Page 128 of 128 FirstFirst ... 2878118126127128
Results 1,271 to 1,274 of 1274

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1271
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,362
  Post Thanks / Like
  1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது "ஒளி விளக்கு"...

  தேவி - 21 நாட்கள்

  சிவாஜி - 14 நாட்கள்

  நாகா - 14 நாட்கள்

  ஜெயஸ்ரீ - 7 நாட்கள்

  பாலாஜி - 7 நாட்கள்

  கோபால் -7 நாட்கள்

  மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் வரலாற்று சாதனை புரிந்தது......... Thanks...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1272
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,362
  Post Thanks / Like
  "ஒளிவிளக்கு" முதல் வெளியீட்டில் ... தஞ்சை - ஸ்ரீ கிருஷ்ணா 99 நாட்கள்... மன்னார்குடி - செண்பகா 99 நாட்கள்...( இரண்டாம் வெளியீட்டில்) 100 நாட்கள் போனஸ் முறையை தவிர்ப்பதற்காக 99 நாட்களில் நிறுத்தப்பட்டது... தகவல்கள்... திரு.சந்திரசேகர்... தஞ்சாவூர்........... Thanks...

 4. #1273
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  26,975
  Post Thanks / Like
  தினமணி -25/12/1987- வெள்ளிக்கிழமை*-------------------------------------------------------------

  எம்.ஜி.ஆர்.


  நாடோடிமன்னன், புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் ,எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும், பெருமையையும் வெளிப்படுத்த முடியாது .


  அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களை சினிமா, அரசியல், இரண்டு வகையிலும் கட்டி போட்டு வைத்த* இந்த பெயர் தமிழக* சரித்திரத்தின்* ஏடுகளில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது .


  இன்று சென்னையை பொறுத்தவரை இது எம்.ஜி.ஆரின் திருநாளாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது .* மருத்துவ பல்கலை கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு அதை குடியரசு தலைவர் திறந்து வைக்கும் வைபவம் நிகழ இருந்தது .லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அவரது கட்சி தொண்டர்களும் இவ்வைபவத்தைக் காண தொலை* தூரங்களில் இருந்து வந்து குழுமிக் கொண்டிருந்தனர் .


  அவர்கள் காண கொடுத்து வைத்தது எம்.ஜி.ஆரின் பூத உடலைத்தான் .இறுதி யாத்திரையில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிந்ததே என்று ஆறுதல் பெற வேண்டும் .


  சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, எம்.ஜி.ஆரின் சாதனைகள் நிகரற்றவை .சினிமாவுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும், கொள்கையையும் வகுத்து கொடுத்தவர் .நல்லவனுக்கு நல்லவனாக ,பொல்லாதவனுக்கு பொல்லாதவனாக ,ஏழை பங்காளனாக , வீரதீர சாகச புருஷனாக , திரைவானில் வெற்றிக்குமேல், வெற்றியாகக் குவித்தார் .* அதுவே, அவரை மக்களின் இதயக்கனியாக்கியது .* *வாரிவாரி வழங்கினார் .* உண்மையிலேயே கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் அவருடையது .


  திராவிட இயக்கம் அவரை வளர்த்தது. அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது .அண்ணாவின் உண்மைத் தொண்டனாக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கடைசி வரை அண்ணாவின் கொள்கை வழியே நடக்க முயன்று வந்தார் .


  மதிய உணவு திட்டமும், ஏழைகளுக்கான பல இலவச திட்டங்களும் அவரது ஆட்சியின் தனி சிறப்பான அம்சங்கள்.* கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சியை அவரால் தரமுடிந்தது .* அதுவே ஒரு பெரிய சாதனை .

  அவருடைய தற்காப்பு உணர்வு வியக்கத்தக்கது .* தில்லி ஆட்சியை எதிர்த்துக் கொண்டு நிலை பெறமுடியாது என்பதை அவர் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு தனது வெற்றிகளை பிரதமர்களின் வெற்றிகளோடு இணைத்துக் கொண்டார் . தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகளைக்*குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை .* இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் உண்மையிலேயே அவரால் முடிந்தவரை பாடுபட்டார் .அவை பலனளிக்காமல் போனது எம்.ஜி.ஆரின் குற்றமல்ல .


  தமிழ்நாட்டில் தமிழை அரியாசனத்தில் ஏற்றி வைத்து தமிழ் மொழி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்குமே ஆதரவும் ஊக்கமும் தந்து வந்தார் .


  மூன்றாண்டு காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலனுடன் போராடி வந்தார் .ஆனால் வியக்கத்தக்க மனத்திட்பத்துடன் கடைசி மூச்சுவரை சோராது செயல்பட்டார் . நேருவின் சிலை திறப்பு விழாவில் பிரதமருடன் அவர் காட்சி கொடுத்ததும் பேசியதும் மனதைவிட்டு நீங்குமுன்பே அவர் மூச்சு அடங்கிவிட்டது . தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது .


  சினிமாவிலும், அரசியலிலும் சாதனை படைத்த சரித்திர நாயகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூரூம் தலையங்கம் .

 5. #1274
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,362
  Post Thanks / Like
  மறு வெளியீடுகளிலும் சக்கை போடு போட்ட இணையில்லா வெற்றி காவியம் "ஒளி விளக்கு"... திரும்ப, திரும்ப, மீண்டும், மீண்டும்... திரையிட்டாலும் இப்படி சாதனை வசூல் பிரம்மாண்ட வெற்றியை காண இயலுமா?! என (மற்ற) எல்லோரையும் ஏங்கி தவிக்க வைத்த வெற்றி காவியம்... Thanks...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •