Page 109 of 402 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1081
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரியில் பங்கு பெறுவதில் ஆனந்தம் அடைகிறேன் . இன்று மிகவும் சிறப்பான தினம் . மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் மற்றும் இதயக்கனி வெளிவந்த தினம் . மறக்க முடியாத வரலாற்று வெற்றி காவியங்கள் .

    நாடோடி மன்னனை பேரறிஞர் அண்ணா அவர்கள் இதயக்கனியாக ஏற்று கொண்டார் . எங்க வீட்டு பிள்ளையாக மக்கள் ஏற்று கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டார் .
    அன்புச்சகோதரர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு,

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு நமது திரியில் தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களிடம் இருக்கும் மக்கள் திலகத்தின் சாதனை படைத்த காவியங்களின் ஆவணங்களை திரியில் பதிய அன்புடன் அழைக்கின்றேன்.

    எஸ் ரவிச்சந்திரன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1082
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நம்பிக்கை #விதை

    My last year fb memory

    கட்சி துவக்கிய பிறகு..

    மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட படம்...!!!

    படப்பிடிப்புக்கு எத்தனை நாட்கள் வேண்டும் எனக் கேட்டு துல்லியமாக அத்தனை நாட்களுக்குள் படப்பிடிப்பை புரட்சித்தலைவர்
    முடித்துக்கொடுத்த படம்...!!!

    இனிமேல் என்ன நடக்குமோ எனக் கலங்கிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையூட்டிய படம் !!!

    கதை என்பது ஒரு நோயாளி ... அதுக்கு ட்ரீட்மெண்ட் ரொம்ப முக்கியம். அப்ப தான் அது பிழைக்கும். எனவே அவர் தான் இப்படத்தின் இயக்குநர்...என்று கூறிய புரட்சித்தலைவரின் ஆசியால்
    இணை இயக்குநராய் இருந்த சேதுமாதவனை இயக்குநராக்கிய படம் !!!

    நடன இயக்குநரே இல்லாமல் ...
    "உங்களுக்குத் தெரியாத மூவ்மெண்ட்டா ...? உங்க இஷ்டப்படி மூவ்மெண்ட் கொடுங்க... ரசிகர்களுக்கு வேண்டியதை நான் எடுத்துக்கறேன்" என்று இயக்குநர் புரட்சித்தலைவரிடம் கூறிய படம்...!!!

    மொத்தத்தில் நம்ம வாத்தியார் பின்னிப்பெடலெடுத்த படம்...!!!

    வாத்தியார் - கலையரசி லதாம்மா
    வெற்றிக்கூட்டணியில்...

    #நாளைநமதே............ Thanks........

  4. #1083
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.

    எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

    படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

    அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.

    நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.

    பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்........... Thanks...

  5. #1084
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

    அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனின் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.

    எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.

    எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியது சூப்பர்... Thanks......

  6. #1085
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!



    பி.ஜி.எஸ்.மணியன்

    உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?

    அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.

    பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.


    ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’

    கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?

    ‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’

    அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.

    ‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’


    எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.

    ‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’

    இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.

    ‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’

    முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.

    ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன?

    தொடர்புக்கு: pgs.melody@gmail.com படங்கள் உதவி: ஞானம்........... Thanks to The Hindu Tamil ......




    

    

  7. #1086
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் படத்துக்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் காலமானார்...
    By Muthurama LingamFirst Published 23, Aug 2019, 10:29 AM IST
    HIGHLIGHTS
    எம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமானார்.

    எம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமானார்.


    தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர்.

    கவிஞர் வாலியையும் பிரபல ஒளிப்பதிவாளர் மாருதிராவையும் இணைத்து " வடைமாலை " என்ற படத்தின் மூலம் "மாருதி -வாலி " என்று இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியவர். எம்.எல்.விசுவநாதன் இசையில் பாலமுரளி கிருஷ்னாவின் குரலில் "
    கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம் " என்ற பாடல் இன்றளவும் பேமஸ்.


    எமர்ஜென்சி காலத்தில் வந்த படம் தான் சிவாஜி கணேசன். வாணிஸ்ரீ நடித்த "இளைய தலைமுறை " என்ற படம்,

    "இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை"
    என்று எம்.எஸ். விசுவநாதன் கணீரென்று பாடிய படம் தான் "அக்கரை பச்சை '

    .

    எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு ஒதுங்கவிருந்த சமயம், அப்போதுதான் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தார் இளையராஜா. அப்போது தயாரிப்பாளர் தர்மராஜன் எம்ஜிஆரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து இளையராஜாவை இனசயமைப்பாளராகவும், கவிஞர் வாலி கதை திரைக்கதை வசனம் பாடல்கள எழுத மாருதி ராவ் ஒளிப்பதிவை கவனிக்க கே.சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக படத்துவக்க விழாவை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்தினார். நாஞ்சில் மனோகரன் தலைமை தாங்கினார் முதல்வரான எம்.ஜி.ஆரும். துவக்க விழாவில் கலந்து கொண்டார் ஆனால் அந்த படம் சூட்டிங் நடக்கவில்லை.


    டி.எம்.செளந்தாராஜன்
    பி.பி. சீனிவாஸ்
    எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    மலேசியா வாசுதேவன் -
    முதலானோர் பாடினர் ஏராளமான செலவு செய்து அமர்க்களப்படுத்திய
    ஜி.கே.தர்மராஜன் அதன் பிறகு சினிமா பக்கமே வாவில்லை.
    41 வருடங்கள் கழித்து . (22.08.2019) அன்று காலமானார்........... Thanks Asianet...

  8. #1087
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பாப்பாபட்டி_சிங்கம்
    #அமரர்_பீகே_மூக்கையாத்தேவர்

    1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் - சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.

    பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.

    1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார் . பார்வர்ட் பிளாக்கில் தொண்டராக இணைந்து அகில இந்திய தலைவராக உயர்ந்தார்.

    1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற பெருமகனார் ஐயா மூக்கையாத் தேவர்.

    காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் மூக்கையாத் தேவர்.

    ஆம் நண்பர்களே!

    ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.

    1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).

    1952- பெரியகுளம்

    மூக்கையாத்தேவர் - 36,515
    என்.ஆர். தியாகராஜன் - 31, 188

    1957- உசிலம்பட்டி

    மூக்கையாத் தேவர் - 31,631
    பி.வி.ராஜ் - 11, 459

    1962- உசிலம்பட்டி

    மூக்கையாத்தேவர் - 47,069
    தினகரசாமித்தேவர் - 22,992

    1967- உசிலம்பட்டி

    மூக்கையாத்தேவர் - 44,714
    நல்லதம்பித்தேவர் - 16 ,225

    1971 - உசிலம்பட்டி

    மூக்கையாத்தேவர் - 42 , 292
    ஆண்டித்தேவர் - 16, 909

    1977- உசிலம்பட்டி

    மூக்கையாத்தேவர் - 35,361
    பொன்னையா - 1 1,422

    இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

    1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்

    மூக்கையாத்தேவர் - 2, 08,431
    பாலகிருஷ்ணன் - 1 , 39, 276

    மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு.

    1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் அவர்களே.

    அதனால் தான் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். " நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான ஐயா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்பட்ட பெருந்தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை" என்று வாபஸ் பெற வைத்தார்.

    மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 600 00 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம். இறுதி வரை தேவர் பெருமகனாரின் தொண்டராகவே வாழ்ந்த அரசியல் அதிசயம் அய்யா மூக்கையாத்தேவர்.
    அய்யாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம். ........... Thanks wa.,

  9. #1088
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளி முதல் (23/08/2019) சென்னை -
    பாலாஜி. dts யில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்."பல்லாண்டு வாழ்க " தினசரி 2 காட்சிகள் (11.30 மணி /மாலை 6.30,மணி) நடைபெறுகிறது ............ Thanks...

  10. #1089
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை நடிகர் தேங்காய் அவர்களையும் ஆச்சி மனோரமா அவர்களையும் இணைத்து அந்த நாட்களில் ஒரு ஒரு பத்திரிகை தொடர்ந்து கிசுகிசு செய்திகளை கேவலமாக வெளியிட்டது. ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் இந்த செய்தியை படிக்கிறார் ஆச்சி மனோரமா. மிகுந்த மன உளைச்சல் கொண்டு என்ன இப்படியும் இல்லாததை உண்மை போல எழுத என்ன அவசியம் என்று கண்ணீர் வடிக்கிறார். நடிப்பில் கவனம் சிதறு கிறது. அப்போது நம் ஆசான் நடிக்கும் அன்பேவா படப்பிடிப்பு நேரம்.செட்டில் முகம் வீங்கி அழுது கொண்டு இருந்த மனோரமா அவர்களிடம் என்ன உங்களுக்கு ஏன் இப்படி என்று கேட்க வெடித்து அழுது உண்மை சொல்கிறார் ஆச்சி.இவ்வளவு தானா நான் நேற்றே இதை படித்து விட்டேன் வளரும் நடிகைகள் பற்றி இப்படி வருவது இயல்பு. நீங்கள் அதில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆறுதல் கூற மனோரமா தேறி தொடர்ந்து நல்ல முறையில் நடிக்கிறார் .படப்பிடுப்பு இடைவேளையில் சம்பந்தப்பட்ட அந்த நிருபர் வருகிறார். நம் தலைவன் அழைப்பை ஏற்று. முறைப்படி நம் ஆசான் சிகிச்சை அளிக்க மீண்டும் அந்த நிருபர் எழுத ரொம்ப நாள் காத்து இருக்க வேண்டி இருந்தது.வைத்தியம் அப்படி.மனோரமா தேறினார். திரையில் மின்னினார்.நம் ஆசான் நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு படு கெட்டவர்..... வாழ்க எம்ஜியார் புகழ் ..........செய்தி உதவி தினமலர் வாரமலர் சென்னை பதிப்பு நன்றி ........... Thanks..

  11. #1090
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மணிதன்என்பவன்தெய்வமாகலாம் இந்தப்பாடல் நடிகர் ஜெமினிகணேசன் நடித்த சுமைதாங்கி படத்தில் இடம்பெறும் ஒரு நல்லபாடல் இதுவே நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களின் படத்தில் வந்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் ஆனாலும் ஒருதிரைப்படக்கலைஞருக்கு அவரது ரசிகர் மனதாரவணங்கி கோயில் கட்டியதாக வரலாறுஇல்லை நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களுக்குத்தான் இதுஅமைந்தது அந்தவகையில் நமதுஇதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னை திருநின்றவூர் நத்தம்மேடு என்ற இடத்தில் கோயில் கட்டி எங்களைப்போன்ற உலகம்பூராவும் உள்ள ரசிகளைஅழைத்து கும்பாபிஷேகம் செய்த புரட்சித்தலைவரின் பக்தர் திரு கலைவாணன் அவர்களைஎவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலயம் உருவாக பேருதவிசெய்த அவரின் துணைவியார் மறைந்தும் மறையாத திருமதி சாந்திகலைவானனை வணங்குவோம் இன்று மிகுந்த பக்தியுடன் கோவில் திருவிழாவை உளமாரக் கொண்டாடும் கலைவாணன்மகள் திருமதி சங்கீதா அவர்களைப் போற்றுவோம் இந்தக்குடும்பத்துக்கு உறுதுணையாக கோவில் விழாவுக்காக உலகம்பூராவும் இருக்கும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்களைஅழைத்து வருடந்தோறும் கோயில் ஆண்டுவிழா கொண்டாட உளமாரப்பாடுபடும் திரு வாசுதேவன் அவர்களுக்கு இதயம்கனிந்தநன்றிகள் தெரிவித்து தினசரி.வாரம்ஒருநாள் மாதம்ஒருநாள் வருடத்தில் ஒருநாளாவது பக்திமார்க்கத்துடன் ஆண்டவர் எம்ஜிஆர் தரிசனம் காணவரும் உலகம்பூராவும் இருக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்களுக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் இதயமினிக்கும். நன்றிகளையும் தெரிவித்து இன்றையநாள் அனைவருக்கும் இனியதாக இருக்கட்டும் மதுரை.எஸ் குமார்......... Thanks.....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •