Page 175 of 402 FirstFirst ... 75125165173174175176177185225275 ... LastLast
Results 1,741 to 1,750 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1741
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1742
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    நன்றி - திரு ஹுசைன்

  4. #1743
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் .ஜி .ஆர்., முதல்வர் ஆகும் முன்னே பலநாட்டில் அதிகாரபூர்வ அழைப்பின் பெயரில் சென்று உள்ளார்.........
    மொரீஸ் நாட்டின் சுதந்திர விழாவில் பிரதமரின் அடுத்து இருந்தி சிறப்பு செய்தார்கள்...
    அமெரிக்கா, ரஷ்யா ,சிங்கபூர் ,போன்ற நாட்டின் அழைப்பில் சென்றவர் எம் ஜி ஆர் ...
    அமெரிக்காவில் ஒருநாட்டின் ஜனாதிபதி, பிரதமருக்கு, கொடுக்கும் மரியாதையோடு அழைத்து செல்லபட்டார் என்று டாக்டர் உதயமூர்த்தி எழுதிய "அமேரிக்காவில் எம் ஜி ஆர்", எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளார் ......... Thanks.........

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்

  5. #1744
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 31

    நல்லது செய்யனும் என்றால் பல தொல்லைகள் வரத்தான் செய்யும் அதற்கெல்லாம் பயந்தா எந்த நல்ல காரியமும் செய்ய முடியாது. ..

    ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் வாத்தியாரிடம் கேட்ட கேள்வி. ..
    நீங்கள் தினமும் யாருக்காவது ஒருவருக்கு தர்மம் செய்கிறீர்கள். உதவி செய்கிறீர்கள். என்றைக்காவது ஒரு நாள் யாருக்கும் தர்மம் உதவி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் நாள் வந்தால் அந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும். .? ?
    அதற்கு வாத்தியார் தந்த பதில். . அது நான் மரணம் அடையும் மறு நாள் ஆகும்.
    நான் மரணம் அடையும் தருவாயில் யாருக்காவது உதவி செய்யும் பாக்கியம் இறைவன் எனக்கு தரவேண்டும். என்றார், அவ்வளவுதான் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள் தன்னை அறியாமல் மனகண்ணீர் வடித்தனர்.

    அவர் சொன்னப்படியே 23, 12 1987. ம் ஆண்டு அன்று காலை தனது தொண்டர் ஒருவர் உதவி கேட்டிருந்தார் என்று ஞாபகம் வர தன்னால் போக முடியாத சூழ்நிலையிலும். ஜானகி அம்மையாரிடம் கூறி அவருக்கு உதவியிட சொன்னார். .ஜானகி அம்மையாரும் வாத்தியார் உதவியாளர் ஒருவரை அழைத்து வாத்தியார் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். உதவியாளரும் உடனே வாத்தியாரின் தொண்டருக்கு உதவி செய்து விட்டு வந்து தகவல் தந்தார் ஜானகி அம்மாள் வாத்தியாரிடம் நீங்கள் ஆசைபட்டபடி உங்கள் தொண்டருக்கு உதவி செய்தாச்சு என்றார் .அப்போது வாத்தியார் தனது கண்ணீரால் பதிலளித்தார். இப்போது தான் என் மனம் திருப்தி அடைகிறது. இனி மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன். இதை கேட்டு ஜானகி அம்மாள் வடித்த கண்ணீருக்கு பதில் சொல்லமுடியாமல் தவிர்த்தார். மறுநாள் 24 12 1987 வாத்தியார் விண்ணுலகம் அடைந்த செய்தி உலகம் முழுவதும் அறிய அவரிடம் உதவி பெற்ற தொண்டரும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார். வாத்தியார் கொடுத்த வாழ்வு அவரே இல்லை என்ற பிறகு இனி வாழ்ந்து பயன் இல்லை என எண்ணி உயிரை மாய்த்துக் கொண்டார். .

    அதுமட்டுமல்ல இன்று தாயே பற்றி பேசுவதற்கும் நினைப்பதற்கும் கவனிப்பதற்கும் நேரம் இல்லாமல் விசுவாசம் இல்லாத மனிதர்கள் மத்தியில் தனது மரணதருவாயிலும் தன்னை ஈன்ற தாய்க்கு நன்றி சொல்லி நினைத்துக் கொண்டேத்தான் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வாத்தியார் மறைந்த பிறகு அவரது பொன்னூடலை வெளியே கொண்டு போகும் போது ஜானகி அம்மாள் கூறினார். அவரது உடலை அவரது தாயார் ஆலயத்தில் வைத்து சிறிது நேரம் மெளன அஞ்சலி செலுத்தி எடுத்து செல்லுங்கள் அவருக்கு அவங்க அம்மாதான் உயிர் அப்போது தான் அவர் ஆத்மா சாந்தியடையும். என்றார்.தாயாரின் ஆலயத்தில் வைத்தபோது கண்ணீர் விட்ட கண்கள் அனைத்தும் புனிதம் அடைந்தது. .
    வாத்தியார் வள்ளல்தனமும் தாய் பற்றுக்கும் இதை கண்டித்து ஒரு சான்று வேண்டுமா .??

    வாத்தியார்க்கு பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் ஜானகி அம்மாள் கூறினார்..மற்றும் தீபாவளி மலரில் ராணி புத்தகத்தில் வந்த தகவல். . தொடரும் தொடரும் தொடரும்........... Thanks...

  6. #1745
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #பைத்தியம்............

    தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...

    ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...

    #எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...

    இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...

    ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...

    இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!

    முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....

    தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!

    பக்தியின் உச்சநிலை இது...
    எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...

    இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!

    ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...

    எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...

    #நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...

    உங்களுக்கு ???
    பகிர்வுக்கு நன்றி..
    Bala Subramanian சகோ........... Thanks...

  7. #1746
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "வீரமா முகம் தெரியுதே... அது வெற்றி வெற்றிப் புன்னகை புரியுதே" வந்துவிட்டார் நாடோடியாவார் இவர்எனத்தப்புக் கணக்குப்போட்டவர்களின் கெட்டநினைவைத் தவிடுபொடியாக்கி நான் மன்னவன் என்று சொல்லி வென்ற எம்.ஜி.ஆர். அவர்களின் காவியம் படம் மாபெரும் வெற்றிபெற புரட்சித்தலைவரின் ரசிகர்கள் நல்வாழ்த்துக்கள் கூறுங்கள்... நன்றி... மதுரை.எஸ் குமார்... Thanks.........

  8. #1747
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாரிஸில் புரட்சித் தலைவர் ...

    05-08-1973, அன்று அந்தோணி மாணவர் விடுதி

    ரஷ்யாவில் நடைபெற்ற திரைப்பட விழாவுக்கு தமிழகத்தின் சார்பாக சென்று புரட்சித் தலைவர், இயக்குனர் திரு. ப.நீலகண்டன், திரு. சித்ரா கிருஷ்ணசாமி மற்றும் திருமதி லதா சபா ஆகியோருக்கு வரவேற்பு, சிறப்பு கூட்டம்.

    விழாவுக்கு தலைமை திரு. முடியப்பனாதான். தமிழ்ச் சங்கத்தில் செயலாளர் திரு. தசரதன் வந்தவர்களை மரபு மாறாமல் வரவேற்றார்.

    புரட்சித் தலைவர் நல்ல தமிழில் புதியதாக துவக்கியுள்ள கழகத்தை பற்றி பேசினார், திண்டுக்கல் வெற்றி......தமிழத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர் என்பது மக்கள் உணர்ந்தார்கள். பின்னர் அவையோரின் சில கேள்விகளுக்கு புரட்சித் தலைவர் அவரால் பதிலளித்தார். பார்சி தமிழ்ச் சங்கத்தில் தலைவரின் நன்றியுடன் விழா நிறைவடைந்தது............ Thanks.........

  9. #1748
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படப்பொட்டி - 3வது ரீல் - பாலகணேஷ் ': ' http://socialshare.minkaithadi.com/index.php?id=766....... Thanks...

  10. #1749
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை...திருப்பரங்குன்றம் - லட்சுமி DTS.,திரையரங்கம் இன்று.23.10.2019 புதன்கிழமை முதல் தினசரி 2காட்சிகளாக வெற்றிப்பவனி புரட்சித்தலைவரின் "தர்மம் தலை காக்கும்", காவியம்... நன்றி... தகவல் மதுரை.எஸ்.குமார்..... புகைப்படம்... மதுரை மர்மயோகி மனோகர்... Thanks...

  11. #1750
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •