Page 192 of 402 FirstFirst ... 92142182190191192193194202242292 ... LastLast
Results 1,911 to 1,920 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1911
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்.

    1965-ஆம் ஆண்டில் பரங்கிமலைத் தொகுதியில் பாலம் கட்டவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் தந்த தொகை ரூபாய் 41,500 ஆகும்.

    1968-ஆம் ஆண்டில் மட்டும் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, விழுப்புரம் கல்லூரி, செங்கல்பட்டு கல்லூரி, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மராட்டிய மாநில வெள்ள நிவாரணங்கள், ராஜஸ்தான் பஞ்சநிவாரணம், ஒரிஸ்ஸா பூகம்ப நிவாரண மற்றம் பல நற்செயல்களுக்கும் வழங்கிய தொகை இலட்ச ரூபாய்களுக்கும் மேலாகும்.

    இவ்வளவுதானா? …. 1968 – ஆம் ஆண்டே சென்னையில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தந்த தொகை ரூபாய் ஒரு இலட்டசமாகும்.

    சிலம்புச்செல்வர் ம.பொ.சி. விழாக்களுக்கு மட்டும் பலமுறை தந்த ரூபாய் ஐந்து இலட்சங்கள்.

    இவை போன்று எத்தனையோ, தமிழ்ச்சான்றோர்கள், கலையுலகப் பிரமுகர்கள், நலிந்த கலைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட முறையில் பெற்ற நிதி ஏராளம்! ஏராளம்!

    தாராளமாய்க் கலியுகப் பாரிவள்ளலாம் எம்.ஜி.ஆர். கரங்கள் ஈந்த நிதிக்கு எல்லாம் பட்டியல் ஈந்தால் அதிவே ஒரு நூலாக மலர்ந்து விடும்.

    இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், கவியரசர் பார்த்த பார்வையில் எம்.ஜி.ஆர் இறுதி வரையில் ஈயும் மனத்தோடு இருந்தார் என்பதனைச் சுட்டிடவே என்பேன்.

    அதுமட்டுமல்ல… ‘கண்ணதாசன் என்ற கவிஞரின் வாக்கு, பொய்த்ததில்லை’ என்பதனை இந்தப் தமிழ்ப்புவியும் அறியவேண்டும் என்ற ஆவலுமே எனலாம்.

    கவிஞரின் பாராட்டுக் கடிதத்தில் பவனி வரும் சில சொல்லோவியங்களைப் பாருங்களேன்!

    இதய கீதமாக மட்டுமா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இலட்சோப இலட்சம் மக்களின் இதய தெய்வமாக அல்லவா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இன்றும் திகழ்ந்து கொண்டல்லவா இறந்தும், இறவாயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    இன்னும் கவியரசரின் கணிப்பைச் சற்று, காண்போமா?

    இது கணிப்பு மட்டுமல்ல… 1954 – 56 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள் சரிந்திர சாதனைகளுமே எனலாம்.

    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த படங்கள் மூன்று. அவை முறையே,

    அலிபாபாவும் 40 திருடர்களும்
    மதுரை வீரன்
    தாய்க்குப்பின் தாரம்

    இம்மூன்று படங்களுமே வித்தியாசமான கோணங்களில் வெளிவந்து மகத்தான வெற்றிகளை ஒரே ஆண்டில் கண்ட ஒப்பற்ற படங்களாகும்.

    12.1.1956 அன்று வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடான, டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தமிழில் வெளியான முதல் கலர் திரைப்படமாகும்.

    இத்திரைப்படம் மகத்தான வெற்றி வெற்றதோடு, மதுரை ‘சிந்தாமணி’ திரையரங்கில் தொடர்ந்து, தினமும் மூன்று காட்சிகளாக 168 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது.

    ‘மதுரை வீரன்’ – இப்படத்தின் பெரும் பெருமைகளில், சிலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.

    ‘தாய்க்குப்பின் தாரம்’ 21.9.1956 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப் படமாகும். இப்படமும் மதுரை மாநகர் சந்திரா டாக்கீஸில் 161 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் சிறப்புகளையும் கண்டோம்.

    ஆக, புரட்சி நடிகர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்று திரைக்காவியங்களும் மகத்தான வெற்றிகளைக் கண்டன என்பதனை நாம் அறியலாம்.

    இனி இரண்டு படங்கள் எவை?

    மலைக்கள்ளன்,

    குலேபகாவலி – எனும் இவையே.

    ‘மலைக்கள்ளன்’, அன்றைய தமிழக அரசின் ஆஸ்தானக் கவிஞராக இருந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய கதையாகும். இக்கதை பட்சிராஜா பிலிம்ஸாரின் சார்பில் திரைப்படமாகத் தயாரித்தபோது, கலைஞர் மு. கருணாநிதி, வசனங்களைத் தீட்டினார். 1954 – ஆம் ஆண்டு வெளியான இப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றதோடு, ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பேற்றினையும் பெற்றது. அப்படம் கோவையில் 150 நாள்கள் தொடர்ந்து ஓடியது.

    குலேபகாவலி – ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் உருவானது. இப்படத்தின் பாடல்கள், வசனங்களைத் தஞ்சை இராமையதாசு எழுதினார். 1955 – ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் மகத்தான வெறியைக் கண்டது. திருச்சி பிரபாத் திரையரங்கில் இப்படம் 166 நாள்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

    பெரும் அதிசயம் என்னவெனில், இந்த ஐந்து படங்களும் இலங்கையில் பல திரையரங்குகளில் நூறு நாள்களுக்கும் மேலாக ஓடி மேன்மைமிகு சரித்திரங்களைப் படைத்துக் காட்டின.

    இந்த ஐந்து படங்களில், ‘குலேபகாவலி’ தவிர ஏனைய நான்கு படங்களில் நடிப்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த பி. பானுமதியே புரட்சி நடிகருடன் கதாநாயகியாய் நடித்துப் பெருமை பெற்றார்.

    தமிழ்ப்படவுலக வரலாற்றில் வசூல் சாதனைகளைச் செய்து காட்டிய இந்தப் படங்களைத் தொடர்ந்து, மக்கள் திலகம் நடித்த ஏனைய படங்களும் எல்லையற்ற சாதனைகளைச் செய்து காட்டின.

    அப்படங்களின் பட்டியலைப் பாருங்களேன்.

    1957 – ஆம் ஆண்டு;

    சக்கரவர்த்தி திருமகள்

    மகாதேவி

    புதுமைப்பித்தன்

    ராஜராஜன்.

    இவற்றில் முதல் மூன்றும் இணையற்ற சாதனைப் படங்களே.

    1958 – ஆம் ஆண்டு;

    நாடோடி மன்னன்.

    நம்பிக்கை நாயகனாக எம்.ஜி.ஆரை மாற்றி, நாட்டிலேயே பெரும் புரட்சியை உருவாக்கிய படமே நாடோடி மன்னன்.

    1959 – ஆம் ஆண்டு;

    கல்பனா கலா மந்திர் தயாரித்த , அறிஞர் அண்ணா கதை எழுதி, இராம. அரங்கண்ணல் வசனம் எழுதி, ஆர்.ஆர். சந்திரன் இயக்கத்தில், அருமையான பாடல்களோடு வெளிவந்த படமே ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற புரண்ட்சிக்கருத்துகள் நிறைந்த படம்.

    புரட்சி .நடிகரோடு, ஜமுனா கதாநாயகியாக நடித்த இப்படம் எதிர்பாத்த வெற்றியை ஈட்டவில்லை.

    இப்படத்தில் கவியரசரின்,

    “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்’ என்று தொடங்கும் ஒப்பற்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    1960 ஆம் ஆண்டு:

    பாக்தாத் திருடன்

    மன்னாதி மன்னன்

    ராஜா தேசிங்கு

    இம்மூன்றில், எம்.ஜி.ஆரோடு வைஜயந்திமாலா இணைந்து நடித்த, பாக்தாத் திருடன் பெரும் வெற்றியைப் பெற்றது.

    கவியரசர் கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களைத் தாங்கி, வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ முதலில் பரபரப்பான வெற்றியை எட்ட இயலாத நிலையில் இருந்து, பின்னர் யாரும் எதிர்பாராத வெறியை ஈட்டியது. ன்றளவும் இப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் வெற்றிப்படமாகவே திகழ்கிறது.

    கவியரசர் வசனத்தில், எம்.ஜி.ஆர். பானுமதி, பத்மினி, கலைவாணர், டி.ஏ. மதுரம் போன்றோர் நடித்து, மதுரை வீரனைத் தயாரித்த லேனா செட்டியார் தயாரிப்பில், டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளியான ‘ராஜாதேசிங்கு’, இஸ்லாமியக் கோட்பாடுகளில் சில சிக்ல்களால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

    இதன்பின்னர், ஜீபிடர் பிக்சர்ஸ் வெளியீடான ‘அரசினங்குமரி’: ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட, கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்த ‘திருடாதே’; தேவர் பிலிம்ஸ் வெளியீடான ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘குடும்பத் தலைவன்’ ஆகிய படங்களெல்லாம் மக்களால் வர்வேற்கப்பட்ட மகோன்னத வெற்றிப்படங்களாய்த் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் புகழ்க்கொடியை ஏந்திப் பறக்க வைத்தன.

    இன்னும் நம் இனிய கவிஞர் சொன்ன இதயம் கவர்ந்த கருந்துகள் ஒன்றிரண்டைக் காண்போமே! அவை நல்கும் ஒப்பற்ற செய்திகளை அறிவோமே!

    1955 – 56 – ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பெற்ற ‘ராணி லலிதாங்கி’ திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார். தஞ்சை இராமையதாஸின் வசனம் பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தில், எம்.ஜி.ஆரின் இயக்கக் கொள்கைகளுக்கு மாறுபட்ட கதையமைப்பும், பாடல் காட்சிகளும் இடம்பெறத் தொடங்கின.

    ‘ஆண்டவனே இல்லையே!
    தில்லையம்பல நடராஜனைப்போல்
    ஆண்டவனே இல்லையே!’

    என்ற பாடல் காட்சியில், நடிக்க இயலாது என்று எம்.ஜி.ஆர் சொல்லியும், தயாரிப்பாளர் சார்பில் விட்டுக்கொடுக்காத நிலை உருவாகியது.

    உடனே, எம்.ஜி.ஆர். தான் நடித்த காட்சிகளுக்கான செலவனைத்தையும் தந்துவிட்டு, படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர் சிவாஜிகணேசன், பானுமதியோடு இணைந்து நடித்து, அப்படம் 1957 – ஆம் ஆண்டு வெளியானது.

    ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர். ராமண்ணா தொடங்கிய ‘காத்தவராயன்’ படத்தில், கட்சிக்கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட்டார். இது போன்று, கட்சிக் கொள்கைகளுக்காக எம்.ஜி.ஆர் பல இலட்சங்களை இழந்தார். ஆனாலும் பல இலட்சம் இளைஞர்களின் இதயங்களை எம்ழஜி.ஆர், பரிசாகப் பெற்றுத் திகழ்ந்தார் என்பது மட்டும் அன்றே பெருமைக்குரிய செய்தியாகத் திகழ்ந்தது.

    புரட்சி நடிகர் தன்னுடைய கோட்பாடுகளில் இருந்து, மாறுபட்ட காட்சிகள் அமைந்து, திரைப்படம் தயாரிப்பவர்களின் மடங்களில் என்றுமே நடித்ததில்லை. 1967, 68 – ஆம் ஆண்டுகளில், அன்றைய பிரபல இயக்குநர் ஸ்ரீதர், தயாரித்து இயக்கிய ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பிலான படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் கொள்கை கோட்பாடுகளுக்கு, மாறுபட்ட ஓரிரு காட்சிகள் படத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்து, ஸ்ரீதரிடம் வாங்கிய தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார்.

    அதன்பின்னர், அந்தப் படம் சிவாஜி நடித்து ‘சிவந்த மண்’ என்ற பெயரில் வெளியானது. ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பு ஜெய்சங்கர் நடித்த வேறொரு படத்தின் பெயராகிப்போனது.

    காலவோட்டத்தில் மீண்டும் ஸ்ரீதர், தனக்கு ஏற்பட்ட சோதனையான காலகட்டத்தில், புரட்சி நடிகரைப் பார்த்து உரையாடி, ‘உரிமைக்குரல்’, என்ற படத்தைத் தயாரித்து, வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

    இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்: கண்ணதாசன், எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதசக்தியைப் பார்த்து, கணித்துச் சொன்ன கருத்துகள் எனல்லாம் உண்மைகளாய், என்றும் உயர்ந்து நின்றன என்பதனை அனைவரது உள்ளங்களிலும் பதியவைத்திட வேண்டும் என்பதற்காகவே.

    இன்னும், எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தபோதும்; பதவிகளில் இல்லாத போதும், சங்கத்திற்காக ஆற்றிய பணிகள் சரித்திர சாதனைகள் படைத்தனவே. அவரது பணிகளை நடிகர் உலகமே நன்கறியும், அவரது அரும்பணிகளின் அடியொற்றி, இன்றைய சங்கத்தலைவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிகர்கள் பட்டாளத்தை ஓரணியில் திரட்டி, நடிகர் சங்கத்தையமு, கட்டடத்தையும் கடனில் இருந்து மீட்டுள்ள சாதனையை எம்.ஜி.ஆர். சார்பில் பாராட்டி மகிழ்வோமாக.

    தொடரும்............... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1912
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் வணக்கம்.


    பார் புகழும் எங்கள்
    பொன்மன செல்வம்
    எங்கள் மீனவ குலத்தின் வேதனைகளையும், விம்மல்களையும் இந்த
    தரணிக்கே புரியும் படியாக ஆணித் தரமாகவும், அழுத்தமாகவும் தன் பண்பட்ட இயற்கை நடிப்பின் மூலமாகவும்
    பாடல்கள் மூலமாகவும்,
    காட்சி அமைப்புகள் மூலமாகவும் எடுத்துரைத்து பாரெங்கும் ஜெயக் கொடி பறத்தி 1964 ஆம்
    வருடம் வசூல் பிரளயம்
    நிகழ்த்தி அந்த வசூல்
    பிரளயத்தை இன்று வரை தொடர்ச்சியாக
    நிகழ்த்திக் கொண்டிருக்கும் " படகோட்டி" வெளியான
    வரலாற்று சிறப்பு மிக்க
    தினம் இன்று( 03/ 11/ 1964)
    என்னடா இவன் ஒரு சாதாரண திரைப் படம்
    வெளியான தினத்தை
    வரலாற்று சிறப்பு மிக்க
    தினம் என்று குறிப்பிடு கிறானே என யாரும் நினைக்க வேண்டாம்
    காரணம் என்னைப் பொறுத்த வரைக்கும்
    வரலாற்று தினம் என்று
    குறிக்க பல காரணங்கள் இருக்கிறது
    கழிந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தித் தாள்களில் எல்லோரும் ஒரு வேளை படித்திருக்க வாய்ப்பிருக்கிறது அது
    என்ன செய்தி என்றால்
    சமீபத்தில் அடித்த " கியார்" புயலில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச்
    சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த
    92 மீனவர்களை காணவில்லை என்ற
    செய்திதான் அது , ஆனால் நிறையப் பேர்
    அந்த செய்தியை படித்திருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் எல்லா பத்திரிக்கைகளிலும்
    நான்காம் பக்கத்தில்
    ஒரு மூலையில் இந்த
    செய்தி பிரசுரிக்கப் பட்டதால் இதை யாரும்
    ஒரு பொருட்டாகவே
    மதித்திருக்க மாட்டார்கள் , எல்லோர்
    கவனத்தையும் வேறு ஒரே ஒரு செய்தியை
    மட்டும் படிக்கத் தூண்டும் வகையில் முதல் பக்கம் பிரசுரிக்கப்பட்ட செய்தி
    நாட்டுக்கு மிகவும் முக்கியமான செய்தி
    தேசத்தின் வறுமையை
    போக்கும் செய்தி , ஏழைகளின் கண்ணீரை
    துடைக்கும் செய்தி
    வேறு ஒன்றுமில்லை
    நடிகர் ரஜினி காந்துக்கு
    வாழ் நாள் சாதனையாளர் விருது
    கிடைத்துள்ளது
    இப்படிப் பட்ட ஊடகங்களைப் பெற்றிருக்கும் நம் தமிழ்
    சமுதாயம் பெருமைப் பட வேண்டாமா?
    இந்த சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல தன்
    படங்களை ஒரு பாடமாக
    பயன்படுத்திய ஒரு உத்தம ராசாவுக்கு இந்த
    விருது கொடுக்க வேண்டியதுதான் ஏற்கெனவே பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்
    பாடப் புத்தகத்தில் இவரைப் பற்றிய பாடம்
    இணைத்தாகி விட்டது
    எப்பேர்ப் பட்ட தியாகி
    சரி அது போகட்டும்
    இரண்டு வருடங்களுக்கு முன் இதே குமரி மாவட்டத்தில் " ஒகி" புயல் அடித்த போது நூற்றுக் கணக்கான
    மீனவர்கள் மடிந்து போனார்கள் , இப்போதும் 92 மீனவர்களை காணவில்லை இதைப்
    படிக்கும் எல்லோருக்கும்
    இது ஒரு சாதாரண ஒரு
    வரி செய்திதான் ஆனால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
    தன் வீட்டுப் பிள்ளைகளை யாரால் பசி, பட்டினி இல்லாமல் யாரால்
    வளர்க்கப் பட்டாமோ அந்த கடல் தாயிடமே தூக்கிக் கொடுத்து விட்டு தணலில் இட்ட
    புழுவாகத் துடிக்கும் அந்த குடும்பங்களை
    நினைத்துப் பாருங்கள்
    கடல் தாயின் மடியில்
    படுத்துறங்கி அந்த தாயின் அரவணைப்பில் மூன்று
    வேளை நிம்மதியாக
    கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் குமரி
    மண்ணில் ஈர உள்ளங்கள் கொண்ட
    மீனவ குலத்தில் தான்
    நானும் பிறந்தேன்
    எங்களின் வாழ்க்கை
    " சுறா" என்னும் படத்தைப் போன்று வெறும் காசுக்காக முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியில் தயாரிக்கப் பட்ட படத்தைப் போல அல்ல
    அது வலியும் வேதனையும் கண்ணீரையும் சுமந்து
    செல்லும் ஒரு நெடிய பயணம்.
    நிறைய பேர் நினைக்கலாம் ஏன் இந்த மீனவ மக்கள் எம்.ஜி ஆரை இந்த அளவுக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று
    அதற்கு காரணம் இருக்கிறது , எங்களின்
    வாழ்க்கை முறையையும், கடல் தொழிலில் உள்ள கஷ்ட
    நஷ்டங்களையும், வேதனைக் குமுறல்களை யும் , ஒற்றுமையாக போராடினால் எல்லா
    நன்மைகளையும் நம்மால் நிச்சயமாகப்
    பெற முடியும் என்பதையும் கருத்துள்ள வசனங்களாலும், மனதை வருடுகின்ற பாடல்களாலும், நம் ஊரில் கூட இப்படித்தான் நடக்கிறது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு
    மனிதனையும் சிந்திக்க
    வைக்கும் காட்சி அமைப்புக்களாலும் இப்படி ஒரு படம் இது வரை வந்ததில்லை என்னும் அளவுக்கு எங்கள் மீனவ குலத்தின் பிரதிபலிப்பாக " படகோட்டி" வந்ததைப் போல எந்த படமும் இந்த 2019 வரையிலும்
    வர வில்லை இனி மேலும் வரவே முடியாது
    சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் இந்த படத்துக்கு முன்னும் படங்களில் வசனம் எழுதி நாமும் பார்த்தோம் ஆனால் அதெல்லாம் திரை அரங்குக்கு வெளியே எதிரொலித்த தில்லை
    காரணம் அதெல்லாம்
    வெறும் பணத்திற்கான
    வெற்று அலங்கார கூச்சல்கள்
    ஆனால் இங்கே சக்தி கிருஷ்ணசாமி எழுதுகிறார் பாருங்கள்
    வசனங்கள்
    ஒரு இடத்தில் நம்பியார்
    ஆவேசமாக கேட்கிறார்
    எங்க வந்து என்ன பேசுற?
    அதற்கு தலைவர் சொல்லும் பதில் " என் மக்கள் கிட்ட அவங்க அறியாமையைப் பற்றி
    பேசுறேன்"
    அசோகன் நம்பியாரின்
    உத்தரவின் பேரில் தலைவரை வெளியே தள்ள வரும் போது
    தலைவர் முகமெல்லாம்
    சிவக்க சொல்லுவார்
    பாருங்கள் ஒரு வசனம்
    தியேட்டரே ரெண்டாகி யிருக்கும் " நெருங்காதே ஜாக்கிரதை"
    ஒரு இடத்தில் அசோகன்
    சொல்வார் " எஜமான் உங்களை அவமானமாக இவன் பேசுகிறான் அதைப் பார்த்து நீங்கள் பொறுமையாய் இருக்கலாம் ஆனால் என்னால் இருக்க முடியாது என்று
    அதற்கு தலைவர் அசால்ட்டாக சொல்லும்
    வசனம்" ரொம்ப அவமான மாயிருந்தா நாக்கை புடுங்கிகிட்டு செத்துப் போயேன்"
    அதே போல் தலைவர்
    இன்னொரு இடத்தில்
    சொல்லும் வசனம்
    " இல்லாதவங்க குறைவது நன்மை
    இல்லாதவங்க நிறைவது தீமை"
    இதுபோல இன்னும் பல
    இடங்களில் சும்மா கத்தி
    சொருகுகிற மாதிரி இருக்கும் வசனங்கள்
    ஒற்றுமையைப் பற்றி
    தலைவர் சொல்லும் வசனங்கள் எல்லாமே
    உண்மையின் உரை கல்லாக அப்படியே ஜொலிக்கும்
    வாள் யார் கையில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால்
    அதை வீசுபவன் கை
    வலிமையையும், திறமையையும் பொறுத்துதான் சாம்ராஜ்யங்கள் அமைந்தது அது போல
    எல்லோரும் வசனம் பேசலாம் ஆனால் அது
    யார் வழியாக வெளியில் வருகிறது என்பது தான் முக்கியம்
    அதனாலதான் எங்கள்
    மீனவ சமுதாயம் என்றைக்கும் தலைவரின் அதி தீவிர
    விசுவாசிகளாக இருக்க
    காரணம்
    படகோட்டி திரைப் படத்துக்கு முன்பு வெளியான என் கடமை
    படம் தலைவர் எம். எல். சி பதவியை ராஜினாமா
    செய்ததால்தான் சரியாக ஓடவில்லை என்று வீணர்கள் ஊளையிட்டார்கள் ஆனால் அதற்கு அடுத்ததாக படகோட்டி
    வெளியாகி வசூலில் இமயம் தொட்டு கொடி
    நாட்டியதும் ஊளையிட்ட
    பதர்களின் வாய்கள் எல்லாம் பெவிக்கால் போட்டது போல ஒட்டிப் போனது
    சென்னை பிளாசா 102 நாள் மற்றும் மேற்கு மாம்பலம் சீனிவாசா அரங்கு 100 நாள்
    கிரவுன்72 நாள், புவனேஸ்வரி 79 நாள்
    ஓடி எதிர்த்து வந்த ராத்திரி முரடர்களை ஓட
    ஓட துரத்தி வரலாறு
    படைத்தது
    படம் என்றால் கமர்ஷியல் கலந்து கருத்துள்ள படமாகவும்
    இருந்தால் மக்கள்
    கொண்டாடுவார்கள்
    என்பதற்கு "படகோட்டி"
    ஒரு உதாரணம்
    அது மட்டுமல்ல பாட்டுக்கொரு "படகோட்டி " என்று இன்று வரை மக்களை
    பேச வைத்த படம் தலைவரின் "படகோட்டி"

    நன்றி!.......... Thanks.........

  4. #1913
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1-11-1967...1-11-2019... கலையுலக நடிகர்கள், நடிகைகள், உட்பட சினிமா சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் சமுதாயத்தில், சமூகத்தில் அந்தஸ்து... பெருமை... தேடி தந்த ஒரே வள்ளலாம் மக்கள் திலகம் "விவசாயி" காவியம் வெளிவந்து... 52 ஆண்டுகள் நிறைவு பெற்று... 53 ம் வருட தொடக்கம்... 1967ம் வருடம் "தீபாவளி" நாளில் வந்த படங்களில் தலையாய வசூல் கண்டு ஏற்றம் கண்டதும்... மறு வெளியீடுகளிலும் இன்று வரை சக்கை போடு போடுவதும்... "விவசாயி"...

  5. #1914
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்

    இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.

    புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..

    சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்

    நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..

    மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்........... Thanks.........

  6. #1915
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969ம் ஆண்டின் டைரி - எம்ஜிஆர் ரசிகனின் பொன்விழா ஆண்டு மலரும் நினைவுகள் .
    ************************************************** ************************************************** ******************

    1968 ஆண்டு என்னை போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் தமிழ் திரையுலகத்திற்கும் மறக்க முடியாத ஆண்டாக நிறைவு பெற்றது .
    எம்ஜிஆரின் 8 படங்கள் வெளிவந்தது .8 படத்திலும் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார் . 3 வண்ணப்படங்கள் .5 கருப்பு வெள்ளை படங்கள் .
    எம்ஜிஆரின் 100 வது படமாக ''ஒளிவிளக்கு '' 20.9.1968ல் வெளிவந்தது . ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு - 3 படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து விட்டது .புதியதாக எம்ஜிஆருக்கு ஏராளமான ரசிகர்களும் , ரசிக மன்றங்களும் உருவாகிய நேரம்
    .
    இனி ....
    ..
    1969 டைரி .......
    தினத்தந்தி , முரசொலி , சுதேசமித்திரன் , தினமணி , போன்ற தினசரி பத்திரிகைகளிலும் , சமநீதி திரை உலகம் , திரைச்செய்தி , பொம்மை , பேசும்படம் போன்ற சினிமா இதழ்களிலும் எம்ஜிஆர் நடித்து கொண்டிருந்த படங்களை பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .ஏறத்தாழ 6 மாதங்களாக எம்ஜிஆர் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்காரவேலன் , எங்கள் தங்கம் , தேடிவந்த மாப்பிள்ளை , குமரிக்கோட்டம் அன்னமிட்டகை , தலைவன் , ஒருதாய் மக்கள், என அண்ணன் சங்கே முழங்கு ஆகிய படஙக்ளில் நடித்து கொண்டு வந்தார் .
    அடிமைப்பெண்
    ********************************

    ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்த அடிமைப்பெண் 1.5.1969ல் வெளிவந்தது . ஹாலிவுட் படம் போல் அடிமைப்பெண் படம் இருந்தது என்று திரை உலக ஜாம்பவான்கள் கருத்து கூறினார்கள் .


    ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாக அமைந்து விட்டது . வசூலை வாரி குவித்தது .திரை உலகத்தினர் அனைவரும் எம்ஜிஆரின் சாதனையை புகழ்ந்து பாராட்டினார்கள் .வெள்ளி விழா காவியமான அடிமைப்பெண் முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடத்தில் நின்றது மீண்டு 6 மாத இடைவெளி .......
    நம்நாடு
    *******************
    7.11.1969 அன்று நம்நாடு படம் திரைக்கு வந்தது . அடிமைப்பெண் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் நம்நாடு படமும் வசூலில் கலக்கியது .
    எம்ஜிஆரின் நடிப்பு , சமூக அக்கறை கொண்ட ஜனரஞ்சகமான பொழுது போக்கு படமாக வெற்றி பவனி வந்தது .
    அடிமைப்பெண் மற்றும் நம்நாடு இரண்டு படங்கள் 1969ல் மக்களால் , ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட படங்களாக இருந்தது
    1969 இறுதியில் எம்ஜிஆர் ரசிகர்களுக்காக ''மாட்டுக்கார வேலன் '' திரைப்படம் 1970 பொங்கல் விருந்தாக திரைக்கு வருவதை அறிந்தது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் வரவேற்க . காத்திருந்தார்கள் .

    1969ல் எம்ஜிஆரின் சாதனைகள்
    ***********************************************.
    அடிமைப்பெண் - மதுரை நகரில் வெள்ளிவிழா
    தமிழகத்தில் 14 திரை அரங்கில் 100 நாட்கள்
    சென்னை நகரில் 4 அரங்கில் தொடர்ந்து 400 காட்சிகள் ஹவுஸ் புல்
    1969 பிலிம் பேர் - விருது
    1969 தமிழ் நாடு - சிறந்த படம் விருது
    காலத்தை வென்றவன் நீ - பாடல் மூலம் எம்ஜிஆரின் அரசியல் வெற்றிகளுக்கு அஸ்திவாரம் கண்டது .

    நம்நாடு - ஒரு அரசியல் படம் என்ற சாதனை பெற்றது
    தவறுகள் செய்யும் அனைவருக்கும் ஒரு படிப்பினை தந்த படம்
    வாங்கய்யா ...வாத்தியாரய்யா பாடல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தந்தது .
    1969ல் யாருமே நினைத்து பார்க்கவில்லை .
    நம்நாடு - 9 ஆண்டுகளுக்கு பின்னர் 1977ல் எம்ஜிஆர் கைக்கு கிடைத்தது . ரசிகர்கள் . தொண்டர்கள் ஆனார்கள் . சட்ட மன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . பலர் அமைச்சர்கள் ஆனார்கள் . நம்நாடு படத்தில் நடித்த எம்ஜிஆர் தமிழக முதல்வர் ஆனார் . 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக நீடித்தார் .
    எம்ஜிஆரை நேசித்த
    ஜெயலலிதா
    பன்னீர்செல்வம்
    பழனிசாமி மூவரும்
    எம்ஜிஆரின் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக இருந்தார்கள் , இருக்கிறார்கள் என்பது நம்நாடு படம் தந்த வெற்றிதான் காரணம் .

    1969 ல் உருவான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வெற்றிகள் 2019 லும் 50 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருவது உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் , எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்களுக்கு முழு பங்கு உள்ளது .
    நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் .(இறைவன் அருளால்... நாம் தான்... நாம் மட்டுமே... கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகையில்லை...)...... Thanks..........

  8. #1917
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகா DTS., தியேட்டரில் புரட்சித்தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் " தொடர்ந்து 2 வது வாரம் ,வழங்கம்போல் பட்டாசு வெடித்து ,பால்அபிசேகம் செய்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்........... Thanks.........

  9. #1918
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks.........

  10. #1919
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆராலே தமிழகம் ஏற்றம் கண்டது கல்வியில்
    ப்ளஸ் டூ தந்தவர் எம் ஜி ஆர்
    அண்ணா பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
    அன்னை தெரசா பல்கலைகழகம் தந்தவர் எம் ஜி ஆர்
    பாரதியார் பலகலைகழகம் தந்தவர் எம் ஜி ஆர்
    பாரதி தாசன் பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
    தமிழுக்கு பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
    இன்னும் பல பல்கலைகழகம் எம் ஜி ஆர் தந்தது
    வாழ்வுக்கு முக்கிய உணவை சத்துணவாக தந்து வலுவான தமிழ் சமூகம் உருவாக்கியவர் எம்ஜிஆர்

    கல்வியின் பொற்க்காலம் எம் ஜி ஆர் ஆட்சி
    சிலர் காமராஜ் பள்ளி கூடங்கள் திறந்தார் என வக்காலத்து வாங்கலாம் அப்போது சுதந்திரம் கிடைத்த புதிது அடிபடை கடாடுமானம் அமைகாக 20 அம்சதிட்டம் போன்ற திட்டமும் எவர் வந்தாலும் செய்யும் அடிபடை வசதிகளே அவை

    தொழிற்க்கல்வி மேற்கல்வியில் புரட்சி முன்னேற்றம் தந்தவர் எம் ஜி ஆர்

    வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்....... Thanks...

  11. #1920
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ....... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •