Page 111 of 402 FirstFirst ... 1161101109110111112113121161211 ... LastLast
Results 1,101 to 1,110 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1101
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    3 மாதங்களாக கோவையில் தொடர் சாதனை படைக்கும் புரட்சித்தலைவர் காவிய வரிசையில் இந்த வாரம்............கலையுலக வசூல் காவிய சக்கரவர்த்தி... உண்மையான ( மற்ற மாற்று ரசிகர்கள் என்ற பேர்வழிகள் காசு கொடுத்து ஓட்டுவது) அஃக் மார்க் நடிப்புலக நாயகனாம் மக்கள் திலகம் " ஊருக்கு உழைப்பவன்"... கோவை - டிலைட் DTS., வரும் வெள்ளிக்கிழமை 30-08-2019 முதல் தரிசனம் தரவிருக்கிறார்... வளர்க... வாழ்க... மறு வெளியீட்டு காவியங்களின் ஓரே காவலர்... Thanks .......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1102
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே :

    இன்று ஆகஸ்ட் 27 இதே தினத்தில் 1966-ம் ஆண்டு தான் தலைவர் நடிப்பில் " தாலி பாக்கியம்" படம் வெளிவந்தது.

    அந்த வேளையில் நடந்த நிகழ்ச்சி
    எம்.ஜி.ஆர்.அவர்களைப் பொறுத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதைச் சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்து கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கியப் பங்கு வகிப்பார்.

    நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலி பாக்கியம்' படமும் இதற்கு விலக்கல்ல.

    இந்தப் படத்துக்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது. அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார்.

    நடிகை கண்ணாம்பா எம்.கே - தியாகராஜா பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு தேவர் பிலிம்ஸ் படங்கள் பலவற்றிலும் தாயாக நடித்து புகழ் பெற்றவர்..!

    இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலி பாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜாதேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார்.

    படத்தின் இயக்குநராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப் படம் என்பதால் தானே இந்தப்படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால் 'தாலி பாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம் தான் இயக்கினார்.

    கண்ணாம்பா எம்.கே.தியாகராஜாபாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு தாலி பாக்கியத்தை உருவாக்கினார்.

    தாலி பாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கியபகுதிகளில் நடந்ததுக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர். - எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன.

    ஒருநாள் இதேபோன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுதுதான் தெரியவந்தது தயாரிப்பாளர் தரப்பில் படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் மொத்தமும் திருடு போயிருப்பது.

    தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்குப் போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?

    இடிந்து போய்உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள்.

    கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி.நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாகஅமர்ந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார்.

    'படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன்' என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ் நாட்டிலுள்ளள சத்யா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது.

    அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலி பாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பாவும் அவரது கணவரும் மனம் நெகிழ்ந்து போய் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி கூறினர்..

    "படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள். என்றென்றும் நன்றியோடு இருப்போம்," என்றனர்.

    கண்ணாம்பா தனது இறுதிக் காலத்தில் குடும்பக் கஷ்டத்திற்காக தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர்.விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். "உங்களது இறுதிக் காலம் வரை நீங்கள் இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். வேறு வீட்டிற்கு போகக் கூடாது," என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரைஅந்த வீட்டில்தான் இருந்தார். அவர் இறந்த பிறகுதான் எம்.ஜி.ஆர்.அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார்.

    மனிதர்கள் துன்பம் வரும்போது கடவுளிடம் முறையிடுகிறார்கள்.. கடவுள் அவர்களின் துன்பத்தை தீர்ப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..!

    ஆனால் எம்ஜிஆர் மற்றவவர் துன்பப்படுவதைக் கண்ணெதிரில் கண்டாலும் சரி.. காதில் கேட்டாலும் சரி..
    மின்னலாய் விரைந்து உதவும் குணம் கொண்ட வள்ளலல்லவா...! தெய்வம் என்றால் இவரல்லவோ தெய்வம்..!!

    கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்துத்தான் பாடல் எழுதினார்.

    'உள்ளமதில் உள்ளவரை
    அள்ளிதரும் நல்லவரை
    விண்ணுலகம் வா என்றால்
    மண்ணுலகம் என்னாகும்...?

    என்.வேலாயுதன்
    திருவனந்தபுரம்........... Thanks...........

  4. #1103
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1104
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இரு நாட்களுக்கு முன் ப.சிதம்பரம் தவறான வழியில் சேர்த்த சொத்தை அரசுக்கு கொடுத்துவிடுமாறு பதிவு செய்திருந்தேன். MGR நியாயமாக சம்பாதித்த சொத்தையே ஏழைகளுக்கு வழங்கினார். அது பற்றி MGR ஐ விகடன் செய்தியாளர் கேட்ட போது:

    விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

    எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத் திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டு எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
    அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர் களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
    - விகடன் பொக்கிஷம் ........... Thanks...

  6. #1105
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் ப*க்த*ர்க*ளின் அன்பு வேண்டுகோள்#

    கோடிக்க*ணக்கில் சொத்துக்க*ள் வைத்துள்ள அண்ணா திமுக*வோ அல்ல*து அமைச்ச*ர்க*ளோ அல்ல*து எம்ஜிஆரின் கோடீஸ்வ*ர* விசுவாசிக*ளோ மனம் வைத்தால் அவ*ர*து ப*ல ப*ழைய க*ருப்பு வெள்ளை ப*ட*ங்க*ளை முறைப்ப*டி உரிமை பெற்று க*லரில் வெளியிட* முடியும். அல்லது வினியோக*ஸ்த*ர்க*ளுக்கு நிதியுத*வி செய்து ப*ங்குதார*ர்க*ளாக ஆக*லாம். மன*து வைப்பார்க*ளா?

    ஒன்றுக்கு நூறுமட*ங்கு ப*லன் அளிப்ப*வை எம்ஜிஆரின் பொக்கிஷ*க் காவிய*ங்க*ள்..

    1. நாடோடி மன்ன*ன் (முழுவ*தும் க*ல*ரில்)
    2.நாடோடி
    3.காவ*ல்கார*ன்
    4.க*லங்க*ரை விளக்கம்
    5.குலேப*காவ*லி
    6.மதுரை வீர*ன் 7. சக்கரவர்த்தி திருமகள் 8. புதுமைப்பித்தன் 9. மன்னாதி மன்னன் 10. வேட்டைக்காரன் 11.சந்திரோதயம் 12.மகாதேவி 13. பெரிய இடத்துப்பெண் 14.காஞ்சிதலைவன் 15.அரசகட்டளை உட்பட 50 காவியங்கள் ஆகிய ப*ட*ங்க*ளை முத*ல் முய*ற்சியாக செய்ய*லாம்.

    நாகேஸ்வ*ர*ராவ், என்.டி.ஆர் சாவித்திரி ந*டித்த மாயாப*ஜார் தெலுங்கு, த*மிழ் ட*ப்பிங்கில் அழ*கு வ*ண்ண*த்தில் வ*ந்தேவிட்ட*து.

    ஹிந்தியிலும் சில ப*ட*ங்க*ள் க*ல*ராக்கி வெளியிட்டுள்ளன*ர். த*மிழில் இதுவ*ரையில்லை. த*லைவ*ரின் ப*ட*மே துவ*க்க*மாக இருக்கட்டும்!.......... Thanks mr.Sudharsan, Bangalore...

  7. #1106
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு.......... மீள் பதிவு...

    "எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்

    தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா

    தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

    அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
    முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

    ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

    வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    "தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

    திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

    இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

    அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
    அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

    ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

    எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

    விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

    சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

    சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

    எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

    எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

    நன்றி........... Thanks...........

  8. #1107
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் கண்ணதாசன் வாக்கு பலித்தது !

    பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்.
    அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது.

    அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு .
    கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
    கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
    கடைசியாக கவிஞர் முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

    “ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா !”

    அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்.
    கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்.
    திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது.
    ஆம். இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

    திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர் ,
    அப்போதைய தமிழக முதல்வர்
    எம்.ஜி.ஆர்.

    அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும்.
    ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தை கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை.
    காரணம் , கவிஞர் கண்ணதாசன் மீது
    எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை !
    மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு !

    கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார்
    எம்.ஜி.ஆர் !
    அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்.

    எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..
    1981 ல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்.

    இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்.

    ஆம் .கவி்ஞர் வாக்கு பலித்தது.

    எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
    “சங்கே முழங்கு” பாடல் வரிகள் ...

    “ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்
    வார்த்தை இன்றி போகும் போது
    மௌனத்தாலே நன்றி சொல்வோம்

    நாலு பேருக்கு நன்றி !”

    Ithayakkani S Vijayan with Mr Venkat, France.......... Thanks. ...........

  9. #1108
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை - ராம் DTS.,புரட்சித்தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் " வரும் 30.08.2019 வெள்ளிக்கிழமை முதல் வெற்றிப்பவனி மதுரை எஸ். குமார்..........இதுதான் ஒரிஜினல் அஃக் மார்க் சாதனையின் சிகரம்... மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் கோடியில் ஒருவர் புகழ் வளர்க... வாழ்க... Thanks...

  10. #1109
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1973 உலகத்தையே ஆட்டி வைத்த Evergreen Mega Hit "உலகம் சுற்றும் வாலிபன்" 4K Atmos டிஜிட்டல்... வரும் அக்டோபர் மாதத்தில் மீண்டும் புரட்சி படைக்க வருகிறார்கள் என்ற இனிய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது... தயாராகுங்கள்... தோழர்களே........�� �� ��

  11. #1110
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •