Page 112 of 402 FirstFirst ... 1262102110111112113114122162212 ... LastLast
Results 1,111 to 1,120 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1111
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    பாடகர் பித்துகுளி முருகதாஸ் புரட்சித்தலைவரிடம் இருந்து கலைமாமணி விருது பெற்று மகிழும்போது.

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1112
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
  6. #1113
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை 380 :

    சென்னை மாநகரம் தோன்றி 380 ஆண்டுகள் ஆகி விட்டன.

    இந்த 380 ஆண்டுகளில் சென்னை மாநகரத்தில் எத்தனை வளர்ச்சி ! அப்பப்பா ! அபாரம் !

    கலை, இலக்கியம், பொருளாதாரம், அரசியல், தொழில் நுட்பம் .... இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சென்னை பெருநகரம் வளர்ச்சியடைந்ததை ஒரு மகத்தான சாதனை என்றே கூறலாம்.

    வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தோருக்கு, ஒரு தனி அடையாளம், நல்வாழ்வு; புகழ் இவற்றை ஈட்டு தந்த மாநகரம் சென்னை.
    இந்தியாவின் முக்கிய நான்கு மாநிலங்களில் பிரதானமாக. வங்க கடலோரம் அமையப் பெற்ற வாணிப நகரம்தான் சென்னை. புராதன கட்டிடங்கள், தொன்மையான கோவில்கள், உலகின் அழகிய நீளமான கடற்கரை போன்ற பல பெருமைகளை பெற்ற சென்னை மாநகரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் பொழுது போக்கு அம்சங்களால் மேலும் புகழ் பெற்று விளங்குறது.

    பொழுது போக்கு அம்சத்தின் ஒரு பகுதியான கலை மற்றும் அரசியல் என்ற இரு துறைகளை அலசினால், இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த மனிதப் புனிதர்கள்; நல் முத்துக்கள் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். !

    பேரறிஞர் அண்ணா :

    தமிழின மக்களை தனது பாசக் கயிற்றால், கட்டிப் போட்ட நேசமிகு தலைவன் என்றால் அது பேரறிஞர் அண்ணா அவர்கள்தான். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்ற அறிஞர் அண்ணா அவர்கள், பிறந்ததோ சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில். வருடமோ 1909. "அண்ணா" என்ற பெயர் நீண்ட நெடுங்காலம் ஒலிக்கப் போகிறது என்பதை அவரது பெற்றோர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

    பேரறிஞர் அண்ணாவின் குடும்பமோ செல்வச் செழிப்பிலும் இல்லை அதே சமயம் வறுமையின் கொடுமையிலும் இல்லை. பத்து வயதில் "அரிச்சந்திரா" நாடகத்தை நண்பர்கள் உதவியுடன், அவர்களையே கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்து வீட்டிலேயே நாடகத்தை அரங்கேற்றினார் அண்ணா. கலையுலகில் தடம் பதித்து சாதனை படைத்திட, இந்த இளம் வயது ஈடுபாடு, அறிஞர் அண்ணாவுக்கு, பெரிதும் உதவியது

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். :

    இலங்கை கண்டியில் பிறந்து, இந்தியாவின் கேரளா மாநிலத்தவர் என்று அடையாளம் காணப்பட்டு, தமிழகத்தின் சென்னை மாநகரில் தடய ம் பதித்து தமிழ் மக்களின் நெஞ்சில் இன்னும் வாழ்ந்து கொண்டு, உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவர் என்று போற்றப்படுபவர், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

    1917 ஆம் ஆண்டு பிறந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கொடியது என்று கூறப்படும் இளமையில் வறுமை பெரிதும் வாட்டியது. தந்தை மாஜிஸ்டிரேட்டாக இருந்தாலும், நேர்மை கொண்ட நெஞ்சத்தினால், அவரின் குடும்பமே வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது.

    கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் ஆறு வயது சிறுவனாக மூன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பொழுதே, துணிச்சல் மிக்கவராகவும், அநீதியை கண்டால் கொதித்தெழுந்து தட்டிக் கேட்கும் குணமும் இயற்கையிலேயே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்தது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மன்னாதி மன்னனாக விளங்கப் போகிறார் என்று நிச்சயமாக அவரது குடும்பத்தினரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

    கலை மற்றும் அரசியல் துறையில், இந்த இரு மேதைகளும் படைத்த சாதனைகளை இனி வரும் பதிவுகளில் காண்போம் !

    தொடரும் ......
    Last edited by makkal thilagam mgr; 28th August 2019 at 09:24 PM.

  7. Likes orodizli liked this post
  8. #1114
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    இரு நாட்களுக்கு முன் ப.சிதம்பரம் தவறான வழியில் சேர்த்த சொத்தை அரசுக்கு கொடுத்துவிடுமாறு பதிவு செய்திருந்தேன். MGR நியாயமாக சம்பாதித்த சொத்தையே ஏழைகளுக்கு வழங்கினார். அது பற்றி MGR ஐ விகடன் செய்தியாளர் கேட்ட போது:

    விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

    எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத் திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டு எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
    அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர் களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
    - விகடன் பொக்கிஷம் ........... Thanks...
    மேலே சொல்லப்பட்ட பேட்டியில், நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், ஸ்டூடியோ தான் வாங்கியிருந்தாலும், அதில் பங்குதாரர் என்று அடக்கமாக கூறியிருப்பதை நினைக்கும் பொழுது, இப்படிப் பட்ட ஒரு தலைவர் இனி இந்த தமிழகத்துக்கு கிடைக்கவே மாட்டார் !

  9. Likes orodizli liked this post
  10. #1115
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Thedi vantha mappillai.29.08.1970
    49 th anniversary ..........

    முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
    டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்ப சோ வின் காமெடி கலக்கல். மக்கள் திலகம் -விஜயஸ்ரீ சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
    ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
    மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
    மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
    டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
    என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
    தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

    அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

    மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக "தேடி வந்த மாப்பிள்ளை".......... Thanks...........
    Last edited by suharaam63783; 29th August 2019 at 10:15 AM.

  11. #1116
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் வரும் முதல் காட்சியில் வழக்கம் போல் திரையரங்கம் அதிர்ந்தது. " வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் " என்ற பாடல் காட்சியில், நம் தங்கத் தலைவன் அங்கும் இங்கும் ஓடும் சுறுசுறுப்பில், ரசிகர்களின் ஆரவாரம், பலத்த கை தட்டல்.

    சொர்க்கத்தை தேடுவோம் சுந்தரி என்ற பாடலில் நம் திரையுலக மன்னன் நடிகை விஜயஸ்ரீயுடன் ஆடும் ஆட்டம் மறக்க முடியாதது.

    நாலு பக்கம் சுவரு, நடுவிலே பார் இவரு, நடந்து போச்சு தவறு" என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கும் "இடமோ சுகமானது, ஜோடியோ பதமானது " என்ற பாடல் காட்சியிலும், அசத்தியது நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர் . அவர்களே !

    தலைவரின் மாறு வேடப் பாடல் "தொட்டுக் காட்டாவா காட்டவா" பாடல் காட்சியில், கர கோஷம் விண்ணைப் பிளந்தது. அப்பொழுது, சார்லி சாப்ளின் என்ற நடிகரை நாங்கள் அறியாத வயதினராக இருந்தோம் . பின்னாளில்தான், சார்லி சாப்ளின் பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். நடிகர் கமலஹாசன் "புன்னகை மன்னன்" திரைப்படத்தில், நம் பொன்மனசெம்மலை பின்பற்றி அதே "சார்லி சாப்ளின்" வேடத்தை நினைவு படுத்தி நடித்தது பலரும் அறிந்ததே !

    வயதான முதிய தோற்றத்தில், எதிரிகளுடன் சண்டை போடும் வீரத்தை நடிகை ஜெயலலிதா பார்த்து திகைப்பதும், பின்னர் அவர் முதியவர் அல்ல என்ற உண்மை புலப்பட்டு, "அட ஆறுமுகம் இது யாரு முகம்" என்ற பாடல் காட்சியில், தாடியை வைச்சா வேறு முகம், தாடியை எடுத்தா தங்க முகம் என்ற வரிகள் வரும்போது, ரசிகர்களின் கை தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

    மாணிக்கத் தேரில் மரகத கலசம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் வெகு அருமை. இரவில் எடுக்கப்பட்ட மின்னொளி காட்சிகள் பிரகாசித்தது, இன்றும் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

    நல்ல கதையமைப்பு, செவிக்கினிய அருமையான பாடல்கள், மக்கள் திலகத்தின் by மகோன்னதமான நடிப்பு, இவையனைத்தும் நிறைந்த அற்புதமான பொழுது போக்கு காவியத்தை பார்த்த பரம திருப்தி........ Thanks........

  12. #1117
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெயிட்டி திரையரங்கில் 30.08.2019முதல் புரட்சிதலைவர் புரட்சிதலைவி இணைந்துள்ள "ராமன்தேடியசீதை" தினசரி 4 காட்சிகள்....... Thanks...

  13. #1118
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஆயிரத்தில் ஒருவன் " சாதனைகள் /சிறப்புகள்......
    _---------------------------------------
    முதல் மறுவெளியீட்டில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்கள் .சத்யம் காம்ப்ளக்சில் 161 நாட்கள் ஓடி சாதனை ...
    2ம் மறுவெளியீட்டில்
    2017முதல் (கடந்த 3 ஆண்டுகளில் )தமிழகத்தில் 18 வது திரை அரங்கில் திரைக்கு வருகிறது.
    மறுவெளியீட்டில் வெளியான எந்த டிஜிட்டல் படமும் செய்யாத சாதனை........ Thanks...

  14. #1119
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆனாலும் தயாரிப்பாளரே ( வினியோகஸ்தரே) தனது படம் ,மற்றொரு படம் போல் வெற்றி அடையவில்லை .வசூல் குவிக்கவில்லை என்று பறை சாற்றுகிறார். சமீபத்தில் அகஸ்தியாவில் 2 காட்சிகளில் ஒரு வாரத்தில் ரூ.1,06,000/-
    வசூல் ஆகியுள்ளது .அவரது மற்றொரு படம் சமீபத்தில் கோவையில் சண்முகா அரங்கில் 4 நாட்களில் தியேட்டர் வாடகை கூட தேறாமல் மண்ணை கவ்வியது. "ஆயிரத்தில்ஒருவன் "இப்போதும் மதுரை ராம்நாட் ஏரியாவில் நல்ல விலைக்கு வாடகைக்கு விற்பனை ஆகியுள்ளது
    என்பது அவரே சொன்ன தகவல்... அதோடு கோவை, நீலகிரி மற்றும் திருச்சி, தஞ்சை பகுதிகளும் சிறப்பான விலை கிடைத்துள்ளதாக தகவல்கள்.......... Thanks..........

  15. #1120
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுதந்திர போராட்ட வீரர் சந்தானம் அவர்களின் மகன் ராமானுஜம்...இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் மூத்த பத்திரிகையாளர்.

    தன் பத்திரிகையில் ஒரு ஏழை பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுகிறார். ஓரளவு பணம் திரட்டப்பட்ட பின் வாத்தியாரை ஒரு முக்கிய பிரமுகருடன் வந்து சந்திக்க

    மொத்த செலவு எவ்வளவு என்று சைகையில் மன்னன் கேட்க அவர் சொன்ன தொகையை நான் வாத்தியாரிடம் சொன்னேன்.

    அருகில் இருந்த தன் ஓட்டுநர் வசம் ஏதோ ஜாடையில் எம்ஜியார் சொல்ல காருக்குள் இருந்து ஒரு பார்ஸல் வந்தது...

    நீங்க இனி எங்கும் அலைய வேண்டாம்...மொத்த பணமும் இதில் உள்ளது என்று சொன்னதை இன்றும் பேசுகிறார் திரு ஏ.வி.எம்...சரவணன் அவர்கள்.

    பின் குறிப்பு.

    திரைத்துறையில் சாதாரண பணியில் இருந்த பலருக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் நம் தெய்வம்...சமீபத்தில் ஒரு உச்ச நடிகரின் படப்பிடிப்பில் மேலே இருந்து அறுந்து விழுந்த லாந்தர் விளக்கு தன் மண்டையில் விழ தொழிலாளி செல்வராஜ் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு பல நாட்கள் சிகிச்சை பலன் இன்றி போன 10 நாட்களுக்கு முன் உயிர் விடுகிறார். படத்தின் கதாநாயகன் செய்த உதவி மருத்துவ செலவுக்கு கூட பத்தவில்லை.. செல்வராஜ் மனைவி தன் பிள்ளைகளுடன் தினம் தினம் அலைகிறார்.... இன்று தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ஒரு நாள் தன் பட விளம்பர செலவை அந்த செல்வராஜ் குடும்பத்துக்கு கொடுத்தாலே போதும்....என்ன எம்ஜியார் ஆரா இருக்கார்..இப்ப உதவி பண்ண மன்னன் மன்னனே....

    வாழ்க எம்ஜியார் புகழ் தொடருவேன்..நன்றி.
    நன்றி
    நெல்லை மணி அண்ணன்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •