Page 120 of 402 FirstFirst ... 2070110118119120121122130170220 ... LastLast
Results 1,191 to 1,200 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1191
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.��
    45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
    அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
    அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
    அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
    அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
    கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்".......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1192
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இவர்கள் #எதிர்காலத்தூண்கள்

    தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...

    போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...

    டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!

    'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
    'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...

    உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.

    பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...

    அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...

    முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???

    அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...

    மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...

    வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்........... Thanks..........

  4. #1193
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகரை வைத்து ஒரே ஒரு காவியம் என்றளவில் இயக்கியவர்கள்..........1) ஜெனோவா ...f. நாகூர் 2) மலைகள்ளன்...ஸ்ரீ ராமுழு நாயுடு 3) மகாதேவி ...சுந்தர் ராவ் நாட்கர்னி 4) தாய் மகளுக்கு கட்டிய தாலி ... R r. சந்திரன் 5) பாக்தாத் திருடன்... T p. சுந்தரம் 6) தெய்வதாய்... P. மாதவன் 7) அன்பேவா... திருலோக சந்தர் 8) ஆசைமுகம்... புல்லையா 9) நம்நாடு... ஜம்பு 10) தலைவன்... தாமஸ் & சிங்கமுத்து..........

  5. #1194
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1971 ல் தி.மு. க. வென்றது எப்படி ?

    இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 1971 ல்
    தி.மு. க. எவ்வாறு வென்றது என்பது பற்றி பேசினோம். அப்போது என் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

    அண்ணா மறைவிற்கு பின்
    எம்.ஜி. ஆரால் கருணாநிதி முதல்வரானார். படிப்படியாக ஆட்சியில் ஊழல் வளர்ந்தது. எம். ஜி. ஆர். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தார்.

    அப்போது காங்கிரஸ் இரண்டாக உடைந்து, தமிழ்நாட்டில் காமராசர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸாக வலுவாக இருந்தது. அப்போது காமராசர் "தி.மு. க. ஊழல் ஆட்சி" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
    அது மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்கியது. அதன் பாதிப்பை கருணாநிதி உணர்ந்ததால் அப்போது மந்திரிகளாக இருந்த புதுக்கோட்டை
    சுப்பையா, மதியழகன், வேழவேந்தன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்கினார்
    தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ள.

    அடுத்து தான் ஆட்சிக்கு வருவது கடினம் என்பதை உணர்ந்த கருணாநிதி,
    1972 ல் நடக்கவிருந்த தேர்தலுக்கு முன்பாக உடனே தேர்தல் நடத்தி தப்பிக்க விரும்பி, சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிக்க செய்தார். தேர்தல் பிரச்சாரம் கடுமையாக இருந்தது. வெற்றி பெறுவது கடினம் என்றுணர்ந்த கருணநிதிக்கு தெரிந்த ஒரே நம்பிக்கை
    எம். ஜி. ஆர். மட்டுமே.

    அந்த நேரத்தில் கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் எம். ஜி. ஆர். படப்பிடிப்பு பணிகளில் மட்டுமே கவனம்
    செலுத்தினார். கருணாநிதி அவரிடம் சரணடைந்து கெஞ்சி கூத்தாடி மனம் இரங்கச்செய்தார். ஆயிரம் தவறுகள்
    செய்திருந்தாலும் நட்பை, கட்சியை வலுவிழக்க செய்ய விரும்பாத
    எம். ஜி. ஆர். அசுரத்தனமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    அந்த தேர்தலில் எம். ஜி. ஆர். கையாண்ட ஒரு யுக்தி எதிர் பிரசாரங்கள் அத்தனையையும்
    தவிடு பொடியாக்கியது. அதை காமராஜரே எதிர்பார்க்கவில்லை.
    இப்போது நான் சொல்வது அனைத்தும் அன்றைய நாளிதழ்களில் இடம் பெற்றதை படித்து நினைவில் வைத்திருக்கும் விசயம்.

    எம். ஜி. ஆர். பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் "தி.மு. க. ஆட்சியில் ஊழல் செய்தார்களா ?"
    என்றும் "நீங்கள் ஊழல் நடந்தது என்று நம்புகிறீர்களா ?" என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்ப, மக்கள் அதற்கு
    "இல்லை" "இல்லை" என்று பதிலளிக்க,
    எம். ஜி. ஆர். கருத்துக்கு மறு கருத்து இல்லை என்பதை 1971 சட்டமன்ற தேர்தல் வெற்றி 184 இடங்களில் அபாரமாக நிரூபித்தது.

    ஆனால் கருணாநிதி குடும்பத்திற்கும்,
    1972 குப்பின் உள்ள தி. மு. க.விற்கும்
    நன்றி கிடையாது, அவர்கள் நம்பிக்கை துரோகிகள் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறார்கள்.

    அ.தி.மு. க.விலுள்ள எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும். தெரிந்தாலும் என்ன பயன் ?

    Ithayakkani S Vijayan........... Thanks..........

  6. #1195
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு #மிகுந்த #அன்பு உண்டு.

    அசோகன் #நன்றாக #சாப்பிடுவார்.

    எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப்பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார்.

    அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்.

    யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

    ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம்.

    திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

    விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

    தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும்
    ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு #கண்ணதாசன் பதிவு செய்துள்ளார். ‘

    நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் #சொர்ணம்.

    கொந்தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

    நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம்.

    சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார்.

    படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

    அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

    பணம் கிடைத்த அன்று இரவே ஒவ்வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன்.

    படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

    எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது.

    இதில் ஒரு முக்கியமான விஷயம்.,
    எல்லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப்பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலைமையை உணர்ந்து தனது சம்பள பாக்கியான லட்சக்கணக்கான ரூபாய்களை #பெற்றுக் #கொள்ளவே #இல்லை என்பது
    #வெளியே #தெரியாத #உண்மை......

    _தி இந்து......... Thanks.........

  7. #1196
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்களின் #ரெஸ்பான்ஸ்

    நமக்கு கூட்டம் கூடுறதுனால மக்களின் ஆதரவு நிறைய இருக்குன்னு அர்த்தமாகிவிடாது...

    நான் நடிகன்கிறதால என் மீது அன்பு வெச்சிருக்கலாம். இப்ப நான் தனிக்கட்சி தொடங்கியாச்சு. இதுக்கு மக்களிடம் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது தான் நல்லது...அதனால் நீங்களனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனோநிலையை அறிஞ்சிட்டு வாங்க..." என்று தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் எம்ஜிஆர்.

    திருச்சியில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்...வாத்தியார் பேசும்போதெல்லாம் கரவொலிகள்..."எம்ஜிஆர் வாழ்க" ன்னு ஒரே கோஷம்..

    இதையடுத்து திருச்சியில் உள்ள "ஆஸ்பி" ஓட்டலில் தங்கியிருந்த புரட்சித்தலைவர் தன் உதவியாளர்களிடம் மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்...

    #மக்களின் #கூட்டத்தைப் #பார்த்த #எம்ஜிஆர் #அவர்களுக்கு #தலைக்கனம் #ஏற்படவில்லை. #உண்மையில் #பயப்படத்தான் #செய்தார்..."ஏனெனில் இது வெறும் சினிமாக் கவர்ச்சியாக ஆகிவிடக்கூடாதே என்று..."

    அவர் சொற்படி உதவியாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றினர்...மக்கள் எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி கேட்ட ஒரே கேள்வி ...

    "#எம்ஜிஆர் #எப்ப #ஆட்சியமைக்கப் #போகிறாரு...?"

    திமுக கோட்டையாக விளங்கிய ராமநாதபுரத்திலும் கூட மக்களின் கேள்வி இது மட்டுமே ...! உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தலைவரும் மகிழ்வாரென அவரிடம் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தனர்...

    "கட்சியவே இப்ப தான் நாம ஆரம்பிச்சோம்...ஆனா மக்கள் பலபடிகள் மேலே போய் ஆட்சி எப்ப அமைக்கப்போறார்னு கேக்கறாங்கன்னு தெரிஞ்சதும்...மக்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து எம்ஜிஆருக்கு அழுகை பீறிட்டது...

    ஆனால் இதற்காக ஒரேடியாக மகிழவில்லை... மாறாக, இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்க வேண்டுமே என்று கவலை தான் பட்டார்...

    1965ல் தான் பாடிய பாடலுக்கு உயிர்கொடுத்து அதை மெய்ப்பித்துக் காட்டியவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...

    காலத்தால் அழிக்கமுடியாத அந்த வரிகள்...
    "நான் ஆணையிட்டால்
    அது நடந்துவிட்டால்..."

    மக்களை ரசிகர்களாகவும்,
    ரசிகர்களைத்
    தொண்டர்களாகவும்,
    தொண்டர்களை
    பக்தர்களாகவும்
    தனது மனிதநேயத்தால் மாற்றிய...
    காலத்தால் வெல்லமுடியாத #உலகின் #ஒப்பற்ற #ஒரே #தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே........... Thanks..........

  8. #1197
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பச்சைக்கிளி #முத்துச்சரம்

    #மேட்டா #ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள். “என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.

    உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகைதான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர். 25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரை புகழும் வரிகள் வரும்போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.

    உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!

    இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு �� ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்........ Thanks.......

  9. #1198
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

    எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1

    எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.

    சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.

    ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம்.

    எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான். தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.

    கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார். பார்வதியாக உடன் நடனமாடிய வி.என். ஜானகி ராஜகுமாரியில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

    எம்.ஜி.ஆரின் நடனத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு. அதனால் மாத சம்பளத்திற்கு நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இதில் கூடுதலாக பணம் தரப்பட்டது. ராஜகுமாரி தனது 15-வது படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. படத்தின் இயக்குநர் ஏ.ஏஸ்.சாமி. தொழில்நுட்பம் தெரிந்த கெடுபிடியான இயக்குநர். தான் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற உணர்வுடையவர். படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் முகம் மட்டுமே நடிக்க வேண்டும். குளோஸ் அப் ஷாட் அது. நடிக்கும்போது முகத்தில் மட்டுமே பாவம் வரவேண்டும். உடல் அசையக்கூடாது என்றார் சாமி. எம்.ஜி.ஆர் முகத்தில் பாவம் காட்டியபோது உடலும் சேர்ந்து அசைந்தது. சாமி அதை கண்டித்தார்.

    எம்.ஜி.ஆர் சாமியிடம் வந்து என்னால் முடியவில்லை. நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார். கடைசியில் எம்.ஜி.ஆர் நடித்தபடிதான் காட்சி படமானது. இப்படித்தான் வளர்ந்த காலத்திலேயே தன் தனித்தன்மையை நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதற்கான தைரியமும் அவருக்கு இருந்தது. ராஜகுமாரி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. மருதநாட்டு இளவரசி ராஜகுமாரிக்கு பின் தொடர்ந்து ஐந்து படங்களில் கதாநாயக அந்தஸ்து இல்லாமல் நடித்த எம்.ஜி.ஆருக்கு இதில் மீண்டும் கதாநாயகன் வேடம்.............. Thanks.........

  10. #1199
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

    எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2

    இதில் அவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேரக் காரணமாக அமைந்த படம் இது. படத்தின் வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தவரே எம்.ஜி.ஆர்தான். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு (கதாநாயகி உட்பட) யார் நடிப்பது என்ற முடிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆரே. படத்தின் எல்லாத் துறைகளிலும் தலையை நுழைத்து கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக உழைப்பை அவர் தர ஆரம்பித்தது இதிலிருந்தேதான். மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் கோட்டையில் எம்.ஜி.ஆருக்கு இது முதல் படம். அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை மீறி அங்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    ஆனாலும் படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனோடு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை வாதங்கள் நிகழ்த்தி மோதியுமிருக்கிறார். இந்த படத்தை தெடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் எம்.ஜி.அர் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. மர்மயோகி தமிழில் முதல் ஏ படம் இது. திகில் காட்சிகள் இருக்கின்றன என்பதற்காக ஏ சர்டிபிகேட் பெற்றது. ராபின் ஹ¨ட் போன்ற கதாநாயகன் வேடம். போட்டோகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தவற மாட்டான் என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம் படத்தில் அடிக்கடி இடம் பெற்றது.

    இன்றைக்கும் அந்த வசனம் பிரபலம். போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜை உயர்த்திக் காட்டும் வசனங்கள் பரவலாக இடம் பெற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்ததுதான். என் தங்கை அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மீனா (படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த வேடம்) என்ற தங்கையின் பெயரை மறக்க முடியாமல் இன்னொரு படப்பிடிப்பில் கூட, வசனம் பேசும்போது அதே பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி- அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே வெற்றி பெற்ற படம் இது. எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

    எம்.ஜி.ஆராலும் உணர்ச்சிகரமாக நடிக்க முடியுமென்பதை நிரூபித்த படம் என் தங்கை. நாம் மேகலா பிக்சர்ஸ் உருவானது இதிலிருந்துதான். இது எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, கலைஞர் கருணாநிதி மூவரும் பங்குதாரர்களாக இருந்து பிரிந்த படம். படம் வெற்றி பெறாவிட்டாலும், பார்வையற்றவராக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பிற்பகுதி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும். ஒரே ஷாட்டில் நீளமான வசனங்களெல்லாம் இதில் எம்.ஜி.ஆர் பேசி நடித்திருக்கிறார். மலைக்கள்ளன் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்படம். மலைக்கள்ளன் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்த வேடத்தில் தெலுங்கில் என்.டி.ராமராவ்-பானுமதி நடித்தார்கள். படத்தின் பெயர் அக்கி விமுடு. மலையாளத்தில் தங்கர வீரன் (சத்யன்-ராகினி ஜோடி), கன்னடத்தில் பெட்டத கல்லா (கல்யாணகுமார் மைனாவதி ஜோடி), இந்தியில் ஆசாத் (திலீப்குமார்-மீனாகுமாரி ஜோடி) சிங்கள மொழியில் சூரசேனா (காந்தி குணதுங்கா- இலங்கை பேரழகி ஒருவரும் நடித்தார்கள்) என்று ஆறு மொழிகளில் வெளிவந்தது. மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். வயோதிக முஸ்லீமாக வேடமிட்டு பானுமதியை குழந்தே….. என்று அழைத்தபடி ஒரு மாதிரியான ஸ்டைலில் நடிப்பார். அந்த ஸ்டைல் மற்ற மொழி படங்களின் ஹீரோக்களுக்கு வரவில்லையாம்.

    எம்.ஜி.ஆர். ஹ¨க்கா பிடித்து புகைவிட்டு நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே. கூண்டுக்கிளி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இதற்கு பின்பும் இருவரும் இணைந்து நடிக்க பலரும் முயற்சித்து அவை கைகூடி வந்தபோதும் ரசிகர்களை நினைத்து கைவிட்டார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழில் முதல் வண்ணப்படம் இது. எம்.ஜி.ஆரின் அழகை வண்ணத்தில் காண்பித்தபோது ரசிகர்கள் மகிழ்ந்து போனார்கள். மதுரை வீரன் எம்.ஜி.ஆர் ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த மதுரை வீரன் ஒரே சமயம் 30-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் இந்த படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசனே கூறியிருக்கிறார்.

    தாய்க்குபின் தாரம் 80-க்கு மேற்பட்ட படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டு தந்த வெற்றிப் படம் இது. போட்டுத் தந்தவர் எம்.ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து சாதனை போட்டோந்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் இயக்குநர் எம்.ஏ.திருமுகம் என்பது மற்றொரு சாதனை. சக்ரவர்த்தி திருமகன் ஆட வாங்க அண்ணாத்தே என்ற பாடலில் எம்.ஜி.ஆர், ஈ.வி. சரோஜா, ஜி.சகுந்தலாவுடன் போட்டி நடனம் ஆடுவதும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதும்- எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திக் காட்ட உதவின........... Thanks...

  11. #1200
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

    எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

    எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

    அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

    இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

    குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

    ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

    1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •