப்பட்ட "பூம்பூஹர் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட்"....இவர்கள் "ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கப்பலை" வாங்கி "தமிழ் பெரியார்" மற்றும் "தமிழ் பெரியார்" என்று பெயர் சூட்டப்பட்டது!!!

    வர்த்தக ரீதியாக அந்த் "ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கப்பல்கள் " ஜனவரி 1979ஆம் வருடமும், பிப்ரவரி 1981 வருடமும் "ஸ்கிராப்" செய்யப்பட்டது.

    ஹலடியா முதல் தூத்துகுடி போர்ட் வரையில் நிலக்கரி சொந்த கப்பலில் எடுத்துச்சென்றால் தான் அது லாபகரம், முழு உபயோகம் என்பதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 1985ஆம் ஆண்டு "தமிழ் அண்ணா" ஆகஸ்ட் 1985 செப்டம்பர் 1986ஆம் ஆண்டு "தமிழ் பெரியார்" மற்றும் ஜனவரி 1987ஆம் அன்று "தமிழ் காமராஜ்" என்று மூன்று கப்பல்கள் "புரட்சித் தலைவர் ஆட்சியில்" உலக அளவில் டெண்டர் விடப்பட்டு ஜப்பான் கப்பல் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து வெளிநாட்டு வாங்கி [ Bank of Tokyo] மற்றும் ஸ்டேட் வங்கிகளிடம் [ State Bank of India - Tokya Branch]கடனாக பெற்ற பணத்தில் வாங்கப்பட்டது.

    எதுவும் தனது பெயரில் புரட்சித் தலைவர் செய்ததில்லை. அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்..........

    கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
    கூட்டங்கள் என்னானது
    பல ஓட்டை கண்டு தண்ணீரில் மூழ்கும்
    ஓடங்கள் போலானது
    ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
    இதுதான் பாடமையா
    நான் என்ன சொல்வதுநாட்டினில் நடப்பதை
    கண்கொண்டு பாருமையா������............ Thanks...

  9. #1948
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஓர் மலேசிய ரசிகரின் கேள்விக்கு தலைவரின் தன்மையான பதில் :��������

    கேள்வி : அண்ணாவின் இதயக்கனியாம் எங்கள் தங்கமே,நான் சென்னை வந்தால் தங்களை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்குமா?

    பதில் : தம்பி என் புகைப்படத்தை நான் அனுப்புகிறேன்.அதே அளவுள்ள உங்கள் படத்தையும் சேர்த்து நுணுக்கத் திறமையுள்ள புகைப்பட நிபுணரிடம் கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் மலேசியாவிலிருந்து இங்கு வருவதால் ஆகும் செலவுத் தொகையை அங்கே உள்ள வேலையில்லாமல் கஷ்டப்படுகின்ற ஏதாவதொரு தொழிலாளர் குடும்பத்திற்கு பயன்படுத்தவும்.
    1974 ம் ஆண்டு வெளிவந்த கேள்வி பதில் பகுதி.

    இதுதான் தலைவர் எம்.ஜி.ஆர்.சொல் செயல் அனைத்திலும் தர்மசிந்தனை.

    வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்....வளர்க தூய தொண்டு.... Thanks........

  10. #1949
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்

    மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.

    இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
    எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.

    இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

    இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.

    மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.

    இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.

    அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.

    வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

    கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
    அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.

    அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.

    இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.

    நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.

    இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

    கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.

    அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

    ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.

    ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.

    அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.

    இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.

    அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

    சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.

    மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.

    இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.

    அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

    எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.......எப்பொழுதும் வாழ்வார்......... Thanks.........

  11. #1950
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை யை சார்ந்த திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் மறைவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சௌ.செல்வகுமார், செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •