Page 16 of 402 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவில் எத்தனையோ செல்வந்தர் உண்டு ......பிரபலங்கள் உண்டு... இந்தியாவுக்கு ஒரு நெருக்கடி வந்த போது முதலில் இன்றைய மதிப்பு படி பலகோடி ரூபாய்கள் .......... அளித்தது பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் .........

    இது மட்டுமா?! இந்தியாவில் எம். ஜி .ஆர்., செய்த சாதனையை உலகளவில் எவராலும் சாதிக்க முடியாது ..........

    இதோ சில...

    தமிழில் இந்திய தேசிய விருது பெற்றது எம் .ஜி .ஆரின்., மலைகள்ளன் ...

    ஒரு பிரதமர் தொடங்கிய ஒரே ரசிகர்கள் மன்றம், எம் ஜி ஆர் மன்றம் ...அந்தமானில் லால்பகதூர்சாஸ்த்திரி தொடங்கி வைத்தார்

    தென்இந்தியாவில் முதல் இந்திய பாரத் விருது பெற்றவர் எம் ஜி ஆர் ...

    முதல் முதலாக நாடாண்ட இந்திய நடிகர் எம் ஜி ஆர் ., ஏன்?! உலகிலேயே எம்.ஜி.ஆர்., மட்டுமே...

    ஐக்கிய நாடுகள் சபை (United Nations)அங்கிகரித்த ஒரே மாநில திட்டம் ,ஒரே இந்திய மாநில முதல்வர் எம் .ஜி. ஆர்., சத்துணவுக்காக எனும் சத்தான சத்துணவு மாபெரும் திட்டம்...

    இந்தியாவில் சாரணர் விருது பெற்ற முதல் முதல்வர் எம் ஜி ஆர் ...

    இந்தியாவிலே களம் காணமல் படுத்து கொண்டே ஜெயித்த ஒரே உலகளாவின முதல்வர் எம் ஜி ஆர்...

    இந்தியாவிலே ஒரு விமான படை விமானத்தை ஆஸ்பத்திரி ஆக்கி அதை பலநாள் சோதித்து அமெரிக்கா வரை எம் ஜி ஆரை கொண்டு சென்று சிகிட்சை பெற வைத்தது இந்தியாவிலே ஒரே முதல்வர் எம் ஜி ஆர் ...

    தன் மருத்துவ செலவை திருப்பி அரசுக்கே திருப்பி கொடுத்த ஒரே முதல்வர் இந்தியாவிலே எம் .ஜி .ஆர் .,ஒருவரே ...

    வெளி கண்டத்தில் இருந்து நாமினேஷன் செய்து தேர்தலில் போட்டி இட்டு தன் கட்சியையும் தன்னையும் ஆட்சி கட்டில் ஏற்றிய ஒரே முதல்வர் இந்தியாவிலே மட்டுமல்ல... உலகளவில் எம் .ஜி .ஆர்., ஒருவரே என்றால் அது மிகையாகாது...

    இந்தியாவிலே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , பிரதமர், இவர்கள் மூவரும் ஒரே நேரம் தலைநகரை விட்டு வெளி செல்லகூடாது ......இது மரபு எம் ஜி ஆருக்கு இறுதி மரியாதை செய்ய இந்த மரபுகளை மீறி மூவரும் வந்து மரியாதை செய்தது எம்ஜிஆர் ஒருவருக்கே ...

    இந்தியா செங்கோட்டையில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிட்டு இந்தியா முழுவதும் விடுமுறை விடபட்டது மாநிலங்கள் அத்தனையும் இதையே கடைபிடித்தது எம் ஜி ஆர் ஒரு வருக்கே ...

    காஷ்மீர் முதல்வர் முதல் கேரளா முதல்வர் வரை அனைவருவரும் மரியாதை செய்த ஒரே முதல்வர் எம் ஜி ஆர் ...

    இந்தியாவின் அத்தனை பட்டங்களும் பெற்ற ஒரே இந்தியன் எம் .ஜி .ஆர் ., பாரத்ரத்னா, பாரத் ,பத்மஸ்ரீ எம் ஜி ஆர் தபால் தலை, எம் ஜி ஆர் நாணயம் ,எம் ஜி ஆர் சிலை பாராளுமன்றத்தில் ,எம் ஜி ஆர் ரயில் நிலையம், பேருந்து நிலையம், என எம் ஜி ஆர் பெற்ற பெருமைகளை எந்த இந்தியானாலும் பெற முடியாது ...�� �� ��

    மாவீரன் எம் ஜி ஆர் புகழை எவனாலும் , எவராலும் நெருங்க முடியாது .........

    வாழ்க எம் .ஜி. ஆர் ., புகழ்........... Thanks wa.,
    Last edited by suharaam63783; 19th June 2019 at 10:35 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இறவா புகழ் கொண்ட இறைவன் எம்ஜிஆர் அவர்களை இதயத்தில் நிறுத்தி பூஜித்து வரும் பக்தை , மங்கையர் குல அரசி ..... பொன்மனத் தலைவரின் புகழ் பரப்பாளர்..ஒளிவிளக்கு எம்ஜிஆர் குடும்ப பொருப்பாளர் , திருமதி. எஸ். பாணுரேகா சகோதரி அவர்கள் நாளை 19:06:2019கொண்டாடும் பிறந்தநாள் விழாவிற்கு "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" (பெங்களூர்) சார்பில் ...., புரட்சித்தலைவரின் நிலைத்தப் புகழை காக்க...பாட... நீடித்த ஆயுளோடு பல்லாண்டு காலம் வாழ "இறைவன் எம்ஜிஆர் அவர்களை வணங்குகிறோம்.
    வாழ்த்துவது....
    எம்ஜிஆரின் காலடி நிழல்
    கானா க. பழனி
    எம்ஜிஆர் பித்தன்
    அ. அ. கலீல்பாட்சா
    சம்பங்கி GSR
    மு. தமிழ்நேசன்
    க. ராஜசேகர்
    பிரகாஷ் @ முருகன்
    ஆர். லோகநாதன்
    என். பாஸ்கரன்
    சார்லஸ் மூர்த்தி
    மற்றும்......
    அறக்கட்டளை நிர்வாகிகள் ��ளுடன் ��. . ......... Thanks wa.,

  4. #153
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம். ஜி .ஆர் .,இவ்வளவு அதிக புகழ் அடைய அவரது தெய்வீக அழகும் காரணம் ..........

    மலையாள நடிகர் ப்ரேம் நஸீர் தான் முதன் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி விவரிக்கிறார்..... ஒரு நாள் திருவனந்தபுரம் மெறிலாண்ட் வ்டுடியோவில் மிக பரபரப்பாக செயல்பட்டது நான் விவரம் கேட்க இன்று ராஜராஜன் படத்தில் நடிக்க எம் ஜி ஆர் வருவதாக கூற எனக்கு ஒரே மகிழ்ச்சி எம் ஜி ஆர் அன்றைய சூப்பர் ஸ்டார் எல்லோரும் வரவேற்க்க வரிசையாக நிற்க்கிறோம் ஒரு கார் வர அதில் டோர் திறந்து ஒரு கட்ஷூ அணிந்த கால் தெரிய வெள்ளை வேஷ்ட்டி இளம் மஞ்சள் ஜிப்பா அதன் கை முழங்கை வரை சுருட்டி விட்டிருக்க சுருண்ட தலைநிறைய முடியுடன் தங்க நிறத்தில் ஒரு மலையே வருவதை போல் உணர்ந்தேன் ஒரு மனிதன் இப்படி ஜொலிக்க முடியுமா என்று ஆண் ஆன நானே வியந்து போனேன்

    நடிகர் ரஜினி காந்து முதன்முதலாக எம் ஜி ஆரை சந்தித்தை இப்படி விவரிக்கிறார்
    நான் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் போது ஒரு நாள் தரை துடைத்து கொண்டிருந்த ஆயா வேகமாக அதை போட்டு விட்டு ஓட என்ன என்று நான் விசாரிக்க எம் ஜி ஆர் வருகிறார் என கூறி ஓட நானும் பின்தொடர்ந்தேன் வாசலில் ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க ஒரு மனிதர் இறங்குகிறார் எலுமிச்சையும் ஆப்பிளும் கலந்த நிறம் சூரியனை போல் பிரகாசிக்கும் அழகோடு நடந்து வருகிறார் சூரியன் போல் பிரகாசிக்கும் இவருக்கு சந்திரன் என பெயரிட்டுள்ளார்களே என எண்ணினேன் அவர் ஒரு தெய்வ பிறவி

    சரோஜா தேவி எம் ஜி ஆரை முதன்முதலாக சந்தித்ததை இப்படி விவரிக்கிறார்
    நான் துணை நடிகையாக கன்னட படம் ஒன்றில் நடித்து கொண்டிருந்த போது திடீர் என்று ஒரே பரபரப்பு நான் என்ன வென்று பார்க்க ஆயிரம் சூரியன் ஒன்றாக வந்தது போல் ஒரே ஒளியுடன் தங்க நிறத்தில் ஒருவர் நடந்து வர எல்லோரும் வணங்க நானும் வணங்க அவர் யார் என்ற வினாவ அவர் தான் எம் ஜி ஆர் என கூற வியந்தேன் பின் அவரே என்னை முதன்முதலாக கதாநாயகி ஆக்கினார் அன்று மலைக்க வைத்த எம் ஜி ஆர் அழகு இன்றும் நிலைக்கிறது

    ஆம் எம் ஜி ஆரின் தெய்வீக அழகு நிறம் இயற்க்கை படைத்த சிறப்பு

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்........... Thanks wa.,

  5. #154
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    குணச்சித்திர* ந*டிகையும், எம்ஜிஆர் நாட*க *மன்ற உறுப்பின*ருமான ஜி.ச*குந்த*லா த*யாரிப்பில் ஏ.பி.நாக*ராஜ*ன் இய*க்க*த்தில் ந*வ*ர*த்தினம் ப*ட*த்தை அடுத்து மக்கள் திலகம் ந*டிக்க ஒப்ப*ந்த*மான ப*ட*ம் "கேப்ட*ன் ராஜா". மக்கள் திலகத்தின் நேர*மின்மை கார*ணமாக போட்டோ ஷூட் நிக*ழ்வுட*ன் ப*ட*ம் கை விட*ப்பட்ட*து. இத*ற்கும் பின்னாளில் ச*த்திய*ராஜ் ந*டித்த* "ஏர் போர்ட்" ப*ட*த்திற்கும் ச*ம்ப*ந்த*மில்லை.

    ஜி.ச*குந்த*லா மக்கள் திலகத்தின் ஜோடியாக மந்திரிகுமாரி ப*ட*த்தில் ந*டித்துள்ளார்.

    இத*ய*வீணையில் எம்ஜிஆரின் அம்மாவாக*வும், நான் ஏன் பிற*ந்தேன் ப*ட*த்தில் அக்காவாக*வும் ந*டித்துள்ளார். நாடோடி மன்ன*னில் ச*ந்திர*பாபுவின் ஜோடியாக* ந*டித்தார். மேலும் 1972ல் எம்ஜிஆர், மஞ்சுளா ந*டிக்கும் "வெள்ளிக்கிழ*மை" ப*ட*த்தை த*யாரித்த*வ*ரும் இவ*ரே. இப்ப*ட*மும் போட்டோ ஷூட் நிக*ழ்ச்சிக்குப்பின் "நெருங்கி நெருங்கி ப*ழ*கும்போது" என்ற* கே.வி.ம*காதேவ*ன் இசையில் உருவான பாடலின் ப*ட*ப்பிடிப்புட*ன் நின்ற*து.இப்பாட*ல் பின்ன*ர் நேற்று இன்று நாளை ப*ட*த்தில் இட*ம்பெற்ற*து........... Thanks wa.,

  6. #155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!

    இன்றைய நாளிதழ்களில் ஜேப்பியார் போட்டோவுடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி விளம்பரத்தைக் காண முடிந்தது. மதுரை – செங்கோட்டை ரயிலில் நம்முடன் பயணித்த முதியவர் ஒருவர், நாளிதழின் அந்தப் பக்கத்தைப் புரட்டினார். அப்போது அவருடைய 9 வயது பேரன் அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, “யாரு இந்தத் தாத்தா?” என்று கேட்டான். தன் கையில் எம்.ஜி.ஆர். படத்தைப் பச்சை குத்தியிருந்த அந்த முதியவர் “ஜேப்பியார்..” எனச்சொல்லிவிட்டு, பழைய நினைவுகளில் மூழ்கினார். ‘பெரியவரே! ஜேப்பியார் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியுமா?’ என்று நாம் கேட்க, கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார். பிறகு, ஆர்வத்தோடு பேசினார்.

    My Principle - The MGR God-jpr

    இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ -

    ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும், ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், “கவலையே படாதீங்க. விரட்டிடலாம்..” என்று ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டார்.

    எம்.ஜி.ஆர். இறந்தவுடன், அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் மெரினா பீச் ஐ.ஜி. அலுவலகம் எதிரில், எந்த இடத்தில் எந்தமாதிரியான அமைப்பில் சமாதி அமைக்க வேண்டும் என்று நாவலர் நெடுஞ்செழியனும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். ஜேப்பியாரோ, அன்றைய உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனோடு சேர்ந்துகொண்டு, ‘அண்ணாவின் இதயக்கனி என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால், அண்ணா சதுக்கத்துக்கு அருகில்தான் அவரைப் புதைக்க வேண்டும்.” என்று கடுமையாக வாதிட்டு, நாவலர் நெடுஞ்செழியனையும் சம்மதிக்க வைத்தார்கள்.

    ஜேப்பியார் எப்போதுமே அதிரடி அரசியல்வாதிதான். அதனால் ‘மாவீரன்’ என்ற அடைமொழி, அவருடைய பெயருக்கு முன்னாள் சேர்ந்துகொண்டது. திமுக ஆட்சியின்போது, வழக்கு பதிவாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். மேடையிலும்கூட அனல் பறக்கப்பேசுவார் ஜேப்பியார். அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு 1982-ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியதை உதாரணமாகச் சொல்லலாம்.

    “டேய்.. எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன்தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன்.”

    கொள்கையே தனக்கு இல்லை என்று பேசிய ஜேப்பியார்தான், 1988-ல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித்தந்தை ஆனார். அது இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது.

    ஒரே ஒரு குறைதான்! எம்.ஜி.ஆரைப் போல் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளுக்குள் இருந்தது. அதற்கான நேரமும் வந்தது. எம்.ஜி.ஆர். நடித்த சில படங்கள் பூஜையோடு, சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு, அப்படியே நின்றிருக்கின்றன. அதுபோன்ற ஒரு படம்தான் நல்லதை நாடு கேட்கும். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளை இடையிடையே சேர்த்து, ஹீரோவாக நடித்தார் ஜேப்பியார். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் டைரக்ஷன் ஜேப்பியார் என்றே டைட்டிலில் காண்பித்தனர்.

    அந்தப்படத்தில், எம்.ஜி.ஆர். பாணியில் “அண்ணன் சொல்லுறத கேட்டு நடந்துக்கிட்டாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்.” என்று தனக்கு ஜோடியாக நடித்த ரேகாவிடம் பேசுவார் ஜேப்பியார். “லட்சியத்துக்காக என் உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கிறவன் நான்.” என்று தன்னை ஒரு லட்சிய புருஷனாகக் காட்டவும் அவர் தவறவில்லை.

    ரயிலில் பச்சை குத்திய அந்த முதியவர் ‘நான்-ஸ்டாப்’ ஆக, ஜேப்பியார் புராணம் பாடிட, நாம் இறங்க வேண்டிய இடம் வந்தது. போட்டோவோ, பெயரோ வேண்டாம் என்று மறுத்த அவரிடம், ‘சரிங்கய்யா.. ஒரு வார்த்தைல சொல்லுங்க.. மொத்தத்துல ஜேப்பியார் எப்படி?’ என்று கேட்டோம்.

    பலமாகச் சிரித்துவிட்டு, “இறந்து ரெண்டு வருஷம் ஓடிருச்சு.. அதனால, அவரைப் பற்றி நெகடிவா எதையும் சொல்ல விரும்பல. சினிமாவுல வேணும்னா சகலாகலா வல்லவன்னு யாரும் பெயர் எடுத்திருக்கலாம். நிஜத்துல ஜேப்பியார் ஒரு சகலகலா வல்லவன்னு தாராளமா சொல்லலாம். அந்த அளவுக்கு நெறய சாதிச்சிருக்காரு.” என்றவரிடம், வணக்கம் கூறி விடைபெற்றோம்........ Thanks wa.,

  7. #156
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    சொல்லிக்கொண்டே போகலாம்
    சொல்லச்சொல்ல
    சிலிர்க்கும் சிறந்த
    சிறப்பு வாய்ந்த தருணங்கள்
    நம்மால் படித்து பார்க்கவாவது
    முடிகிறது
    அதுவே நாம் பெற்ற பேறு

    "முக்தா" சீனிவாசன் மக்கள் திலகத்தை வைத்துப் படம் எடுக்கவில்லை என்றாலும், அவருடன் நல்ல நட்பைப் பேணியவர்.

    நடிகர் திலகத்தை வைத்து பல படங்கள் எடுத்திருக்கிறார். எங்கே மக்கள் திலகம் அவரைப் பார்த்தாலும் "என்ன சீனு, நல்லா இருக்கியா? படம் நல்லா போகுதா? சிவாஜி எப்படி இருக்காரு?" என்று கேட்பதும்,
    "எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு அண்ணே!" என்று இவர் பதில் சொல்வதும் வழக்கமான ஒன்று.

    முக்தா சீனிவாசனுக்கு தெரிந்த ஒரு கம்பெனி மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க அணுகியிருக்கிறார்கள்.

    "சீனு, இந்த கம்பெனிகாரங்க உனக்கு தெரிஞ்சவங்கதானே, என்ன படம் பண்ண ஒத்துக்கவா?"

    "வேணாம் அண்ணே, அவங்க சரியில்லே. பொம்பளைங்கள வச்சு ஆளை மடக்கி சாதிச்சுருவாங்க. அவங்க கம்பெனிக்கு நடிக்கப் போன யாருமே தப்பலே"

    "அப்படியா, சரி. நான் பந்தயம் கட்டறேன். முழுசா படம் எடுத்து முடியற வரைக்கும் அந்த கம்பெனி ஆபீஸ் வாசல்லே நான் காலடி எடுத்து வைக்கமாட்டேன். பந்தயத்துக்கு நீ ரெடியா?"

    "வேணாண்ணே. இது விஷப் பரீட்சை.....,!"

    "பேசாதே, பந்தயம் பந்தயம்தான். என்னை நல்லா நீ புரிஞ்சுப்பே!" - சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

    ஆயிற்று, படம் எடுத்து முடியும்வரை மக்கள் திலகம் அந்த ஆபீஸ் வாசலுக்கே போகவில்லை. படப்பிடிப்பு எங்கேயோ அங்கே மட்டும்தான் போவார். படம் முடிந்து, திரையிடப்பட்டு நூறுநாள் ஓடி விழா கொண்டாடுகிறது. விழாவில் சீனிவாசன் மக்கள் திலகத்தைப் பார்த்தபடி பொடி வைத்துப் பேசுகிறார்.

    "இல்லே, அண்ணன் கிட்டே ஒரு பந்தயம் கட்டினேன். அதிலே அண்ணன் ஜெயிச்சுட்டார்" - சிரிக்கிறார்.

    மக்கள் திலகம் அர்த்த புஷ்டியோடு புன்னகை செய்து தலையை ஆட்டுகிறார்.

    விழா முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கியதும், சீனிவாசனின் சட்டைப் பைக்குள் கையை விடுகிறார்.

    "சீனு, ஆயிரம் ரூபா பந்தயம் கட்டினேன். நீ தோத்துட்டே. ஆனா நூறு ரூபாதான் பையிலே வச்சிருக்கே..........,"

    "அண்ணே, நீங்கதான் ஆயிரம் ரூபான்னு சொன்னீங்க. நான் நூறு ரூபாதான் ஒத்துக்கிட்டேன்.......!"

    "அப்படியா, சரி. நூறு ரூபாதானே? எடுத்துக்கிட்டேன். சரியாப் போச்சில்லே?"

    "அண்ணே, அவ்ளோதான் இருக்கு. எனக்கு வீட்டுக்குப் போக ஆட்டோவுக்குக் கூட காசில்லே.......,"

    "நடந்து போ!" - சொல்லி விட்டு வண்டியில் ஏறிப் போகிறார். ஆக, மனோ திடத்துக்கு மக்கள் திலகம் ஓர் எடுத்துக்காட்டு. தகவல் முக்தா சீனிவாசனே "குமுதம்" இதழில் எழுதி நான் படித்தது. (உரையாடல் என் எழுத்துக்களில்)

    இதே மக்கள் திலகம் படப்பிடிப்பு இடைவேளையின் போது, லைட் பையன் முதல் ப்ரொடக்சன் மானேஜர் வரை எல்லோருடனும் சீட்டு விளையாடுவார். வழக்கம் போல சிறிய தொகை பந்தயம் கட்டி விளையாடுவார். சுவாரஸ்யத்துக்காக. பிரமாதமாக விளையாடக் கூடிய மக்கள் திலகம் அனேகமாக தோற்பது வழக்கம். எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஒருநாள் நம்பியார் "என்ன இது, இப்படி தோத்துக்கிட்டு மத்தவங்களுக்கு பணம் குடுத்துக்கிட்டே இருக்கீங்களே?" என்று கேட்டார்.

    மக்கள் திலகம் சிரித்தபடி, ரகசியமாக அவர் காதில் "தெரியும். இப்படியாச்சும் கொஞ்சம் பணம் அவங்க கைக்குப் போகுதில்லே? அவங்க முகத்திலே சந்தோஷத்த பார்த்தீங்களா?" என்றார்.

    இந்தத் தகவல் நம்பியார் ஒரு பேட்டியில் சொல்லி நான் கேட்டது.

    "இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று
    ஊர் சொல்ல வேண்டும்"
    நன்றி லோகநாதன்
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����......... Thanks wa.,

  8. #157
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். ஏன் மக்களின் நாயகனாக இன்றும் கொண்டாடப்படுகிறார்?




    இந்த கேள்வி என்னுடைய இளம் வயதில் விடைதெரியாத புதிராக எனக்குள் நீண்டகாலம் இருந்தது. அப்போது நாகர்கோவில் பயோனியர் முத்து திரையரங்கில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். அங்கு அர்னால்டு ஸ்வாஸ்நேகரை பார்ப்பதற்காக சென்ற போது, எம்.ஜி.ஆர். தியேட்டர் கதவை திறந்துவிட்டார்.



    SCROLL TO CONTINUE READING...

    *

    அது கறுப்பு எம்.ஜி.ஆர். அவரைப்போலவே தலைமுடி, அவர் பாடல் காட்சியில் அணிவது போன்ற ஜகினா சட்டை, இறுக்கமான பேன்ட், கழுத்தில் ஸ்டைலாக அழுக்குக் கர்ச்சீப், கழுவி நாளான ஷு, கைவிரல்களில் எம்.ஜி.ஆர். படம் பொறித்த மோதிரம், அதேபோல் கைக்கடிகாரம் என்று எங்கும் எம்.ஜி.ஆர் மயம்.

    எனக்கு அவரைப் பார்க்க பகீரென்றது. இப்படியொரு தோற்றத்தில் இவரால் எப்படி மக்கள் மத்தியில் நடமாட முடிகிறது? முக்கியமாக இவரது வீட்டில் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?


    எம்.ஜி.ஆரின் புகழின் ஆதிக்கத்துக்கு உள்படாத கேரளா எல்லைப்பகுதியிலிருந்து வந்தவன் என்பதால், எம்.ஜி.ஆர். மீதான அவரது ரசிகர்களின் அதீத ஈடுபாடு விசித்திரமாகவே இருந்தது.



    *

    சென்னை வந்த பிறகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், எஸ்.வி.ஒயின்ஸ் அளவுக்கு ஸ்டார் திரையரங்கும் நண்பர்களின் பேச்சில் பிரபலமாக இருப்பதை அறிந்தேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிடும் நாள்களில் ஸ்டார் தியேட்டர் ஒரு கொண்டாட்டவெளியாக மாறும் என்றார் நண்பர் மலரோன். ஒருநாள் நிறைபோதையும், பிரியாணியுமாக தியேட்டருக்கு நானும் நண்பரும் சொன்றேnம். மீன்பாடி வண்டிகளாலும், ஆட்டோ ரிக்ஷாக்களாலும் தியேட்டரின் முன்பக்கம் நிரம்பியிருந்தது.

    அது எம்.ஜி.ஆர். நடித்த படம். எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியதை சரியாக கணித்து ஒருவன் பூசணிக்காய் உடைத்தான். �......... Thanks wa.,

  9. #158
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படம் தொடங்கியபோது ஏற்றப்பட்ட சூடம் படம் முடியும்வரை கொளுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. பாடல்கள் வரும் நேரத்தை தியேட்டரில் அனேகமாக அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். பாடல் தொடங்கும் முன்பே தியேட்டரின் பல பாகங்களிலிருந்தும் டி.எம்.சௌந்தர்ராஜன்கள் பாட ஆரம்பித்தனர். இருப்பது தியேட்டரிலா லைவ் கான்சர்டின் நடுவிலா என்ற குழப்பம் எங்களுக்கு. அன்று போல் ஒரு கொண்டாட்டவெளியை நான் முன்போ பின்போ அனுபவப்பட்டதில்லை. அந்த கொண்டாட்டத்தின் வழியாக சாதாரண ஜனங்கள் தங்களின் அன்றாட கவலைகளை, கனவுகளை, ஏமாற்றங்களை கடந்து சென்றனர். அப்படி கடந்து சொல்வதற்கு ஏதுவாக எம்.ஜி.ஆர். தன்னையும், தனது படங்களையும் தகவமைத்துக் கொண்டார் என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் மீது அதுவரையிருந்த எனது ஒவ்வாமை அன்றுடன் சற்று மட்டுப்பட்டது எனலாம்.

    சென்னையில் ஸ்டார் திரையரங்கைப் போல பல திரையரங்குகள் இருந்தன. அதில் மேகலாவும் ஒன்று. எம்.ஜி.ஆர். படங்கள்தான் இங்கு திரையிடப்படும். எந்தப் படம் வெளியானாலும் கூட்டம் கும்மியடிக்கும். இன்று மேகலா இல்லை ஸ்டார் இல்லை அதனால் கொண்டாட்டங்களும் இல்லை.

    எம்.ஜி.ஆரின் படங்கள் குறித்தும், அதில் வெளிப்படும் நாயக பிம்பம் குறித்தும், அவரது அரசியல் குறித்தும் ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அடித்தட்டு மக்களை அவரைப்போல் கேளிக்கைப்படுத்தியவர்கள் இல்லை.

    மதத்தை குறித்து பேசிய மார்க்ஸ், மதம் ஒரு அபின். ஆனால் அதற்கு மாற்றாக வைக்க எதுவும் இல்லை என்றார். அதுபோல் எம்.ஜி.ஆர். அடித்தட்டு மக்களின் ஆதர்சம். அவர்களின் அதீத தனிமனித வழிபாடு மோசமான முன்னுதாரமாக இருந்தாலும், எம்.ஜி.ஆர். என்ற ஆதர்சத்துக்கு மாற்றாக வைக்க இங்கு இதுவரை எவரும் இல்லை........... Thanks wa.,
    *

  10. #159
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ;பேராசிரியர் திரு.விஜய் பேசும்போது

  11. #160
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    முனைவர் து.ஜானகி பேசும்போது

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •