Page 125 of 125 FirstFirst ... 2575115123124125
Results 1,241 to 1,245 of 1245

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1241
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,338
  Post Thanks / Like
  https://www.facebook.com/groups/MGR1...ள் திலகம் ஒரு சகாப்தம்......... Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1242
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,338
  Post Thanks / Like
  வரும் 20.09.2019 வெள்ளிக்கிழமை முதல் தினசரி.4.காட்சிகளாக மதுரை சென்ட்ரல் சினிமா DTS., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் இருவேடத்தில் தூள்கிளப்பிய "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிப்பவனி வருகின்றார் ...... மகிழ்ச்சியில் ரசிகர்கள் நன்றி... மதுரை.எஸ் குமார்............ Thanks.........

 4. #1243
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,338
  Post Thanks / Like
  #கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே

  1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...

  பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...

  அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...

  அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..

  அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
  'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...

  அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
  'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...

  'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...

  அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
  'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...

  வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...

  இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு திருவிளையாடல் தான்... முகநூலில் பாலு சார்.......... Thanks.........

 5. #1244
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,338
  Post Thanks / Like
  தமிழக மன்னன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, இன்று டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையமும் என்னுடைய NCWDC & MNDMK அமைப்பும் இணைந்து மனநலம் குன்றிய பெண்களுக்கு சென்னையில் உள்ள அன்பகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்க உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வினை புரட்சி தலைவரை மகானாக வழிபாடும் நமது புரட்சி மைந்தன் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் நடைபெறும். இதற்க்கு முக்கிய ஆதரவாக டாக்டர் எம் ஜி ஆர் உலக ஆராய்ச்சி மையம்
  உறுப்பினர்களான துணை தலைவி எம்.ஜி.ஆர் கலைமகள் டாக்டர் பூங்கொடி, பொன்மன செல்வர் டாக்டர் ராமன், நல்ல நேரம் மாத இதழ் பத்திரிக்கை நிறுவனர் அய்யா தேவராஜ் ஆண்ட்ருஸ் ஆதரவில் இந்த சிறப்பு அன்னதானம் நிகழ்வுபெற உள்ளது என்பதனை பெரும் மகிழ்வுடன் தெருவித்து கொள்கின்றோம்!

  Dr.AYAN HARI NCWDC NATIONAL
  SECRETARY & MNDMK
  TAMILNADU CHENNAI........... Thanks.........

 6. #1245
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,338
  Post Thanks / Like
  ஒரு சாதாரண கடைக்கோடி எம்ஜியார் ரசிகனின் அடிமைப்பெண் அதிசியங்கள்.

  1..உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் மனித இனத்தின் உணர்வை தூண்டும் பாடல்.

  2.. அம்மா என்றால் அன்பு பாடலில் தலைவன் குழந்தை போல கால்களை அசைக்கும் நிகழ்வு அட

  3...ஆயிரம் நிலவே பாடல் உண்மையான மன்னர்கள் எப்படி இருப்பார்கள் என்று நம் கண்ணின் முன்னே நிறுத்திய விதம்.

  4....ஒக்கேணிக்கல் நீர் வீழ்ச்சியில் இது வரை எவரும் காட்ட முடியாத அற்புத பட பிடிப்பு.

  5... தாயில்லாமல் நான் இல்லை பாடலில் 4 கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விதம்.....அதில் அந்த பறவைகள் கூட்டில்...என்ன ஒரு அற்புதம்...பின் வரும் விதம் விதமான எம்ஜியார்.

  5...உதகயில். வேங்கையன் ஜீவா வில்லன்களால் துரத்த படும் காட்சிகள் ஆங்கில படங்களுக்கு அன்றே சவால்.....சிகப்பு நிற ஆடைகளும், பச்சை நிற புல்வெளிகளும், நீல நிற ஆகாயமும் வெள்ளை நிற மேகங்கள் சூழ்ந்து நிற்கும் அழகு அந்த காலத்தில் முதல் முதலாக ஹெலிகாப்டர் மேல் இருந்து படம் எடுக்க பட்ட வரலாறு.

  6....ராஜஸ்தான் அரண்மனைகள்... வனப்பு மிகு காடுகளில் ஓடும் வீரர்கள் அட

  7... கொளுத்தும் வெயிலில் பாலை வனத்தில் கூடாரங்கள் அடிக்க பட்டு மேலே இருந்து எடுக்க பட்ட காட்சிகள்....வேங்கையனை பிரிந்த ஜீவா மணலில் நடக்கும் கால் தடங்கள்.... அணிவகுக்கும் ஒட்டகங்கள். இந்திய திரை உலக வரலாற்றில் எவரும் எடுக்க முடியாத காட்சிகள்.

  8....கட்டிய வலையில் கீழே தொங்கும் ஈட்டிகள் மத்தியில் ஒத்தை காலை கட்டிக்கொண்டு வாத்தியாரே உமக்கு நிகர் நீர் தான்..உம்மை சமன் செய்ய ஒருவனும் பிறக்கவில்லை இந்த இந்திய திரையுலகில்

  9 மகுடப்பதியின் வாள் உங்களை தாக்கும் போது நீங்கள் கேடயம் கொண்டு தடுக்கும் போது நெஞ்சங்கள் பதறியது உண்மையோ உண்மை..

  10...செங்கோடன் சிறையில் இருந்து அந்த நீரிவீழ்ச்சியில் நீங்கள் குதித்து தப்பிக்கும் காட்சி

  11 அந்த ராஜா சிங்கத்துடன் உண்மையாக மோதிய வேங்கையன்... ரத்தம் சொட்ட சொட்ட....உங்கள் தாயை கட்டி தொங்க விட்டு அவரை காப்பாற்ற....நீங்கள் மட்டும் வெளிநாட்டில் பிறந்து இருந்தால்...

  என்னவென்று சொல்வது வேங்கையா.. நீங்கள் ஒரு தனிப்பிறவி...தனி நடிகர்....தனி காப்பியம்...

  உலக எம்ஜியார் ரசிகர்கள் சார்பாக எங்கள் உண்மை ரசிகர்கள்...வாழ்க எம்ஜியார் புகழ் தொடரும் .
  ✌........... Thanks..........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •