Page 121 of 402 FirstFirst ... 2171111119120121122123131171221 ... LastLast
Results 1,201 to 1,210 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1201
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான்தான் ஹீரோ; எம்.ஜி.ஆர். ‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
    என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
    சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
    ‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
    ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
    விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
    வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
    எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
    காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
    ‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
    எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.
    ‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
    செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
    எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
    கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.
    திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
    ‘படம் நிறுத்தப்படுகிறது.’
    வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
    முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
    எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்...(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்)......... Thanks..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1202
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    மணீஸ் திரையரங்கம் - திருப்பூர்

  4. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  5. #1203
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தலைவனா? #தொண்டனா?

    எம்ஜிஆருக்கு உரிமையில்லை...ரசிகர்கள் ஆவேசம்
    --------------------------------------------------------------------
    டாக்டர் உதயமூர்த்தியின் மூலமாக, பொன்மனச்செம்மலுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழக அழைப்பு வந்தது. தலைவரும் பயணத்திற்கு ஆயத்தமானார். அமெரிக்காவில் பேச, அந்நாட்டைப் பற்றிய முக்கியமான விஷயங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்...விழா வெகு சிறப்பாக நடைபெற்றது...தலைவர் பேசும்போது மக்கள் எழுப்பிய கரகோஷத்தில் அமெரிக்க அதிகாரிகளே ஆடிப் போய்விட்டனர்...

    எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது...

    "நான் சாதாரண அழைப்பின் பேரில் தான் அமெரிக்கா போனேன். என்னை வரவேற்க என் ரத்தத்தின் ரத்தங்கள் சிரமப்பட்டு வரவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்" என அறிக்கை விடுத்தார்...

    அடுத்த நாளே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டன...

    "கொடுமை ... கொடுமை...எங்களின் தலைவர், அவரை வரவேற்க வருவதை சிரமம் என்று எப்படிச் சொல்லலாம் ? பக்தர்களின் மனவேதனை தெய்வத்திற்கு எப்படித் தெரியாமல் போனது ? அமெரிக்காவில் பட்டம் பெற்றதும், அங்குள்ளவர்கள் புகழ்மாலை சூட்டியதும் உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகத் தோன்றலாம்...ஆனால் எங்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வே இதுதான்...

    தமிழகத்திலுள்ள அனைத்து மன்றத்தினரும் ஒன்று கூடி உங்களை வரவேற்க வருவோம்...உங்களுக்கு மாலை சூடுவோம்...நீங்கள் வரும் வழியெல்லாம் மாலை போட்டு வணங்குவோம். #இதைத்தடுக்க #உங்களுக்கு #எந்த #உரிமையும் #இல்லை...

    ---என்றும் உங்கள் புகழ்பாடும் மன்றத்தார்...

    என்று ஆவேசமாக எழுதியிருந்தனர்...

    இதைக் கேள்விப்பட்ட புரட்சித்தலைவர் 'கப்சிப்'.....

    பொன்மனச்செம்மல் விமான நிலையம் வந்திறங்கினார். வரும் வழியிலியே பத்தாயிரம் மாலைகள் விழுந்திருக்கும்...'தலைவர் வாழ்க' கோஷம் விண்ணைப் பிளந்தது. மாலைகள் மலையென குவிந்தன...

    இதிலும் ஒரு சுவாரசியம் என்னவெனில்...

    அடுத்த நாள் சாலையை சுத்தம் செய்ய வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் நரி முகத்தில் விழித்திருந்தனர் போல...பல ரசிகர்கள் மாலையுடன் ரூபாய் நோட்டுக்களையும் இணைத்திருந்தனர்.

    தனது தொண்டர்கள் சிரமப்படக்கூடாதுன்னு நினைக்கிற தலைவர்...

    தலைவரின் மீதுள்ள பக்தியின் மிகுதியால் அவரையே கோபித்த தொண்டர்கள்...

    தொண்டர்கள் வருத்தப்பட்டுவிட்டார்களே என்று அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு சம்மதித்த தலைவர்...

    தலைவனுக்காக தலைவன் மீதே கோபப்பட்ட தொண்டர்கள்...!
    இதுக்குப் பேரு தான் பக்தி...பாசம்...!

    ராமனை விட ராமநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என்று புராணத்தில் கூறுவார்கள்...அதுபோல் எம்ஜிஆரை விட, 'எம்ஜிஆர்' என்ற அந்த மூன்றெழுத்துக்கு தான் ஆற்றல் அதிகம்...

    #இதயதெய்வம் #பொன்மனச்செம்மலின் #புகழ்பாட #நாங்கள் #இந்த #மண்ணில் #மறுபடி #மறுபடி #பிறப்போம்.

    #இது #புரட்சித்தலைவரின் #மீது #சத்தியம்........... Thanks.........

  6. #1204
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967 ஆம் ஆண்டு தமிழகத்தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்று காஞ்சி தலைவன் எழுச்சி பேருரை ஆற்றுகிறார்.
    கயவனின் துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டாவிற்கு தன் கழுத்தில் இடம் கொடுத்து, தேர்தலில் வெற்றிக்கு வித்திட்ட எட்டாவது வள்ளல் மன்னாதி மன்னன் அண்ணாவின் உரையில் பெருமிதம் கொள்கிறார்.

    குறிப்பு!
    !!!!!!""""!!!!
    1967 ல் திமுக பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரவுள்ள அண்ணா அவர்களை சந்திக்க திரளான முக்கியஸ்தர்கள்
    கழக முன்னோடிகள் மாலைகள், சால்வைகள், பரிசு பொருட்களை கொண்டு வந்து அண்ணாவின் வீட்டில் குவிந்தனர்.வெளியே வந்த அண்ணா அவர்களை பார்த்து, வருகை புரிந்துள்ளவர்களை நோக்கி இந்த வெற்றிக்கு காரணம் நானோ, மற்ற யாரும் காரணமில்லை.
    இந்த மாபெரும் வெற்றிக்கு சொந்தக்காரன் என் தம்பி M.G.ராமச்சந்திரன் ராமவர தோட்டத்தில் இருக்கிறார்.அனைத்து மரியாதைகளையும் என் தம்பி ராமச்சந்திரனுக்கு முதலில் செய்யுங்கள் என சொல்லி அனைவரையும் ராமவர தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார்,
    இப்படி தான் அண்ணன் தம்பி உறவுகளை வளர்த்தார் அண்ணா அவர்கள்.
    வாழ்க பேரறிஞர் அண்ணா அவர்கள்!
    வாழ்க கொடைவள்ளல் MGR அவர்கள்!......... Thanks...

  7. #1205
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #MGR with his school friend Deenan during Advocate Amaran drama time in Kumbakonam.

    எம். ஜி. ஆரின் பள்ளித்தோழன் !

    கும்பகோணத்திலுள்ள யானையடி பள்ளியில் எம்.ஜி.ஆர் படித்த போது, அவரது பள்ளித் தோழராக விளங்கியவர் தீனன். பள்ளி நாடகங்களிலும் எம்.ஜி.ஆருடன் அவர் நடித்திருக்கிறார். ‘லவ குசா’ நாடகத்தில் எம்.ஜி.ஆர் லவனாகவும், தீனன் சீதையாகவும் நடித்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர் படிப்பை விட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பின் சினிமாவில் நடித்த போதும் தீனனுடன் நட்பு நீடித்தது. எம்.ஜி.ஆர் நாடக மன்றம் தொடங்கிய பின், கஷ்ட நிலையிலிருந்த தீனனுக்காக கும்பகோணத்தில் ‘அட்வகேட் அமரன்’ (அந்த சூழ்நிலையில் தீனனுடன் எடுக்கப்பட்ட படம் தான் இது) நாடகம் நடத்தி, அதன் வசூலை (ரூ.5,000) கொடுத்து உதவினார்.
    எம்.ஜி.ஆர் ராமாபுரத்தில் இடம் வாங்கிய போது, அதை சரி செய்து, அழகிய வீடு, தோட்டம் அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் தீனன். நண்பனுக்காக ‘கேரள கன்னி’ என்ற படத்தில் நடிக்கவும் இருந்தார் எம்.ஜி.ஆர்.
    ‘எம்.ஜி.ஆர் கதை’க்காக சென்னை, லாயீட்ஸ் சாலை ‘தாய் வீடு’ இல்லத்தில் நான் அவரை சந்தித்த போது (1988) அவரது வயது 75. சில வருடங்களில் தீனன் காலமானார்.

    புகைப்பட உதவி: தீனனின் மகன் பாபு.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan......... Thanks...

  8. #1206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம். ஜி. ஆருக்கு கை கொடுத்த கண்ணதாசன் !

    MGR கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்றாலும் தி.மு. க. வில் அவர் சேர்ந்தபின் தனது கடவுள் பற்றை வெளிப்படுத்தவில்லை. ஆனால் யார் மனதையும் புண்படுத்தாத பகுத்தறிவாளராக இருந்தவர் அவர் மட்டுமே.

    1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது. அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரைப்பற்றி கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

    அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார். சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை. அப்படி அவர் எழுதிய பாடல்தான்
    "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

    "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு

    உலகத்தில் திருடர்கள் சரிபாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
    கலகத்தில் பிறப்பதுதான் நீதி
    மனம் கலங்காதே மதிமயங்காதே"

    இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பட்டிருக்கும்.
    "ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக
    காட்சியமைத்திருப்பார் )
    "பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன். அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி மரியாதை செய்தார்.

    இயக்குனர் : கே. சங்கர்
    பாடியவர்: TMS
    இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    படம் : பணத்தோட்டம் (1963)

    Ithayakkani S Vijayan.......... Thanks...

  9. #1207
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

    திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்...........

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
    கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
    திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
    “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
    செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
    நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
    “என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
    மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
    “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
    “என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
    “எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
    “இருக்காதே” என்றேன்.
    “இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
    இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
    அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
    கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
    “உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
    “என்ன நினைக்கிறாய்?” என்றார்.
    “கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
    “பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
    ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
    1971 பொதுத் தேர்தலே சான்று.
    அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
    இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
    திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
    ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
    இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
    1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
    அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
    சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
    ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
    எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
    முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
    அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
    ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
    கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
    அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
    இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
    இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
    சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
    ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
    அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
    அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
    எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
    அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
    கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
    எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
    திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
    அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
    மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
    விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
    “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
    - என்றும் அவர் காட்டினார்.
    அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
    அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
    எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
    யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
    எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
    ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
    திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
    சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
    இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
    ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
    கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
    பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
    கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
    எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
    நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
    ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
    இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
    ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
    அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
    ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
    இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
    பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
    ஆதாரம் -
    கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்).........மீள்பதிவு... Thanks...

  10. #1208
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை திருமங்கலம் - ஆனந்தாDTS., இன்று முதல் (14/09/2019)மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
    தகவல்உதவி :மதுரை நண்பர் திரு எஸ்.குமார்.......... Thanks ........

  11. #1209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *புரட்சித்தலைவரின்* *ரத்தத்தின்* *ரத்தங்கள்* *அனைவருக்கும்* *வணக்கம்*����.
    நான் தலைவரின் *தீவிர* *ரசிகன்* அதாவது *தலைவரின்* *திரு* *பெயரில்* *MGR* *TV* யூடியூப் ல் தொடங்கி வரும் ஞாயிறு அதாவது தலைவருக்கு மிக மிக பிடித்தவர் யாராக இருந்தாலும் நமக்கும் பிடித்தவர்தான் அந்த முறையில் *பேரறிஞர்* *அண்ணா* *அவர்களின்* *பிறந்த* *நாள்* அன்று முதன் முதலாக *லோக்கல்* *செட்டாப்* *பாக்ஸ்* ல் முதளில் நம் தலைவரின் பெயரில் ஔிபரப்பாக உள்ளது இது குறிப்பிட்ட பகுதியில் வருவதனால் மற்றவர் இதை பார்க்க இயலாது ஆகயால் MGR TV என்று ஒரு வாட்ஸப் குழு தளம் தொடங்க உள்ளேன் தலைவரின் டிவியை அதில் காணலாம் கட்சிக்கொரு டிவி வைத்து மற்றவரை குறை சொல்வதற்க்காக இந்த டிவி தொடங்க வில்லை முழுக்க முழுக்க தலைவரின் முக்கிய பதிவு மட்டும் இடம் பெறும் *விருப்பம்* *உள்ளவர்கள்* *என்* *தனி* *நம்பர்க்கு* *உங்கள்* *பெயர்* *பதிவு* *செய்தால்* *நான்* *அந்த* *தளத்தில்* *இனைத்து* தலைவரின் டிவி நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள். அத்துடன் ரசிகர்களாகிய உங்கள் கருத்துக்கள் ஏற்றுகொள்ளப்படும் *நன்றி*
    இங்ஙனம்
    *MGR* *TV* *ராஜா*........... Thanks.........

  12. #1210
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    49-ஆண்டுகளுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கில் 28-8-1970 அன்று ஒரு சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.

    விழா தலைமை #புரட்சித்தலைவர்.. முன்னிலை தந்தை #பெரியார்

    நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த
    எல்.ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீர சைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே.ரகுபதிக்கும் சாதி மறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டார்.

    அப்பொழுது விழாவில் பேசிய எம்.ஜி.ஆர்....

    "இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும்.

    எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும்.

    தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள்.

    சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும்.

    உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள்.

    அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! " என்றார்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •