Page 116 of 402 FirstFirst ... 1666106114115116117118126166216 ... LastLast
Results 1,151 to 1,160 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1151
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  ஆசிரியர் தினம் ஆண்டுக்கு
  ஒருமுறை தான் , எங்களுக்கோ
  ஒவ்வொரு நாளும் ' வாத்தியார் தினம் '
  தான் !.........எப்பொழுதும் வெல்க, வாழ்க ...மக்கள் திலகம் புகழும்... மாண்பும்... Thanks.......

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1152
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  "இரவும் பகலும் உண்டு வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு உறவும் பகையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு"... "சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்"!. எக்காலத்திற்கும் ஏற்றதான இந்த பாடல், அற்புதமான சமூக திரைப் படமான 'மாடப்புறா' மக்கள் திலகம் காவியத்தில் இடம் பெற்றதாகும்............. Thanks...

 4. #1153
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  "காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது"... 'மாடப்புறா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள எம்ஜிஆரும், வசந்தாவும் பாடும் இந்த சுகமான காதல் பாடல் என் உயிரோடு கலந்த பாடல். என்னால் மறக்க முடியாதது. வாத்தியார் எம்ஜிஆரை தவிர, வேறு யாருக்கும் இந்த பாடலை எழுத முடியாது........... Thanks...

 5. #1154
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  காதலிலே கனி அமுதாய் கனிந்து, கனி ரசமாய் பொங்கி, ஜீவநதியாய் வழிந்தோடி, மதுர கானமாய் பறந்தோடி, தென்றல் எனும் காற்றில் உலவி, அன்பு நதியினில் நனைந்து, உறவாடி, களிப்படைந்து, வசந்தகாலத்தில் மிதந்து, இளவேனில் உதிர்கின்ற, மலர்களாய் மலர்ந்து, மையிட்ட கண்கள் பேசுகின்ற, போதையான, மயக்கமான, மதுரகானம். என்றென்றும் இளமை துள்ளுகின்ற, இரு உள்ளங்களின் தேன்சிந்தும் இன்பங்கள். 1953ல் எம் ஜி ஆர்- பி எஸ் சரோஜா நடிப்பில் வெளியான கிறிஸ்தவ சரித்திர காவியம் ஜெனோவா. "மானின் பார்வை பேசுதே இதழில் ஒளியை வீசுதே வண்ணப் பூவின் ரூபமே வானசந்திர தீபமே நாதமே கீதமே காதலில் காணும் போதை தானே வான லோகமே"........... Thanks...

 6. #1155
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  அதிமுகவின் வீர வரலாறு பகுதி 2.

  படுகொலை செய்யப்பட்ட பூலாவரி சுகுமாரன், பழனியப்பன் வழக்கு அதிகாரத்தை கொண்டு ஆடியவர்களால் மறைக்க பட்டது.இவர்கள் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் புரட்சிதலைவர் கலந்து கொண்டார். தமிழகமெங்கும் இருந்து குவிந்தனர் தொண்டர்கள்.

  1977 இல் பொன்மனம் முதல்வர் ஆக வழக்கு தீவிரம் அடைந்து வீரபாண்டியார் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு விசாரணையில் போதிய சாட்சிகள் இல்லை, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கயில் தெளிவு இல்லை என்று தீர்ப்புகூறி அனைவரும் விடுதலை வாங்கினர்.

  பொறுக்கமுடியவில்லை பொன்மனத்துக்கு.சட்டத்தில் இருந்து தப்பிய அவரை மக்கள் மூலம் தண்டிக்க முடிவெடுத்த நம் மன்னன் 1980 பொது தேர்தலில் வீரபாண்டியாரை எதிர்த்து கொலையுண்ட பழனியப்பன் மகள் பூலாவரி சுகுமாரன் தங்கை விஜய லட்சுமியை களம் இறக்கினார் கழகம் சார்பாக.

  சேலம் மாவட்டம் எங்கள் கோட்டை அங்கு எங்கள் மாவட்ட செயலாளர் வெற்றி உறுதி என்று கொக்கரித்தது கூட்டம்.
  அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீரபாண்டிக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனைதான் என் வெற்றி உண்மையின் வெற்றி என்று முழக்கம் இட்டார் வாத்தியார்.

  இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றி வந்தார். முடிவுகள் வந்தன.. பந்ததாடபட்டான் வீரபாண்டி....வென்றார் விஜய லட்சுமி பழனிசாமி
  அவரை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் எம்ஜியார்... நீதி மன்றம் வழங்க மறுத்த நீதியை மக்கள் மன்றத்தில் வாங்கி காட்டினார் வாத்தியார். பின்னர் சேலம் நகருக்கே சென்று அவர் திருமணத்தை மாப்பிள்ளை பழனிசாமி. நடத்தி வைத்தார் புரட்சிதலைவர். வீரபாண்டியன் கோழை பாண்டியன் ஆனார்.

  நன்றி வாழ்க எம்ஜியார் புகழ்..வரலாறு தொடரும்.

  பின் குறிப்பு.

  பின்னாளில் அந்த விஜய லஷ்மி பழனிசாமி நிலை பின்னால் ஒரு நாள்............ Thanks...

 7. #1156
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  *தலைவர் ஒரு மகான்*
  MGR is really a blessed soul!!!

  காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.
  காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதலமைச்சர் எம்,ஜி,ஆர்!*

  எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
  மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டுமே?
  மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
  "ஏன் இந்தப் பரபரப்பு?"

  அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.
  மஹா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.

  *"இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.

  *மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.*

  முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
  *"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."*

  *"அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!"*
  என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.

  இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜிஆரும் ஒருவர்!*
  ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!

  "நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி-- திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்--கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
  *ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"*

  இவ்வளவு தானே,
  இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
  சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
  *"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*

  "நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
  அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு ", என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
  *இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!*

  *எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!*

  *CHANDRAMOULI R.......... Thanks .....

 8. #1157
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடும் விழா... காலத்தை வென்று காவியங்கள் மூலம் மனித வளர்ச்சியை வெள்ளித்திரை மூலம் அறிவு சார்ந்த நல்ல பழக்க வழக்கங்களை நமக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மையான, நேர்மையான இலட்சியவாதியாக இருந்து பாடம் சொன்ன மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் மக்கள் ஆட்சி தத்துவத்தில் 1958 ம் ஆண்டு நாடோடி மன்னனை தந்து நாட்டு மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை மார்தாண்டன் வடிவில் வீராங்கன் நிறைவேற்றிய. சரித்திரப்படம் எப்படி சகாவரம் பெற்ற காவியமாக வரலாற்று காவியமாக திகழ்கிறதோ..... அதே போல் 11 ஆண்டு களுக்கு பின் 1969 ல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் தான் நாட்டின் தலைவன் என்பதை நம்நாடு காவியம் மூலம் " துரை" கதாபாத்திரத்தில் சேர்மனாக வந்து சேரி வாழ் மக்களுக்கு ஏழை தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றிய தொண்டன் துரை தான்..... 1977 ல் மக்களால் தேர்தலில் வெற்றி பெற்று உண்மையான மக்களின் முதல்வர் ஆனார்.. இந்த இரண்டு காவியங்களுமே என்றும் வரலாற்று பெரும் காவியங்களாகும்.... நமது தலைவரின் புகழ்பாடும் அன்பு உள்ளங்கள் தரும் ஒத்துழைப்பு மூலம் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ஒருங்கிணைந்து .... சென்ற ஆண்டு நாடோடி மன்னன் காவியத்தின் வைரவிழாவை ஒற்றுமையுடன் கொண்டாடி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்தது போல் 2019 செப்டம்பர் 08.09.2019 வரும் ஞாயிறு அன்று அதே சர். பிட்டி.தியாகராயர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சியுடன் மக்கள் திலகத்தின் நம்நாடு திரைக்காவியத்தின் பொன்விழாவையும் ஒற்றுமையுடன்...... மனதில் எவ்வித கசப்பின்றி நாம் எந்நாளும் போற்றி புகழ்பாடும் பொன்மனச்செம்மலின் புகழ்பாடும் இனிய விழாவில்..... தாங்களும் பங்கெடுத்து கொண்டு மகிழ்ச்சியை, அன்பை, நட்பை தந்து நாம் என்றும் பிரிவிணைக்கு இம்மியும் இடம் தராது ஒன்றுபடுவோம்! வாருங்கள்....... மனதார அன்புடன் வரவேற்கும்! லட்சகணக்காண தலைவர் அபிமானிகளின் பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து தலைவருக்கு புகழ் சேவை செய்யும் பக்தன் உரிமைக்குரல் ராஜு........... Thanks...

 9. #1158
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..! யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!
  By Ezhil MozhiFirst Published 5, Sep 2019, 3:28 PM IST
  HIGHLIGHTS
  எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ.. அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை...

  எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..! யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!

  ஒரு சிறிய கையடக்க போனிலேயே இந்த உலகம் அடங்கி விட்டது என கூறலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது. எதைவேண்டுமானாலும் அடுத்த நொடியே நம்மால் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

  அவ்வளவு ஏன்? நம்மை அழகழகாக நாம் வைத்திருக்கும் மொபைல் போனிலேயே படம் பிடிக்க முடியும். எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ.. அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை.  ஆனால் அன்றைய காலகட்டத்தில் இப்படியா? என்றால் கிடையாது.. அன்றைய காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுப்பது என்பது ஒரு அரிதான செயலாக பார்க்கப்பட்டது. மிகவும் சந்தோஷமான விஷயமாக கருதப்பட்டது. மிகவும் பொக்கிஷமாக காக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோ இன்று அனைவரின் கவனத்தை ஈர்க்க தான் செய்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

  இந்த புகைப்படம் உங்களுக்காக....  அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் எடுத்துக் கொண்ட ஓர் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கனிமொழி சிறு பெண்ணாக இருக்கும்போது எம்ஜிஆர் அவர்கள் அவரை ஆசையாக தூக்கி வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்........... Thanks...

 10. #1159
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  இந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.காவிய படங்கள்
  _---------------------------------
  06/09/2019 முதல் கோவை
  நாஸில் எங்க வீட்டு பிள்ளை-,தினசரி 4 காட்சிகள்

  திண்டுக்கல்-என் .வி.ஜி.பி.யில்
  ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்

  சென்னை பாலாஜியில்
  விக்கிரமாதித்தன்
  தினசரி 2 காட்சிகள்
  (காலை11.30/,மாலை 6.30).......... Thanks mr. Loganathan Sir...

 11. #1160
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,967
  Post Thanks / Like
  ￰திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் dts அரங்கில் 6/09/2019 முதல் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.இருவேடங்களில் நடித்த "நாடோடி மன்னன் " தினசரி 3 ,காட்சிகள் நடைபெறுகிறது

  பண்ணைபுரம் தியாகராஜாவில் (தேனி மாவட்டம்)புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
  ஆயிரத்தில் ஒருவன்
  தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.......... Thanks...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •