Page 255 of 402 FirstFirst ... 155205245253254255256257265305355 ... LastLast
Results 2,541 to 2,550 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2541
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கண்டு வார இதழ் -29/01/20
    ------------------------------------------------
    எங்கே போவது ?

    எம்.ஜி.ஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது .* தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த அவருக்கு ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த விருப்பம் .* ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி,*சொல்கிறேன், என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார் .* ஒருமுறை சிவாஜி, எம்.ஜி.ஆர்.பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு காமராஜரை வழியனுப்பும் பொது மீண்டும் அழைப்பு விடுத்தார்* எம்.ஜி.ஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல்*ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது* என்றில்லை .* உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன் .அறுசுவை உணவும், மீன், இறைச்சியும் ,அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.* நான் மக்கள் ஊழியக்காரன் .* ரெண்டு இட்லி, தயிர் சோறுதான் எனக்கு சரிப்படும் .* உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டா, திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும் .* அதுக்கு நான் எங்கே போவது ? என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.* தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர்.*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2542
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -29/01/20
    ------------------------------------------
    ஆர்.சி.சம்பத்* --மாயக்கலைஞன் எம்.ஜி.ஆர். நூலில் இருந்து*

    தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி தொடங்கிய படம் "பரமபிதா",எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடித்தார் .* "டிசூசா " என்பவர் சென்னை லயோலா கல்லூரி முதல்வர். கண்டிப்பு மிக்கவர் .* பிறகு இவர் போப்பாண்டவருக்கு கீழுள்ள*பன்னிரண்டு கார்டினல்\களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் .* அவர் ரோம் நகருக்கு புறப்பட போகும் நேரத்தில் இருதய டாக்டர் பி.எம்.ரெக்ஸ் , அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து வந்தார்.*

    பேச்சு வாக்கில், பரமபிதா படத்தை பற்றி பேசும்போது , அதன் கதையை பற்றி டிசூசா கேட்டார் .* ஒருவன் பாதிரியார் ஆனபிறகு அவனது காதலி அவனை தேடி வருகிறாள்.* அவனை மனம் சஞ்சல படவைக்கிறாள் என்று போகும் கதை .

    அதை கேட்ட டிசூசா* பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது .* நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான் , அவன் அப்படியான மன நிலைக்கு ஆளாக கூடாது .* அப்படிப்பட்டவன் பாதிரியாராக வரக்கூடாது , வர முடியாது, என்றார் .* அதைக் கேட்ட எம்.ஜி.ஆர். இரண்டாயிரம் அடி எடுத்திருந்த "பரமபிதா"படத்தைக் கைவிட்டார் .

  4. #2543
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயம்...

    நான் முன்பதிவு செய்துவிட்டேன். நீங்கள்???

    http://igmmumbai.spmcil.com/Interfac....aspx?sell=159

    "எங்கள் தங்கத்தின்" நாணயம் தங்கத்திலும் வெளிவரவேண்டும். அதற்கு நமது கழக அரசு ஆவன செய்யவேண்டும்.

    மேலும் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயம் வருவதற்கு [ பொது மக்களுக்கு கிடைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்த உலக எம். ஜி.ஆர் பேரவை ஒருங்கிணைப்பாளர், சென்னை, அனைத்து தலைவர் அமைப்புகளுக்கும் நன்றி.

    மேலும் இந்த நாணயங்களை பொது வெளியில் அதாவது மக்கள் மத்தியில் புழக்கத்தில் வருவதற்கும் திரு. முருகு பத்மநாபன், திரு. துரை கருணா .....போன்றோர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.������............. Thanks mr.SB.,

  5. #2544
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயங்கள் வருகை... ரூபாய் 100, மற்றும் 5 வருகிறது......... நாமனைவரும் முந்துவோம் பதிவு செய்ய...

  6. #2545
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி. “புரட்சி தலைவர்” (புரட்சிகரத் தலைவர்) என்று அன்போடு அழைக்கப்பட்ட ராமச்சந்திரன், இலங்கையின் கண்டியில் எம்.கோபாலகிருஷ்ண மேனன் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு 17.01.1917 அன்று பிறந்தார். அவர் வி.என். ஜானகி. 1940 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் அறிமுகமான பிறகு, தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மிகவும் வெற்றிகரமாக பணியாற்றினார். அவர் பெராரிக்னர் அண்ணாவுடன் 1952 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டார், அதன்பிறகு அவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். 1967 ஆம் ஆண்டில் பரங்கிமலை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் 1972 ஆம் ஆண்டில் அண்ணா திராவிட முனேத்ரா காசகம் (ஏ.டி.எம்.கே) கட்சியைத் தொடங்கி 1977 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஆனார். தேர்தலில் தோல்வியடையாத மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். 24.12.1987 அன்று. டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழக மாநிலத்தின் மிகச் சிறந்த, கவர்ந்திழுக்கும் மற்றும் பிரபலமான முதலமைச்சர்களில் ஒருவராக இருந்தார். நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட மாதிரி திட்டங்களாக மாறியுள்ள பல புதுமையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நினைவுகூரப்படுகிறார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்ட “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்தான உணவு திட்டம்” மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் பாராட்டப்பட்டது, மேலும் இது நாடு முழுவதும் பிரதியெடுக்க உத்தரவிடப்பட்டது. டாக்டர் எம்.ஜி. கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழக அரசு கண்ட விரைவான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ராமச்சந்திரன் அடித்தளம் அமைத்தார். அவர் தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களை நிறுவினார். ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார். இந்திய அரசு டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மிக உயர்ந்த சிவில் க honor ரவத்துடன், பாரத் ரத்னா தனது இணையற்ற பொது சேவைக்காக. டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஒரு உத்வேகம் தரும் நபராகத் தொடர்கிறார், அவர் தனது பெருந்தன்மை, தாராளம், கட்டளைத் தலைமை மற்றும் மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடுவதற்கான உறுதியுடன் எப்போதும் நினைவுகூரப்படுகிறார். அவர் இறந்தபோது, ​​செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளின் நலனுக்காக அவர் தனது செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார். டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கைக் கதை அர்ப்பணிப்பான சேவையின் மூலம் அதிகமான பொது நலனுக்காக பாடுபட மில்லியன் கணக்கானவர்களைத் தூண்டுகிறது.������......... Thanks.........

  7. #2546
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை - ராம் DTS.,புரட்சித்தலைவரின் பிரமாண்ட இணையில்லா தயாரித்து அளித்த புரட்சி படைப்பு "அடிமைப்பெண் " 24.01.2020 வெள்ளிமுதல் தினசரி 3காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் வேங்கைமலையான் காத்த அடிமைப்பெண் நன்றி ...மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம்......... Thanks.........

  8. #2547
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் காலத்தில் வந்த படங்கள், பாடல்கள் இன்றைக்கு உள்ளதா? இப்போது படமா எடுக்கிறார்கள், பாடல்களா எழுதுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் படத்துடன் தற்கால படங்களை ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

    சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    இன்றையதினம் நம்மையெல்லாம் ஆளாக்கிய எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா. இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன்கூட உயர்ந்த நிலைக்கு உருவாக்குவதற்கு காரணமாக, அடித்தளமாக விளங்கிய ஒப்பற்றத் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவிளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

    கடந்த காலத்திலே மிட்டா, மிராசுதார், தொழிலதிபர்கள் தான் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றி, அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக எம்.ஜி.ஆர் சாதாரண தொண்டன்கூட அமைச்சராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்ற ஒரு நிலையை உருவாக்கிச் சென்றார்.

    அதனாலேதான் நான் உட்பட, மேடையிலே வீற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியச் சேர்மன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அத்தனைபேரும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் இருந்த காரணத்தினாலே நமக்கு இந்த பதவி கிடைத்திருக்கின்றது. சாதாரண மனிதனையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கி அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட ஒரே மனிதர் எம்.ஜி.ஆர்.

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரரும், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் என்று தான் பாடிய பாடலுக்கு தானே இலக்கணமானவர் எம்.ஜி.ஆர் . அற்புதமான பாடலைப் பாடி அவரே அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 1917-ஆம் ஆண்டு பிறந்து, இளம் வயதிலேயே கல்வியை தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் தன்னை இணைத்துக் கொண்டு சிறு வயதில் கடுமையான பசியில் வாட்டப்பட்டு, கடினமான வாழ்க்கை வாழ்ந்த தலைவர் நம்முடைய எம்.ஜி.ஆர் .

    ஆகவே தான் அவர் ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இன்றைக்கு எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன, எந்தத் திரைப்படமாவது உயிரோட்டமுள்ள திரைப்படமாக இருக்கிறதா? இல்லை. ஆனால், அப்பொழுது அண்ணா எம்.ஜி.ஆரைப் பார்த்து, """"நீ முகம் காட்டினால் 30 இலட்சம் வாக்குகள் நிச்சயம்"" என்று சொன்னார்கள். அந்தளவிற்கு மக்கள் சக்தி படைத்த தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு திமுகவில் அவரை விலக்கியபொழுது அப்பொழுது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அதனை அஇஅதிமுகவாக உருவாக்கினார். ஆகவே, அன்று முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், அண்ணா பெயரிலே இந்த இயக்கத்திற்கு பெயர் சூட்டினார்.

    அண்ணா உருவத்தை நம்முடைய கழகக் கொடியிலே பொறித்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கு அதிமுக என்று சொன்னால் அண்ணா நினைவில் வருகின்ற அளவிற்கு அண்ணா மிகப்பெரிய மரியாதை, புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் தான் உண்டு.

    அதேபோல, எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படங்கள் ஊருக்கு உழைப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, தாய்ச்சொல்லைத் தட்டாதே, அன்னமிட்ட கை, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என அருமையான தலைப்புள்ள படங்கள். இன்றைக்கு வரக்கூடிய படங்கள் ஏதாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னென்னவோ தலைப்புள்ள படங்கள் வருகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கின்றபொழுது நாட்டு மக்களுக்கு தேசியப் பற்றை உருவாக்க வேண்டும், நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், ஆக்கபூர்வமான கருத்தை திரைப்படத்தின் மூலமாக விளக்குவார்.

    பாடல்கள் மூலமாக விளக்குவார். அப்படிப்பட்ட உன்னதமான தலைவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள். ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" ""நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி"" ""சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"" ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" இப்படி பல கருத்துள்ள அற்புதமான பாடல்களை அவர் படங்களிலே பாடியுள்ள பாடல்கள் அவர் இந்த மண்ணிலே இருந்து மறைந்தாலும் அவர் பாடிய பாடல் இன்றைக்கும் உயிரோட்டம் உள்ள பாடல்களாக, அறிவுபூர்வமான பாடல்களாக, தேசப்பற்றுள்ள பாடல்களாக, இளம் சமுதாயத்தை வளர்க்கின்ற பாடல்களாக, அழிவில்லாத பாடல்களாக இருந்து கொண்டிருக்கும் அற்புதங்களை படைத்த தலைவர் எம்.ஜி.ஆர்.

    ""புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழைகள் நமக்காக"" இந்தப் பாடல் மூலமாக. சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மகான்களை நினைவு கூறுகிறார். மகான்கள் இந்த நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாமனிதர்களுடைய புகழைப் பரப்புவதற்காக, அவர்கள் வழியிலே நடக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பாடலை தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக நாட்டுக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர் .

    ""எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே"" எப்படிப்பட்ட தத்துவப் பாடல். ஆகவே, நாம் எதிர்காலத்தில் எப்படியிருக்க வேண்டும், பெற்றோர்கள் எப்படி வாழவேண்டும், எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அன்றைய காலகட்டத்திலே நமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கும் தான் தலைவர் இருக்கிறார்கள். படத்தைப் பார்த்தாலே பையன் கெட்டுப் போய் விடுவான், பையனை அந்தப் பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்ற படமாக இப்பொழுது வருகிறது.

    அந்தக் காலத்தில் இருக்கும் திரைப்படமும், இன்றைக்கு இருக்கின்ற திரைப்படமும் எப்படி இருக்கின்றது என்று நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ""நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே"" "" இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி"" ""உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புதுமுறையில் உண்டாக்கும் கைகளே"" என்ற பாடல் மூலம் தொழிலாளியின் பெருமையையும் அவர்கள் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல ""ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்"" என்ற பாடல் மூலம் தனது மதச்சார்பின்மையை வலியுறுத்தியிருக்கிறார்.

    தன் வாழ்நாள் முழுவதும் தன் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய ஒவ்வொரு பாடலும் தத்துவப் பாடல். இன்றைக்கு அவர் பிறந்தநாள் விழாவிலே இதையெல்லாம் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இதை நான் இங்கு தெரிவிக்கின்றேன். அதேபோல ""நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்"" என்றும் ""தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கருத்தான பல தொழில் பயில்வோம் ஊரில் கஞ்சியில்லை என்ற சொல்லினை போக்குவோம்"" இவ்வளவு அருமையான பாடல்கள் மூலமாக இன்றைக்கு ஒரு வழிகாட்டியாக, தேசப்பற்றுள்ளவராக, இந்த நாட்டின் மீது, தமிழக மக்கள் மீது அன்பு கொண்டவராக, நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரே ஒரு மனிதர் எம்.ஜி.ஆர். "

    "அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் நம்மிடம் இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே"" இந்தத் தமிழகமும் நமதே. ஆகவே, எம்.ஜி.ஆர் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த மாபெரும் ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு, சிறப்போடு நாம் இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்”.......... Thanks.........

  9. #2548
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  10. #2549
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. சைதை துரைசாமி அவர்களுடன் சந்திப்பு..
    =========================================
    அண்ணன் திரு. சைதையார் அவர்களை சென்னையில் கடந்த செப்டெம்பர் , 2019 மாதம் அவர் அலுவலகத்தில் சந்தித்தேன்.

    என்னுடன் அருமை நண்பர் திரு. செல்வக்குமார் , பேராசிரியர் அவர்களும் வந்திருந்தார்.

    அண்ணன் சைதையார் அவர்களை மக்கள் திலகம் அரசாட்சி நடந்தபோது ஒரே ஒருமுறை சந்தித்தேன்.,

    கடந்த 21.10.1987 அன்று அண்ணன் ஜேப்பியாருடன் ஒரே காரில் வந்து அமைச்சர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் தி நகர் வீட்டில் வந்து இறங்கினேன்.அன்று மாலை ஐந்து மணி இருக்கும். சிறு தூறல். அண்ணன் சைதையார் அப்போது அங்கு நின்றார். அண்ணன் ஜேப்பியார் இறங்கியதும் கைகொடுத்து தனியாக இருவரும் பேசினர். நான் அப்போது அண்ணன் சைதையார் அவர்களிடம் கை கொடுத்து "வணக்கம்" மட்டுமே சொன்னேன். கருப்பு நிறம் , கட்டையான உருவம், தலை நிறைய முடி, அரை கை வெள்ளை சட்டை, அதிமுக கரைபோட்ட வேஷ்டி.,இந்த உருவம்தான் அன்றைய அண்ணன் திரு. சைதையார் அவர்களுடன் முதல் சந்திப்பு..
    ( அன்று பார்த்த அண்ணன் சைதையார் அவர்களை
    32 வருடம் கழித்துதான் சந்திக்கறேன்)

    அண்ணன் திரு.சைதையார் அவர்களை 1972 ஆம் ஆண்டு முதலே நன்றாக தெரியும் செய்தி தாள்களின் மூலம். காரணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்த புதிதில் அவர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது செய்தியாக வந்தது. அப்போது அண்ணன் அவர்களை "சைதாப்பேட்டை சா. துரைசாமி" என்றே பதிவுகள் படித்துள்ளேன். ஆகவே அந்த கால கட்டம் எனக்கு வயத வெறும் ஒன்பதுதான்.

    1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று திமுகவில் இருந்து நீக்கம் செய்த பின் அடுத்த மாதம் நவம்பர் மாதம் அப்போதைய கவர்னர் சுகாதியாவிடம் அப்போது எம்ஜிஆர் அவர்கள் , கருணாநிதிக்கு எதிராக ஊழல் புகார் கொடுக்க பேரணி ஒன்றை ஏற்ப்பாடு செய்தார்.

    எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் அன்று பேரணியில் கலந்துகொண்ட தொண்டர்கள், பொதுமக்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டார்கள். சென்னையே அப்படியே ஸ்தம்பித்தது. காரணம் அன்று கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரே நாள் சுமார் 10 லட்சம் பேர்கள்...

    அதே நாளில் மறுநாள் பேப்பரில்தான் எல்லோரையம் குறிப்பிட்டு சைதை பகுதி கழக செயல்வீரர் சா. துரைசாமியும் கலந்து கொண்டார் என்று செய்தி படித்தேன் எனது ஒன்பதாவது வயதில்;...

    என் மாமா கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பார். அப்போது தினத்தந்தி பத்திரிக்கையில் படிப்பதுண்டு. பின்னாளில்..

    ஒருமுறை மக்கள் திலகம் அவர்களை கருணாநிதி அவருக்கு "பைத்தியம்" என்றே விமர்சித்து , "எம்ஜிஆருக்கு எலுமிச்சம் பழம் கொடுத்து தலை தேய்த்து குளித்தால் பைத்தியம் தெளியும்" என கருணாநிதி நய்யாண்டி செய்திருந்தார்.

    அண்ணன் திரு.சைதையார் கருணாநிதியை மேடையில் வைத்து அவருக்குதான் பைத்தியம் பிடித்துள்ளது என்ற சரியான அர்த்தத்தில் எலுமிச்சம் மாலையை மேடையில் போட்டு கருணாநிதியை மேடையிலே கலங்கடித்தவர்தான் அன்றைய அண்ணன் சைதை துரைசாமி அவர்கள்.

    அன்றைய முதல்வர் கருணாநிதியால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் கற்பித்த கருணாநிதியை நேரடியாக மேடையில் போட்டு வாங்கிய பெருமை பெற்ற ஆண் மகனாக அன்று வலம் வந்தார் அண்ணன் திரு.சைதையார் அவர்கள்.

    1983 ல் அமைச்சர் திரு. காளிமுத்து மற்றும் விருதாசலம் குஞ்சிதபாதம், எம்ஜிஆர் மன்ற தலைவர் அண்ணன் வேங்கட வேணு, நகர செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூலம் அண்ணன் ஜேப்பியாரின் அறிமுகம் எனது கல்லூரி காலத்தில் கிடைத்தது.

    அதன் பின் சென்னை அதிகம் வர நேர்ந்தது.

    காலம் ஓடியது.... 1984 தேர்தல் களத்தில்
    அண்ணன் திரு.சைதையார் அவர்களுக்கு மக்கள் திலகம் சீட் சைதை தொகுதியில் ஒதுக்கினார்.வெற்றியும் அடைந்தார்.

    1984 ஆம் ஆண்டு நான் ரொம்ப வறுமையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது "குமுதம்" வார இதழில் அண்ணன் திரு.சைதையார் பற்றிய செய்தி படித்தேன். அதில் மாணவ - மாணவர்களுக்கு தனது அலுவலகத்தில் டைப்பிங் இலவசமாக செய்து தருகிறார் என படித்தேன். ஆனால் சந்தித்தது இல்லை. அந்த கால கட்டங்களில் அதிமுக தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் மக்கள் திலகத்துடன் ஜெ.டிசி பிரபாகரன், லியாகத் அலிகான், வளர்மதி ,ஜேப்பியார், சைதை துரைசாமி என்று ஒரு கூட்டமே வரும்..

    பலமுறை அப்போது அங்கு 1983 -84 கால கட்டங்களில் அப்போது அண்ணன் சைதையார் அவர்களை மக்கள் திலகம் பக்கத்திலேயே பார்த்துள்ளேன்.

    1984 ஆம் ஆண்டு ஜனவரியில் எங்கள் விருத்தாசலம் கலைகல்லூரிக்கு அமைச்சர் திரு. எஸ்டி சோமசுந்தரம் அவர்களை பேச அழைத்து
    பேச அழைத்து வந்தேன். அடுத்த சில மாதங்களில் செல்வி ஜெயலலிதா அவர்களை கட்சிக்கு முக்கியத்துவம் தருவதை எதிர்த்து சோமசுந்தரம் எதிர் கொடி பிடித்தார். மக்கள் திலகம் அவர்களுக்கு சோம சுந்தரத்தை கட்சியில் விட்டு நீக்க சென்னை சத்யா ஸ்டுடியோவில் பெரியவர் திரு வள்ளிமுத்து தலைமையில் பொதுக்குழு கூடியது.

    அந்த நாள் நான் சென்னை சத்யா ஸ்டுடியோ வாசல்படியில் அன்று அண்ணன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழமணியுடன் பேசிக்கொண்டு நின்று இருந்தேன். அப்போது அண்ணன் சைதை துரைசாமி, ஜேப்பியார், திருப்பூர் மணிமாறன் மற்றும் பலர் ஸ்டுடியோ உள்ளே சென்றனர்.

    திரு எஸ் டிஎஸ் அவர்களை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்தபின் வெளியே நின்ற எஸ் டிஎஸ் ஆதவரவளர்கள் “எஸ் டி எஸ்” வாழ்க என ஒரு கூட்டம் கிளம்பியது. அப்போது...

    திடீர் என ஒருகும்பல் அந்த கோஷம் போட்ட்டவர்களை ஒரு கூட்டம் அடித்து துவைத்தது . பலபேர் ரதத காயங்களுடன் ஆளை விட்டால் போதும் என்று ஓடியது .. அதை பார்த்து தூரத்தில் இருந்த நான் கைகொட்டி சிரித்தேன் .நல்ல காலம் நான் பேண்ட் போட்டு இருந்தேன் . இல்லையெனில் எஸ் டி எஸ் ஆதரவாளர் என்று என்னையும் துவைத்து இருப்பார்கள் .

    1987 ல் புரட்சித்தலைவர் காலத்தில்– சென்னை சைதாப்பேட்டையில் தேரடி தெருவில் அமைச்சர் திருமிகு. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கு அண்ணன் திரு. சைதையார் அவர்களை அன்று கடைசீயாக மேடையில் பார்த்தேன்.

    2016 ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இறந்ததும் திருமதி. சசிகலா நடராஜன் அவர்களை பார்த்து ஆறுதல் கூற போயஸ் தோட்டம் சென்றார் அண்ணன் சைதையார்

    அப்போது மந்திரிகள், நிர்வாகிகள் எல்லாம்.."நீங்கள்தான் இனி பொறுப்பு ஏற்க்கவேண்டும்" என்று கை கூப்பி கெஞ்சினர்.

    அப்போது அண்ணன் சைதையார் மட்டும் முறையான விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கம்தான் என் மனதில் அப்படியே பதிந்து , புதைந்து கிடக்கிறது.

    " புரட்சித்தலைவர் அவர்கள் கருணாநிதியின் அராஜக அரசியலை ஒழிக்கத்தான் அதிமுக இயக்கம் கண்டார்கள். அவர்கள் இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதே மாதிரி அம்மாவும் கடந்த காலத்தில் கருணாநிதியை ஆட்சியில் அமர முடியாமல் முடமாக்கினார். அப்படி இனிமேல் கருணாநிதி ஆட்சி வராமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஆட்சி ஆள வேண்டும்" என்று அழகாக எடுத்து சொன்னார்.(இந்த நேரத்தில் கருணாநிதி உயிருடன் இருந்தார். கண்டிப்பாக தானே மடக்க முடியாத ஒரு நபரின் பேட்டியை பார்த்து அவரும் ஆடியிருப்பார்)

    (அந்த வீடியோ இன்றும் முகநூலில் அவ்வப்போது வரும்.. பார்த்து பார்த்து அண்ணனின் பேச்சை ரசிப்பேன்)

    காரணம் என் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன உண்மை தொண்டர்தான் அண்ணன் சைதையார் .புரட்சித்தலைவரின் அடிமட்ட தொண்டன் என்பதை அழகாக நிரூபித்து சொன்ன அந்த தருணம் .. அந்த இடத்தில யாரும் அப்படி சொல்லவே இல்லை. இதுதான் அண்ணன் சைதையாரின் "ஹைலைட்" விளக்கம்.

    அண்ணன் திரு. சைதையாரிடம் கண்ட ஒரே அதிசயம் என்ன தெரியுமா?ஆனானப்பட்ட கருணாநிதியாலேயே வளைக்க முடியாத இரும்பு மனிதன்தான் அண்ணன் சைதையார்.,

    கண்ணதாசன் கருணாநிதியை பற்றி இப்படிதான் அளந்து சொன்னார். காரணம் கூடவே இருந்தவர் அல்லவே?

    "கருணாநிதி பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்”

    ---மேற்கண்டவாறு கண்ணதாசன் சொன்ன அப்படிப்பட்ட கருணாநிதியால் எல்லோரையும் வளைத்தவர் என பெயர் வாங்கியவர். அண்ணன் சைதையாரை மட்டும் இறக்கும் வரை வளைக்கமுடியாமல் கருணாநிதி காலாவதி ஆகிப்போனார். மக்கல்திலகத்தின் உண்மை தொண்டரை அசைக்க கூட முடியவில்லை – அதுவும் சென்னை நகரில் இருந்துகொண்டே..!
    அண்ணன் சைதையாரிடம் போனிலும், நேரிலும் பேசியபோது இதைதான் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

    அண்ணனிடம் கடந்த செப்டம்பரில் சந்திந்த நாள் அன்று 1984 மே 10 ஆம் நாள் புரட்சித்தலைவர் என்னிடம் அளித்த அதிமுக உறுப்பினர் அட்டை, அவர் அளித்த கிளை செயலாளர் பதவியின் நோட்டீஸ், கல்லூரி காலத்தில் நான் மாணவர் அணியில் நான் கட்சிக்கு அளித்த ரசீது, 1975 ல் இதயக்கனி படப்பிடிப்பில் அண்ணன் விருத்தாசலம் குஞ்சிதபாதம் புரட்சித்தலவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் , 1984 ல் செல்வி. ஜெயலலிதா கொள்கை பரப்புசெயலாளர் அவர்களுக்கு நான் அனுப்பிய விண்ணப்பத்தின் அஞ்சல் ரசீது ...ஆகிய அனைத்தும் அண்ணன் சைதையாரிடம் காண்பித்தேன்.

    இன்றுவரை எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துள்ளேன்.

    கடந்த வருடம் அண்ணன் சைதையார் பேசிய youtube ஒன்று பார்த்தேன். அதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரடி பதில் சொல்லி உள்ளார். அதற்கெல்லாம் மனதில் எந்த அப்பழுக்கும் இல்லாத மக்கள் திலகத்தின் தொண்டனால் மட்டுமே அது சாத்தியம் என்பதை அறிந்தேன். சந்தோசம்.
    அந்த பதிவில் தான் நடத்தும் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச கல்விதான் அளிப்பதாக கூறி உள்ளார்.

    பல கல்லூரிகளில் வசூலிப்பதை போல அதில் பாதி வசூலித்தால் மாதம் தனக்கு 120 கோடி ரூபாய் சம்பாதிப்பேன். அதை எல்லாம் தூர வைத்துதான், பணத்தை சேர்க்காமல் மாணவர்களின் நலனுக்கு இலவசமாக படிப்பு வசதிகள் செய்து தருவதாக அண்ணன் கூறினார்.

    இதை பார்த்துத்தான் சென்னை மேயர் தேர்தலில் அண்ணன் சுலபமாக ஜெயித்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன். மக்கள் அவர் பக்கம் அப்படியே சாய்ந்து விட்டனர் என்றே கூறலாம். அண்ணனின் அருமையான பதிவுகள் எல்லாம் எனக்கு பிடிக்கும்.

    இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரமில்லை

    என் வாழ்நாளில் இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியல்வாதிகளின் பின்னால் அலையமாட்டேன்.

    எனக்கு உதவி என்று கேட்க சென்றால் ஒன்று மக்கள் திலகம் இருந்த ராமாவரம் தோட்டம் வீட்டில் சென்று கேட்பேன். இல்லை என்றால் அண்ணன் சைதையார் அவர்களிடம் கேட்பேன்.

    அந்த உதவிகள் அவர்கள் எனக்கு செய்வதாக இருந்தாலும் நானே உழைத்து சாப்பிடும் உதவிதான் கேட்பேன். யாரையும் அண்டி பிழைக்கும் அவல நிலை உதவிக்கு அங்கு செல்லமாட்டேன்.

    இந்த கட்டுரை அண்ணண் சைதையாரின் மனித நேயத்துக்கும் , நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவரின் வாழ்ககை இன்று நகர்கிறது. மக்கள் திலகத்தின் உண்மை தொண்டனாக இன்று தமிழகத்தில் அவரை தவிர நேர்மையான மனிதர்களில் ஒருவராக இருப்பதால்

    இன்று முதல் அவருக்கு "மக்கள் திலகத்தின் மறுபக்கம் " என்று பட்டம் அளித்து அவரை என்றும் வாழ்த்தும் ...

    மக்கள் திலகத்தின் உண்மை அடிமட்ட தொண்டன்
    அப்துல் சலாம் , குவைத் .

  11. #2550
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளி முதல் (24/01/2020) மதுரை ராம் அரங்கில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமை பெண் " தினசரி 3 காட்சிகள்* பவனி வருகிறது .* மதுரையில் மீண்டும் வேங்கையன் வெற்றி விஜயம் .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •