Page 171 of 402 FirstFirst ... 71121161169170171172173181221271 ... LastLast
Results 1,701 to 1,710 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1701
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,077
  Post Thanks / Like
  சுகாராம் சார் வணக்கம்
  இனிய காலை வணக்கம்
  எனக்கு இங்கு இரவு நேரம், தூங்கப் போவதற்கு சற்று முன்புதான் மய்யத்தில்
  நீங்கள் பதிவிட்டிருந்த
  கண்ணதாசன் , எம்.ஆர் ராதா சம்பந்தப்பட்ட "வேட்டைக்காரன்" படத்தில் இடம் பெற்று
  எந்தக் காலத்திலும்
  அழியாமல் சாகா வரம் பெற்ற " உன்னை அறிந்தால்" பாடல் செய்தி படித்து மிகவும்
  சந்தோஷமும், ஆச்சரியமும் அடைந்தேன் காரணம்
  இந்த செய்தி இது வரை
  நான் அறியாத ஒரு செய்தி, இப்படி ஒரு பாடலை யாருக்கு எழுத
  வேண்டும் என்று தீர்மானித்த கவியரசர்
  அவர்களும், இந்த பாடல் எனக்கு கிடைத்தால் என் தலைமுறை மட்டும்தான்
  பேசும் ஆனால் எம். ஜி. ஆருக்கு கிடைத்தால் எத்தனை தலை முறை ஆனாலும் அழியாது என்று பின்னாளில் நடக்கப் போவதை எவ்வளவு துல்லியமாக
  கணக்கிட்ட எம். ஆர் ராதா போன்ற அதி அற்புதமான நடிகரும்
  தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
  எனக்கு எம். ஆர் ராதா அவர்கள் தலைவரை
  சுட்டதால் அவர் மேல் வெறுப்பு வரவில்லை
  காரணம் அந்த நிகழ்வு
  நடக்க வேண்டும் என்பது கடவுளின் கட்டளை அது ராதா அவர்கள் ரூபத்தில் நிறைவேறியது அவ்வளவுதான் ஏன் என்றால் அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் தலைவரின்
  புகழ் உலகமெங்கும்
  குன்றிலிட்ட விளக்காக
  ஒளி வீசியது என்றால்
  மிகையில்லை
  தலைவரின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வசூல் சாதனைப் படங்கள் வந்தது எல்லாமே 1967 க்குப் பிறகுதான் பெரிய வசூல் சக்கரவர்த்தியாக இருந்த தலைவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் இந்திய வசூல் சாம்ராட்டாக மாறியது
  1967 க்குப் பிறகுதான்
  எப்படி "இன்பக் கனவு" நாடகத்தின் போது கால்
  முறிவுக்கு உள்ளாகி திரும்பி வந்த போது முன்பு இருந்ததை விட
  பலமடங்கு விஸ்வரூபம்
  எடுத்தாரோ அதை விட
  பல மடங்கு வானத்துக்கும் பூமிக்கும் வாமன அவதாரம் எடுத்தது இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் எனவே இப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்க உதவிய ராதா அவர்களை பாராட்டத்தான் வேண்டும்
  இப்படி ஒரு அற்புதமான
  செய்தியை பதிவிட்ட
  சுகாராம் சாருக்கு என்
  நன்றியும், வணக்கமும்!.......... Thanks mr. James watt.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1702
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,077
  Post Thanks / Like
  திரு ஜேம்ஸ் வாட் அவர்களுக்கு நன்றி... நம் சகோதர பக்தர்கள் பரிமாற்றம் செய்யும் பதிவுகளை தான் இங்கே பகிர்ந்து வருகிறோம் நண்பரே... நீங்களும் உங்களிடம் இருக்கும் அருமையான மக்கள் திலகம் பற்றிய தகவல்கள், மற்றும் மாற்று இடத்தின் செய்திகள் ஆகியன பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி.........

 4. #1703
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

 5. #1704
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

 6. #1705
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

 7. #1706
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,292
  Post Thanks / Like

 8. #1707
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,077
  Post Thanks / Like
  மக்கள் கடவுளாய் எம் ஜி ஆரை தவிர எவரையும் ஏற்பதில்லை ............

  விமர்சனங்கள் ஆயிரம் ஏதும் ஆதாரமற்றவை
  செய்த நன்மைகள் பல மடங்கு எல்லாம் ஆதாரம் உண்டு
  நல்லவை என்றாலே தீயவைக்கு பிடிக்காது அதை போல் தீயவரான சிலருக்கு பிடிக்காமல் வதந்திகள் விமர்சனங்கள் மூலம் வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்தவர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா
  எவராலும் கணிக்க முடியாத
  எவராலும் வெல்ல முடியாத
  தெய்வீக பிறவி எம் ஜி ஆர்

  வாழ்க எம் .ஜி .ஆர்.,... புகழ்......... Thanks.........

 9. #1708
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,077
  Post Thanks / Like
  முகநூலில் சென்றவாரம்
  எம்ஜிஆர் விசுவாசிகளிடம் பிரபலமானது இப்படம்

  ஆனால் மக்கள் திலகத்துடன் அமர்ந்திருக்கும் குழந்தைகள் யார் யாரென்று பலருக்கு தெரியாது...

  1.கலாநிதி மாறன்
  2.தயாநிதி மாறன்
  3.மு.க.தமிழரசு
  4.மு.க.கனிமொழி............ Thanks.........

 10. #1709
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,077
  Post Thanks / Like
  குமார் சார் வணக்கம்
  நீங்கள் அனுப்பிய அனைத்து செய்திகளுக்கும் தங்கத் தலைவரின் " நான் ஏன் பிறந்தேன்" படச் செய்திகளும் புகைப் படங்களும் அமோகம் பாராட்ட வார்த்தைகளே இல்லை இதில் விட்டுப் போன இன்னொரு முக்கிய சமாச்சாரம் ஒன்று உண்டு " கலங்கரை விளக்கம்" படத் தயாரிப்பின் போதும் " சங்கே முழங்கு என்னும் அற்புதமான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலை படத்தில் சேர்க்கச் செய்து தாய் தமிழுக்கு மிகப் பெரிய சிறப்பு சேர்த்ததும் தலைவர்தான் அதேபோல் இந்த " நான் ஏன் பிறந்தேன்" படத்தை அதே ஜி. என் வேலுமணி அவர்களும் திருமதி . கே . ஆர் விஜயா அவர்களும் சேர்ந்து தயாரித்த போது புரட்சிக் கவிஞரின் " சித்திரச் சோலைகளே" பாடலை படத்தில் சேர்க்க தலைவர் விரும்பிய போது அந்த பாடல் காட்சிக்கான செலவை ஏற்பதில் தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் ஏற்பட்ட போது
  அந்த செலவை தலைவரே ஏற்றுக் கொண்டு பாடலை படத்தில் புகுத்தி உழைக்கும் தொழிலாளர்களின் சிறப்பை உலகறியச் செய்ததும் தலைவர்தான் இந்த தகவலை " சினிமா எக்ஸ்பிரஸ்" ராம மூர்த்தி அவர்கள் ஒரு இதழில் எழுதி இருந்தார்கள் அதே போல் இன்னொரு சிறப்பு தலைவருடன் சிறு வயதில் தேவிகா வின் தம்பியாகத் தோன்றிய கமல் வளர்ந்து வாலிபனாக ஆனபோது தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்தார் அப்போது இதே " நான் ஏன் பிறந்தேன்" படத்தில் நடித்த தலைவருக்கு நடன அசைவுகள் சொல்லிக் கொடுத்த பெருமை கமலுக்கு உண்டு இந்த படத்தின் போதுதான் தலைவர் கமலைக் கூப்பிட்டு ஆள் நல்ல நிறமாக அழகாக இருக்கிறாய் இன்னும் கொஞ்சம் உடற்ப் பயிற்சி செய்து உடலையும் தேற்றி விட்டால் கதாநாயகன் ஆகும் தகுதி உனக்கு வந்து விடும் என்று கமலை ஊக்குவித்து விட்டதும் தலைவர்தான் இந்த தகவல் கமலே சொன்னது பிற்பாடு இந்த கமல் நான் சிவாஜி ரசிகன் என்று கூறி தலைவரின் முதுகில் குத்தியது தனிக்கதை!......... Thanks...

 11. #1710
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,077
  Post Thanks / Like
  குமார் சார் வணக்கம்
  நீங்கள் அனுப்பிய "சபாஷ் மாப்பிளே" ஸ்டில்கள் அனைத்தும் அருமை, எல்லாவற்றையும் எவ்வளவு அழகாக தொகுத்து வைத்திருக்கிறீர்கள், நேற்று தான் வெளி வந்ததைப் போல மிகத்
  தெளிவாக அழகாக இருந்தது சார் இதில் தலைவர் கொள்ளை அழகாக இருப்பார் , எனக்கு மிகவும் பிடித்த
  படம், அதிலும் தலைவரும் எம். ஆர் ராதாவும் அடிக்கும் காமெடி லூட்டி இருக்கிறதே சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் குறிப்பாக சமையல் கட்டின் புகைபோக்கி வழியாக தலைவர் வீட்டுக்குள் நுழையும் போது முகமெல்லாம் கரியாகி அந்த வேஷத்துடன் அடிக்கும் காமெடி இருக்கிறதே ever green ரகம், தலைவர் இந்த படத்தில்
  அலட்டல் இல்லாமல் மிகப் பிரமாதமாக காமெடி பண்ணி இருப்பார் அதிலும் குறிப்பாக Dialogue delivery பின்னி பெடல்
  எடுத்திருப்பார்," சபாஷ் மீனா" படத்தில் உண்மையை சொல்லப் போனால் கதாநாயகன் சிவாஜியா இல்லவே இல்லை சந்திர பாபு தான் கதா நாயகன் அவர்தான் படத்தை தன்
  நகைச் சுவை மூலம் தூக்கி நிறுத்தி இருப்பார், இன்னொரு பலம் " குல தெய்வம்" ராஜ கோபால் சிவாஜியும் அவரும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து விட்டு ரிப்பேர்
  செய்ய வருவது மாதிரி வரும் காட்சிகளில் எல்லாம் ராஜ கோபால் அய்யாவின் கொடிதான் பறக்கும் ஆனால் நம் தலைவர் அப்படி இல்லை எம். ராதாவுடன்
  சரிக்கு சமமாக காமெடியில் நின்னு விளையாடி இருப்பார்
  இன்னும் சொல்லப் போனால் ஒருபடி மேலேயே கலக்கி இருப்பார் , இன்னுமொரு சிறப்பு அம்சம் மாலினி மேடம்
  மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்பப் பாங்கான அழகோடு
  ஜொலித்திரு ப்பார் , "யாருக்கு யார் சொந்தம்
  என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது"
  பாடலில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் பிரமாதமாக இருக்கும்
  சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் குரல் இன்னொரு சிறப்பு
  படத்தில் தலைவர் கஷ்டப் பட்டு இரண்டு மூன்று சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் என்று போகும்போது ஒரு வயதான தாய் மகனே நான் பட்டினி ஏதாவது கொடுப்பியா என்று பரிதாபமாக கேட்கும் போது தலைவர் கையில் இருப்பதை அப்படியே கொடுத்து விட்டு அந்த தாய் ஆவலுடன் சாப்பிடுவதை ஒரு மகனுக்கே உரிய பாசத்துடன் கண்களில்
  நீர் திரையிட பார்ப்பார்
  பாருங்கள் அந்த காட்சியில் சத்தியமாக தலைவர் நடிக்க வில்லை ஒரு மகனாக அந்த பாத்திரமாக வாழ்ந் திருப்பார் அந்த காட்சியைப் பார்த்து எத்தனையோ நாள் அழுதிருக்கிறேன் சார்
  தலைவரின் இயற்கை நடிப்புக்கு இந்த ஒரு காட்சியே போதும் ஆயிரம் ஆஸ்கார் விருது கொடுக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் என்ன ஒரு துரதிர்ஷ்டம் உடம்பைக் குலுக்கி பெரிதாக சத்தம் போடுவதுதான் நடிப்பு என்று எல்லாரும்
  நம்பியது,அதை சுலபமாக பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து மக்களை நம்ப வைத்தது ஆனால் இப்போது பாருங்கள் நடிப்பு என்றால் இயற்கை எதார்த்தம் பழைய சிவாஜி நடிப்பை
  எவனாவது நடித்தால்
  ...... அடிப்பார்கள் , இந்த கண்றாவி வேண்டாம் நான் சொல்லுவது மாதிரி நடித்தாலே போதும் என்று அன்று
  சிவாஜியின் கர்வத்தை
  " முதல் மரியாதை" யில் டைரக்டர் பாரதிராஜா
  தூள் தூளாக்கி முகத்தில் கரி பூசி விட்டார்
  சரி விஷயத்திற்கு வருகிறேன் " சபாஷ் மாப் பிளே" படத்தின் வெட்டுப் படாத நல்ல பிரிண்ட் கிடைக்குமா சார்? Modern cinema கம்பெனி டிவிடி பிரிண்ட் படு மோசம்
  பாதி படம் இல்லை அதனால் தான் கேட்கிறேன் சார் உங்களுக்கு தெரிந்தால்
  சொல்லுங்கள் சார்!........ Thanks...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •