Page 127 of 402 FirstFirst ... 2777117125126127128129137177227 ... LastLast
Results 1,261 to 1,270 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1261
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த மாதத்தில் தென்காசியில் 2 வாரங்கள் வெற்றி நடை போட்டு, பின்பு செங்கோட்டையில் ஒரு வாரம் வசூல் மழை பொழிந்து... இப்பொழுது நெல்லையில் ரசிகர்களையும், பொது மக்களையும் குதூகலிக்க வைக்க நாளை வருகை தரும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "அடிமைப்பெண்" காவியத்தை காண வரும் நல்லிதயங்களை மனமார வரவேற்கிறோம்...........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1262
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -25/9/19-------------------------------------------என்னுடைய சத்யா மூவிஸ் தயாரிப்பான "காவல்காரன் " படத்தில் மக்கள் திலகம்* எம் .ஜி.ஆர். நடித்து வந்தார் .அப்போது (67ம் ஆண்டு ) பொது தேர்தல் வந்தது .ஆனால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் மரணப்படுக்கையில் மாதக் கணக்கிலே இருந்தார்* உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்தார்* ஆனால் சரியாக பேச முடியாமல் திண்டாடினார்.* அந்த துயரத்தை வார்த்தைகளாலே வர்ணிக்க இயலாது .நேரிலே பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.* நல்லவேளையாக "காவல்காரன் " திரைப்படத்தில் நீண்ட உரையாடல் உள்ள காட்சிகளை எல்லாம் விபத்திற்கு முன்னாலேயே எடுக்கப்பட்டுவிட்டன .* அதற்குப் பின்னாலே எடுத்த காட்சிகளை அவர் பேசமுடியாமல் கஷ்டப்படுகின்ற* அந்தச் சூழ்நிலையில் சிறிய சிறிய வார்த்தைகளை துண்டு துண்டு உரையாடல்களாக மாற்றி அதை பதிவு செய்கிற பகீரத முயற்சியிலே ஈடுபட்டோம்.* அவருக்கு சரியாக பேசமுடியாது . கஷ்டப்படுகிறார் என்பது வெளி உலகிற்கு தெரிந்து வீடாக கூடாதே என்பதால் வழக்கமாக ஸ்டுடியோக்களில் பதிவு செய்ய வேண்டிய உரையாடல்களை எல்லாம் அங்கே பதிவு செய்யாமல் புதிதாக எந்திரங்களை அமைத்து சத்யா*ஸ்டுடியோவிற்கு உள்ளேயே வெளியில் யாருக்கும் தெரியாமல்* அந்த வார்த்தைகளை திரும்ப திரும்பப் பேசவைத்து அவர்களை பயிற்சி எடுத்துக் கொள்ள வைத்து தேய்ந்து போய்ப் பேசப்படுகின்ற அந்த வார்த்தைகளை ஓரளவிற்கு முழுமையான வார்த்தைகளாக மாற்றுகின்ற முயற்சியில் பல மாதங்கள் ஈடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றோம் .
    முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு கட்டுரையில் .

  4. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  5. #1263
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.06.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில்
    நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி
    கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

    .
    பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .

    மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .
    மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு
    ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார் .

    மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம்
    அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும் .

    இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .

    சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .......... Thanks.........

  6. #1264
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினி யின் முதல் வண்ணப் படம். எம்.ஜி.ஆர்., அவர்களின் 100 வது படம் "ஒளிவிளக்கு" வெளியான 20-09-1968 நாள் நாளை !... Thanks..

  7. #1265
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மிட்லண்ட் 70 நாள் நூர்ஜஹான் 70 நாள் மகாலட்சுமி 77 நாள் வட சென்னை இரண்டு திரையரங்கம் பிராட்வே 98 நாள் அகஸ்தியா 36 நாள் ஓடியது !........... Thanks...

  8. #1266
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -13/9/19--------------------------------

    புதுவை 100 அடி சாலையின்*
    எம்.ஜி.ஆர். பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு :* அண்ணா தி.மு .க.ஆர்ப்பாட்டம் .
    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமையில் நடந்தது .----------------------------------------------------------------------------------------------------------------------------


    புதுவை சாலைக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவில்லை என்றால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்னால் எனது உயிரை தியாகம் செய்வேன் என்று அ. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தெரிவித்தார் .


    புதுவை 100 அடி சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டிருந்தது . அப்பெயரை*காங்கிரஸ் அரசு மாற்றி கருணாநிதி பெயரை சூட்டப்போவதாக அறிவித்து உள்ளது .அதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சாரம் பாலம் அருகே இன்று நடந்தது.* அதில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.ஓம்சக்தி சேகர் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .**


    அப்போது ஓம் சக்திசேகர் பேசியதாவது :
    புதுவையில் தி.மு.க* ஆட்சி நடந்தபோது ஜானகிராமன் முதல்வராக இருந்தார் .அவர் புதிய பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். சிலை திறந்து வைத்து*100 அடி சாலைக்கு எம். ஜி.ஆர்.சாலை என்று பெயர் சூட்டினார் .* ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அந்த பெயரை மாற்றுகிறார்கள் .


    1986ல் எம்.ஜி.ஆர். ஆதரவோடுதான் இன்றைய முதல்வர் நாராயணசாமி எம்.பி. ஆக்கப்பட்டார் .* பலமுறை புதுவையில் காங்கிரஸ் ஆட்சி உருவாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார்கள் .* ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார்கள் . இது அரசியல் அநாகரிகம்* நாட்டில் பல மக்கள் பிரச்னை இருக்கும்போது இந்த பெயர் மாற்றம் செய்வது சரியா என்று கவர்னரிடம் நாங்கள் கோரிக்கை மனு அளித்துள்ளோம் .


    இந்த செயலை எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ஏற்கமாட்டார்கள் .* இந்த பெயரை மாற்ற முற்பட்டால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு எனது உயிரை தியாகம் செய்வேன் .**


    இவ்வாறு அவர் பேசினார் .

  9. #1267
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மீனாட்சி 147 நாள் திருச்சி ராஜா 112 நாள் குடந்தை விஜயலட்சுமி 100 நாள் ஓடியது........ Thanks...

  10. #1268
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒளி விளக்கு 1969 ஜனவரி 14 பொங்கலன்று முதல் முறையாக இலங்கையில் திரையிடப்பட்டது. முதல் வெளியீட்டில் Zainstan Colombo , ராஜா யாழ் நகர் ஆகிய திரைகளில் 162 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றியை பெற்றது.

    1969ம் ஆண்டின் நம்பர் one வெற்றி படம். 1979 மீண்டும் ராஜாவில் திரையிடப்பட்டு 100 நாட்டகள் ஓடியது.......... Thanks...

  11. #1269
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


    யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


    அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.......... Thanks...

  12. #1270
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது "ஒளி விளக்கு"...

    தேவி - 21 நாட்கள்

    சிவாஜி - 14 நாட்கள்

    நாகா - 14 நாட்கள்

    ஜெயஸ்ரீ - 7 நாட்கள்

    பாலாஜி - 7 நாட்கள்

    கோபால் -7 நாட்கள்

    மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் வரலாற்று சாதனை புரிந்தது......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •