Page 193 of 402 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1921
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1922
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks.........

  4. #1923
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (08/11/19)* கோவை டிலைட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .

    தகவல் உதவி ; சத்தியமங்கலம் திரு.சாமுவேல் .

  5. #1924
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இரங்கல் செய்தி .
    -------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மை விசுவாசியும், தீவிர பக்தருமாகிய திரு.அப்துல் கனி (69 வயது ) கடந்த மாதம் 21/10/2019 அன்று* உடல்நல குறைவால்*தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்கிற அதிர்ச்சி கலந்த துயர செய்தி அவருடைய*சகோதரர் திரு.அப்துல் வாஹித் மூலம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன் .இந்த செய்தி மிகவும் தாமதமாகத்தான் எனக்கு தெரிந்தது .

    திரு.அப்துல் கனி, நடிக மன்னன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்கிற அமைப்பில் 1972 முதல் நிர்வாகியாகவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் முன்னணி*பக்தராகவும் விளங்கியவர்.* 1973 முதல் அவருடன் நெருங்கிய நட்பு இருந்தது .பல* ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சில மலர்கள், புத்தகங்கள் எனக்கு வழங்கி இருந்தார் .உலகம் சுற்றும் வாலிபன், திரைப்பட வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றை அப்போது வெளியாகியிருந்த இந்தி, ஆங்கில பட வசூல்களுடன் ஒப்பிட்டு நோட்டிஸ்கள் அடித்து வெளியிட்டு பக்தர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .* தொடர்ந்து,நேற்று இன்று நாளை , உரிமைக்குரல், இதயக்கனி, பல்லாண்டு வாழ்க , நினைத்ததை முடிப்பவன் , நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள் , இன்றுபோல் என்றும் வாழ்க, மீனவ நண்பன் போன்ற* படங்களுக்கும் அதன் வெற்றிகள் , பற்றி பறைசாற்றி வந்தார் .

    திரு.அப்துல் கனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.அருள் புரியட்டும்* அவரை இழந்து வாடும் அவரது மனைவி , மகள்*மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற*அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ..

  6. #1925
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    1964ம் ஆண்டில் சாதனை புரிந்த படங்கள் _ ஒரு அலசல்*--------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1964ம் ஆண்டில் 7 படங்கள் வெளியாகி இருந்தன . அவை 1, வேட்டைக்காரன் .2, என் கடமை .* 3, பணக்கார குடும்பம்*4.தெய்வத்தாய் . 5. தொழிலாளி* 6.படகோட்டி . 4. தாயின் மடியில் .

    1. வேட்டைக்காரன் , சென்னை, சித்ரா, பிராட் வே , மேகலா , மற்றும் சேலம் அரங்கில் 100 நாட்கள் ஓடி, பொங்கல் திருநாளில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற* படமாக திகழ்ந்தது .

    2. என் கடமை வெளியானபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பெருந்தலைவர் .காமராஜரை என் தலைவர் , பேரறிஞர் அண்ணாவை என் வழிகாட்டி* என பேசியதை சிலர் அரசியலாக்கி* படம் , பாடல்கள் தரமாக இருந்தாலும் , கடும் விமர்சனங்கள் எழுப்பி , வெற்றி பெறாமல் செய்தனர் .அனால் இந்த படம் தலைவர் கட்சி ஆரம்பித்த பின்பு1973 லிருந்து 1990 ஆண்டு வரையில்* *ரெகுலர் காட்சிகளிலும்,பகல் காட்சிகளிலும் நூற்றுக்கணக்கான அரங்குகளில் வெளியாகி வெற்றிமுரசு கொட்டி வசூலை குவித்தது .

    3. பணக்கார குடும்பம் - சென்னை சித்ரா , பிராட் வே, மேகலா, மதுரை தேவி,திருச்சி*பேலஸ் , சேலம் விக் டோரியா , கோவை சுவாமி அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது .1964ம் ஆண்டிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட், அதிக வசூல் ஈட்டிய படம் .

    4. தெய்வத்தாய் - சென்னை பிளாசா , கிரவுன் , புவனேஸ்வரி அரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்த சத்யா மூவிஸ் தயாரித்த உன்னத படம் .ஒரு முறை ஆனந்த் அரங்கில் தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது .

    5. தொழிலாளி - சென்னை சித்ரா , பிராட் வே,, மேகலா அரங்குகளில் 50 நாட்களை கடந்து வணிக ரீதியாக வெற்றிகண்ட படம். 1973க்கு பிறகு பல அரங்குகளில் , பகல் காட்சிகளில் வெளியாகி வசூலை ஈட்டியது . இப்போதும்*சென்னை, மதுரை, கோவை* போன்ற பெருநகரங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது . விரைவில் கோவை சண்முகாவில் வெளியாக உள்ளது .

    6. படகோட்டி,- சென்னை பிளாசாவில் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது .*கிரவுனில் 72 நாட்களும், புவனேஸ்வரியில் 79 நாட்களும் ஓடியது .73வது நாளில் வெளியான எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றி இந்த படம் ஓட்டத்திற்கு தடையாக இருந்தது .அதனால் பல அரங்குகளில் 100 நாள் எட்டவில்லை . ஆனால் அ .தி. மு.க. உதயம் ஆன பின்பு* 1973 முதல் 2000 வரையில் தொடர்ந்து தொய்வில்லாமல் நூற்றுக்கணக்கான (பட்டி தொட்டி களில் ) அரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது . தேவி பாரடைஸில் இருமுறை வெளியான படம் இதுவே . 1964 ம்* ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுவரையில் அதிக வசூலை பெற்ற படம் இதுதான் .* கடந்த பல ஆண்டுகளாக அரங்குகளில் வெளியாகாததால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம்* ஆனால் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது . டிஜிட்டல் வடிவில் உருவானால் நல்ல வரவேற்பை பெறும் வகையில் உள்ளது .*

    7.தாயின் மடியில் - கதை அமைப்பில் உள்ள குழப்பம், திரைக்கதை அமைப்பு கோளாறு, சோக காட்சிகள் அதிகம் காரணம், 28 வது நாளில் எங்க வீட்டு பிள்ளை வெளியீடு ஆகியவற்றால் படம் வந்த சுவடு தெரியாமல் , எதிர்பார்த்த வெற்றி பெறாமல் மறைந்தது .

    மாற்று முகாம் நண்பர் பதிவிடும் தவறான செய்திகள் .
    --------------------------------------------------------------------------------------
    தெய்வத்தாய் 100 நாள் பட்டியலில் இடம் பெறவில்லை.* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 7 படங்கள் வெளியாகி இருந்தது . ஆனால் அவர் 3 படங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார் .**
    கை. கொ.தெய்வம் - 100 நாள் பட்டியலில் கோவை கர்னாடிக் -கையால் விளம்பரத்தில் எழுதப்பட்டுள்ளது .

    வெ .ரோஜா - திண்டுக்கல் கணேஷில் 50 நாளில் ரூ.8,10,000/-. வசூல் .இப்போது வெளியாகும் படம் கூட 50 நாளில் இந்த வசூல் பெற வாய்ப்பே இல்லை . அந்நாளில் கட்டணம் மிக குறைவு. இந்த நிலையில் பொய்யான வசூலை பதிவு*செய்து தங்கள் அபிமான நடிகருக்கு பெருமை தேடி தருவதாக நினைத்து சிறுமை சேர்க்கிறார்கள் .

    உண்மையான தகவல்களையே பதிவிடுவதாக சொல்லி, நமது நண்பர்களின் பதிவுகளை குறை சொல்பவர்கள் இனியாவது உண்மை தகவல்களை பதிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம் .* * * * *
    Last edited by puratchi nadigar mgr; 5th November 2019 at 09:56 PM.

  7. #1926
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    🦉எம்.ஜி.ஆர் உடல் நல்ம குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5

    🚦வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    விஷ்யம் தெரிந்து கூடி விட்ட பத்திரிகை
    யாளர்களிடம்அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, "எம்.ஜி.ஆருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி (ஜலதோஷம்) இருந்தது. காய்ச்சல் இருந்தது. சிறிது ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து வருகிறார்.என்று கூறினார்.

    இதற்கிடையில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வந்தது. சட்டசபையில் சித்தன் (இ.காங்கிரஸ்) பேசும்போது, "எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் நெடுஞ்செழியன்,
    "5.10.1984 வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு "ஆஸ்துமா" போன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஓய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் சேர்க்கப்பட்டார்.

    சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்பல்லோ ஆஸ்பத்தி ரியை சேர்ந்த டாக்டர் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகிய டாக்டர்கள் குழுவினர் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து கவனித்து வருகிறார்கள்.

    மறுநாள் முதல் அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கிவிட்டது. இன்று காலையில் முதல் அமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கிறார்.

    மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசீஸ்) நல்ல உதவியை செய்துள்ளது. சிறு நீரகத்தை கிட்னி என்ற உறுப்பில் இந்த டயாலிசீஸ்' இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. வயிற்று குடலில் உள்ள ஜவ்வில்தான் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது." என்று நெடுஞ்செழியன் கூறினார்..

    பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி,"நுரையீரலில் ஒரு வகை திரவம் சேர்ந்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அந்த திரவத்தை "பெரிடோனியல் டயாலி சீஸ்" முறை மூலம் முழுவதுமாக வெளி எடுத்துவிட்டோம்.

    இது போன்றவற்றால் சிறுநீரகத்தில் மிகச்சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே "டயாலிசீஸ்" மூலம் திரவத்தை வெளியேற்றினோம்.

    அவருக்கு இனி சிகிச்சை தேவை இல்லை. எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு தேவை. எனவே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்கவேண்டும். ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பாரே தவிர சிகிச்சைக்காக அல்ல." என்று அவர் கூறினார்..

    இப்படி எம்.ஜி.ஆர். உடல் நிலை தேறி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் 14ந்தேதி அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர்.

    அன்று மாலை டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கை,”
    "13ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச்செல்லும்போது சிரமம் இல்லாமலும், நல்ல உணர்வுடனும் இருந்தார். இரவில் அவரது வலது பக்க கை, கால் அசைவில் பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனே நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உடல் நிலையை ஆராய்ந்தார்.

    தலைப்பகுதியை `எக்ஸ்ரே' படம் பிடித்து பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர் பிரிவதில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது." என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது..

    சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதற்காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க பம்பாயில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

    எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற வெளிநாட்டிற்கோ அல்லது அமெரிக்காவுக்கோ அனுப்புவதாக இருந்தாலோ அதற்கு உதவிகளை செய்வதாக கவர்னருக்கு பிரதமர் இந்திரா காந்தி தகவல் அனுப்பினார்.

    அமைச்சர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தவண்ணம் இருந்தனர்.

    திரை உலக பிரமுகர்கள், நடிகர்_ நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு படை யெடுத்தனர். எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

    கோவில்களில் எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கை சட்டசபையில் தினமும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    ஆஸ்பத்திரி சார்பிலும் மருத்துவ அறிக்கை அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. 16ந்தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திராகாந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

    நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அறைக்கு சென்று 10 நிமிடம் இருந்து எம்.ஜி.ஆரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

    அப்போது அந்த அறையில் எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் மற்றும் டாக்டர்கள் இருந்தனர். பிறகு டாக்டர்களுடன் இந்திரா 15 நிமிடம் பேசி எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந் தார். மொத்தம் 30 நிமிடம் இருந்துவிட்டு இந்திரா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் சந்தித்தபோது நடந்த கேள்வி - பதில் :.

    கேள்வி:- எம்.ஜி.ஆர். உடல் நிலை எப்படி இருக்கிறது?

    பதில்:-அவரை பார்க்கப்போன எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு கொண்டார். நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். "நீங்கள் ஒரு தைரியசாலி. கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றை சமாளித்து இருக்கிறீர்கள்.

    அதுபோல இப்போது மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டுமல் லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் விரைவில் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார்.

    நாங்கள் அவர் இருக்கிற அறைக்கு போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள்.

    கேள்வி:- மேற்கொண்டு சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரா?

    பதில்:-வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வருகிறார்கள். எம்.ஜி.ஆரை பரிசோதித்துவிட்டு, அவரை வெளி நாட்டுக்கு கொண்டுபோகவேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது." என்று இந்திராகாந்தி கூறினார்.

    பின்னர் அமைச்சர் ஹண்டேயையும் இந்திரா டெல்லிக்கு அழைத்துச்சென்றார் -சில சுப்பீரியர் டாக்டர்களிடம் கன்சல்ட் செய்யதான்.

    ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமராவ், கர்நாடக முதல் மந்திரி ஹெக்டே, மத்திய மந்திரிகள் பலர் எம்.ஜி.ஆர். உடல் நிலைபற்றி விசாரித்தபடி இருந்தார்கள். ஜெயலலிதா, மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.

    அக்டோபர் 17ந்தேதி காலையில் எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் பிரீட்மேன் (நியூயார்க் நகரில் புரூக்லீன் என்ற இடத்தில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனை சிறுநீரகப் பிரிவு தலைவர்), டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் (வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர்), டாக்டர் ஸ்ரீபரதராவ் (புருக்லீன் டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரி டயாலிசீஸ் பிரிவு டைரக்டர்), டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் (டெக்சாஸ் நகர மருத்துவ கல்லூரி நரம்பியல் பேராசிரியர்) ஆகியோர் சென்னை வந்தார்கள்.

    அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த அவர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹண்டே வரவேற்று தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தார். காலை 8.20 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அமெரிக்க டாக்டர்கள் வந்து எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர்.

    பின்பு இதுவரை சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்பு அமெரிக்க டாக்டர்களை நிருபர்கள் மீட் பண்ணிய போது,””எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு ஆகியவை உள்ளன. வலதுபுற கை, கால் செயல் இழந்து உள்ளன.

    இங்குள்ள டாக்டர்கள் சிறப்பாக அளித்த சிகிச்சையால் அவரது உயிரை காப்பாற்றி குணம் அடையும் பாதையில் செல்ல வழிவகுத்துள்ளன. மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.”இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.....

    டாக்டர் பிரீட்மேன் கூறும்போது, "எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மாற்று சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று கூறினார். டாக்டர் ஸ்டிரிலிங் மேயர் சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார். மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை பரிசோதனை நடத்திவிட்டு மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள்.

    அமெரிக்க டாக்டர் பிரீட்மேன் அமெரிக்கா புறப்படும் முன்பு விசேஷ பேட்டி அளித்தார். "எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பழைய நிலையை அடைந்து வழக்கமான வாழ்க்கையை தொடர முடியும்.

    அவர் 67 வயதிலும் இளமையுடன் இருக்கிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் பிடிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் அவரால்நடக்கமுடியும்" என்று கூறினார்.

    🎯ஆனால் திடீரென்று எம்.ஜி.ஆரின் மூளையில் ஒரு கட்டி ஏற்ப்படிருப்பதாகவும் அந்த ரத்தக்கட்டியை கரைப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானிய நிபுணர்கள் கானு, நகமோரா ஆகியோர் தனி விமானம் மூலம் 20_ந்தேதி சென்னை வந்தார்கள்.

    காலை 7.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். எம்.ஜி.ஆர். அறைக்குச்சென்று அவருடைய உடல் நிலையை பரிசோதித்தனர். மொத்தம் 2 மணி நேரம் பரிசோதனை நடந்தது. எம்.ஜி.ஆரின் மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்கட்டியை கரைக்க அறுவை சிகிச்சை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதுவும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து போய் பண்ன திட்டமிட்டார்கள்

    அதாவது இன்னும் சில வாரங்கள் கழித்து "பைபாஸ்" முறையில் ரத்த குழாய்களில் ஒட்டு அறுவை சிகிச்சை பெறச்செய்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது பற்றி சிந்திப்பதாகவும் ஜப்பான் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானில் இருந்து சில முக்கியமான மருந்துகளையும் ஜப்பான் டாக்டர்கள் கொண்டு வந்தார்கள். மூளையில் உள்ள வீக்கத்தை குறைக்க அவர்கள் கொண்டு வந்த "கிளிசரால்" என்ற மருந்து எம்.ஜி.ஆர். உடலில் ஏற்றப்பட்டது.

    மேலும் விமானப்பயணத்தை எம்.ஜி.ஆர். உடல் தாங்குவ தற்கான விசேஷ மருந்தும் ஜப்பானில் இருந்து வர வழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் சென்று மீண்டும் வருவதாக கூறிவிட்டு டாக்டர்கள் கானு, நகமோரா ஆகியோர் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிர்ச்சியால் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் மாண்டனர். கோவையைச் சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.

    எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று, பிரார்த்தனை செய்தார். கிறிஸ்தவ ஆலயம், மசூதி மற்றும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமான பேர் பாதயாத்திரை சென்று வழிபாடு நடத்தினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அவருடன் அன்பழகன், துரைமுருகன், அன்பில் தர்மலிங்கம், டி.ஆர்.பாலு, நீலநாராயணன் ஆகியோரும் சென்றனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், டாக்டர்கள் ஆகியோரை கருணாநிதி சந்தித்து எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து விசாரித்தார்.

    நடிகர் சிவாஜிகணேசனும் ஆஸ்பத்திரிக்குச் சென்று விசாரித்தார். இதற்கிடையே எம்.ஜி.ஆரிடம் இருந்த இலாகாக்களை, அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று கவர்னர் குரானா அறிவித்தார்.

    இதற்கிடையே, பிரதமர் இந்திரா காந்தி 31.10.1984 அன்று டெல்லியில் அவருடைய மெய்க்காவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி புதிய பிரதமராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் உடல் நிலையைக் கருதி, இந்திரா காந்தி மரணம் அடைந்தது பற்றி, அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிவிட்டது. விமானப் பயணம் செய்யும் அளவுக்கு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்காக எம்.ஜி. ஆருக்கு ஜப்பானில் அறுவை சிகிச்சை செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது அல்லவா?.

    அதையொட்டி எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் 3ந்தேதி சென்னை வந்தார். எம்.ஜி.ஆரை பரிசோதித்து விட்டு, "எம்.ஜி.ஆரின் மூளையில் இருந்த வீக்கம் முழுவதுமாக நீங்கிவிட்டதால் அவருக்கு ஆபரேஷன் தேவை இல்லை" என்று அறிவித்தார். எனவே, மூளை ஆபரேஷனுக்காக எம்.ஜி.ஆரை ஜப்பானுக்கு கொண்டு செல்லும் யோசனை கைவிடப்பட்டது.

    ஆனாலும், சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந் தன. அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனை சிறுநீரக கோளாறுக்காக, சிகிச்சை அளிப்பதில் உலகப்புகழ் பெற்றதாகும். அந்த ஆஸ்பத்திரியில்தான் எம்.ஜி. ஆருக்கு ஆபரேஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    இதற்காக ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்று அமைக்கப்பட்ட விசேஷ விமானம் தயாரானது. அந்த `போயிங்' ரக விசேஷ விமானம் 4_ந்தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டு படுக்கை வசதி, ரத்த சுத்திகரிப்பு (டயாலிசீஸ்) கருவிகள், ரத்தப்பரி சோதனை கருவி, பிராணவாயு சிலிண்டர்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    விமானம் பறக்கும்போது சிகிச்சை கருவிகள் சரிவர இயங்குகின்றனவா? என்று பரிசோதிக்க இந்த விமானம் 70 நிமிடம் வானத்தில் சென்னை நகரை சுற்றி பறந்தது. பின்னர் தரை இறக்கப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் மந்திரி நரசிம்மராவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், ஜி.பார்த்தசாரதி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தார்கள்.

    ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆரை பார்த்தார்கள். ராஜீவ் காந்தியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்கள். இதையடுத்து *இதே* 5.11.1984 இரவு 9.05 மணிக்கு எம்.ஜி.ஆரை `ஆம்புலன்ஸ்' வேன் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடி ஜன்னல்களின் திரை தொங்கவிடப்பட்டிருந்தது.

    இருபுறமும் போலீஸ் ஜீப்புகள் சென்றன. ஜானகி அம்மாள், டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். இரவு 9.55 மணிக்கு ஆம்பு லன்ஸ் வேன் விமான நிலை யத்தை அடைந்தது. அங்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள் காத்திருந்த னர். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, அவர் மனைவி மீனா அம்மாள் மற்றும் குடும்பத்தினர் நின்று கொண்டு இருந்தனர்.

    விமானத்தின் அருகில் கவர்னர் குரானா, அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்றனர். விமானம் அருகே ஆம்புலன்ஸ் வேன் சென்றதும் எம்.ஜி.ஆர். இருந்த தூக்குப் படுக்கையை (ஸ்டிரெச்சர்) இயந்திர கருவி மூலம் அப்படியே தூக்கி விமானத்துக்குள்ளே வைத்தார்கள். சரியாக இரவு 10.45 மணிக்கு விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.

    எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதல்_அமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் சென்றார்கள். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் விமானம் தரை இறக்கப்பட்டது.

    பின்னர் இந்திய நேரப்படி 6.ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரத்தை அடைந்தது. அமெரிக்க டாக்டர்கள் விமானத்துக்குள் சென்று எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதித்தனர். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி புரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு ஏற்கனவே அவருக்காக தயார் செய்து வைக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியின் 5 வது மாடியில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

    10ந்தேதி எம்.ஜி.ஆரை சாய்வு நாற்காலியில் அமர வைத்தார்கள். 2 மணி நேரம் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்ததாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்தது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.😍............ Thanks.........

  8. #1927
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெற்றால் தான் பிள்ளையா ?
    ___________________
    காமராஜர் அரங்கத்தில் சத்யராஜ் அவர்கள் கூறியது !
    இந்தப் பக்கம் ஒரு டி வி வைப்பா... இந்தப் பக்கம் ஒரு டி வி வைப்பா... ஒரு டி வி யில் உலகிலுள்ள அனைத்து நடிகர்களின் இதை மூன்று முறை சொன்னாா் உணர்ச்சிமயமான காட்சியை போடுங்கப்பா...
    இந்தப் பக்கம் உள்ள டி வி யில் மக்கள் திலகம் குழந்தைக்காக வாதடற உணர்ச்சிகரமான காட்சியை போடுங்கப்பா... அப்பறம் பாருங்கப்பா...என்று சொல்ல அரங்கம் இடிந்து விழந்திடுமோ ...என்ற அச்சத்தை ஏற்படுத்தும் கைதட்டல் ...
    என் கரங்களும் சிவந்தன என சொல்லத்தான் வேணுமோ ?.........

    ........... Thanks.........

  9. #1928
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்..

    தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

    “வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

    இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
    மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

    ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

    1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

    தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

    அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

    இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

    சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

    பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

    செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

    1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

    பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

    கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

    இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

    ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

    இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

    மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

    திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

    இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

    வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

    ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

    காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

    (இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

    இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

    இப்படக் கதை செல்லும்.

    பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

    மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

    சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

    தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

    இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

    அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

    படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

    வாருங்கள்!

    (பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

    நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

    மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

    நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

    வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

    சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

    வீரன்: இல்லை!

    சொக்கன்: எப்படி?

    வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

    சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

    வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

    நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

    வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

    {பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

    இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

    நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

    சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

    நரசப்பன்: அரசே!

    சொக்கன்: போவாயாக.

    (இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

    பொம்மண்ணன்: மன்னா!

    சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

    பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

    சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

    {கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

    இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

    ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

    பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

    திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

    வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

    அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

    ‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

    திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

    வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

    பார்த்தீர்களா! படித்தீர்களா?

    நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

    இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

    இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

    மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

    கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

    கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

    1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

    இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

    1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

    ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

    அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

    1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
    1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

    இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

    இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

    இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

    அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

    இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

    இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

    எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

    இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

    தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

    தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

    அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

    காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

    அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

    “தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

    பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

    முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

    இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

    1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

    நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

    தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
    மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
    கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

    “நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

    கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

    அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்

    வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

    ‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

    கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

    இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

    நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

    தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

    நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

    படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!

    1956 – ஆம் ஆண்டில் புட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

    கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

    1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

    பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.

    1961, 1964 – ஆம் ஆண்டுகிளல் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.

    1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.

    1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.

    1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.

    1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.

    1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்........... Thanks...

  10. #1929

    1956 – ஆம் ஆண்டில் புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

    கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

    1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

    பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.

    1961, 1964 – ஆம் ஆண்டுகளில் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.

    1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.

    1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.

    1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.

    1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.

    1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்........... Thanks...
    Last edited by suharaam63783; 5th November 2019 at 10:35 PM.

  11. #1930
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் வணக்கம்

    நேற்று ஒரு பதிவு பார்த்தேன் அதைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.
    1964 ஆம் ஆண்டில் வெளியான படங்களின்
    வெற்றி குறித்து ஒருவர்
    போட்ட பதிவை இன்னொருவர் எடுத்து
    மிகவும் குஷியாக போட்டிருக்கிறார், ஏற்கெனவே முகநூலில்
    திரிசூலம் படம் 6 கோடி
    ரூபாய் வசூல் செய்ததாகவும், பதினொரு அரங்குகளில் வெள்ளி விழா கண்டதாகவும் ஒரு பத்திரிக்கை பதிவையும் போட்டிருந்தார் , அந்த பதிவுக்கு பதிலாக லோகநாதன் சார் கேட்டிருந்தார் வெறும் 8
    அரங்குகள் வெள்ளி விழா ஓடிய திரிசூலம் படம் எப்படி 11 திரை அரங்குகள் ஆனது ? அதுவும் குறிப்பாக 1965 இல் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய " எங்க வீட்டுப் பிள்ளை" படத்தை விட ஒரு அரங்கிலாவது கூட ஓட்டி முந்தி விட வேண்டும் என்ற வெறியிலே வேலூரில்
    ஒரு அரங்கில் இழுங்கப்பா இழுங்கப்பா என்று தியேட்டர் காரர்களே டயர்ட் ஆகி போகும் அளவுக்கு இழுத்து எப்படியோ இலக்கை அடைந்து விட்டோம் என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்கள் இது
    நடந்தது 1979 இல் நல்லா பார்த்துக்கோங்க ஜனங்களே 1965 படத்தை 12 வருடம் கழித்து முறியடிக்க நினைத்து சில ஜிம்னாஸ்டிக் வேலைகள் செய்து வடிவேலு காமெடி போல அஹ்ஹாஹா பார்றா பார்றா 8 தியேட்டர்ல ஓட்டிட்டோம்ல என்று தனக்குத் தானே மகிழ்ச்சி (?) அடைந்து கொண்டார்கள் ஆனால் பாருங்க இத்தனை வருடம் கழித்து முக நூலில் போடும்போது அப்படியே நைஸாக 8 அரங்கு குட்டி போட்டு 11
    அரங்காகி விட்டது அது
    மட்டுமல்ல அந்த பேப்பர்
    விளம்பரத்தில் கூட வசூல் 2 கோடி என்றுதான் போட்டிருந்தார்கள் ஆனால் அதுவே இப்போது வட்டியும் குட்டியுமாக சேர்ந்து 6
    கோடி ஆகிவிட்டது
    ( ஏம்ப்பா எழுதும் போது
    உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?) லோகநாதன் சார் இது பற்றியும் ஞான ஒளி படம் சம்பந்தமாக ஓடிய
    நாட்கள் குறித்து கேட்ட
    கேள்விக்கும் உத்தம புத்திரன், அரிச்சந்திர மகாராசா விடம் இருந்து
    இது வரை பதில் இல்லை, சரி போகட்டும்
    இப்போ அதே திரிசூலம்
    பட பதிவு போட்டவரின் மற்ற ஒரு பதிவுதான் இந்த 1964 ஆம் வருடத்திய பதிவு அதை எடுத்து இன்னொரு சிங்கம் போட்டு குதூகலம் அடைந்திருக்கிறது
    1964 ஆம் ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பட்டியலில்
    100 நாள் ஓடிய படங்களில் தெய்வத் தாய் படத்தை தூக்கி
    எங்கு போட்டாரோ தெரியவில்லை இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சரி போகட்டும் , எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது
    கர்ணன் படம் மாபெரும்
    தோல்விப் படம் பந்துலுவை மீளவே முடியாத கடன் தொல்லைக்கு ஆளாக்கின படம் என்று
    ஆனால் சிங்கம் திரும்பத் திரும்ப மதுரை தங்கம் அரங்கில் நூறு நாள் ஓடியது, அங்கே ஓடியது
    இங்கே ஓடியது என்று
    கதை அளப்பதை மட்டும்
    விட்ட பாடில்லை கர்ணன் படம் படுதோல்வி அடைந்ததனால் அவசரம் அவசரமாக கால்ஷீட் கொடுத்து இந்த படமாவது ஓடி விடாதா என்ற நப்பாசையில் தயாரித்து குறுகிய கால
    வெளியீடாக வந்ததுதான் இந்த முரடன் முத்து ஆனா பாருங்க இதுவும் சுருண்டு டப்பாவுக்குள்
    போய் குதிரை கீழேயும்
    தள்ளியது பத்தாதுன்னு
    குழியும் பறித்த கதையாக ஆகிவிட்டது
    நொந்து நூலாகி விட்ட
    அந்த மனுஷனை இன்னும் பங்கப்பாடு படுத்தி அய்யன் சார் நோகடித்தது எல்லாம் பழைய வரலாறு ,
    நடிகர் விசு ஒரு பேட்டியின் போது சொல்கிறார் நான் பயங்கர சிவாஜி ரசிகன்
    கர்ணன் படம் ரிலீஸ் சமயத்தில் நாங்கள் கொஞ்ச பேர் அது ஓடும்
    திரை அரங்குக்குப் போய் முதல் நாள் பார்த்த போது முதல் ஷோவுக்கு பயங்கர கூட்டம், எங்களால் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை அப்படியே வேட்டைக்காரன் ஓடும்
    அரங்குக்கு போய் பார்க்கிறோம் கொஞ்சம்
    கூட்டம் குறைவாகத்தான் இருந்தது எங்களுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம் வேட்டைக்காரன் கதை
    முடிந்தது என்று எங்கள்
    மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம் கடைசியா
    செய்தி வருது வேட்டைக்காரனுக்கு ராத்திரியே கூட்டம் கூடியதால் விடியற்காலமே படத்தை தொடங்கி விட்டதும் அடுத்த ஷோவுக்கான கூட்டம்தான் கூட ஆரம்பித்தது என்னும் உண்மை தெரிந்ததும்
    நொந்து போய் விட்டோம்( இது சும்மா டிரெய்லர் தான்)
    வேட்டைக்காரன் படம் வசூலை அள்ளிக் குவித்த கதையை சமீபத்தில் தமிழ் ஒன் இந்தியா இணைய பத்திரிக்கையில் பெரு.
    துளசி வேல் என்பவர் கூட எழுதியிருந்தார்
    அடுத்தது " நவராத்திரி"
    படம் நாலு தியேட்டரில்
    நூறு நாள் ஓடியதாம்
    சரிதான் மறுக்கவில்லை இந்த நாலு தியேட்டரிலும் சிவாஜியின் நூறாவது
    படம் எந்த காரணம் கொண்டும் அவமானப் பட்டு விடக் கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காக நூறு நாள் தேய்ப்பதற்கு என்ன என்ன ஏற்பாடுகள் செய்யப் பட்டது( உள்ளடி வேலைகள்) மற்றபடி விஜய லட்சுமி பிக்சர்ஸ்
    சார்பாக பரிசுப் போட்டி
    என்ற பெயரில் 9 சிவாஜி நடிப்பில் எந்த சிவாஜி நடிப்பு சிறந்தது
    என்னும் போட்டியெல்லாம் வைத்து ( பாதி டிக்கட் வேற கண்டிப்பா இணைக்கணும்) ஏ. பி.
    நாகராஜன் என்னென்ன பாடு பட்டார் என்பதை பின்னாளில் ஒரு சினிமாப் பத்திரிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆக்கிய கதை சிங்கத்துக்கு தெரியுமோ தெரியாதோ
    தெரியல, ஏ. பி. என் அவர்கள் சொன்ன இன்னொரு செய்தி அந்த நடிகரை வைத்து எவ்வளவோ படங்கள் எடுத்தேன் ( நிறைய கலர் படங்கள்) கடைசியில் பெயரை அவர் எடுத்துக் கொண்டு போய் விட்டார் படம் எடுத்த நானோ செலவழித்த காசைக் கூட எடுக்க முடியாமல் நடுத் தெருவில் நின்றதுதான்
    மிச்சம்( எல்லோரும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பேட்டி
    நவரத்தினம் படம் வந்த பிறகு கொடுத்த பேட்டி
    இவ்வளவுக்கும் நவரத்தினம் கொஞ்சம்
    சுணங்கிதான் போனது
    ஆனால் ஏ. பி. என் எவ்வளவு லாபம் சம்பாதித்தார் என்பதை
    சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் பட விழாவின் போது அவர் உறவினர்
    சொன்னது எல்லோருக்கும் தெரியும் அது மட்டுமல்ல நவரத்தினம்
    தோல்விப் படம் என்று
    சிவாஜி ரசிகர்களால்
    விமர்சிக்கப் பட்ட படம்
    ஆனால் இந்த 2019 வரையிலும் அடுத்தடுத்த வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை அள்ளி குவித்துக் கொண்டே இருக்கிறது ஆனால் உங்களால் 4 அரங்கில்
    ஓட்டப் பட்ட நவராத்திரி
    படம் மறு வெளியீடு கண்டதுண்டா? இல்லை அதன் பிறகு எப்பவாவது எந்த விநியோகஸ்தராவது அதை வெளியிட துணிந்ததுண்டா? பேச வந்துட்டார் சத்திய புத்திரன், சமீபத்தில் கூட ஆரூர் தாஸ் சொன்னார் எம். ஜி ஆரின் ஒரு சில படங்கள் தோல்வி அடைந் திருக் கலாம் ஆனால் அதெல்லாம்
    யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற
    கதைதான் எனவே அவரின் எந்தப் படமும்
    தோல்வி லிஸ்டில் எடுக்க முடியாது.
    அடுத்து பச்சை விளக்கு
    1990 களில் ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து " ஜெமினி சினிமா" என்ற
    சினிமா இதழ் வெளி வந்து கொண்டிருந்தது
    அதில் ஒரு சமயம் அது வரை சிவாஜி நடித்து வெளி வந்த படங்களைப் பற்றி சிவாஜியிடம் comment
    சொல்லச் சொன்னார்கள் அந்த வரிசையில் பச்சை விளக்கு படத்தைப் பற்றி சிவாஜி அடித்த கமென்ட் "நல்ல வேளை
    சிவப்பு விளக்கு விழாமல் போனது" அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
    அந்த படத்தை வேல் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்தது பைனான்ஸ் செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் அது மட்டுமல்ல வெலிங்டன் திரை அரங்கத்தை யார்
    லீசுக்கு எடுத்திருந்தார் கள் என்பதும் தெரியும்
    அப்படியிருக்க பச்சை விளக்காம்? போங்கப்பா
    இந்த வரிசையில் ஒரே
    ஒரு படம் மட்டும் கொஞ்சம் கை கொடுத்தது என்றால்
    அது"கை கொடுத்த தெய்வம்" படம்தான்
    காரணம் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் கே. எஸ். கோபால கிருஷ்ணன் சொன்னது " உண்மையிலேயே இந்த
    படம் கை கொடுத்த தெய்வம்தான் காரணம்
    தொடர் தோல்வியினால் துவண்டிருந்த சிவாஜிக்கு அது உண்மையிலேயே கை
    கொடுத்தது
    இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் சிவாஜி ஒத்துக் கொண்டாலும் இந்த அடிப் பொடிகள் ஒத்துக்
    கொள்ள மாட்டார்கள்
    இந்த படம் அங்கே நூறு நாள் ஓடியது இங்கே நூறு நாள் ஓடியது என்று லிஸ்ட் காட்டுவது
    இது எப்படியிருக்கிறது என்றால் ஒரு முறை " உத்தம புத்திரன்" படத்தைப் பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமலஹாசன் ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி விட்டு அது நன்றாக ஓடியதாகவும்
    சொன்னார் , அதன் பிறகு ஒரு நாள் ஒரு
    பத்திரிக்கை பேட்டியில்
    கமல் சொல்கிறார் நான்
    சிவாஜியைப் பார்க்க
    அன்னை இல்லம் சென்றிருந்தேன் அப்போது சிவாஜி சொன்னார் நீ உத்தம புத்திரன் படத்தைப் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதான்
    ஆனால் அது வெற்றிப்
    படமல்ல நூறு நாள் ஓடியது அவ்வளவுதான்
    அது மட்டுமா கண்ணதாசன் குடும்பத்தார் ராசி பிலிம்ஸ் என்ற பெயரில்
    அவன்தான் மனிதன் படத்தை எடுத்து வெளியிட்டார்கள் நகரப்
    பகுதிகளில் ஓரளவு வெற்றி பெற்ற அந்த படம் பி அண்ட் சி என்று
    சொல்லக் கூடிய சிறு குறு நகரங்களில் மண்ணைக் கவ்வியது
    ஆனால் அதுவும் நூறு
    நாள் படம், ஜேயார் மூவீஸ் தயாரிப்பில் 1972 இல் தொடங்கி 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த" மன்னவன்
    வந்தானடி" படமும் நூறு
    நாள் படம்தான் ஆனால் அந்த படத்தைப் பற்றி
    எழுத்தாளர் சுதாங்கன்
    அவர்கள் தினமலர் வாரமலரில் சிவாஜியை
    பற்றி எழுதி வந்த "செலூலாயிட் சோழன்"
    என்ற தொடரில் மன்னவன் வந்தானடி படம் ஒரு தோல்விப் படம் என்று உண்மையை எழுதினார் இது 2016 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் உடனே
    மையத்தில் அடிப் பொடிகளெல்லாம் துள்ளிக் குதித்தார்கள்
    சுதாங்கனை கண்டபடி
    திட்டி பதிவெல்லாம் போட்டார்கள் இவன் எவனுக்கு கையாளோ
    என்று போட்டு மன்னவன் வந்தானடி
    100 வது நாள் விளம்பரத்தையும் போட்டார்கள் இவ்வளவுக்கும் சுதாங்கன் தீவிர சிவாஜி ரசிகர் ஆனால்
    அவர் உண்மையை எழுதினார் அப்போ புரிந்து கொள்ளுங்கள்
    இவர்கள் சொல்லும் நூறாவது நாள் படங்களின் லட்சணங்கள் , நான் நேரடியாகவே கேட்கிறேன் 4 அரங்கில் நூறு நாள் ஓடிய நவராத்திரி படமும் , முரடன் முத்து படமும்
    படகோட்டி ஓடிய 50 நாள்
    வசூலை தொட முடிந்ததா? பதில் சொல்லுங்கள் பார்ப்போம், எங்கள் தலைவருக்கு நூறு நாள் ஓடிதான் தன்னை
    நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை
    விநியோகஸ்தர் களுக்கு நன்றாகத் தெரியும் 98 நாள் ஓடி 100 நாள் ஓடாமல் போன படத்தைக் கூட
    அவர் கண்டு கொள்ளவில்லை
    1964 ஆம் ஆண்டிலேயே
    தலைவர் நான்கு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கத் தொடங்கி விட்டார் ஆனால் 1968 ஆம் ஆண்டு ஏ. வி. எம் நிறுவனம் தயாரித்த
    உயர்ந்த மனிதன் படத்துக்கு சிவாஜிக்கு
    ஒரு லட்சம் சம்பளம் கொடுத்த போது கூட ஒரு 25000 கேட்ட போது
    மறுத்து விட்டார்கள் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிவாஜியின் மார்க்கெட்
    வேல்யு என்ன என்பது
    எங்களுக்குத் தெரியும்
    அடிக்கடி இது வேறு
    ஒரே நாளில் இரண்டு
    படம் வெளியிட்டு சாதனை படைத்தார்
    ஒண்ணு நல்லா தெரிஞ்சு க்கோங்க பண்ணி பல குட்டி போட்டு ஒரு பலனும் இல்ல ஆனால் சிங்கம் ஒரு குட்டி போட்டாலும்
    சிங்கம் சிங்கம்தான்
    அதை மறந்து விடாதீர்கள்
    படகோட்டி முதல் வெளியீட்டில் பிளாசாவில் மட்டும் நூறு நாள் என்று மனத் திருப்தி அடையும் நீங்கள் அடுத்தடுத்த வெளியீடுகளில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டி
    தொட்டியெங்கும் பட்டயைக் கிளப்பிய , கிளப்புகிற வரலாறை
    மறந்தது ஏனோ?
    உங்களால் அந்த நாட்களில் வெற்றிப் படம் என்று சொல்லப் பட்ட நவராத்திரி படம் உட்பட 80 சத விகித படங்கள் குறட்டை விட்டு
    தூங்குவதை மறந்து விடாதீர்கள், இப்போது கூட படகோட்டி படத்தை
    டிஜிட்டல் செய்து வெளியிட பல பேர் செருப்பு தேய நடந்தும்
    விநியோக உரிமையை
    வைத்திருப்பவர் கொடுக்க மறுக்கிறார்
    அதை தெரிந்து கொள்ளுங்கள்

    பின் குறிப்பு: தீபாவளிக்கு வெளியான " நாடோடி மன்னன் படம் 5100 பேர்களால் பார்க்கப்பட்டு ஒரு வார
    வசூலாக 1,95,000 .00 வசூலித்து சரித்திரம் படைத்திருக்கிறது( வழியில் போவோரையும், புடவை, வேட்டி கொடுத்தும் யாரையும்
    அழைக்காமலும் தானாக வசூல் ஆன தொகை இது , இதனை முதலில் முறியடித்து
    சாதித்து விட்டு அப்புறம்
    பேசுங்கள் )
    அப்புறம் இன்னொன்று
    தலைவரை மிக உயர்வாக காட்டி காட்சிகள் வைத்த பிகில் படம் பத்து நாளில் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது

    நன்றி!........... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •