Page 269 of 289 FirstFirst ... 169219259267268269270271279 ... LastLast
Results 2,681 to 2,690 of 2881

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2681
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  இந்தவாரம் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த தேடிவந்தமாப்பிள்ளை கம்பம் .கூடலூர் வேல்முருகன் ஆயிரத்தில்ஒருவன் திருச்சி பேலஸ் கருர்.லட்சுமி ராம் சேலம் அலங்கார் மற்றும் குமாரபாளையம் ஆத்தூர் உட்பட ஆறு திரையரங்குகளில் ரகசியபோலிஸ் 115.திண்டுக்கல் என்.வீ.ஜு.பி புதுமைப்பித்தன் கோவை அனுப்பாளையம் மணிஸ் திரையரங்கில் எங்கவீட்டுப்பிள்ளை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் தகவல்கள் தெரிவித்த நெல்லை ராஜா திருப்பூர்.சரவணன் மதுரை ஸ்ரீனிவாசன் திரு சுந்தரம் அனைவருக்கும் மதுரைமாநாகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் மதுரை.எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்......... Thanks...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2682
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.

  மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.

  100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது.

  பட்டியலின, பழக்குடியின மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

  அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

  பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (VAO) என சட்டம் கொண்டு வந்தார்.

  பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.

  இதெல்லாம் பல அதிமுகவினரும் மறந்துபோன சாதனைகள்.

  இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்.

  எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் மூலம் அனைத்து சாதியினரும் VAO ஆனார்கள். தற்போது தமிழகத்தில் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்.

  கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.

  இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்டைகள் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.

  எம்.ஜி.ஆர் இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்து ஆண்டைகளின் அட்டூழியத்தை அழித்தார்.

  திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது.

  அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்

  அந்த புரட்சியின் மூலம் ரேஷன் கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.

  அதனால்தான் அவர் மக்களால் #புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார் அழைக்கப்படுக்கிறார்... Thanks.........

 4. #2683
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர் சங்கீத கொடை
  - R.P.ராஜநாயஹம்

  முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.

  தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.

  எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்த்து இசைத்து பாடவேண்டும்.’

  பாலமுரளி சிரமேற்கொள்கிறார்.

  தியாகராஜ கீர்த்தனைகளை தமிழில் மொழி பெயர்த்து பாடல்களை இசைப்படுத்துகிறார்.
  கீர்த்தனைகளை மொழிபெயர்த்தவர் அவருடைய துணைவி அபயம் அவர்கள் தான்.

  ஆறே மாதத்தில் எள் என்றால் எண்ணையாக தயாராகி விட்டார் பாலமுரளி கிருஷ்ணா.

  எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைத்திருக்கிறார். பார்க்க பல முறை முயன்றார்.


  முதல்வரை சந்திக்க இவரே முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.

  அவ்வளவு சுலபமா அது?

  எம்ஜிஆர் மறந்து விட்டார் போலிருக்கிறது. ராஜாங்க தலைமைக்கு எத்தனையோ சுமை.

  சரிதான் என்று பாலமுரளி பிரமைகளை உதிர்த்து வேறு காரியங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். வெளி நாட்டு சங்கீத கச்சேரியே போதாதா?

  இரண்டு வருடம் ஓடி விட்டது.

  எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு.

  ”நான் உங்களிடம் சொன்ன வேலையை மறந்து விட்டீர்களா? இரண்டு வருடம் ஆகி விட்டது.”

  பாலமுரளிக்கு எப்படியிருந்திருக்கும்?
  When Caesar says “Do it”, it is performed.

  பதற்றத்துடன் “அந்த பணியை நான் ஒன்றரை வருடம் முன்னரே முடித்து விட்டேன்.”

  ”அப்புறம் என்ன? என்னிடம் வந்து ஏன் சொல்லவில்லை?”

  “ உங்களை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவே இல்லை”

  வழி மறித்து தடுக்கிற நந்திகளுக்கு எம்.ஜி.ஆர் என்ற மஹாபுருஷர் விலக்கல்லவே. அவரும் அறியாததல்ல.

  மிக சிறப்பான விழாவிற்கு எம்.ஜி.ஆர் ஆணையிடுகிறார்.

  தியாகப்ரும்ம கீர்த்தனைகளை தமிழில் பால முரளி பாடி அரங்கேற்றுகிறார்.

  எம்.ஜி.ஆர் உதவியாளரை அழைத்து சொல்கிறார். “பாலமுரளியிடம் பிரசாதத்தை கொடுங்கள்”

  பிரசாத பை பெரிதாய் பாலமுரளி கையில்.

  பாலமுரளி வீட்டிற்கு வந்து பார்க்கிறார்.

  கத்தை கத்தையாய் பணக்கட்டு.

  கட்டிலில் தான் அதையெல்லாம் எடுத்து வைக்கிறார்.

  பத்து லட்சம் என்பது அன்று மிக மிகப்பெரிய தொகை.

  அதோடு பாலமுரளி கிருஷ்ணா அதுவரை பார்த்தேயிராத பெருந்தொகை.

  பால முரளி விம்மி,விம்மி அழுகிறார்.
  தேம்பி அழுகிறார்.

  https://www.facebook.com/photo.php?f...type=3&theater

  …......

  ................................... Thanks.........

 5. #2684
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  இந்த வாரம் (21/02/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்
  திரை காவியங்கள் பட்டியல் நண்பர்களின் பார்வைக்கு.
  ----------------------------------------
  தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று 1968 ல் பல அரங்குகளில் 100நாள் நிறைவு செய்த
  ரகசிய போலீஸ் 115 பலமுறை வெளியீட்டில் வெற்றி கண்டபின் மீண்டும் டிஜிட்டல் வடிவில் முற்றிலும் புதிய தொழில்நுட்பத் தில் தயாராகி சேலம் ,திருச்சி மாவட்டங்களில் புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் சாதனையுடன் கீழ்கண்ட அரங்குகளில் தினசரி 4காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
  சேலம் - அலங்கா ர்,
  ஆத்தூர் - என்.எஸ்.
  குமாரபாளையம்_கே. ஓ.என்.
  மாரண்ட ஹல்லி -பொன் முடி,
  சோ லை சிகாமணி - வெங்கடேஸ்வரா
  எலம் பிள்ளை-நடராஜா
  நல்லசமுத்திரம் -அருணாசலம்
  ராசிபுரம் - விஜயலட்சுமி
  திருச்சி - பேலஸ்,
  கரூர் - லட்சுமி ராம்

  சென்னை பாலாஜி
  உழைக்கும் கரங்கள்
  தினசரி 2 காட்சிகள்
  ( நண்பகல் /மாலை )

  மதுரை சென்ட்ரல்
  தேடி வந்த மாப்பிள்ளை
  தினசரி 4 காட்சிகள்

  திண்டுக்கல் என். வீ.ஜி. பி.- புதுமை பித்தன்
  தினசரி 4 காட்சிகள்

  கூடலூர் (கம்பம் ) வேல்முருகன்
  ஆயிரத்தில் ஒருவன்
  தினசரி 4 காட்சிகள்

  திருப்பூர் அனுப்பர்பாளையம்
  மணீஸ் அரங்கு
  எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள்

  திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில்
  இன்று போல் என்றும் வாழ்க
  வெள்ளி / சனி/ஞாயிறு
  21/22/23/02/20
  தினசரி இரவு காட்சி மட்டும்

  கோவை கர்நாடிக் (23/02/20)ஞாயிறு முதல் எங்க வீட்டு பிள்ளை
  தினசரி 4 காட்சிகள்
  (வெள்ளியன்று வெளியான புதிய படத்திற்கு வரவேற்பும்/வசூலும் அறவே இல்லாததால்)......... Thanks to mr.Loganathan Sir...

 6. #2685
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  நாளை ஞாயிறு முதல் (23/02/2020) சென்னை திருவொற்றி யூர் எம்.எஸ்.எம்.அரங்கில்
  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வழங்கும் "நம்நாடு" தினசரி 2 காட்சிகள் (மேட்னி/இரவு) வெள்ளி திரைக்கு வருகிறது... Thanks mr.Loganathan Sir...

 7. #2686
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,232
  Post Thanks / Like
  புதிய படங்களின் வருகையால் மதுரை வெற்றி, அண்ணாமலை அரங்குகளில் ரகசிய போலீஸ் 115 படம் வெளியாவது தள்ளி வைப்பு.

 8. #2687
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,232
  Post Thanks / Like
  நாளை ஞாயிறு முதல் (23/02/20) சென்னை திருவொற்றி யூர் எம்.எஸ்.எம்.அரங்கில்
  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வழங்கும் "நம்நாடு" தினசரி 2 காட்சிகள் (மேட்னி/இரவு) வெள்ளி திரைக்கு வருகிறது

 9. #2688
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,232
  Post Thanks / Like
  சேலம் சரஸ்வதி அரங்கில் 21/02/20 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

 10. #2689
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  நாங்கள் எந்த நிலையிலும் வணங்கப்படும் தெய்வம் புரட்சி தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு இரண்டு கட்டம்.ஒன்று திரையுலகம்.அதில் தலைவரே வெற்றி கொடி நாட்டி இன்று வரை தொய்வில்லாமல் பறக்க செய்துவிட்டார்.இன்னொன்று கழகம்.அதை ஒவ்வொரு பருவத்திலும் யாராவது ஒருவர் தலைமை தாங்கி பண்பாகவும் சமயோகிதமாகவும் தொண்டர் படையை வழிநடத்திதான் வெற்றி பெறவேண்டும். ஆனால் புரட்சி தலைவியாகிய தாங்கள் எதிரியின் நிழலை பார்த்தாலே நெற்றிக்கண் திறந்து எரித்துவிடுவீர்கள். அந்த அளவிற்கு கழகத்தை ராணுவகட்டு கோப்புடன் பொதுமக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக 30 ஆண்டுகள் புரட்சிதலைவர் உருவாக்கிய கழகத்தை கட்டிக்காத்து இன்று வரை தொய்வில்லாமல் நடைபெறவும் வழிகாட்டிய உங்கள் சேவைக்கு நன்றி செலுத்த 72 வது பிறந்த நாளில்(24.2.2020) கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம். இவன். ஷிவபெருமாள்.......... Thanks.........

 11. #2690
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,300
  Post Thanks / Like
  தற்போது வெற்றி நடை காண்கிறார், திரையுலக வசூல் சக்கரவர்த்தி "எங்க வீட்டு பிள்ளை" கோவை - காவேரி a/c dts., திரையரங்கிலும்...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •