Page 56 of 402 FirstFirst ... 646545556575866106156 ... LastLast
Results 551 to 560 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #551
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #552
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #553
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களில் எம்ஜிஆர் ரசிகர்கள் அதிகம் பார்த்த படம் ஆயிரத்தில் ஒருவன் தானாகத்தான் இருக்கும். அதே போல் 9-7-1965 வெளி வந்த நாளிலிருந்து இடைவெளி இல்லாமல் ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன்.
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் யாவும் அற்புதமாக நடித்திருந்தார். சலிக்க சலிக்க பார்த்த படம்.
    : சென்னை மிட்லண்ட் ஸ்ரீகிருஷ்ணா மேகலா சேலம் ஓரியண்டல் கோவை கர்னாடிக் இலங்கை கொட்டாஞ்சேனை கெயிட்டி 100 நாள் ஓடியது. மறு வெளியீட்டில் சென்னையில் 190 நாள் ஓடியது.
    : மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
    அட்டகாசமான சண்டை காட்சிகள்
    இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
    மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
    எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு
    : படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''

    என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு

  5. #554
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த அகிலமே போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "
    முதல் வெளியீட்டில் என்னால் பார்க்க முடியவில்லை .தலைவர் கட்சி ஆரம்பித்த பின்னர் 1973ல் தான் பார்த்தேன் .அரங்கு நினைவில்லை. 1985ல் ஒருமுறை நெல்லை பாப்புலர் அரங்கில் , குற்றாலம் சுற்றுலா சென்றபோது, அரங்கு நிறைந்த
    மாலை காட்சியில் பலத்த கரகோஷத்துடன் பார்த்து ரசித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. பல அரங்குகளில் பார்த்துள்ளேன் . பிரபாத் , சரஸ்வதி அரங்குகளில் மட்டும் குறைந்த பட்சம் 1973 முதல் 1995 வரை மட்டும் சுமார் 25 வாரங்கள் ஓடியிருக்கும் மறுவெளியீட்டில் 190 நாட்கள் ஓடியது ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே .

    டைட்டில் இசை மிக அருமை . ஆரம்பம் முதல் இறுதி வரையில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் பின்னணி இசை மிக பிரமாதம் . பாடல்கள் அனைத்தும் தேன்சொட்டு .வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் பாராட்டுக்குரியவர் .
    இந்த படத்திற்கு டைட்டில் வைப்பதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரூ.1,000/- தருவதாக சொன்னார் . டைட்டில் வைத்த பின்பு பணத்தை வாங்கிய ஆர்.கே. சண்முகம் அழ ஆரம்பித்துவிட்டார் .விவரம் அறிந்து மக்கள் திலகம் கேட்டதும் தவறிப்போய் ஆயிரத்தில் ஒருவன் என பெயரிட்டேன் . லட்சத்தில் ஒருவன் என பெயரிட்டு இருந்தால் எனக்கு லட்சம் ருபாய் கிடைத்திருக்கும் என்றார் . அதைக் கேட்டு செட்டில் உள்ள அனைவரும் சிரித்தனர் . (ஆர்.கே. சண்முகம் பல மேடைகளில் சொன்னது ).மறக்க முடியாத, கருத்தாழமிக்க, சிந்திக்கக்கூடிய
    பல பன்ச் மற்றும் எதுகை, மோனையுடன் வசனங்கள் எழுதி கைதட்டல்கள் பெற்றார் . சண்டைப்பயிற்சியாளர் ஷியாம்சுந்தரை வெகுவாக பாராட்டலாம் .
    ஆசியாவிலேயே வாள் வீச்சில் சிறந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்று பெயர் வாங்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் அபாரமாகவும், சுறுசுறுப்பாகவும், ரிஸ்க் எடுத்தும் செய்துள்ளார் .வில்லன் நடிகர்கள் நம்பியாரும், மனோகரும் ஈடு கொடுத்து காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர் . நகைச்சுவை மன்னன் நாகேஷ்
    மாதவி, ராமாராவ் கூட்டணி நல்ல கலகலப்பு .

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட்டு மஸ்தான உடலுடன், கம்பீரமாகவும், கொள்ளை அழகுடன் , கச்சிதமான, கவர்ச்சியான உடைகள் அவருக்கு அமைந்தாற்போல் வேறு எந்த நடிகருக்கும் அமையுமா என்பது கேள்விக்குறியே . இன்றும் அரசியல் கூட்டங்களில் அவரது நிற்கும் போஸ் ( காட்சி ) வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு அமைக்கப்படுகிறது .
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பேரழகை படம் முழுவதும் கண்டு ரசித்து கொண்டே இருக்கலாம் .இந்த வெற்றி காவியத்தை டிஜிட்டல் வடிவில் தயாரித்த திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்பில் மீண்டும் பெருத்த நன்றி.
    ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது . நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்த்து மடலை திரு.சொக்கலிங்கம் மேடையில் வாசித்தார் . நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், விவேக், இசை மேதை எம்.எஸ். விஸ்வநாதன், பி.சுசீலா ஆகியோரின் பேச்சு
    மறக்க முடியாதது
    மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி, தங்கமுட்டையிடும் வாத்து . கடைசியாக மகாலட்சுமியில் (அரங்கு புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு ) 2 வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

    ஆயிரத்தில் ஒருவன் வெளியான தினம் 09/07/1965. வெளியாகி 54 ஆண்டுகள் நிறைவு .சமீபத்தில் மதுரை ,ராம்நாட் ஏரியாவிற்கு மறுபடியும் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

    மேகலா அரங்கில் 14/01/1965ல் எங்க வீட்டு பிள்ளை வெளியாகி 176 நாட்கள் (வெள்ளிவிழா கண்டது ) தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 100 நாட்கள் ஓடியது . ஆக மேகலாவில் தொடர்ந்து 40 வாரங்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஓடியுள்ளன .ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 50நாட்கள்
    ஆனதும் போட்டிக்கு கலங்கரை விளக்கம் 28/08/65ல் வெளியாகியது பின்னர்
    10/09/65ல் கன்னித்தாய் (63 நாட்கள் ஆனதும் ) வெளியானது . இதனால் ஆயிரத்தில் ஒருவன் வசூலில் சற்று பாதிப்பு ஏற்பட்டது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.படங்களுக்கு அவரது படங்களே போட்டியாக அமைந்தன என்பது வரலாறு .

  6. #555
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  7. #556
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  8. #557
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  9. #558
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  10. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  11. #559
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அசாதாரண #செயல்

    தங்க நிழல் என்ற புனைப்பெயரில் ஒரு முஸ்லீம் பெரியவர் இருந்தார். தங்குவதற்கு நிழல் கூட இல்லாத வாத்தியார்.

    ராமநாதபுரம் ஏர்வாடிக்கு அருகிலுள்ள கிராமத்தில் திண்ணைப் பள்ளிக்கு ஆசிரியர். அவரின் மாத சம்பளம் ரூ.83/- மட்டுமே. வாங்கும் சம்பளத்தில் சாப்பாட்டுக்கே சிரமம்...

    ஏம்பா ஆண்டவா ! இது உனக்கே அடுக்குமா ? எம்ஜிஆர் பக்தர்களை மட்டும் ஏன் ஏழைகளாய் படைத்தாய்...? உனக்கு ஏன் இந்த பாரபட்சம்...?
    (ஏன் அவங்க வறுமையை எம்ஜிஆர் தீர்ப்பார்ங்கற நம்பிக்கையினால் உன்னோட பொறுப்பை எம்ஜிஆர் கிட்டக் கொடுத்துட்டியா ???)

    இதுக்கெல்லாம் ஒருக்காலும் அசராதவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்.
    ஒரு வேளை உணவிற்குக் கஷ்டப்பட்டாலும், தனது எம்ஜிஆர் பக்தியில் ஒரு துளிகூடக் குறையாதவர்கள் தான் எம்ஜிஆர் பக்தர்கள்...

    அதற்கு இந்த முஸ்லீம் பெரியவரும் விதிவிலக்கல்ல. தனது வறுமையிலும் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் பொன்மனச்செம்மலைப் பற்றி பாடல் புனைந்து அச்சிட்டு இலவசமாக விநியோகிப்பார். தலைவரின் நூறாவது படமான ஒளிவிளக்கு வரை 100 படங்களை வரிசைப்படுத்தி 100 வரிப்பாடலாகப் புனைந்து பொன்மனச்செம்மலிடம் காட்டி, தனக்கு அவர் மீதுள்ள அளவற்ற பக்தியை எடுத்துரைத்து, தனது புலமைக்கு ஒரு நற்சாட்சி மட்டும் கேட்டார்.

    எம்ஜிஆர் படித்துவிட்டு, அவரை ஆரத்தழுவி, பணத்தைத் தனக்காக செலவழிப்பதைக் கண்டித்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்...அத்துடன் "என் புகழை பள்ளிக்குழந்தைகளுக்குச் சொல்லவேண்டாம்...காந்தி, நேரு, அண்ணா, காமராசர் போன்ற பெருந்தலைவர்களின் புகழை சொல்லிக் கொடுங்கள்..." என்றார்.

    அந்த புலவர் முதல் வரியில்... " (சதி) லீலாவதியால் திரையில் பிறவி எடுத்தாய் " என ஆரம்பித்து, " உன் குணத்தால் வையகத்து ஒளிவிளக்கானாய் ..." என்று முடித்திருந்தார்.

    தலைவர் அமெரிக்கா போய் சிறுநீரகம் (லீலாவதியின் சிறுநீரகம்) மாற்றி வந்த பின் அவரை (புலவரை), தனது நினைவாற்றல் குறைந்த நிலையிலும், நினைவில் வைத்து உதவியாளரிடம் கேட்டார்..."நான் அவரைப் பார்த்து பத்து வருஷம் இருக்குமா?

    அதற்கு உதவியாளர், ஏன்? என்றார்.

    "அன்று அவர் எழுதியது பலித்துவிட்டது. லீலாவதியால் தான் இன்று பிறவி எடுத்துள்ளேன். அவரது சொல் பலித்ததற்காக நான் அவருக்கு இன்னமும் ஏதாவது கொடுத்தாகணும் " என்றார் உறுதியாக...

    கண்ணுக்கு முன்னாடி தெரிஞ்சவங்க வந்தாக் கூட கண்டுக்காம போற இந்த காலத்துல, பல வருஷத்துக்கு முன்னாடி ஒருவர் எழுதிய கவிதை வரிகளை, தனக்கு ஞாபக சக்தி குறைவான போதிலும் அவரை நினைவுல வெச்சிருக்கார்னா...இதுக்கு என்ன சொல்ல?

    சாதாரண மனிதன் செய்கிற செயலா இது...???........ Thanks to mr.Ibrahim...

  12. #560
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!.........

    புர*ட்சித்த*லைவ*ர் த*மிழ*க* முத*ல்வ*ராக* இருந்த*போது 1984 செப்ட*ம்ப*ரில் நோய்வாய்ப்ப*ட்டார். பின் அவ*ர் உலகமே அதிச*யிக்கும்
    *வ*கையில் மக்களின் பிரார்த்த*ன*க*ள், மருத்துவ*ர்க*ளின் தீவிர சிகிச்சையாலும் குணமாகி 1985 பிப்ர*வரியில் நாடு திரும்பினார்.

    ஒரு முத*லமைச்ச*ருக்கு சிகிச்சை அளிக்க* ஆகும் செலவு எவ்வ*ள*வு கோடியானாலும் அர*சாங்க*மே செய்யும். இது ம*ர*பு. ஆனால், கொடுத்துச்சிவ*ந்த* க*ர*ங்க*ளுக்கே சொந்த*க்கார*ரான த*லைவ*ரின் மன*ம் இத*ற்கு ஒப்ப*வில்லை. எனவே தன் சொந்த*ப்ப*ணம் மற்றும் அதிமுக சார்பில் பொதுமக்களிட*மும், க*ட்சிக்கார*ர்க*ளிட*மும் சிகிச்சைக்கான நிதியை திர*ட்ட*ச் செய்தார். மளமளவென்று சிலநாட்க*ளிலேயே ரூ.96 லட்ச*மான சிகிச்சைக்கான நிதி சேர்ந்துவிட்ட*து. உட*னே தேவையான நிதி சேர்ந்துவிட்ட*து, இனி யாரும் நிதி வ*ழ*ங்க*வேண்டாம் என்று அறிக்கையும் வெளியிட்டார். பின் 30/06/1985 அன்று அண்ணா திமுக சார்பில் ந*டைபெற்ற அண்ணா ப*வ*ள விழாவின்போது ரூ.96 லட்ச*த்திற்கான காசோலையை நிதிய*மைச்ச*ர் நாவ*ல*ர் நெடுஞ்செழிய*னிட*ம் வ*ழ*ங்கினார். உட*னிருப்ப*வ*ர்க*ள் செய்தி மற்றும் அற*நிலைய*த்துறை அமைச்ச*ர் வீர*ப்ப*ன், அதிமுக பொதுச்செய*லாள*ர் ராக*வான*ந்தம், மின்துறை அமைச்ச*ர் ப*ண்ருட்டி ராமச்ச*ந்திர*ன் ஆகியோர்.

    புர*ட்சித்த*லைவ*ர் முத*ன்முத*லில் ப*தவியேற்ற ஜூன் 30,1977 ஆம் ஆண்டிலிருந்து ச*ரியாக 8 ஆண்டுக*ள் க*ழித்து ஜூன் 30,1985 அன்று ந*ட*ந்த* நிக*ழ்வு இது........... Thanks mr. Sutharsan...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •