Page 161 of 402 FirstFirst ... 61111151159160161162163171211261 ... LastLast
Results 1,601 to 1,610 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1601
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலகம் என்னும் தேரில் உண்மையின் இயற்கை நாயகனாக பவனி வரும் வரலாற்று பெருமகன் மூடிசூடா மாமன்னன் நிகரான வசூலை எல்லா கால கட்டத்திலும் தான் பங்கு கொண்டு வெள்ளித்திரையில் பவனி வந்துக் கொண்டு வரும் காலத்தை வென்று பயனுள்ள கருத்துமிகு காவியங்களை தந்த, உலக திரைவானில் இன்றும் தன்னுடைய காவியம் மூலம் நல்ல மனிதர்களை, நல்ல எதிர்கால தலை முறைகளை உருவாக்க கூடிய படைப்புகளை தந்த மகான், மனிதநேயர், மக்கள் புனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரையுலக சகாப்தத்தில் எத்தனையே மனிதநேய செயல்கள்... வரலாறு காணாத வகையில் நிரம்பியுள்ளது. அப்பெரும் சரித்திரங்களை பேச, எழுத, உரையாட வருடங்கள் போதாது.... அப்படிப்பட்ட மானிடப்பிறப்பின் மாமனிதரை..
    1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றி மக்களுக்காக திரைப்படத்துறையில் தோன்றி , தமிழ் நாட்டு மக்களின் குறை தீர்க்கும் பகலவனாக. வந்து... மக்களின் பேராதவுடன், நிறைந்த புகழுடன் , மறைந்த புண்ணியத் தலைவரை..அந்த மனிதநேய செம்மல் இருக்கும் வரை அவரை வணங்கியவர்கள்.... அவர் வழியில் தான் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் தோன்ற வேண்டும் என சொன்னவர்கள்..... சொன்னவரை நேசிக்கும் பிள்ளைகள்.. சொன்னவரின் முன்னோர்களை கொஞ்சைப் படுத்துவதில் பெருமை கொள்கின்றார்கள் என்றால்..... உன் பிறப்பு வளர்ப்பு எப்படி .... பிறறை பிடிக்கவில்லை என்றால் நாம் ஒதுங்கி போவது தான் நல்லதை தவிர... அவர்களை கேவலமாக பேசுவதால்.... உன் பிறப்பு ஒரு கரும் புள்ளியாக.... பல பேர் உன்னை சபீக்கும் முறை.... உன் வருங்கால தலைமுறை பாதிக்கும் அளவுக்கு கொண்டு போய் சேர்த்து விடும்... வள்ளல் பணி மூலம் இறைப்பணி செய்த தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். என்னும் மகானை எவர் ஒருவர் தன்னிலை மறந்து தவறாக பேசிகின்றரோ... அவர்களின் வாழ்வு தலை முறை .....தலை முறையாக துன்பங்கள்...., சூறாவளி போல் சுழலும்...மூன்றெழுத்து நாமம் போற்றி வழிபடுபவர்களுக்கு மட்டுமே நன்மையும், நலமும், நல்ல எண்ணங்கள் குடும்பத்தில் பிறக்கும்..... ' திருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் இருந்தென்ன லாபம்..... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லிக்கொண்டு வாழும் தெய்வமாக வாழும் வள்ளலின் வழியில் நாமும்..... ஊர் சொல்லும் படி நாம் மேலும் புகழ் பாடுவோம். புகழ் சேர்ப்போம்..... உரிமைக்குரல் ராஜு............ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1602
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கத்தலைவரின் திரையுலக சாதனைகள் ஆயிரமாயிரம் பூத்துக் கொண்டு மலர்கிறது.... தலைவரின் நான்கு தொடர் காவிங்களான அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் ....சென்னையில்... 12 அரங்கில் 100 நாளை கடந்தது... ஒடிய அரங்கு மட்டும் 10 ஆகும். இதுப்போல் எவருக்கும் தொடர் சாதனை அரங்கு கிடையாது. மிட்லண்ட் ( 2 படம்) கிருஷ்ணா ( 2 படம்) மேகலா, நூர்ஜகான், சித்ரா, சரவணா, பிளாசா, பிராட்வே, கிருஷ்ணவேணி, சயானி .... ஒரு நடிகருக்கு மூன்று அரங்கு (சாந்தி, புவநெஸ்வரி, கிரெளன் ) மட்டும் தான்... உரிமைக்குரல் ராஜு......... Thanks...

  4. #1603
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1966 ல் மக்கள் திலகத்தின் 3 படங்கள் அன்பே வா, பெற்றால் தான் பிள்ளையா, முகராசி படங்கள் வெவ்வேறு அரங்கில் நிகரற்ற மகத்தான சாதனைகள் ஆகும். அன்பே வா... காஸினே 154 நாள், கிருஷ்ணா 147 நாள், மேகலா 119 நாள்அடுத்து.... பெற்றால் தான் பிள்ளையா ஸ்டார் 100, மகாராணி 100, நூர்ஜகான் 84, உமா 80 அடுத்து முகராசி கெயீட்டி 100, பிரபாத் 56, சரஸ்வதி 56 மூன்று படங்கள் 10 அரங்கில் 56 நாள், 8 அரங்கில் 80 நாள், 6 அரங்கில் 100 நாள்,2 அரங்கில் 147 நாள். ஒரு அரங்கில் 154 நாள். ஆறு திரையரங்கில் 100 நாளை சாதனையாக நிகழ்த்தியுள்ளார். 1966 தலைவரின் 9 படங்கள் ஒடியது போல் எந்த ஆண்டும் எந்த நடிகரின் படங்களும் அதிக அளவில் 50 நாட்களை கண்டதில்லை... 8 படங்கள் மட்டும் திரையிட்ட 27 அரங்கிலும் 50 நாட்கள் ஒடி சாதனையாகும். உரிமைக்குரல் ராஜு......... Thanks.........

  5. #1604
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் ரத்னகிரி லக்ஸ் வேல் dts வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகரின் காவியங்கள்... " எங்க வீட்டுப்பிள்ளை", 2 காட்சிகள் "நினைத்ததை முடிப்பவன்" 2 காட்சிகள் 10-10- 2019 முதல் புதிய பொலிவுடன் இந்த திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது......... Thanks Vellore Ramamurthy...

  6. #1605
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி - முருகன் DTS., திரையரங்கில் புரட்சிதலைவர் புரட்சிதலைவி இணைந்துள்ள "ஆயிரத்தில் ஒருவன்" விழாவில் 5000 வாலாசரவடி படம்பார்க்கவந்தவர்களுக்கு லட்டுவழங்கபட்டது திருச்சி மாவட்ட மனித தெய்வம் *ஸ்ரீ எம்.ஜி.ஆர்* பக்தர்கள் குழு சார்பில் சிந்தாமணி *K.கிருஷ்ணன்* அருகில் கல்லுகுழி டி செல்வராஜ் டிபன் கடை T.ரவிச்சந்திரன், பட்டாணி S.குமார்,M. ரமேஸ் அரியமங்கலம் முகம்மது ரபிக் உறையூர் சீனி பி முனியன். பாரதியாதெரு சந்திரசேகர் இபி ரோடு முருகேசன் மனிததெய்வம் ஸ்ரீஎம்ஜிஆர்.பக்தர்கள் குழு.......... Thanks...........

  7. #1606
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1607
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரிலாக்ஸ் பாடல்.

    ரொம்ப நாளைக்கு அப்புறம்.

    சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

    கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.



    பாடலும் படார் படார்தான்.
    இசையும் படார் படார்தான்
    நடிப்பும் படார் படார்தான்
    குரல்களும் படார் படார்தான்

    ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

    நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.



    கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

    விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

    'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

    ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

    இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

    'படார் படார் படார்
    படார் படார் படார்
    படார் படார் படார்'

    'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
    எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
    உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
    வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
    அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

    அடேயப்பா! என்ன வரிகள்!

    அடுத்த வரி டாப்.

    தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

    'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

    மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

    அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

    எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

    'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்'

    என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

    எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

    'படார் படார் படார்
    படார் படார் படார்'

    என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

    எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

    'பாடாதே பாடாதே நிப்பாட்டு
    அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
    உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
    உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

    படார் படார் படார்
    படார் படார் படார்'

    என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

    'படார் படார் படார்
    படார் படார் படார்

    எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

    (டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

    இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

    என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

    'நிப்பாட்டு'

    என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.

    'அடி சூர்ப்பனகை ராணி
    மூக்கறுந்த மூலி
    நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
    காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

    ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

    நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)



    தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

    'முகத்தில் முகம் பார்க்கலாம்
    விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்'

    எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

    நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

    'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

    'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்
    லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

    இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

    'என்முன் வளைந்து இளம் தென்றலில்
    தத்திம்தா தகதீம்தா தீம்தா
    மிதந்து வரும் கைகளில்
    தத்திம்தா தகதீம்தா தீம்தா
    வளையலின் டியூன் கேட்கலாம்'

    மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

    இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

    இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

    ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

    'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
    யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
    ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
    யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

    என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

    'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

    எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

    'லவ்லி பியூட்டி கமான் சார்!'

    எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

    'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

    என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

    அப்படியே இசை மாறும்.

    ஈஸ்வரி,

    'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
    நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

    எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

    பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

    'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
    நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

    இப்போது மேடம் டர்ன்.

    'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
    எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

    (அப்படிப் போடு அருவாள!)

    எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

    'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
    நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

    ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

    'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

    (இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

    இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

    'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

    மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

    'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
    அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    பலே பலே பலே பலே பலே
    பலே பலே பலே பலே பலே

    வெட்டாத கண்ணைக் கொண்டு
    முட்டாத நெஞ்சைக் கொண்டு
    கட்டாயம் காதலுண்டு
    திட்டாதே என்னைக் கண்டு

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    யாஹூம் யாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
    அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    யாஹூம் யாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

    அப்பாடா!

    பாடல் முடிவடையும்.

    எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

    பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

    எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

    எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

    பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

    'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
    காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

    வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார். 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

    நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.......... Thanks.........

  9. #1608
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1609
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks.........

  11. #1610
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •