Page 289 of 402 FirstFirst ... 189239279287288289290291299339389 ... LastLast
Results 2,881 to 2,890 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2881
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தை காதல் காட்சிகளில் மிக சிறந்த முறையில் இயக்கிய பெருமை ப .நீலகண்டன்

    அவர்களையும் சேரும் .......

    காதல் மன்னன் என்று ஜெமினி புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் திலகம் அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் அழகாக , நளினமாக , நடனத்துடன் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருப்பார் . இனிமையான பாடல்களும் , படமாக்கப்பட்ட விதமும் , எம்ஜிஆரின் உடை ,
    சிரித்தமுகம் ,மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஒன்றி போனார்கள் .

    இன்று பார்த்தாலும் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் பிரமிக்க வைக்கிறது .

    இயக்குனர் ப.நீ கை வண்ணதில் வந்த சில மக்கள் திலகத்தின் கனிரச பாடல்கள் .


    1. கனவுகளே ... காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு

    2. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து -----------நினைத்ததை முடிப்பவன்

    3. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை

    4. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை

    5. நல்லது கண்ணே .. கனவு - ராமன் தேடிய சீதை

    6. தமிழில் அது ஒரு இனிய கலை --- சங்கே முழங்கு

    7. இரண்டு கண்கள் பேசும் விழியில் - சங்கே முழங்கு

    8. கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்

    9. மாலை நேர தென்றல் என்ன - நீரும் நெருப்பும்
    10.கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும்
    11.எங்கே அவள் என்றே மனம் - குமரிகோட்டம்
    12.நாம் ஒருவரை ஒருவர் - குமரிகோட்டம்
    13.தொட்டு கொள்ள வா. தொடர்ந்து - மாட்டுக்கார வேலன்
    14,நீல நிறம் - வானுக்கும் - என் அண்ணன்
    15.மயங்கும் வயது ......- கணவன்
    16.சிரித்தாள் பதுமை - கண்ணன் என் காதலன்
    17.நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்
    18.மெல்ல போ .மெல்ல போ - காவல்காரன்
    19.என்னருகே நீ இருந்தால் - திருடாதே
    20.பாலாற்றில் தேனாடுது - கொடுத்து வைத்தவள் .


    மேற்கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் வசீகர தோற்றமும் , காதல் பாவனைகளும் அருமை.......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2882
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *🌺🌷💐 உரிமைக்குரல், 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்... ❤💜💙*

    *💚💓💛 ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்... 🍀🌸🌺*

    ⬇⬇⬇⬇⬇⬇

    *உரிமைக்குரல் (திரைப்படம்)*
    *இயக்கம் - ஸ்ரீதர்*
    *தயாரிப்பு - கண்ணைய்யா சித்ரயுகா*
    *இசைசை - எம். எஸ்.விஸ்வநாதன்*
    *நடிப்பு - எம். ஜி. ஆர், லதா*
    *வெளியீடு - நவம்பர் 7, 1974*
    *நீளம் - 4751 மீட்டர்*

    *MGR_Vs_Latha*

    *♥♥♥ தங்கமே தோற்றுப் போகும் மேனி அழகராம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், இந்தப் பாடலின் இறுதியில் கன்னியர் கூட்டத்தை வீழ்த்தி வழக்கம் போல் வெற்றி பெறுவார்... 🌸💐🌺🌷*......... Thanks.........

  4. #2883
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்
    ������������������������������

    M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர்.

    எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.

    எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    ‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.

    அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.

    படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து,

    ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’
    என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.

    எம்.ஜி.ஆர். உடனே,

    ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.

    பின்னர், நம்பியாரைப் பார்த்து,

    ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

    ‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.

    தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு,

    ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.

    ‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

    ‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’

    என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.

    தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து

    ‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’
    என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து,

    ‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.

    அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து,

    ‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு,

    ‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.

    நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.

    பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.

    ‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா.

    இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.

    அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...

    ‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’

    ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

    எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள்
    (மதுரையில் புகழ்பெற்ற RM அப்பாவுசெட்டியார் நகைக்கடையில் செய்யப்பட்டது) எடுத்துச் செல்லப்பட்டது.

    விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!

    நன்றி:இந்து தமிழ்............ Thanks.........

  5. #2884
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2885
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஒரு #சாமானியனின் #பார்வையில் #எம்ஜிஆரின் #நடிப்பு

    எனது நண்பர்களுடன் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. அன்று கண்ட காட்சிகள் பலவும் நினைவில் அப்படியே நீடிக்கின்றன.

    அன்றெல்லாம் நாடோடி மன்னன் வெளியாவதென்பது ஒரு திருவிழா போல. வருடாந்தரத் திருவிழா. பலரும் பத்துப்பதினைந்து தடவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அரங்கில் கூட்டம் நெரிபடும். படம் முழுக்க ரசிகர்களின் எதிர்வினை இருக்கும். வசனங்கள் வருவதற்கு முன்னரே அவற்றுக்கான கைத்தட்டல்கள் தொடங்கிவிடும். பாட்டுக்குரிய சந்தர்ப்பம் வருவதற்குள்ளே அரங்கு பாடத்தொடங்கிவிடும்.

    மீண்டும் நாடோடி மன்னன் படத்தைப்பார்த்தது 1980ல், பட்டப்படிப்பு படிக்கையில். அப்போது நான் மலையாளப்படங்களின் ரசிகனாகிவிட்டிருந்தேன். படம் பிடிக்கவில்லை. கேலிசெய்தபடி பார்த்தது நினைவிருக்கிறது. இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட பிரதி என போட்டிருந்தனர். சரி, போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பினோம். அரங்கில் நூறுபார்வையாளர்கள். பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.

    படம் தொடங்கும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வேடிக்கைபார்க்கும் மனநிலைதான். ஆனால் பல ஆச்சரியங்கள் இருந்தன. மூன்றரை மணிநேரம் ஓடியபடம் கொஞ்சம் கூட சலிப்பேற்படுத்தவில்லை. தொடர்ந்து பார்க்கவைத்தது படத்தின் சரளமான, விரைவான திரைக்கதை. எம்.என்.ராஜம்- எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் தவிர எங்குமே தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற மெலோடிராமா இல்லை என்பது படத்தை ரசிக்கவைத்த முக்கியமான அம்சம்.

    இம்முறை, சினிமாவுக்குள் வந்துவிட்டபின் அறிந்தவற்றுடன் பார்க்கையில் உணர்ந்த சில விஷயங்களை குறிப்புட்டுச் சொல்லவேண்டும். சினிமா என்னும் விசேஷமான காட்சிக் கலைக்குரிய தனிநடிப்பை அறிந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவருடைய இந்தத்திறன் தமிழில் மதிப்பிடப்படவே இல்லை. அவர் ‘நடிக்கத்தெரியாதவர்’ என்றே திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவருகிறது. அவருடைய ரசிகர்களுக்குக்கூட அவர் நடிகர் என்னும் எண்ணம் இல்லை.

    இப்படத்தில் எம்ஜிஆர், எம்.ஜி.சக்ரபாணி, பானுமதி மூவரும்தான் மிக இயல்பாக நடித்திருந்தனர். பிறரும் இயக்குநரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு நடிக்கவைக்கப்பட்டிருந்தமையால் உறுத்தவில்லை. ஆனால் அப்போதுகூட பிறருடைய நாடகத்தனமான நடிப்புக்கு நடுவே இம்மூவரும் தனித்துத் தெரிந்தனர்.

    சினிமாவுக்குத்தேவை ‘நடிப்பு’ [acting] அல்ல ‘நடப்பு’ [behaving] தான் என்பது மிகத்தெளிவாக எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. அவருடைய அந்த மூக்குறிஞ்சும் ஸ்டைல் செயற்கைதான், ஸ்டைல் எதுவானாலும் செயற்கையே, ஆனால் அதையே அளந்துதான் செய்திருக்கிறார். மிக இயல்பான சிரிப்பு. அச்சுமொழி வசனத்தைக்கூட இயல்பாகவே சொல்கிறார். அவை வசனமென்றே தெரியாதபடி. உணர்ச்சிவசப்படுகிறார், உணர்ச்சிகளைக் ’காட்ட’வில்லை காதல்காட்சியில் காமிரா இருக்கும் உணர்வே இல்லாமல் அக்காட்சிக்குள் இருக்கிறார்.

    எம்.ஜி.ஆரின் தலைமுறையில் சினிமாவை அவரளவுக்கு எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குப்படுகிறது. நாடகபாணி நடிப்பு சினிமா பார்க்கும் அனுபவத்தை பெரிய வதையாக ஆக்கக்கூடியது. இன்றுகூட சினிமா நடிகர்களிடமிருந்து நடிப்பை இல்லாமலாக்க ரத்தம் சிந்துகிறார்கள் இயக்குநர்கள். #எம்ஜிஆர் #என்னும் #நடிகரை #நம் #விமர்சகர்கள் #மறுமதிப்பீடு #செய்யவேண்டும்.

    ஓர் இயக்குநராக காட்சிகளை ஒருங்கமைத்திருக்கும் விதமும், தொடர்ந்து எல்லா படச்சட்டங்களிலும் சிக்கலான காட்சியசைவுகள் ஊடும்பாவுமாக இயல்பாக அசைவமைக்கப்பட்டிருக்கும் விதமும், தொலைதூரப் பின்னணியில்கூட இயல்பான நடிப்பும், சண்டைக்காட்சிகளில் எல்லா சட்டகங்களும் கொப்பளித்துக்கொண்டே இருப்பதும் எம்.ஜி.ஆர் அவருடைய படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு மட்டுமே நிகரானவர் என்பதைக் காட்டுகின்றன.

    அனேகமாக எல்லா துணை நடிகர்களிடமும் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் மிகச்சரியான நீளத்தில் அமைத்திருக்கிறார். பெரும்பாலானவற்றை மிகக்குறைவான வசனங்களுடம் பெரும்பாலும் காட்சிவழியாகவே உணர்த்தியிருக்கிறார். உதாரணம் எம்.என்.நம்பியார் தன்னைப்பற்றி கண்ணாடியில் பார்த்து சொல்லிக்கொள்வதும், அதே கண்ணாடியில் எம்ஜிஆரின் படம் தெரிவதும்.

    நான் இப்படி ஒரு திரையனுபவமாக இந்தப்படம் இருக்கும் என நினைக்கவேயில்லை. இது தழுவல்படம்தான். அலக்ஸாண்டர் டூமாவின் மேன் இன் த அயர்ன் மாஸ்க் வெவ்வேறு வடிவில் உலக வணிகசினிமாவில் வந்தபடியே இருந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களை நகல்செய்தே பெரும்பாலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனை, உடையலங்காரம் எல்லாமே ஹாலிவுட் பாணி. நம்மூர் வரலாற்றுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு பொழுதுபோக்கு மிகைபுனைவு, அவ்வளவுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு வணிகரீதியான எல்லா நுட்பங்களையும் உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.

    உதாரணமாக இடைவேளைக்குப்பின் படம் ஒரு தீவுக்குச் சென்றுவிடுகிறது. இன்னொரு படமாகவே ஆகிவிடுகிறது. மிகநீளமான இந்தப்படம் முதல்பகுதியின் களத்திற்குள்ளேயே இருந்திருந்தால் அரண்மனைச்சதியை மட்டுமே காட்டிச் சலிப்பூட்டியிருக்கும் என வணிகத்திரைக்கதையை அறிந்தவர்கள் சொல்லமுடியும். மேன் இன் தி அயன் மாஸ்க் திரைவடிவங்களில் பலவற்றில் அந்தச் சலிப்பு உண்டு. உண்மையில் மூலநாவலிலேயே அந்தச்சலிப்பு உண்டு, த்ரீ மஸ்கிட்டீர்ஸ் போல சுவாரசியமான நாவல் அல்ல அது.

    காட்சிகளைச் சுருக்கமாகவே அமைப்பது, தேவையற்ற குளோஸப்களை வைக்காமலிருப்பது, வெவ்வேறு காமிராக்கோணங்கள் வழியாக எப்போதும் காட்சியின் பிரம்மாண்டத்தை நினைவூட்டியபடியே இருப்பது [பல காட்சிகளில் பார்வையாளன் பொருட்களுக்கு இப்பாலிருந்து பார்க்கிறான். நிகழ்வுகள் ஆடம்பரப்பொருட்களினூடாக ஒழுகிச்செல்கின்றன] என ஒரு வணிகப்பட இயக்குநராக ஏறத்தாழ எல்லா நுட்பங்களையும் எம்ஜிஆர் அறிந்திருக்கிறார். அனைத்துக்கும் மேலாக இந்த சினிமாவில் அவர் அழகாக இருக்கிறார். அவருடைய சிரிப்பில் வெளிப்படும் அந்தச் சிறுவன் உற்சாகமானவன். அவர் போரிடுகிறார், எவரையும் வெட்டுவதே இல்லை. ஏன் அவர் அவ்வளவு விரும்பப்பட்டார் என்பதைக் காட்டுகிறது இந்தப்படம்.

    உண்மையில் தமிழ் சினிமாவில் நாம் இன்று வெறுக்கும் பல விஷயங்கள் மேலும் பத்தாண்டுகளுக்குப்பின் உருவாகி வந்தவை என நினைக்கிறேன். மிகையான நாடகத்தன நடிப்பு, செயற்கையான வசன உச்சரிப்பு, கண்களை உறுத்தும் காமிராக்கோணங்கள் போன்றவை. இந்தப்படத்தில் காமிரா இருப்பதே தெரியவில்லை. தனியாகக் கவனித்தால் சீரான நிதானமான காமிரா நகர்வை உணரமுடிகிறது. இன்றைய சினிமாக்களை என்னால் பலசமயம் பார்க்கவே முடிவதில்லை. ஒரு ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கி சுழன்றபடி கீழே நிகழ்வதைப் பார்ப்பதுபோலிருக்கிறது இன்றைய காமிரா ஓட்டமும் வெட்டிவெட்டிச் செல்லும் படத்தொகுப்பும்.

    வீட்டுக்குத்திரும்பும்போது மீண்டும் மீண்டும் வியப்புடன் பேசிக்கொண்டே வந்தேன். மூன்றரை மணிநேரம் ஒருநிமிடம்கூட சலிக்காமல் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். மிகப்பெரும்பாலான சமீபகாலப் படங்களில் நான் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் நன்றாகத் தூங்கிவிடுவேன். திரும்பவரும்போது அருண்மொழியிடம் சுருக்கமாகக் கதையைக் கேட்டுத்தெரிந்துகொள்வேன்.

    வணிகசினிமா என்பது கேளிக்கை. ஆனால் அது சமூகத்தின் அரசியல் விழைவுகள், சமூகமாற்றம் சார்ந்த கனவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும். ஏனென்றால் அது பார்வையாளனை கவர்ந்து உள்ளே அமரவைக்கவேண்டும். இப்படத்தில் ஜனநாயகம், பொதுவுடைமை சார்ந்த ஆரம்ப பாடங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதம் கவனத்திற்குரியது. அன்று தமிழகத்தில் பலபகுதிகளில் ஜனநாயகம் வந்தபின்னரும் மன்னராட்சியும் ஜமீன்தாராட்சியும் மறைமுகமாக நீடித்தது.அன்று படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னராட்சியில் பிறந்தவர்கள். புரட்சி பற்றிப் பேசுகிறது படம், கூடவே அது வன்முறையற்ற புரட்சி என்று சொல்கிறது. இப்படி என்னென்ன கருத்துருக்களை, காட்சிக்குறியீடுகளை இது பயன்படுத்தியிருக்கிறது என எவரேனும் விரிவாக ஆராயலாம்.

    கேளிக்கை வடிவங்கள் எப்போதும் வெளியே இருந்து வரும் கேளிக்கைவடிவங்கள் உள்ளூர் வடிவங்களுடன் கலந்து, ரசிகர்களின் விருப்பங்களுக்கும் மனநிலைக்கும் ஏற்ப நுட்பமாக மாற்றிக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருபவை. வணிகசினிமா என்ற கலைவடிவம் ஹாலிவுட் சினிமாவுக்கும் உள்ளூர் இசைநாடகங்களுக்கும் நடுவே திரண்டுவந்த ஒன்று. அது மெல்லமெல்ல உருவாகிவந்த விதத்தை ஆராயும் எவரும் நாடோடி மன்னன் ஒரு பெரும் திருப்புமுனை, ஒரு சாதனை என்றே மதிப்பிடுவார்கள் என நினைக்கிறேன்............ Thanks FB., Friends...💐

  7. #2886
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    5.04.2020 இன்று தலைவரின் வரலாற்று சுவடுகளில் நாம் நிறைய பார்க்கலாம்
    என நினைக்கிறேன்.
    எம்ஜிஆர் செய்த உதவிகள் நடிகராகவும்
    முதல்வராகவும்
    தெரிந்தும் தெரியாமலும்
    கணக்கில் அடங்காது.
    1.இலங்கை அதிபர் கேப்டன் பிரபாகரன்
    சொந்த செலவில்
    4 கோடி ரூபாய் இலங்கை மக்களுக்காக
    இரண்டு சிக்காக கொடுத்தார்
    முதல்வராக இருந்த போது பதிலுக்கு
    ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆசைப்பட்டு கேட்டு
    வாங்கினார் இது போதும் என்றார்.
    2.முதல்ஆனதும் கவிஞர் கண்ணதாசனுக்கு
    ஆஸ்தான கவிஞர்
    அரசவையில் வழங்கி
    இறக்கும்வரை மாதம்
    ரூ.1000.00 வழங்க உத்தரவிட்டார்.
    3.இதேபோல் கவிஞர் வாலிக்கும் பின்னாநளில் மாதம்
    ரூபாய் 3000.00 வழங்கினார்....... Thanks...

  8. #2887
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    4.தியாகி கக்கனுக்கு
    நோய்வாய் பட்டு
    ஆஸ்பத்திரியில இருக்கும் போதுஉதவிகள்செய்தார்.குடும்பத்திற்கு மாதம்
    500.00 ரூபாய் வழங்க உத்தரவு.
    5.சின்னப்பா தேவருக்கு
    படவிஷயத்தில் அதிக கவனம் அதிக லாபம்
    கிடைத்தல்
    6.பட்டுக்கோட்டையார்
    குடும்பத்திற்கும்
    மகனுங்கு வேலைவாய்ப்பு.
    7.வி.கே.ராமசாமிக்கு
    பண உதவி
    கஷ்ட நேரத்தில்........ Thanks...

  9. #2888
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    8.நாகேஷ் பிறந்தநாள்
    அன்று மோதிரம் வழங்கினார் வெளிநாட்டில் ஷூட்டிங்
    இருந்த போது.
    10.அப்போது நடிக சங்கத்தலைவராக இருந்த மேஜர் சுந்தர்ராஜனுக்கும் சங்க
    கட்டடநிதிக்கு பண உதவி செய்தார்.
    9.மா.பொ.சி க்கு 83 வது
    பிறந்தநாள் அன்று 83000.00 வழங்கினார்
    11.இசை சக்கரவர்த்தி
    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அதிக பண உதவி
    குறிப்பாக உ.சு.வாலிபன் படத்திற்கு இரண்டு சாக்கு நிறைய பணம்
    12.இயக்குநர் ஸ்ரீதருக்கு
    படவிஷயத்தில் எதிர்பாராத லாபம்........... Thanks...

  10. #2889
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    13.கிருபானந்தர் கேட்டுகொண்டபடி
    கோவில் கும்பாபிஷேகத்திற்காக
    முதலில் blank செக் கொடுத்தார்.பிறகு
    வாரியார் பிடிவாதத்தில்
    ரூபாய் 10000.00 வழங்கினார்.
    15.நடிகர் ரஜினிக்கு தான் கட்டிய
    ராகவேந்தர் மண்டபத்தின் பிரச்சனை தீர்த்து வைத்தல் மற்றும்
    அவர் திருமண தடையை தகர்த்தார்
    14.துணை நடிகர் குண்டுமணிக்கு 5 பெண்கள் திருமணத்திற்காக
    100 பவுன் வழங்கியது.
    அப்போது பவுன் மிகவும்
    கம்மி. இருந்தாலும் மனம் வரணுமே.16.தலைவர் அண்ணன்
    எம்ஜிசக்கரபாணியின்
    சடலத்தில் உதவி வெட்டியானுக்கு ரூபாய்
    10000.00 வழங்கினார் 17.ஏலத்தில் இருந்த வீட்டை மீட்டுக்கொடுத்தார் தலைவர் எம்கே.டி என்.எஸ்.கே நாகேஷ்
    குமுதினி நடிகை அடங்கும்......... Thanks...

  11. #2890
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவர்

    ‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர்.

    சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.

    என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர். எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே?
    என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?

    சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.

    ‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’

    ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல்
    கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’

    விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

    வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கலைஞரிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை
    நிராகரிக்கப்பட்டது.

    அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக்கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.

    எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.

    காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.

    ‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’

    எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது
    அந்தச் செய்தி.

    ‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

    செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.

    எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின்
    தொடக்கவிழா
    தொடக்கவிழா ஜெகஜ்ஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.

    கலைஞர் கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம். இந்நிலையில் எம்.ஜி.ஆரிடம் இருந்து திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது.

    ‘படம் நிறுத்தப்படுகிறது.’

    வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே
    ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.

    முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.

    சத்துணவுத் திட்டம் என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கிக் கைகூப்பிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்தபோது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர்மீது சந்தேகத்தின் நிழல்கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற மந்திர வார்த்தையின் பலம்.

    எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன்.வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் அவர்.

    நன்றி: வாத்யார்............... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •