Page 145 of 402 FirstFirst ... 4595135143144145146147155195245 ... LastLast
Results 1,441 to 1,450 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1441
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    நன்றி - பேராசிரியர் திரு செல்வகுமார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1442
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    கலை மற்றும் அரசியலில் யாரும் அடைய முடியாத இமாலய வெற்றி கண்டவர்

  4. #1443
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முக்கிய அறிவிப்பு ....*04.10.19 முதல் சென்னை அகஸ்தியா அரங்கில் மக்கள் திலகத்தின் வெற்றிக் காவியம் "நாடோடி மன்னன்" திரையிடப் படுவதையொட்டி, பதாகைகள் வைக்க ஏற்பட்டுள்ள சிக்கலான இந்த சமயத்தில், மாற்று ஏற்பாடாக 6.10.19 ஞாயிறு அன்று மாலை அரங்க வளாகத்துக்குள், கொடைவள்ளலுக்கு கொலு வைத்து நைவேத்தியம் செய்து படையலிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் அளித்து சிறப்பிக்க, கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை; அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இதர அமைப்புக்கள் சார்பில், ஏற்பாடு செய்யவிருந்தோம். இதனை முன்னிட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க செயலாளர் செல்வகுமார் மற்றும் இணை செயலாளர் திரு. சந்திரசேகர் ஆகியோர் வினியோகஸ்தர் ரிஷி மூவிஸ் திரு. நாகராஜன் அவர்களை தொடர்பு கொண்டு, அரங்கத்தில் நிகழ்ச்சியை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, மரியாதை நிமித்தம், முறைப்படி கீழ்கண்ட கடிதம் மூலம் கோரிக்கை அளிக்க இன்று (3.10.19) வியாழக்கிழமை, கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் திரு. ஷிவபெருமாள் அவர்கள், திரையரங்க மேலாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களை நேரில் சந்தித்து அனுமதி கோரினார். ஆனால், நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்தாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு 'படிக்காதவன்' படம் வெளியான பொழுது நடைபெற்ற ரசிகர் ஒருவரின் மரண விபத்தை சுட்டிக் காட்டி அரங்க வளாகத்துக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து விட்டார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் இதற்கு அனுமதியளித்தால், இதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பிற படங்களுக்கு அனுமதி கேட்கும் சூழ்நிலை ஏற்படும் எனக் கூறி, நமது இயலாமையை வருத்தத்துடன் அரங்க மேலாளர் பகிர்ந்து கொண்டார். எனவே, ஆவலுடன் இருந்த பக்தர்களின் உணர்வை மதிக்கும் இந்த சமயத்தில் அனுமதி மறுக்கப் பட்ட செய்தியினை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதுமையான நிகழ்வை பிறிதொரு சந்தர்ப்பத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது* . இவண் : சௌ.செல்வகுமார்.

  5. #1444
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *������ எல்லாப் புகழும் தலைவனுக்கே, எல்லாம் நன்மைக்கே:**

    "விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை", உத்தமபுத்திரன் டைட்டிலை தலைவர் விட்டுக்கொடுத்ததால் தான் நமக்கு காலத்தால் அழியாத அதைவிட பன்மடங்கு சிறப்பு வாய்ந்த, ஈடு இணையே இல்லாத "நாடோடி மன்னன்" கிடைத்தார்.
    கர்ணன் தலைவர் நடிக்காமற் போனதால் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த மணிமாறனை வாராது வந்த மாமணியாய் "ஆயிரத்தில் ஒருவன்" மூலம் அடையப் பெற்றோம். அன்று சிந்திய இரத்தம் (சிவந்த மண்) இரத்தானதால் தான் "உலகம் சுற்றும் வாலிபன்" என்கிற உன்னத காவியத்தை நமக்காக அளிக்க வேண்டுமென்கிற உத்வேகம் தலைவர் எண்ணத்தில் உதித்தது. இன்று அச்சாகாவரம் பெற்ற திரைப்படம் உலகத்தை மீண்டுமொரு முறை மிகப்பெரிய வலம் வர ஆயத்தமாக உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. உலகிலேயே நம் தலைவர் மட்டும் தான் இத்தகைய உயர்வானதொரு நிலையில் நீடித்து வருகிறார் என்பதை விட வேறு பேறு நமக்கு தேவையற்ற ஒன்று. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் தலைவரைப் பற்றி கூறிக் கொண்டே இருக்கலாம். பணம், பதவி புகழுக்கு பின்னால் அவர் செல்லவில்லை. இவையெல்லாம் அவரைப் பின்தொடரும் படி வாழ்ந்த தனிப்பிறவி தான் நமது தானைத் தலைவர்.

    எனவே இன்று அனுமதி மறுக்கப்பட்டதென்பது தலைவர் இதைவிட பெரிய வாய்ப்பை நமக்கு பெற்றுத் தரப்போகிறார் என்பதற்கான அடித்தளமாகும்.

    கொலு வைப்பதற்கான முயற்சியில், கால அவகாசம் குறைவாக இருப்பினும், சாதித்து விட வேண்டும் என்று முழுமூச்சாக செயலில் ஈடுபட்ட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம் மற்றும் ஏனைய மன்றங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனம் தளர வேண்டாம். ஏனெனில் தியேட்டர் மானேஜரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, வழக்கம் போல் நீங்கள் அனைவரும் வந்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டுடன் திருவிழா போல் கொண்டாடுங்கள், அதற்கு எவ்வித தடையும் கிடையாது என்று கூறிவிட்டார். சென்னையிலிருந்து விலகி இருந்தாலும் பட வெளியீட்டாளர் திரு ஸாய் நாகராஜ் தொலைபேசி மூலம் தியேட்டர் மானேஜரிடம் தொடர்பு கொண்டு எங்களுக்கு எப்படியாவது உதவும்படி கேட்டுக் கொண்டார். அதற்காகவும் எங்களுடனும் உடனுக்குடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    புரட்சித் தலைவர் நாமம் வாழ்க ����
    பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக ✌��✌��......... Thanks.............

  6. #1445
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அறைவேக்காடு அரைகுறையாக உளறுவது போலவே உளருக்கின்றன. குடிகார படம் தூங்க விடாமல் செய்ததாம்.. அஹ் ஹா கா... ஸ்டுண்டு நடிகராமல்ல... அந்தாளு உளறி குளரி வாந்தி எடுக்குது, அந்த நடிகர் போலவே... ஆஹா என்ன பொருத்தம். அப்புறம் இன்னொரு உளரலின் மிச்சம் ஆள், அதிகாரம் கொண்டு நிறுத்தினார்களாம், ஐயகோ ஐயோ. நம்மாட்கள் நிறுத்தினால் அதை மீற எவன் உள்ளான்? இந்த அடிப்படை விடயம் கூட தெரியாமல், அறியாமல், அல்லது தெரிந்தும் புரியாதது போல அவர்கள் உருப்படாதது போலவே கக்குகின்றனர். கேவலம்... சிலை மணி மண்டபம் னு யார் காலை பிடித்து கெஞ்சினர் இந்த ஒப்பாரி நடிகனின் தத்திகள்... பேசும்போதும், எழுதும்போதும் மனநிலை பாதிக்காமல் எழுத நல்ல மன நல மருத்துவரை அணுகுவது நன்மை பயக்கும்...

  7. #1446
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருவள்ளுவர் தினம்..!!
    வள்ளலார் நினைவுநாள்..!!
    குடியரசுத் தினம்..!!
    மகாத்மா காந்தி நினைவு நாள்..!!
    மகாவீர்ஜெயந்தி..!!
    மேதினம்..!!
    சுதந்திர தினம்..!!
    காந்தி ஜெயந்தி..!!
    மிலாடி நபி..!!
    தேர்தல் நடைபெறும் தினம்..!!
    முக்கிய அரசியல்வாதிகள், மாபெரும் தலைவர்கள்.. மரணம்..!!

    ஆக வருடம் 365 நாட்களில் சுமார் 10,12 நாட்கள் விடுமுறை Tasmac கடைகள்... இந்த 12நாட்களில் குடியை கட்டுப்படுத்த முடியாத குடிமகன்கள் பாட்டில் விலைக்கு மேல் 50ரூ..100ரூ கொடுத்து வாங்கி குடிக்க ஆளாய் பறக்கிறார்கள்.. காரணம் குடி அவர்களை அடிமையாக்கி விட்டது.. ஒருநாள், ஒரு வேளை குடிக்கவில்லை என்றால், அவர்களால் அவர்களையே கட்டுப்படுத்த முடியாது.. குடும்பத்தில் ரகளை, மனைவி, மகன், மகளிடம் சண்டை, நண்பர்களிடம் வாக்குவாதம், அநாகரீகமான வார்த்தைகள், பேச்சுகள்.. இவையனைத்தும் அரங்கேறும்..

    இனி தமிழகத்தை மது இல்லா மாநிலமாக மாற்றுவது மிக மிக கடினம்..
    1977ல் முதல்வராக பதவி ஏற்ற அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தார்.. குடியினால் ஏற்படும் விபரீதங்களை எண்ணி நாடு முழுவதும் கடுமையாக நடந்து கொள்ளும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.. அவர் ஆட்சியில் தான் மதுவிலக்கு கலால் துறை என்பது உருவாக்கப்பட்டது.. கருணாநிதியால் குடிக்கு அடிமையாகி விட்ட மக்கள் பரிதவித்தனர்.. மூட்டை தூக்குவோர், ரிக்ஷா இழுப்போர், கூலி வேலை செய்வோர் நாளெல்லாம் உழைத்த அலுப்பு தீர சாரயத்தை தேடினர்.. இவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி கள்ளச்சாராய வியாபாரிகள், காவல்துறை உதவியோடு கள்ளச் சாராயம் காய்ச்ச முற்பட்டனர்.. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பது போல மக்கள் அந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்க துவங்கினர்..

    முதலில் பெரிய பேரிடி விழுப்புரம் மாவட்டத்தில் தான் விழுந்தது.. கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் துடிதுடிக்க மாண்டனர்.. பலருக்கு கண் போயிற்று.. ஒருசிலர் கை, கால் முடங்கியது..எங்கும் மரண ஓலம் பத்திரிகைகள் தாறுமாறாக எழுதின.. கருணாநிதி எரியும் நெருப்பிலே எண்ணையை ஊற்றினார்.. தான் கொண்டு வந்த மதுக்கடைகளுக்கு நியாயம் கற்பித்தார்.. எம்ஜிஆருக்கு ஒன்றும் புரியவில்லை.. நாம் நல்லது தானே செய்ய நினைத்தோம்.. மக்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை.. அநியாயமாக உயிரை போக்கி கொண்டார்களே என மனவேதனைப் பட்டார்.. அந்த சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக கள்ளசாராயத்தினால் உயிர் பலி நடந்தேறி கொண்டு இருந்ததை கூர்ந்து கவனித்தார் எம்ஜிஆர் இனியும் மக்கள் அந்நியாயமாக சாக கூடாது என முடிவு செய்தார்.. குறைந்த விலையில் அரசே தயாரித்த கடாமார்க் எனும் சாராயத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டார்.. ஒரு லிட்டர் 24.00ரூபாய்.. என மதிப்பிட்பட்டது.
    இனிமே கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீதும், குடிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.. இனி மதுவிலக்கு தமிழகத்திற்கு சாத்தியமில்லை என்பதை எம்ஜிஆரே உணர்ந்து கொண்டார்.. ஆகவே அவருக்கு பின்னால் வந்த அம்மாவும் அவரது கொள்கையை தான் பின்பற்றினார்..

    தலைவர் பாடிய பாடல் திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது திருடர்களுக்கு மட்டுமில்லை.. குடிகாரர்களுக்கும் பொருந்தும்.............. Thanks.........

  8. #1447
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1448
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1449
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    நேற்று புரட்சித்தமிழன் திரு சத்யராஜ் அவர்களின் பிறந்த தினம்.

  11. #1450
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •