Page 147 of 402 FirstFirst ... 4797137145146147148149157197247 ... LastLast
Results 1,461 to 1,470 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1461
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒப்பாரி நடிகர் ரசிகருன்னு சொல்றவங்க மட்டும் தான் பிள்ளைகன்னு சொல்வங்களோ...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது நெல்லை தோழர் பகிர்ந்த இனிய தகவல்... கடந்த வாரம் திருநெல்வேலி - ரத்னா A/C DTS., தினசரி 4 காட்சிகள் நடைபெற்ற, மழை பெய்த நேரங்களிலும் எந்தவொரு காட்சியும் ரத்து செய்ய படாமல் ஏறத்தாழ ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரங்கள்... அருமை வசூல் அடைந்துருக்கிறது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "அடிமைப்பெண்" காவியம்......... Thanks...

  4. #1463
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அழகு மயில் அஞ்சலிதேவி, வி நாகையா, எம் என் நம்பியார், புளிமூட்டை ராமசாமி, ஏ கருணாநிதி எஸ் எஸ் சிவசூரியன், விகே ராமசாமி, ஜெயலட்சுமி, அங்கமுத்து, முத்துலட்சுமி, கமலா (நடனம்) மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காவியம் "சர்வாதிகாரி" (தெலுங்கு). மாபெரும் சரித்திர காவியமான "சர்வாதிகாரி", முதலில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்தது... தமிழில் அடுத்து தெலுங்கில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்து ...இன்றுடன் 68 வருடத்தை கடந்து (5-10-1951) 69ம் பிறந்தநாள் காணும் மாபெரும் காவியம். பாடல்கள், சண்டைக்காட்சிகள், எல்லாம் சிறப்பு வாய்ந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சர்வாதிகாரியாக (நம்பியார்) வர நினைக்கும் கூட்டத்தை ஒடுக்கி மக்களாட்சியை ஏற்படுத்துகிறார். அழகு மயில் அஞ்சலிதேவி புன்னகை ததும்ப, நளினமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் சார்பாக நடித்துள்ளார்கள். இந்த திரைக்காவியத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம்! கண்டு மகிழ்வோம்! வாழ்க எம்பெருமான் எம்ஜிஆர் புகழ்!.......... Thanks.........

  5. #1464
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காணொளி பிரதி அருமை... சகோதரர் அவர்களே... புரட்சி நடிகர் தெலுங்கு மொழியில் என்னம்மா பேசுகிறார்.......சூப்பர்... சூப்பர்... Thanks.........

  6. #1465
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சைதையாரின் ஆரம்பமே ...அமர்க்களம், காட்சிகளின் கோர்வை கலக்கியது, அட யப்பா என்னமா பாட்டுப் பாடுறாரு... தசாவதினி என்று நிரூபித்துவிட்டார்,தலைவரின் தலைமை தளபதி , தகுபதிதான்........ Thanks...

  7. #1466
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழனின் தகைமை, நேர்மை, பண்பாடு, விருந்தோம்பல், கலாச்சாரம் இவையனைத்தையும் முழுமையாக இவ்வுலகுக்கு உணர்த்திய ஒரே திரைக்காவியம், இன்று வரை இதற்கீடான படம் எந்த ஒரு மொழியிலும் உருவாகவில்லை என்று நாம் கர்வத்துடன் தோள் தட்டி நெஞ்சு நிமிர்த்தி சொல்லக்கூடிய ஒப்பற்ற படைப்பு. எனவே தான் கடந்த 61 ஆண்டுகளாக சிறிது கூட தொய்வின்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது.

    என் பாட்டன் கண்டு களித்து, என் தாய், தந்தை இப்படத்தின் பெருமையை எனக்குணர்த்தி நான் இதன் பிரம்மாண்டத்திலும், திரைக்கதை அமைப்பிலும், செந்தமிழ் வசனங்களிலும், உடையலங்காரம், இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள், படமாக்கம், வெளிப்புறக் காட்சிகள், வசதியற்ற காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சம், இப்படி அனைத்து பரிமாணங்களிலும் மிகச்சிறந்த மற்றும் முழுமைப் பெற்றதாக விளங்குகின்ற படைப்பில் என்னை பறிகொடுத்து இன்னும் மீள்வில்லை. அதற்கு முன்பே, என் மகனும் இப்படத்தின் பிரம்மாண்டத்திலும், திரைக்கதை அமைப்பிலும் இலயித்து விட்டான். அவன் விவரமமடைந்த பின் இப்படத்தை போன வருடம் ஆல்பர்ட் திரையரங்கில் அதன் இருபந்தைந்தாவது நாளில் அழைத்துச் சென்றிருந்த போது நான் மேலே சொன்ன அனைத்து அம்சங்களிலும் மயங்கி தன்னை மறந்து கண்டு களித்த போது நான் ஆச்சரியம் குறைவாகவும், குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகமாகவும் அடைந்தேன். திரைப்படம் முடிந்தவுடன் அவன் முகத்தில் ஒரு பிரமிப்பையும் மிகச்சிறந்த திரைப்படத்தை பார்த்த நிறைவையும் கண்டேன். படம் எப்படியடா இருந்தது என்ற என் கேள்விக்கு, சான்ஸே இல்ல, He is the real legend என்று சொன்னதோடு எனது நெருங்கிய நண்பர்களுடன் இன்னொரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூறினான். "எல்லாப்புகழும் தலைவனுக்கே" என்று தைரியமாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். ஏனெனில், அவரே படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருப்பதால்.

    இன்று அதே காவியத்தை அகன்ற திரையினில் நண்பர்களுடன் காணப் போகின்ற எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ������������............. Thanks.........

  8. #1467
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!.......... Thanks.........

  9. #1468
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "பயணங்கள் முடிவதில்லை" - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி - https://www.thanthitv.com/Programs/P...ivathillai.vpf........... Thanks.........

  10. #1469
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் *புலமை பித்தன்* அவர்களது பிறந்ததினம்.

    *பிறப்பில்: ராமசாமி தேவர் 06/10/1935*

    இவர் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

    இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்

    1968- "குடியிருந்த கோயில்"
    1969- "அடிமைப் பெண்"
    1971- "குமரிக்கோட்டம்"
    1972- "நல்ல நேரம்"
    1972- "இதய வீணை"
    1972- "நான் ஏன் பிறந்தேன்"
    1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
    1974- "சிரித்து வாழ வேண்டும்"
    1974- "சிவகாமியின் செல்வன்"
    1974- "நேற்று இன்று நாளை"
    1975- "நினைத்ததை முடிப்பவன்"
    1975- "பல்லாண்டு வாழ்க"
    1975- "நாளை நமதே"
    1975- "இதயக்கனி".......... Thanks...

  11. #1470
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    திரு சுந்தரபாண்டியன்

    மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள்

    வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

    வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.

    வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது

    தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து

    பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.



    100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .

    உங்களைப்போலவே நானும் கேட்கவா?



    ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.


    சிவா அய்யா,
    நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.

    இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.

    ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


    103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

    அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

    எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


    உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

    மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

    மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

    மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


    ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

    அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

    அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

    நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

    உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

    அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

    காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •