Page 199 of 402 FirstFirst ... 99149189197198199200201209249299 ... LastLast
Results 1,981 to 1,990 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1981
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1982
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படம் அறிய ஒன்று .குமரிமுனை கடலின் நடுவே நடுவண் பாறையில் 133 அடி உயரம் கொண்ட வள்ளுவன் சிலை மறைந்த மாமனிதர் MGR., அவர்கள் 15.04.1979ல் அடிக்கல் நாட்டினார்.அந்த நிகழ்வில் அவருக்கு உதவியாளனாக கலந்துகொண்டேன் .படமும் எடுத்தேன் .பின்னர் 2000ல் கலைஞர் avl சிலையை திறந்தார்கள் .அதிலும் நான் முக்கிய பொறுப்பாளனாக கலந்துகொண்டேன்.அந்த 133அடி உயர வள்ளுவனின் தலைக்கு மேல் உள்ள பகுதி தான் இந்த படம்.இந்த படத்தை Cannon FTQL பிலிம் கேமராவில் 13.10.2004ல் நான் எடுத்தேன்.இது என்னுடைய adventurous shot ..... Thanks.........To mr.Kannan...

  4. #1983
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருமண வாழ்த்து செய்தி .
    --------------------------------------------

    கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழுவை சார்ந்த நிர்வாகி திரு.சாந்தகுமார்* அவர்களுக்கு* இன்று (11/11/19) காலை , சென்னை வில்லிவாக்கம்* சௌமிய தாமோதர பெருமாள் கோயிலில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது .அதை தொடர்ந்து அருகில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  5. #1984
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா வார இதழ் -31/10/19
    --------------------------------------------
    வைரம் நூறு தொடர்*
    --------------------------------
    திருநீறை செல்வி, மங்கையர் கைராசி, திருமணம் கொண்டாள் இனிதாக .........

    இதயவீணை* படத்தில் புரட்சி தலைவர் பாடும் ஒரு அற்புதமான பாடல் இது.திருமணம் நடக்கும் எல்லா வீடுகளிலும் இந்த பாடல் நிச்சயம் ஒலிக்கும் .

    திருநிறைச்செல்வி , மங்கையற்கரசி* திருமணம் கொண்டாள் , இனிதாக என*படத்தில் வாழ்த்து பாடிய தலைவர் .....

    பல ஆயிரம் குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது வரலாறு .
    அவரது பெயர் நாகநாதன்.* உதவி நடிகர்.* புரட்சி தலைவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு காட்சியில் வந்து விடுவார் .* அவருக்கு ஒரே மகள். திருமண ஏற்பாடுகளை செய்கிறார் . பத்திரிகை அடித்த கையோடு தலைவரை பார்க்க ராமாவரம் தோட்டம் செல்கிறார் .* தலைவர் சூட்டிங்க் ஒன்றிற்காக பெங்களூரில் இருப்பதாக தகவல் .* வந்த விவரத்தை சொல்லி மகளின் கல்யாண பத்திரிகையை கொடுத்துவிட்டு வருகின்றார் .* மிகவும் சிரமப்பட்டு திருமணத்தை நடத்தி விடுகிறார் நாகநாதன்.* தலைவரிடம் இருந்து எந்த விதமான உதவியும் வரவில்லையே என்ற கவலை மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கின்றது நாகநாதனுக்கு.* நம்ம நேரம் சரியில்லை என் மனசை தே ற்றிக் கொண்டார் .

    திருமணம் முடிந்த சில மாதங்களில் தீபாவளி வந்து விடுகின்றது .* நாகநாதனுக்கு பெருங்கவலை வந்து விடுகிறது.* தீபாவளிக்கு மாப்பிள்ளையையும் மகளையும் அழைக்க வேண்டும்.* புது துணி எடுத்துக் கொடுத்து சிறப்பு செய்ய வேண்டும் .* பணத்திற்கு எங்கே போவது .* ஏற்கனவே திருமணத்திற்கு வாங்கிய கடன் அப்படியே இருக்கு* *இப்ப யாரு கடன் கொடுப்பா*என யோசித்து கவலையோடு இருக்கிறார் .* நாகநாதன்.* அப்போதுதான் தலைவரிடம் இருந்து அழைப்பு வருகிறது . தோட்டத்திற்கு செல்கிறார் . தலைவரை பார்த்து வணங்குகிறார் நாகநாதன் .

    தலைவர் ஒரு பை நிறைய பணம் கொடுத்து அனுப்புகிறார்.* வீட்டிற்கு வந்து பணத்தை எண்ணிப் பார்த்த நாகநாதனுக்கு வியப்பு . ஆம் ...

    மகளின் திருமணத்திற்கு நாகநாதன் வாங்கி இருந்த கடனை* அடைப்பதற்கு ம்*மாப்பிள்ளைக்கும்* மகளுக்கும் தலை தீபாவளி கொண்டாட தேவையான பணமும் அதில் இருந்தது .**

    இதுபோன்ற எண்ணற்ற உதவிகள் செய்ததால்தான் , மக்கள் திலகம் மக்கள் தலைவரானார் .

  6. #1985
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -18/10/19
    ----------------------------------
    திரையிசையின் விஸ்வரூபம்*
    ------------------------------------------------
    திண்டுக்கல் இடை தேர்தல் வெற்றி (1973)* கொடுத்த உற்சாகம் எம்.ஜி.ஆரின் அடுத்தடுத்த படங்களில் வசன ங்களாகவும், பாடல்களாகவும் வெளிப்பட்டன.**நேற்று இன்று நாளை தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை*எம்.ஜி.ஆருக்கு, எம் எஸ்.வி* இசையமைத்த பன்னிரண்டு திரைப்படங்களும் பாடல்களுக்காக இன்றுவரை பேசப்படுகின்றன .

    பல திரை கலைஞர்களுக்கு சிறப்பான இசை வழங்கி கொண்டிருந்த எம்.எஸ்.வி. அரசியல் திரைப்படம் என தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி கொண்டிருந்த எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த அத்தியாயம் மட்டுமே தனி வரலாறு .*

    அகண்ட காவிரி நதியை ஒப்பிட்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தி நீங்க நல்லா இருக்கணும்* என்று இதயக்கனி திரைப்படத்தில் விருத்தத்துடன் கூடிய* நீண்ட பாடலை கொடுத்தார் எம்.எஸ்.வி.* உரிமைக்குரல் படத்தில்* இந்துஸ்தானி இசையின் இனிய பஹாடி ராகத்தில் , விழியே கதை எழுத்து, மீனவ நண்பன் படத்தில் மிஸ்ரா சிவரஞ்சனி ராகத்தில் ,தங்கத்தில் முகம் எடுத்து , வலஜி ராகத்தில்* பொங்கும் கடலோசை என எம்.ஜி.ஆரை ராக அருவியில் நீராட்டினார் .**

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* படத்திலோ , த்விஜாவந்தி ராகத்தில்* அமுத தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலுடன் எம்.ஜி.ஆரின் அரசியல் கனவை காற்றில் ஒலிக்கவிட்டு, திரையிசையில் எப்படி வேண்டுமானாலும் தன்னால் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று காட்டியவர் .**

    1965 முதல் மெல்லிசை மன்னராக தனி இசை பயணம் செய்த எம்.எஸ்.வி. 1978 வரை , எம்.ஜி.ஆர். முதலமைச்சராக முழுநேர அரசியல் வாழ்க்கைக்கு சென்றது*வரையில் 36 திரைப்படங்களுக்கு இசை அமைத்தார் .

    கேரளா மாநிலம் பாலக்காட்டில் 1928ல் ஜூன் 24ம் தேதி பிறந்த எம்.எஸ். வி. இயற்பெயர் .மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் .* தனது 25வது* வயதில் 1953ல் வெளியான ஜெனோவா படத்திற்கு முதன் முதலாக இசை அமைத்தார். படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். ஆபிஸ் பையனாக* இருந்து இசை அமைப்பாளராக உயர்ந்த எம்.எஸ். வியை தான் முன்னணி கதாநாயகனாக புகழ் பெற்றதும் தனது படங்களின் திரையிசைக்கு சுவீகரித்து கொண்டார் .

  7. #1986
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளி மலர் -11/10/19
    --------------------------------------------------------

    எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர்*
    -------------------------------------------------------------------------

    1931ல் கும்பகோணம் பாய்ஸ்* நாடக கம்பெனியில் 11 வயது குருமூர்த்தி , 14 வயது ராமச்சந்திரனுக்கு நடிப்பு* சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் .

    வாத்தியார் காளி ரத்தினத்துக்கு மகிழ்ச்சி . குருமூர்த்தி அழைத்து வந்த ராமச்சந்திரன் அழகாகவும் இருந்தார் .* சொன்னதை புரிந்து கொண்டு அப்படியே நடித்துக்காட்டினார் . அந்த ராமச்சந்திரன் தான் பின்னாளில் மக்கள் திலகமாக தமிழ் திரையுலகை கொடி கட்டி ஆண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் .**

    நேற்றுதான் தன்னுடைய கனகாபிஷேக விழாவை (100 வது* பிறந்த நாள் )சென்னையில் கொண்டாடினார் . மயிலாடுதுறையில் 1920ல் பிறந்த குருமூர்த்தி பள்ளி படிப்பின்போதே ஓவிய வகுப்பில் சேர்ந்து இளநிலை தேர்ச்சி பெற்றார்.அப்போதே நாடகங்களிலும் நடிக்க தொடங்கியதால் , பள்ளி படிப்பு பாதியில் நின்றது .

    எம்.ஜி.ஆரோடு இணைந்து, பவளக்கொடி , கோவலன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார் .**

  8. #1987
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குங்குமம் வார இதழ் .
    --------------------------------
    நடிகை குஷ்பூ பதில்கள்*

    --------------------------------------

    வாசகர் கேள்வி* : பழைய படங்களில் உங்களுக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள் எவை ?
    *பதில் : எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்,* அன்பே வா .

  9. #1988
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயவீணை !
    ________________
    நாய்கள் கடிப்பதும்
    கழுதை உதைப்பதும்
    இயற்கை என்பது தெரியும் !

    புலிகள் பாய்வதும்
    நரிகள் ஏய்ப்பதும்
    பிறவிக் குணம் என்று
    புரியும் !

    எந்தெந்த நேரத்தில் கடிப்பான் இவன்
    எந்தெந்த வேலையில்
    உதைப்பான்
    யாருக்கு இவர்களைத்
    தெரியும் ?
    பார்வையில் குணம்
    என்ன புரியும் ?

    கவிஞர் வாலி !

    சிலவரிகளிலே மிகப் பெரிய உண்மைகளை
    உடைக்கும் கவிஞர்களை எனக்கு பிடிக்கும் அதில் கவிஞர் வாலியும் ஒருவர் !

    பாடல் வரிகளில் மூழ்கிய எனக்கு இன்னொன்றும் கண்ணுக்கு புலப்பட்டது

    மக்கள் திலகத்தை கவனியுங்கள் !

    Handsome wrestler

    அப்படித்தானே தோற்றம் நண்பர்களே !.......... Thanks.........

  10. #1989
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை சுடர் -12/11/19
    -------------------------------------

    மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வி.ஜி.பி.உலக தமிழ் சங்கம் வழங்கிய எம்.ஜி.ஆர். சிலை கோலாலம்பூர் லிட்டில் இந்தியா எம்.ஜி.ஆ.ர்* மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது .* இந்த சிலையை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார் .* உடன் வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.பி. சந்தோசம் , மலேசிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

  11. #1990
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அமுதசுரபி மாத இதழ் -அக்டொபர் 2019
    ---------------------------------------------------------------
    திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் -எம்.என். நம்பியார்*

    கலைமாமணி வி.ராமமூர்த்தி*
    --------------------------------------------------

    பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் (அப்போது மேம்பாலம் கிடையாது ) ரயில் வரும்போது கேட்டை மூடி விடுவார்கள் .* நடிக* நடிகைகள் சூட்டிங் போவதற்கும் , படப்பிடிப்பை முடித்து*வீட்டுக்கு திரும்புவதற்கும்* பெரிய சங்கடமாக இருந்தது .**

    ஒரு நாள் நடிகர் எம்.என்.நம்பியாரின் கார் வரும்போது ,ரயில்வே கேட்டை மூடிவிட , சில ரசிகர்கள் காரை நெருங்கி வந்து (எம் .ஜி..ஆர்.ரசிகர்கள் ) உங்களுக்கு* திமிர் ஜாஸ்தி.* என்ன தைரியம் இருந்தால் எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆரை நீங்க அடிக்கலாம் .* என்று கோபமாக கேட்டனர் .
    நடிகர் நம்பியார் உடனே, ஏம்பா , அவரும் தானே என்னை அடிச்சார் .* குத்தினார் .**அதை நீங்கள் பார்க்க வில்லையா* என்று கேட்க , அவர் அடிக்கலாம் , என்ன அவர் எம்.ஜி.ஆர். ஆனால் நீங்க எப்படி அடிக்கலாம் என்று வாதிட்டனர் .* இதை ஒரு நிகழ்ச்சியில் நடிகர் நம்பியார் சிரித்து கொண்டே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .

    சினிமாவில் ஆரம்பம் முதலே, வில்லனாக நடித்து , கெட்டவன் என்று பெயர் வாங்கியவர் நடிகர் நம்பியார் .* சில குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், வில்லன் என்றால் நம்பியார்தான் என்று முத்திரை ஆழமாக பதிந்துவிட்டது .சரிவாதிகாரி,நாடோடி மன்னன் அரசிளங்குமரி* ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை குடியிருந்த கோயில் , ரகசிய போலீஸ் 115. நான் ஏன் பிறந்தேன், ராமன் தேடிய சீதை ,உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் , பல்லாண்டு வாழ்க, போன்ற படங்களில் கொடியவனாகவும் , வில்லத்தனமாக நடித்ததால், நயவஞ்சகன், சூழ்ச்சிக்காரன் என்கிற பட்டமும் சேர்ந்துவிட்டது .**

    ஜூபிடர் கம்பெனி 1948ல் தயாரித்த மோகினியில் எம்.ஜி.ஆர். நாயகன். நம்பியார் வில்லன் . அதிலிருந்து எம்.ஜி.ஆர். நாயகனாகவும், நம்பியார் வில்லனாகவும்* நடித்து அந்த முத்திரை ஆழமாக குத்தப்பட்டது .* வில்லன் நடிப்புக்கு ஏற்ப கொடூரமான பார்வையும், மிரட்டும் விழிகளும்,அபூர்வமான* பேச்சும் , நடிப்பும்* நம்பியாருக்கு விழுந்த வில்லன் முத்திரையை சாசுவதமாக்கியது .

    குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் வில்லன் நடிப்பில் நம்பியார் வரலாறு படைத்தார் என்று சொல்லலாம் .* எங்க வீட்டு பிள்ளையில் அப்பாவி எம்.ஜி.ஆரை இவர் சவுக்கால் அடித்து சித்ரவதை செய்வதும், அடுத்து* முரட்டு எம்.ஜி.ஆரால்* அதே சவுக்கால் அடிபட்டு அலறுவதும் நம்பியார் நடிப்பில் அபாரம் .வேணும் இந்த பாவிக்கு என்று மக்களை சொல்ல வைத்தது . இதுவே நம்பியாருக்கு ,ஒரு மறைமுக பாராட்டுதானே .*

    மு.கருணாநிதி கதை வசனத்தில், ஏ. காசிலிங்கம் இயக்கிய நாம் படத்தில் எம்.ஜி.ஆர். நாயகன் .* நம்பியார் நாயகன் எம்.ஜி.ஆரை வாழ்த்தி அண்ணா வாழ்கவே, குமர* அண்ணா வாழ்கவே* என்று பாடியுள்ளார் .**

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •