Page 169 of 402 FirstFirst ... 69119159167168169170171179219269 ... LastLast
Results 1,681 to 1,690 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1681
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன் !
    _________________________
    ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
    நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !

    கவிஞர் வாலி !

    உலகிலுள்ள நடிகர்கள் அனைவரும் நடிப்பென்ற இலக்கணத்திற்கு உட்பட்டு நடித்தார்கள் மக்கள் திலகம் மட்டும் தனக்கென்ற இலக்கணத்தை தானே அமைத்து கொண்டார் !

    உதாரணமாக சண்டைகாட்சிகளில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மக்கள் திலகம் சிரித்துக் கொண்டோ அல்லது நகைச்சுவையாக பேசிக்கொண்டோ சண்டையிடுவார் !

    இந்தப் பாடல் காட்சியை பாருங்கள் !
    உரிமைகளை பெறுவதெல்லாம்
    உணர்ச்சிகள் உள்ளதானாலே !
    நூறு பக்கங்கள் வசனம் பேசியும் காட்டமுடியாத உணர்வை இரண்டே வரிகளில் காட்டிவிடுவார் இந்த காட்சியை காணும் ஒவ்வொரு முறையும் உணர்வுகளால் உடல் சிலிர்ப்பதை உணராலாம் இதனால் தான் நமக்கு இவர் வாத்தியார் !........... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1682
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    லண்டனில் புரட்சித் தலைவர் .........

    30-07-1973அன்று மகாத்மா காந்தி அரங்கில் [ இந்திய ஒய்.எம்.சி.எ வாழகத்தில் நடந்தது. கூட்டம் அலைய மோதியது. லண்டன் தமிழர்களின் வரலாற்றில் எப்படிப்பட்ட கோட்டம் கூடியதில்லை என்ற அளவுக்கு கூட்டம். தலைவர், திருமதி லதா சபா, ப.நீலகண்டன், சித்ரா கிருஷ்ணசாமி.....ஆகியோர் வந்திருந்தனர். [ விவரம் பதிவும் நீளத்தை அதிகரிக்கும்]

    தலைவாரி பேச அழைக்கப்பட்டார். கையொலி வானை பிளந்தது. சுருக்கமாக தனது பேச்சை முடித்து கொண்டார் தலைவர். ரசிகர்கள் விடவில்லை கேள்விகள் கேட்டார்கள். கேள்விகளால் தலைவரை மடக்க முயன்றவர்கள் அடங்கி போனார்கள்!!!!! இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்தது. பொறுமையுடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . "லண்டன் ஸ்டேஜ் கிரேஷன்ஸ்" அளித்த நவீன பாடல் கச்சேரி இடம் பெற்றது ............இவளா முடிய இரவு 11மணி. கூட்டத்தில் பொதுவாக மக்கள் மத்தியில் தோன்றிய என்ன ..... ஓவர் நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ நினைக்காமல் தங்கள் குடும்பத்து ஒருவராக நினைத்தார்கள். மக்கள் திலகம் புரட்சித் தலைவர் உண்மையிலேயே எங்க வீட்டுப் பிள்ளை தான்.

    (Auditorium/Hall present look and capacity may be different)������......... Thanks...

  4. #1683
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மாண்புமிகு தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் - வாழ்த்துக்கள்.

    இந்த நேரத்தில் நமது புரட்சித் தலைவர் அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் [ எல்லோருக்கும் தெரிந்ததே] மற்றும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டம் வழங்கியதை நினைவுகூர்வோம்.

    அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் நமது புரட்சித் தலைவருக்கு "பொது நிர்வாகத்துறையில் திறமைக்கு" கௌரவ கலாச்சார டாக்டர் பட்டம் வழங்கியது. கவிஞர்களால் அரசு ஒன்று நிறுவப்படவேண்டும் என்று தத்துவஞானி பிலேட்டோ அவர்களின் சுமார் ஆண்டுகளுக்கு முன் கண்டா கனவை நனவாக்கி, தான் சேவைபுரியும் தமிழ் மக்களின் மேல் புரட்சித் தலைவர் கொண்டுள்ள அன்பாயும், அக்கறையும் பாராட்டி இந்த கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. ������......... Thanks Mr.SB.,

  5. #1684
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1685
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    நன்றி - தினகரன் தீபாவளி மலர்

  7. #1686
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவியரசு கண்ணதாசன் அவர்கள்... "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்" என்ற பாடல் எமுதிக்கொண்டிருந்த நேரம். ..கண்ணதாசன் காண அவரது வீட்டுக்கு நடிகவேள் M R ராதா அவர்கள் வந்தார். .கண்ணதாசன் எமுதிய பாடலை வாங்கி படித்து பார்த்தார். .பாடல் வரிகள் M R ராதாவை வெகுவாக கவர்ந்தது. கண்ணதாசனை அப்படியே கட்டி தழுவி பாராட்டினார். .என்னய்யா கவிஞன் நீ உன்னை போல் கவிஞனை நான் பார்த்ததில்லை பிரமாதமான பாடல் கண்டிப்பாக இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாது. உலகளவில் பேசப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்..ஆமாம் இந்த பாடல் யாருக்காக எழுதப்பட்டது என்று கேட்டார். ..? அதற்கு கண்ணதாசன் நீங்களே சொல்லுங்கள் யாருக்கு இந்த பாடல் பொருந்தும். , ? நீங்கள் சரியான பதில் தந்தால் அந்த பாடல் அவருக்கே போய் சேரும். தவறான பதிலாக இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். உங்கள் சொந்த படத்துக்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்றார் கவிஞர்.. அதற்கு M R ராதா பதில் அட என்ன இப்படி கேட்டிட்டுங்க உங்கள் பாடலுக்கு உயிர் கொடுக்க எம் ஜி ஆர் ஒருவர் தான் இருக்கிறார் அவரைத்தவிர வேறு எவருக்கும் பொருந்தாது. எனக்கு கொடுத்தால் என் தலைமுறை வரைக்கும் தான் பேசப்படும். ஆனால் எம் ஜி ஆர் க்கு பல தலைமுறை தாண்டி நிலைக்கும் என்றார்..உடனே கவியரசு கண்ணதாசன் ராதாவை கட்டித்தழுவி நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள். இது கண்ணதாசன் பாடல் என்பதை தாண்டி எம் ஜி ஆர் பாடல் என்றுதான் பேசப்படும். என்றார். .

    சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் புரட்சித்தலைவரை சந்தித்த M R ராதா அவர்கள் .எல்லா நடிகர்களும் கவிஞர்களின் வரிகளுக்கு வாய் அசைவு கொடுப்பது சுலபம் ஆனால் வாழ்ந்து காட்டுவது கடினம். நீங்கள் வாழவும் வைக்கிறீர்கள் வாழ்ந்தும் காட்டுகிறீர்கள் என வாழ்த்துக்கள் கூறி கண்ணதாசன் எமுதிய பாடலையும் குறிப்பிட்டு பாராட்டினார்.
    M R ராதா அவர்களால் பாராட்டுப்பெற்ற பாடலுக்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தந்து மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தார் எல்லா பாடல் வரிகளையும் கவனிக்கும் புரட்சித்தலைவர் இந்த பாடலை மட்டும் கவனிக்கவும் இல்லை திருத்தவும் இல்லை. .பாடல் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. உலகளவில் பேசப்பட்டது.
    லண்டன் மியூசிக் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய பாடல் இதுதான்
    முதல் முறையாக கல்லூரி செல்பவர்களுக்கு பல கல்லூரிகளில் முதல் பாடமாக இப்பாடல் கருத்துக்கள் தான் பாடமாக நடத்தப்பட்டது. .
    மதுரை பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான்
    கூகுளில் ரிங் டோன் தொடங்கி முதல் முதலாக இடம் பெற்றது இப்பாடல் தான்
    மு க ஸ்டாலின் மு க அழகிரி சீமான் திருமாவளவன் ராமதாஸ் மற்றும் பல தலைவர்களின் ரிஙடோனில் இடம் பெற்றுள்ள முதல் பாடல் இதுதான். .
    பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் நடிகர்கள் வி ஐ பி க்கள் மற்றும் அனைத்து பிரபலமானவர்கள் பிரபலமான பாடல் இதுதான். ஏன் எந்த ஒரு குற்றமும் குறையும் கூற முடியாத ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிக்காட்டியாக விளங்குகிறது இப்பாடல் தான். . இதை எல்லாவற்றுக்கும் மேல் வாத்தியார் புகழுக்கு புகழ் சேர்த்தது. ...தொடரும் தொடரும் தொடரும்........... Thanks.........

  8. #1687
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks.........

  9. #1688
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks...........

  10. #1689
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிக பேரரசர் கலை மன்னர் நடித்து மாபெரும் சரித்திர காவியம் மன்னாதி மன்னன். புரட்சி நடிகர் எம் ஜி ஆர், அகில உலக நாட்டியப் பேரொளி பத்மினி, அழகு மயில் அஞ்சலி தேவி, ராகினி, பி எஸ் வீரப்பா, எம் ஜி சக்ரபானி, வி ஆர் ராஜகோபால், நாராயண பிள்ளை, சேதுபதி, திருப்பதிசாமி, லட்சுமி பிரபா மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றி காவியம் மன்னாதி மன்னன். வெளியாகி இன்றுடன் 59 (19-10-1960) வருடங்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டு வருகிறது. சேர மாமன்னர் மணிவண்ணனை எம்ஜிஆர் உருவத்தில் அப்படியே காண்கின்றோம். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட், தேன் மதுரமாக இனிமையாக இனிக்கிறது. பத்மினி உடன் காதல் ரசம் புரியும் எம்ஜிஆர், அஞ்சலிதேவி உடன் உரையாடும் காட்சி, தாயின் மானத்தை பழித்துப் பேசிய கரிகால சோழனை பழி வாங்கி தன் சபதம் ஆன கற்பகவல்லி ஐ சிறை எடுக்கும் காட்சி, பி எஸ் வீரப்பா உடன் மோதும் சண்டை காட்சி, பத்மினி உடன் நாட்டியமாடும் எம்ஜிஆர், அத்தனையும் மறக்கமுடியாத இயற்கையான பசுமையான நினைவுகள். "பசும் தங்கம் உமது எழில் அங்கம் அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே ஈடு ஏதும் இல்லாத கலை சேவையில் தனி இடம் கொண்ட உமை கண்டு இப்பூமியில் ஆடாத மனமும் உண்டோ"!. மாபெரும் வீரர் (மணிவண்ணன்) மானம் காப்போர் (சித்ரா) சரித்திரம் தனிலே நிற்கின்றார். இயற்கையான நடிப்புக்கு மணி மகுடம் சூட்டிய இயற்கை பேரரசு மன்னாதி மன்னன் எம் ஜி ஆர் புகழ் வாழ்க!........... Thanks............

  11. #1690
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

    படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் ’TIME TO LEAD’ எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த ‘தலைவா’க்களைப் பார்க்கிறோம். ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

    இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

    ‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.

    பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

    அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

    ‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

    இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

    எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

    படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.

    தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

    அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

    தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.

    கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

    எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

    ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

    துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

    தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.

    ‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

    தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

    திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

    எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன.................. Thanks .............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •