Page 103 of 402 FirstFirst ... 35393101102103104105113153203 ... LastLast
Results 1,021 to 1,030 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1021
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தவாரம் சென்னையில் அகஸ்தியா.டி.டி.எஸ் ஏ.சி மேட்னி மாலை இரண்டுகாட்சிகள் புரட்சித்தலைவரின் நல்லநேரம் சென்னை ரெட்ஹில்ஸ் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததைமுடிப்பவன் மதுரை ஆவணி மாதம் புதியபொலிவுடன் ஆரம்பமாகும் லட்சுமி திரையரங்கம் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் இரண்டுகாட்சிகள் கோவை சண்முகா கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் குடும்பத்தலைவன் போடி.ஆரோ.ஏ.சி பாரத் எம்ஜிஆர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை , திண்டுக்கல் nvgb தேடி வந்த மாப்பிள்ளை தினசரி 4 காட்சிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி திரையரங்கில் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் ஆயிரத்தில்ஒருவன் நாளைமுதல் வெற்றிப்பவனி திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை.எஸ் குமார்.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1022
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் படங்களின் வெற்றி, அரசியலில் அவரது விஸ்வரூபம் ஆகியவற்றை பார்த்து அவர் மீது அந்தக் காலத்திலேயே துணை நடிகர் பொறாமை கொண்டார். 1971 தேர்தல் பிரச்சாரத்தில் .. என்னை மாதிரி உன்னால் நடிக்க முடியுமா.. என்று புரட்சித் தலைவருக்கு அந்த துணை நடிகர் சவால் விட்டார். பதிலுக்கு,, நான் ரெடி.. நான் வாங்கும் சம்பளம் நீ வாங்குகிறாயா.. என் படங்களை போல உன் படங்கள் ஓடுகிறதா. எனக்கு வரும் கூட்டம் உனக்கு வருகிறதா.. என்று புரட்சித் தலைவர் பதிலடி கொடுத்தார். பொறாமை பிடித்த அந்த துணை நடிகர் வாயை மூடிக்கொண்டார். புரட்சித் தலைவர் படங்கள் வெற்றியையும் அழியாத புகழையும் பார்த்து துணை நடிகரைப் போலவே அவரது மக்கு கைக்கூலி பிள்ளைகளும் பொறாமையால் வாடுகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள். துணை நடிகரைப் போலவே அவரது மக்கு பிள்ளைகளுக்கும் எப்போதும் தோல்விதான்........... Thanks...........

  4. #1023
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமா

    தியாகராஜ பாகவதர் முதல் நேற்று வந்த உத்து கதாநாயகன் வரை பலர் அடைந்த அந்த கால கட்டங்களில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

    அவர்கை பெயர் இன்று நிலைத்து நிற்கிறது. அனால் அவர்கள் நடித்த படங்கள்???? இதற்கு ஒரு விதிவிலக்கு நமது புரட்சித் தலைவர் காவியங்கள் மட்டுமே.

    ஆம். இந்த வாரம் மட்டும் [ விவரம் கிடைத்த வரையில்] எழுப்படங்கள். சென்னை- நல்ல நேரம், கோவை - குடும்பத்தலைவன், மதுரை - அடிமைப்பெண், ஸ்ரீவல்லிபுத்துர் -ஆயிரத்தில் ஒருவன், ரெட் ஹில்ஸ் -நினைத்ததை முடிப்பவன், போடிநாயகனுர்- எங்க வீட்டுப்பிள்ளை மற்றும் திண்டுக்கல் தேடி வந்தமாப்பிள்ளை.

    உலகத்தில் ஒரு நடிகர் பெயர் மட்டும் அல்ல அவர் நடித்த காவியங்களும் நிலைத்து நிற்கிறது என்றால் அந்த புரட்சித் தலைவர் மற்றும் அவர் நடித்த காவியங்கள் மட்டுமே. இந்த வரம் மட்டும் அவர் நடித்த காவியங்களில் 6% காவியங்கள் வந்துள்ளது. வேறு ஒரு நடிகர் 305 படங்களில் நடித்துள்ளார் அவர் படம் குறைந்தது 18 படங்கள் வரவேண்டாமா ???? ஒன்று கூட இல்லை!!!!........... Thanks...........

  5. #1024
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்

    ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.

    சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.

    உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .

    தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.

    அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.

    இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.

    அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்

    அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.............. Thanks......

  6. #1025
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மாண்பிற்கே #மாண்பு #சேர்த்தவர்.........

    #புரட்சித்தலைவர் உடல் நலம் குன்றி, அதிகம் பேச இயலாத நிலையில் முதல்வராக இருந்த சமயம்...

    1984 ம் ஆண்டு... சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதால் கருணாநிதியும், அன்பழகனும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்கள். சட்டமன்றத்தில் திமுக கட்சித்தலைவராக நாஞ்சில் மனோகரன் இருந்தார்.

    பேரவைத் தலைவராக பி.ஹெச். பாண்டியன் இருந்தார். அண்ணா நகர் சாந்தி காலனியில் திமுக பொதுக்கூட்டம். அங்குதான் பி.ஹெச். பாண்டியன் வீடு. அந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி.....

    இங்கே நாம் பேசுவதற்காக வைக்கப்பட்டுள்ள இந்த ஒலி பெருக்கியை ஸ்பீக்கர் என்று சொல்வார்கள். இது நாம் பேச உதவி செய்வது மட்டும்தான். இது சரியாக செயல்படவில்லை என்றால் இதை மாற்றிவிடுவோம்.

    இதே போல சட்டமன்றத்திலும் ஒரு ஒரு ஸ்பீக்கர் (பேரவைத்தலைவரை ஆங்கிலத்தில் ‘ஸ்பீக்கர்” என்று சொல்வார்கள்) இருக்கிறார். அவர் சரியாக செயல்படவில்லை. அவரை மாற்ற வேண்டும்.

    இப்படி பேசினார் கருணாநிதி ...

    அடுத்த நாள், சட்டப் பேரவையில் கொந்தளித்துவிட்டார் பி.ஹெச். பாண்டியன். கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

    அப்போது தனது அறையில் இருந்த முதல்வர் எம்ஜிஆர், பேரவைத்தலைவர் பேச்சைக் கேட்டு (பேரவையில் பேசுவதை தனது அறையில் இருந்தபடி முதல்வர் கேட்க எப்போதும் வசதி செய்யப் பட்டிருக்கும். யார் முதல்வராக இருந்தாலும் இந்த வசதி உண்டு.) அவசரமாக பேரவைக்கு வந்தார். பி.ஹெச். பாண்டியனை அமைதிப் படுத்தினார். அப்படியும் கருணாதியைப் பற்றி தொடர்ந்து பேசினார்.

    முதல்வர் எம்ஜிஆர் எழுந்து நின்று, பேரவைத் தலைவரைப் பார்த்து "தயவுசெய்து உட்காருங்கள்" என்றார்.
    ஆவேசத்தில் இருந்த பி.ஹெச். பாண்டியன், ‘புரட்சித் தலைவர் தடுத்தாலும், கருணாநிதியை கைது செய்யாமல் விட மாட்டேன் என்றார். அதிமுக எம் எல் ஏ க்கள் உடனே, புரட்சித்தலைவர் சொல்றார் உட்கார் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர்...

    பேரவை அமைதியானது...

    பேரவைத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக சொல்லிப் புறப்பட்டார், திமுக சட்டசபைக் கட்சித் தலைவர் நாஞ்சிலார்...

    முதல்வர் எம்ஜிஆர் உடனே எழுந்து, கையெடுத்து கும்பிட்டு, வெளிநடப்பு வேண்டாம் என்று நாஞ்சிலாரைக் கேட்டுக் கொண்டார்...

    இப்படி ஒரு கண்ணியம் மிக்க தலைவரை, எதிர்க்கட்சியினரையும் மதித்து அரவணைத்துச் செல்லும் பாங்கினை...கண்டு அன்று வியக்காதவர்கள் இல்லை...

    #மாண்புன்னா #கிலோ #என்ன #விலைன்னு #கேட்கும் #இன்றைய #அரசியல்வாதிகள் #ஒரு #சதவீதமாவது #இதை #பின்பற்றுவார்களா ???.......... Thanks.........

  7. #1026
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    புரட்சித் தலைவரின் படங்களின் வெற்றி, அரசியலில் அவரது விஸ்வரூபம் ஆகியவற்றை பார்த்து அவர் மீது அந்தக் காலத்திலேயே துணை நடிகர் பொறாமை கொண்டார். 1971 தேர்தல் பிரச்சாரத்தில் .. என்னை மாதிரி உன்னால் நடிக்க முடியுமா.. என்று புரட்சித் தலைவருக்கு அந்த துணை நடிகர் சவால் விட்டார். பதிலுக்கு,, நான் ரெடி.. நான் வாங்கும் சம்பளம் நீ வாங்குகிறாயா.. என் படங்களை போல உன் படங்கள் ஓடுகிறதா. எனக்கு வரும் கூட்டம் உனக்கு வருகிறதா.. என்று புரட்சித் தலைவர் பதிலடி கொடுத்தார். பொறாமை பிடித்த அந்த துணை நடிகர் வாயை மூடிக்கொண்டார். புரட்சித் தலைவர் படங்கள் வெற்றியையும் அழியாத புகழையும் பார்த்து துணை நடிகரைப் போலவே அவரது மக்கு கைக்கூலி பிள்ளைகளும் பொறாமையால் வாடுகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள். துணை நடிகரைப் போலவே அவரது மக்கு பிள்ளைகளுக்கும் எப்போதும் தோல்விதான்........... Thanks...........
    அருமை ! அற்புதம் ! ஆஹா .... ஓஹோ ... பேஷ் பேஷ் ! பதிவுக்கு மிக்க நன்றி ஐயா !

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #1027
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிக்கு விளம்பரம் பிடிக்காது, அவர் விளம்பரத்துக்காக எதையும் செய்யமாட்டார் - ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் சிவாஜி ரசிகர்கள்!!!!

    நாட்டின் பிரதமர் அல்லது தமிழகத்தின முதல்வரிடம் பணம் கொடுத்தால் அது அடுத்த நாள் நாளிதழில் வரும் என்று சிறு பிள்ளைக்கும் தெரியுமே!!!!!

    அவர் 1959 ஆம் ஆண்டு ஒரு லட்சம் கொடுத்தாராம், புரட்சித் தலைவர் சத்துணவு திட்டத்துக்கு நடிகர் பிரபு விடம் ஒரு லட்சம் கொடுத்து புரட்சித்தலைவரிடம் கொடுத்தார். அதை புரட்சித் தலைவர் மேடையில் சொல்லிவிட்டார்.

    1959 ஆம் ஆண்டு ஒரு லட்சத்தில் நூறு குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்றால் 1982-83ஆம் ஆண்டில்..........??? அதுவும் ஒரு "தமிழன்" தமிழ் நாடு சத்துணவு திட்டத்துக்கு வேறும் ஒரு லட்சம் தானா???? இதை தான் எங்கள் புரட்சித் தலைவர் அன்றே பாடிவைத்தார்:

    மடி நிறைய பொருள் இருக்கும்
    மனம் நிறைய இருள் இருக்கும்������........... Thanks mr.Saileshbasu Sir........... Thanks.......

  10. #1028
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை சகோதரர் திரு செல்வகுமார் சார், மிக்க மகிழ்ச்சி..... எப்பொழுதும் போல நீங்கள் இங்கு வருகை தந்து, மற்ற சகோதரர்கள் போன்று மக்கள் திலகம் அவர்களின் இனிய பதிவுகள் அளிக்குமாறு நம் திரி உறுப்பினர்கள் சார்பில் பாசமுடன் வேண்டுகிறோம்..........

  11. #1029
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த 1975 கால கட்டங்களில் எம்ஜிஆரும் கவிஞர் கண்ணதாசனும் நட்பு இல்லாமல் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது.

    அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் "உரிமைக்குரல்" உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும்.

    வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்.ஜி.ஆருக்கு. உடனே எம்.எஸ்.வி., அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர், கவிஞரை அழைத்தார்.

    கவிஞர் முதலில் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.

    முதலில் பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டினார் எம்.எஸ்.வி. பாடலை படித்ததும் எம்.ஜி.ஆர். முகத்தில் பரம திருப்தி.
    "இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும்?" என்று சொல்லிக் கொண்டே எம்.எஸ்.வி.யைப் பார்க்க,
    "ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்...

    நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம்.

    "நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்தச் சூழலுக்கு சரியா இருக்கும்" என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம்.

    காரணம், எம்.ஜி.ஆர். சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.

    அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்.எஸ்.வி.யாகத்தான் இருக்கும் என்பார்கள்.

    காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ்.

    எம்.ஜி.ஆர். மயங்கிய அந்தப் பாடல் வரிகள்...
    *"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"*

    - கே.எஸ்.ராதா
    கிருஷ்ணன்......... Thanks...

  12. #1030
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.

    இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

    படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.

    இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.

    அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

    எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. "மலைக் கள்ளன்" "சிவகவி" போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

    இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, "அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்" என்றேன்.

    இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

    திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். "ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே" என்றார்.

    நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

    மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் "எப்படி?" என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

    அவர் "எப்படி?" என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த "எப்படி" வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன "எப்படி"க்கு அர்த்தம்,

    "நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!" என்கிற அர்த்தம். நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

    எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை 'சட்'டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், "டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ" என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

    திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், "உங்கம்மா எங்கே?" என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து "வணக்கம்மா" என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

    திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

    சிவாஜி சாருடன் நான் நடித்த "ஜல்லிக்கட்டு" பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், "உனக்கு ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டார்.

    நான், "வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?" என்றேன்.

    "நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?" என்று மறுபடியும் கேட்டார்.

    இதற்கும் "வேண்டாம்" என்றேன். "எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு" என்றார், உறுதியான குரலில்.

    அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

    எனவே, "நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்" என்றேன்.

    நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

    1987 டிசம்பர் 5-ந் தேதி "ஜல்லிக்கட்டு" படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று 'வரவில்லை' என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

    இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

    ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். "முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்" என்பதுதான் அந்த தகவல்.

    ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, "அவர் அப்பவே உங்களை பார்க்கவர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே" என்று சொல்லி விட்டார்கள்.

    நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், "இன்னிக்கு மழைவர்ற மாதிரி இருக்குல்ல!" என்றார்.

    நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. "ஆமாண்ணே" என்றேன்.

    இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, "நான் வரலைன்னா வருத்தப்படுவியா?" என்று கேட்டார்.

    "வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!" என்றேன்.

    ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், "உனக்காகவர்றேன்" என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

    சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் "எப்படி?" என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த 'எப்படி' என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

    இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். "முத்தமா? தர முடியாது. குத்துவேன்" என்றார், ஜாலியாக.

    நம்பியாரோ, "அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்" என்றார்.

    இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

    நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

    டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு 'உப்பு' போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த 'உப்பு' வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

    ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்".

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்............ Thanks.......

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •