Page 162 of 402 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1611
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1612
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1613
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஹீரோ 1972

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு 1971ல் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் '' ரிக் ஷாக்காரன் '' படத்திற்காக 1972ல் கிடைத்தது . உலகமெங்கும் வாழும் மக்கள்; திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள் .தென்னிந்திய நடிகர் சங்கம் , பல்வேறு கலைத்துறையை சார்ந்த அமைப்புகள் , திமுக இயக்கம் , எம்ஜிஆர் மன்றங்கள் என்று எம்ஜிஆருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் . எம்ஜிஆரின் புகழ் இமயத்தின் உச்சிக்கே சென்று விட்டது .

    1972ல் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள்.

    சங்கே முழங்கு
    நல்ல நேரம்
    ராமன் தேடிய சீதை
    நான் ஏன் பிறந்தேன்
    அன்னமிட்டகை
    இதய வீணை

    நல்ல நேரம் சென்னை நகரில் சித்ரா , மகாராணி , மேகலா , ராம் நான்கு அரங்கில் 100 நாட்கள் ஓடிய பெருமை பெற்றது .
    இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது .

    ராமன் தேடிய சீதை இலங்கை கொழும்பு நகரில் 100 நாட்கள் ஓடியது .

    இதய வீணை
    சென்னை மதுரை திருச்சி நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது .

    சங்கே முழங்கு , நான் ஏன் பிறந்தேன் அன்னமிட்டகை படங்கள் வணீக ரீதியில் வெற்றி கண்டது .

    1972ல் எம்ஜிஆர் சுமார் 15 புது படங்களில் நடித்து கொண்டு வந்தார் .

    எம்ஜிஆர் மன்றங்கள் மிகவும் துடிப்புடன் செயல் பட்டு கொண்டு வந்தார்கள் .

    1972ல் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' ஆனார் .

    அரசியலில் உருவான எம்ஜிஆர் புயல் நாடெங்கும் அதிர்வு அலை உண்டாக்கியது . மக்கள் செல்வாக்கும் ஏகோபித்த எம்ஜிஆர் ரசிகர்களும் இணைந்து எம்ஜிஆரை அண்ணா திமுக என்ற பேரியக்கத்தை மையப்படுத்தி சினிமா மற்றும் அரசியலில் ஹீரோ 1972 என்று இரட்டை இலை விருந்தை துவக்கி வைத்தார்கள் .
    47 ஆண்டுகள் கடந்தாலும் எம்ஜிஆரின் திரை உலக புகழும் அரசியல் நிரந்தர ஒட்டு வங்கியும் எம்ஜிஆர் ஆட்சியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது என்றாலும் 1972 ஆண்டு தந்த வெற்றிபடிக்கட்டுகள் இன்னமும் பசுமையாக உள்ளது ............. Thanks........

  5. #1614
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்று முகாம் பதிவாளர்கள் தங்கள் திரியை தாங்கள் படிக்கவே மாட்டார்கள் போல இருக்கின்றது.

    நாம் மோசமாக எழுதுகின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் எதற்காக அப்படி கடுமையாக சொல்ல வேண்டி வந்தது என்பது அவர்களுக்கு தெரியாதா? அவர்கள் திரியை படிக்கவில்லையா.

    நாம் ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டி இருந்தது என்பதை திரியின் நெரியாளர்களுக்கும் பதிவாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.

    தங்களுக்கு அப்படி எல்லாம் மோசமாக எழுத வராது என்கின்றார்கள். ஆனால், அவர்கள் திரியில்

    பாகம் 21 -- பக்கம் 21 ---- பதிவு எண் --201

    மற்றும்

    பாகம் 21 -- பக்கம் 27 ---- பதிவு எண் --268


    ஆகிய இரண்டு பதிவுகளை எல்லாரும் பார்த்து படிக்கவும். நம்மை குற்றம் சாட்டுகின்ற பதிவாளர்களும் படிக்கவும்.

    இது எல்லாம் தரமானதா.. கேவலமானது இல்லையா.

    அட... எங்களைப் பற்றி சொன்னால் கூட பரவாயில்லை. பொறுத்துக் கொள்வோம்.

    ஆனால், எத்தனயோ ஏழைகளின் மற்றும் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் பசியை தீர்த்த வள்ளல் புரட்சித் தலைவரைப் பற்றி என்னவெல்லாம் மேற்சொன்ன பதிவுகளில் இருக்கிறது என்று பாருங்கள்.

    நடுநிலையாளர்கள் படிச்சு விட்டு இதெல்லாம் நியாயமா? என்று யோசித்துப் பாருங்கள்.

    அதற்குத்தான் நாங்களும் கடுமையாக பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.

    திருப்பியும் மக்கள் திலகம் எங்களுக்கு அப்பிடி போதனை செய்தார் என்று கூசாமல் சொல்கிறார்கள்.

    உண்மையில் அவர்கள் நடிகர்தான் அவர்களுக்கு இப்படி எல்லாம் மோசமாக எழுத போதித்து இருக்கிறார். 1977 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவரும் கருணாநிதியும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டது எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே நம் திரியிலும் பதிவு போட்டுள்ளோம். அதே பாணியில் அவரது ரசிகர்களும் எழுதுகின்றார்கள்.

    புரட்சித் தலைவர் தன் அரசியல் வாழ்க்கையில் யாரையும் தரக்குறைவா பேசியது இல்லை. திரைப்படங்களிலும் ஒருபடத்தில் கூட மோசமான வசனங்களை பேசியது இல்லை.

    எங்களுக்கு நல்லவற்றைத்தான் புரட்சித் தலைவர் கற்றுக் கொடுத்தார்.

    அவரையே மோசமாக எழுதியதால்தான் நாங்களும் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்ல வேண்டி வந்துவிட்டது என்பதை எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    புரட்சித் தலைவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து நடந்து அவரது புகழ் பரப்புவோம்.
    Last edited by MASTHAAN SAHEB; 16th October 2019 at 07:29 PM.

  6. #1615
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் லோக நாதன் அவர்களே,

    முன்ன எல்லாம் புரட்சித் தலைவர் பற்றின நிறய பத்திரிகை செய்திகள், படங்கள் போடுவீர்கள். நாங்கள் தெரிந்துகொள்வோம். இப்பவும் பத்திரிககளில் புரட்சித் தலைவர் பற்றி செய்திகள் வருகின்றன. படங்கள் தியேட்டரில் வருகின்றன. ஏன் அதுபற்றி படங்களோடும், பத்திரிகை நகல்களயும் பதிவிடுவது இல்லை.

    வாயால் சொல்வதை விட உங்கள் பணி ஆதாரத்தோடு படங்களோடு, பத்திரிகை நகல்களோடு இருக்கும். உங்கள் பணி தொடர வேண்டும்.

    நன்றி நண்பா.

  7. #1616
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாங்கள் எப்படி எல்லாம் எங்கள் அபிமான நடிகருக்கு துரோகங்கள் செய்தோம் தெரியுமா ?...

    எங்கள் அபிமான நடிகர் உயிர் கொடுத்து நடித்த ஒரு தேசிய செம்மலின் படத்தை காண முதல் நாளில் ஆர்வம் காட்டாமல் மாற்று முகாம்... நடிகர்... நடித்த படத்தை காண கதர் சட்டை போட்டு கொண்டே தைரியமாக நீண்ட வரிசையில் நின்று படம் பார்த்து எங்கள் நடிகரின் படத்திற்கு பட்டை நாமம் போட்டோம். நாங்களும் அவரின் ரசிகர்களே

    மகாபாரத கதை கொண்ட பிரமாண்ட படம் என்று வந்த நேரத்தில் சாதாரண கருப்பு வெள்ளை மாற்று நடிகரின் படம் மக்கள் வெள்ளத்தில் சக்கை போடு போட்டது அறிந்து எங்கள் அபிமான தயாரிப்பாளரே எங்கள் நடிகருக்கு டாடா காட்டி ஆயிரத்தில் ஒருவனாக அங்கே போனார் .அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே

    பக்தி படங்கள் பண்ணினேன் .பணத்தை பார்க்கவில்லை என்று கூறி மாற்று முகாமில் சங்கமம் ஆகி கடன் தொல்லையிலிருந்தது மீண்டாரே
    அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே

    தீபாவளி அன்று வெளிவந்த ஒரு வண்ணப்படம் நூறு நாட்கள் ஒட்டப்பட்டாலும் வசூலை பார்க்காமல் நட்டம் என்று ஓப்பனாக சொன்னாரே அந்த தயாரிப்பாளரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே

    மீண்டும் ஓரு தீபாவளி திருநாளில் வெளிவந்த படத்தை தயாரித்த இயக்குனர் பல காரணங்களை முன்னிட்டு மாற்று முகாமில் குரல் எழுப்பினாரே அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே .

    1967
    1971
    1973
    1977
    1980
    தமிழ் நாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சோம்பேறிகளாக உழைக்காமல் எங்கள் அபிமான நடிகரின் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கி அவரை ஏமாற்றிய நாங்கள்தான் உண்மையான துரோகிகள் .

    இப்படி சினிமா அரசியல் இரண்டிலும் எங்கள் அபிமான நடிகர் தோல்வி மேல் தோல்வி அடைவதற்கு நாங்கள் மட்டுமே முழு பொறுப்பு .
    முதல் வெளியீட்டில் எங்கள் அபிமான நடிகரின் 150 படங்களுக்கு மேல் தோல்வி அடைய செய்த பெருமை எங்களுக்கே .
    இன்னமும் விரிவாக சொல்வோம்.........தெம்பாக கேட்டு அறிந்து கொள்ளலாம்... Thanks.........

  8. #1617
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் கணேசனின் பித்தலாட்டத்தில் பாவ மன்னிப்பு படம்..... இலங்கை, பெங்களுர் திருவனந்தபுரம் 100 நாள் ஒடவில்லை. அடுத்து ராம்நாட் 100 நாளில் 50 ஆயிரம் கூட வராத டூரிங் தியேட்டரில் 2 லட்சத்திற்கு மேல் வசூலாம். 1965 ல் வெளியான திருவிளையாடல் மெயின் ஊரான நாகர் கோவிலில் 100 நாள் வசூல் 85 ஆயிரம் தான். இப்படி ஒரு பொய். அடுத்து சென்னையில் 8 லட்சம் கூட வசூல் வராத பாவ மன்னிப்பு 10 லட்சம் வசூலாம். 10 வருடம் கழித்து வந்த கணேசனின் சொர்க்கம் சென்னையில் தேவிபாரடைஸ்100 அகஸ்தியா 77 ராக்ஸி 77 ராம் 50 இவ்வளவு நாள் ஒட்டப்பட்டும் வசூல் : 10,73,184.84 தான். ஆனால் பாவ மன்னிப்புக்கு இவ்வளவு வசூலாம்.... பொய்யின் சிகரம் தான் பிறவி ( துறவி) நடிகனின் ரசிகன் பித்தலாட்டம். உரிமைக்குரல் ராஜு....... Thanks to mr. James Watt... Nagercoil...

  9. #1618
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும். அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.
    அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
    அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.,அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.

    நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.
    அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது? என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
    அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

    மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சிதலைவர்
    உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள். காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

    காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர், ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
    காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
    இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.
    மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…!!!............. Thanks.........

  10. #1619
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks...

  11. #1620
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •