Page 136 of 402 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1351
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஞாயிறு முதல் (22/9/19) ராசிபுரம் சாமுண்டியில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின்*மகத்தான வெற்றிகாவியமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்*நடைபெறுகிறது .

    தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.வெங்கடேஷ் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1352
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (27/9/19) மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில் திரையிட இருந்த டிஜிட்டல் "அடிமைப்பெண் " தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைப்பு .

    தீபாவளி வெளியீடாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் "*மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாக உள்ளது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  4. #1353
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (27/9/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 9 கதாநாயகிகளுடன் நடித்த "நவரத்தினம் " மீண்டும் திரைக்கு வருகிறது .

    கோவையில் தீபாவளி வெளியீடாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " அல்லது "ஆயிரத்தில் ஒருவன் " திரைக்கு வர உள்ளது .

    * தகவல் உதவி : கோவை நண்பர் திரு.கமலக்கண்ணன் .

  5. #1354
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1355
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1356
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1357
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    நேற்று

    இன்று

    நாளை

    எப்போதும்

    இவர்போல்

    வேறு ஒருவர்

    இனி இல்லை

    சாதனை சரித்திரம்

    என்றும்

    அவர் வழியில்

  9. #1358
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரிய பதிவு
    படித்து பாருங்கள்...........
    சரித்திரம் சாகாது.........

    நம் சரித்திர நாயகன்
    புகழும் மங்காது..........

    அரிய படத்துடன் ஆரம்பம் பதிவு...இந்த படம் மதுரை வீதியில் 26.10.1958 அன்று "நாடோடி மன்னன் ", வெற்றி விழாவில் யானை இருமுறை நம் மன்னனுக்கு மாலை போடும் காட்சி..

    இனி பதிவுக்குள் போவோம்......

    அன்று நடந்த விழாவை முழுதாய் சொல்ல முகநூலில் இடமில்லை முக்கிய நிகழ்வுகள் மட்டும் உங்கள் பார்வைக்கு..

    26.10.1958 அன்று மதுரை மாநகரில் மன்னனுக்கு விழா...நூற்றுக்கணக்கான மைல் களுக்கு அப்பால் இருந்தும் ரயிலில், பஸ்களில், கார்களில், மாட்டு வண்டிகளில், சைக்கிள்களில் வந்து சேர்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து குவிந்தனர்.

    மாலை 4.00 மணிக்கு மதுரை சந்திப்பு ரயில்நிலையம் அருகில் இருந்து ஊர்வலம் ஆரம்பம். கண்ணுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம்.

    4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நடுவே நம் தலைவன் வீற்று இருக்க வாழ்க எம்ஜியார் என்ற கோஷம் விண்ணை பிளக்க புறப்பட்டது ஊர்வலம்.

    ரதத்தின் முன்னே சென்ற உலக உருண்டையின் மீது தங்கவாள் சுழன்று கொண்டே மின்னியது.
    110 சவரன்கள், அந்த வாளுக்கு என்று ஒரு அற்புத தனி உறை அன்றே சுமார் 61 ஆண்டுகளுக்கு முன்னால் அதன் மதிப்பு ரூபாய் 20000 ...

    ஊர்வலத்தின் முன்னே யானைகள், குதிரைகள், மாடுகள், அணி வகுத்து செல்ல பின்னே அலைகளாக வந்த ரசிகர்கள்.

    தூவ பட்ட மலர்கள், வீசி எறிய பட்ட மாலைகள் ஏராளம்....எங்கு நோக்கினும் மகிழ்ச்சி.

    நிகழ்வுகளை " நாடோடி மன்னன்", பட ஒளிப்பதிவாளர் ஜி. கே.ராமு, மற்றும் சண்முகம் ஆகியோர் பட பிடிப்பில்........

    3 மைல் தூரம் உள்ள தமுக்கம் மைதானம் வந்து அடைய ஊர்வலத்துக்கு 3.30 மணி நேரம் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

    2 லட்சம் மக்கள் குழுமி இருந்த அந்த மைதான மேடையில் தலைவன் ஏறிய உடன் எழுந்த கரகோஷம் அடங்கவே 15 நிமிடங்கள் ஆயின.

    கலந்து கொண்டவர் விவரம்.

    சட்டமன்றதலைவர் கிருஷ்ண ராவ், எதிர்க்கட்சி தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், தியாகராயர் கல்லூரி முதல்வர் ம.கி சண்முகம், கே ஆர் ராமசாமி, நாவலர், கவி கண்ணதாசன், தி.க பகவதி, என்.எஸ்.நாராயணன், துரை ராஜ், ஏ. எஸ்.ஏ சாமி, மற்றும் திரைத்துறை முன்னணியினர்.

    இந்த விழாவை நடத்தும் பொறுப்பில் எம்.சி. எஸ் முத்து அண்ணன், துரை அரசு அவர்கள்.

    தலைமை உரை ஆற்றிய பி.டி.ராசன் பேசிய பின் எஸ்.முத்து வரவேற்று பேச பின் நாவலர் அவர்கள் மக்கள் சார்பில் வழங்க பட்ட தங்க வாளை மலர் மாலை சூடிய பின் எடுத்து கொடுக்க அந்த வாளை நம் தலைவன் உயர்த்தி காட்ட என்ன ஒரு அமர்க்களம் அன்று.

    பின் எஸ்.எஸ்.ஆர் பாராட்டு உரை வழங்க நன்றி உரையில் நம் தலைவர் பேசி முடிய இயற்கையும் வாழ்த்தி பெரு மழை பெய்தது அதிசய நிகழ்வு.

    மறுநாள் காலை மதுரை பெரியவர்களும், தமிழக பெரியோர்களும், மன்ற மறவர்களும் ஆயிரக்கணக்கில் நம் வாத்தியாருடன் காலை உணவு சாப்பிட.

    விழா உரையில் தங்க வாளை கண்டு ஆசைப்படாதே, பொன்னுக்கு ஆசை பட கூடாது, தங்க ஆசையை தகர்த்து ஏறி என்ற செய்தியை மக்கள் ரசிகர்கள் எனக்கு உணர்த்தி உள்ளனர் என்று பேசி மதுரை செட்டியார் பிலிம்ஸ் கொடுத்த அந்த நிகழ்வில் கொடுத்த 11 சவரன் பரிசை அன்றே மதுரை தமிழ் சங்கத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தவர் நம் தலைவன்.. பின்னர் அந்த தங்க வாளையும் தானமாக கொடுத்த தங்க தலைவா என்றும் உன் புகழ் காக்கும் எம்ஜியார் ரசிகர்கள்.

    வாழ்க எம்ஜியார் புகழ்.பதிவில் நிறை இருந்தாலும், குறைகள் இருந்தாலும் சொல்லுங்கள்.

    என்றும் அவர் ரசிகர்கள் சார்பாக.... நன்றி.
    .
    இன்றைய நடிகர்கள் ரசிகர்கள் யாராவது இந்த பதிவை படிக்க படிப்பீர்கள் என்றால் ஓர் முறைக்கு பல முறை யோசியுங்கள்.. எம்ஜியார் எப்படி இன்று உள்ள நடிகர்கள் எப்படி என்று அவர்களை குறை சொல்லவில்லை...அவர் போல வாழ்ந்து பின் அவர் போல வர நினைக்க வேண்டும் இல்லையா... சொல்வது தவறா...நன்றி..
    நன்றி நெல்லை மணி........
    அன்புடன்...
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����.......... Thanks.........

  10. #1359
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்க...வாழ்க...பல்லாண்டென, வாழ்த்துகிறோம்
    *************************
    மலேசியா கோலாலம்பூர் நகரின் பிரிக் பீல்ட்ஸ் அருகில் அமைந்திருக்கும் டாக்டர்
    "எம்ஜிஆர் மையம்" அறங்காவலர் மரியாதைக்குறிய அண்ணார் திரு. மணிவாசகம் அவர்களது மகிழ்ச்சி பொங்கும் பிறந்த நாளுக்கு ,
    பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " சார்பில்....
    நீடித்த ஆயுளுடனும், நிலைத்த மகிழ்வுடனும், உலகம் போற்றும்... வணங்கும் ,
    உத்தமக் கடவுள் ஶ்ரீ இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன் வாழ்க... வாழ்க... பல்லாண்டு என வாழ்த்துகிறோம்.
    வாழ்த்துக்களுடன்....
    எம்ஜிஆரின் காலடி நிழல்
    கானா க. பழனி (பெங்களூர்)
    எம்ஜிஆர் பித்தன்
    அ. அ. கலீல்பாட்ஷா (திருவண்ணாமலை)
    எம்ஜிஆர் பக்தர்
    மு. தமிழ்நேசன் (மதுரை)
    எம்ஜிஆர் தொண்டர் - 1-
    சம்பங்கி GSR
    (பெங்களூர்)
    எம்ஜிஆர் தொண்டர்- 2-
    க. ராஜசேகர் (பெங்களூர்)
    எம்ஜிஆர் தொண்டர் -3-
    சுதர்சன் (பெங்களூர்)
    எம்ஜிஆர் தொண்டர் -4 -
    முருகன் @ பிரகாஷ்
    எம்ஜிஆர் தொண்டர் - 5 -
    ந. பாஸ்கரன் (பெங்களூர்)
    ------ அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர் ., உதவும் அறக்கட்டளை -- பெங்களூர்......... Thanks...

  11. #1360
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வீரப்பன் சொல்கிறார்...
    *எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
    *தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
    *ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
    *அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
    *அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
    *பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
    *சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
    '*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
    வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
    சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
    அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
    வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
    " இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
    ஏறிச் சென்றுவிட்டார்.
    அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
    தவிப்புடன் நின்றார்.
    " இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
    சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
    போங்க " என்றேன்.
    "நான் எப்படிச் சாப்பிடுவது..என்
    குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
    என்றார் அவர்.
    'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
    அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
    சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
    சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
    எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
    விட்டார்.
    அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
    எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
    அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
    போங்க..என்றேன். சரி..என்றார்.
    வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
    பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
    கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
    நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
    மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
    அவர் காருக்கு அருகில் சென்று சற்று
    தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
    அவரும் காருக்கு மிக அருகில் போய்
    நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
    ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
    எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
    அவர் என்னருகே வந்து கவரைப்
    பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
    இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
    விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
    எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
    மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
    சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
    கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
    நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
    அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
    கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
    வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
    நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
    இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
    வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
    அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
    சில கணங்கள் என்னை அமைதியாகப்
    பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
    " எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
    அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
    கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
    சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
    படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
    கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
    கொடுத்திடனும் " என்றார்.
    எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
    அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
    அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
    ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
    கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
    *அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
    *வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •